பின்தொடர...

Friday, December 30, 2016

5,11ல் ராகு கேது பெரும் வலிமையும், தனது திசையில் தரும் பலாபலன்களும் !


சுய ஜாதகங்களில் நவகிரகங்கள் ராசியில் வலிமை பெற்று இருப்பதும் ( ஆட்சி, உச்சம், நட்பு ,சமம்) ராசியில் வலிமை அற்று இருப்பதும் ( நீச்சம், பகை ) சுப கிரகங்களுடன் சேர்க்கை பெற்று இருப்பதும், பார்வை பெற்று இருப்பதும், அசுப கிரகங்களின் சேர்க்கை பெற்று இருப்பதும், பார்வை பெற்று இருப்பதும், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நடைமுறையில் வரும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் யோக அவயோக பலாபலன்களை தரும் என்ற கருத்து உள்ளது, இது முற்றிலும் ஜாதக கணிதத்திற்கு முரண்பட்ட கருத்தாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, அதாவது சுய ஜாதகத்தில் வலிமை ( ஆட்சி, உச்சம், நட்பு ,சமம்) பெற்ற கிரகத்தின் திசை நடக்கும் பொழுது யோக பலன்களையும், வலிமை ( நீச்சம், பகை ) அற்ற கிரகத்தின் திசை நடக்கும் பொழுது அவயோக பலன்களையும் தரும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது, இது சிறிதும் ஏற்புடையது அல்ல, ஏனெனில் ஒருவருக்கு நடைபெறும் யோக அவயோக நிகழ்வுகளை நிர்ணயம் செய்யவது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, கீழ்கண்ட மிதுன லக்கின ஜாதகருக்கு 11ல் அமர்ந்த ராகு பகவான் அந்த பாவகத்தை மிகுந்த வலிமையுடையதாக திகழ செய்கிறார், இவரது ஜாதகத்தில் மிகுந்த வலிமையுடைய பாவகம் எதுவெனில் 5,11 எனலாம், சாயா கிரகங்கள் முறையே 11,5 என்ற நிலையில் அமர்ந்து சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு 100% விகித வலிமையை தருகின்றனர், எனவே தனது திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் சாயா கிரகங்களான ராகுகேது ஜாதகருக்கு தரும் பலன்கள் என்ன? என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : மிதுனம்
ராசி : கன்னி
நட்ஷத்திரம் : அஸ்தம் 1ம் பாதம்

ஜாதகருக்கு ராகு திசை தற்போழுது நடைமுறையில் உள்ளது ( 10/07/2002 முதல் 09/07/2020 வரை ) 11 ல் வலிமை பெற்று அமர்ந்துள்ள ராகு திசை ஜாதகருக்கு தனது திசையில் 6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே தற்போழுது நடைபெறும் ராகு திசையில் ஜாதகர் 6ம் பாவக வழியில் இருந்து கடன்,உடல் நலம், எதிரி தொல்லை என மிகுந்த இன்னல்களையும் மன உளைச்சல்களையும், 9ம் பாவக வழியில் இருந்து கல்வியில் தடைகளையும், காரிய தடைகளையும், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தையும், பெரியோர் மற்றும் பெற்றோர் வார்த்தைகளை மதிக்காமல் நடந்து சமூகத்தில் வீண் அவ பெயரையும் சம்பாதிக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது, மேலும் தனது பித்ருக்கள்  வழியிலான சாபங்களையும், அறிவு பூர்வமற்ற செயல்களினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் நிலையை தந்து கொண்டு இருக்கின்றது, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஏற்படும் இழப்புகள் கொஞ்சம் அதிக அளவிலேயே உள்ளது, மேலும் மன அழுத்தம் மன போராட்டம், எதிர்ப்புகளை சமாளிக்க இயலாத சூழ்நிலை, விபத்து, பொருள் இழப்பு என கடுமையான இன்னல்களுக்கு ஜாதகர் ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார், ஜாதகருக்கு ஏற்படும் இழப்புகளை ஜாதகரால் தவிர்க்கவே இயலவில்லை, ஊரில் உள்ள உறவுகளும், சொந்த பந்தங்களும் ஜாதகரை மதிப்பதில்லை , அனைவருக்கும் எதிரி என்ற சூழ்நிலையை தற்போழுது நடைபெறும் ராகு திசை 6,9,12ம் பாவக வழியில் இருந்து வழங்கி கொண்டு இருக்கின்றது, இது சாயா கிரகங்களில் 11ல் வலிமை பெற்ற ராகு பகவான் தனது திசையில் தரும் பலன்கள்.

ஜாதகருக்கு கேது திசை பல வருடங்களுக்கு பிறகு வந்தாலும் மற்ற கிரகங்களின் திசையில், புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற கேது ஜாதகருக்கு புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், பலர் சுய ஜாதகத்தில் 5ல் அமரும் ராகு கேது புத்திர பாக்கியத்தை தடை செய்யும் என்பர், ஆனால் 5ல் வலிமை பெற்று அமரும் ராகு கேது ஜாதகருக்கு முதல் குழந்தையாக ஆண் வாரிசை வழங்கும், ஒருவேளை 5ல் வலிமை அற்று ராகு கேது அமர்ந்து இருப்பின் ஜாதகருக்கு ஆண் வாரிசை நல்காது பெண் குழந்தை உண்டு என்பது அனுபவபூர்வமான உண்மை, மேற்கண்ட ஜாதகருக்கு 5ல் வலிமை பெற்ற கேது தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் 2,4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு ஜீவனம் மற்றும் தொழில் வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், கேது தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் ஜாதகர் 2ம் பாவக வழியில் கை நிறைவான வருமானமும், செய் தொழில் முதலீடும், அபரிவிதமான லாபங்களை பெறுவார், 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், இடம் வீடு புதிய சொத்துக்கள் மற்றும் சுகபோக யோகங்களை பெறுவார், தனது தாய் வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை பெறுவார், 10ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அபரிவிதமான தொழில் வளர்ச்சியையும், சிறப்பு மிக்க முன்னேற்றங்களையும், தங்கு தடையின்றி பெறுவார், சுய கவுரவம் மேலோங்கும், அதிகார பதவிகள் ஜாதகரை தேடி வரும், இது சாயா கிரகங்களில் 5ல் வலிமை பெற்ற கேது பகவான் தனது திசையில் தரும் பலன்கள்.

எனவே சுய ஜாதகத்தில் 5,11ல் சாயா கிரகங்கள் அமர்ந்த போதிலும், தனது  திசையில் அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்க, மேலும் தனது திசையில் ராகு 12ம் பாவக பலனையும், கேது 10ம் பாவக பலனையும்  ஏற்று நடத்துவதே உண்மை இதை முறையாக ஜாதக கணிதம் கொண்டு உணர்ந்து பலாபலன் காண முற்படுவதே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வாழ்க்கையை அமைத்து தர உதவும் சிறப்பான நன்மைகளையும்  நல்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 comment:

  1. DOB : 19/05/1982 kumba lagnam revathi star meena rasi. eppo kalyanam agum velinadu payanam eppodhu erukum

    ReplyDelete