பின்தொடர...

Monday, December 26, 2016

திருமண பொருத்தம் : வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் !


" திருமணம் ஆயிரம் காலத்து பயிர் " என்ற முது மொழிக்கு ஏற்ப, தனது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவும், தனது சந்ததிகளின் வாழ்க்கை சிறப்பு மிக்க எதிர்காலத்தை பெறவும், வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும், வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் தவறு இழைப்பது, "முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்ற நிலைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்து சென்று விடும், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் தசவித பொருத்தத்திற்கு ( நட்ச்சத்திர பொருத்தம் ) தரும் முக்கியத்துவத்தை சற்று சுய ஜாதக பாவக வலிமைக்கும் தருவது அவசியமாகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே முதன்மை வகிக்கின்றது, நட்ச்சத்திர பொருத்தத்தின் தாக்கம் இல்லற வாழ்க்கையில் மிக குறைந்த அளவிலேயே இருக்கும், ஆனால் சுய ஜாதக பாவக வலிமையே இல்லற வாழ்க்கையில் வரும் நன்மை தீமை, யோக அவயோகங்களுக்கு முழு காரணமாக அமையும் என்பதனால் வரன் வது ஆகியோரின் சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைப்பது சாலச்சிறந்தது.


லக்கினம் : மேஷம்
ராசி : விருச்சிகம்
நட்ஷத்திரம் : கேட்டை 4ம் பாதம்

மேற்கண்ட வதுவை தேர்வு செய்த மணமகனின் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானம் மிகுந்த வலிமை பெற்று இருப்பது வரவேற்க தக்க அமசமாகும், எனவே ஜாதகர் தேர்வு செய்த வாழ்க்கை துணை ஜாதகருக்கு யோகங்களை தரும் பொருத்தம் உள்ளவரா என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

ஜாதகிக்கு 1,7ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கின வழியில் இருந்து நிறைவான யோகங்களையும், அதிபுத்திசாலித்தனம் கொண்டவராகவும் இருப்பர், களத்திர ஸ்தான வழியில் இருந்து நல்ல யோகங்களையும், சிறந்த அறிவுக்கூர்மை கொண்ட வாழ்க்கை துணையையும், கடவுள் அனுகிரகம் பரிபூர்ணமாக கொண்ட ஒரு வாழ்க்கை துணையை பெறுபவர் என்பது சிறப்பான விஷயமாகும்.

2,8,9ம் வீடுகள் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்ப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோகங்களை பெரும் ஜாதகி என்பதுடன், தனது குடும்ப வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் நிறைவாக பெறுபவர் என்பது உறுதியாகிறது, ஆயுள் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுளை கொண்டவர் என்பதும், தனது கணவன் வழியில் இருந்து நிறைவான நன்மைகளை தங்கு தடையின்றி பெறுபவர் என்பதும் உறுதியாகிறது, பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நல்ல பெருந்தன்மையான மன நிலை, அனைவரையும் அனுசரித்து செல்லும் யோகம், பெரியோர் ஆசிர்வாதம், கடவுளின் பரிபூர்ண அருளாசியை பெரும் யோகம், சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் நிறைந்த நடவடிக்கை மூலம் அனைவரையும் வசீகரிக்கும் யோகத்தை தரும்.

5ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும், தனது வாழ்க்கை துணைக்கும், தனது குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் பெரிய அளவில் பயன்தரும், மேலும் தனது குழந்தைகளுக்கு சிறப்பு மிக்க எதிர்காலத்தை அமைத்து தரும் வல்லமையை பெற்றவர் என்பதும் உறுதியாகிறது, ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு பரிபூர்ண யோகங்களை வழங்கும் சிறப்புக்களை பெற்ற ஜாதகி  என்பது உறுதியாகிறது, மேலும் ஜாதகியின் அறிவு திறன்,கல்வி மற்றும் அதி புத்திசாலித்தனம் ஆகியவை ஜாதகியின் வாழ்க்கையில் சகல யோகங்களை வாரி வழங்கும், சிறந்த நிர்வாக திறமை கொண்டவர், இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக எடுத்து செல்லும் யோகம் பெற்றவர்.

சுய ஜாதகத்தில் 12ம் வீடு மட்டும் பாதிக்கப்படுவது, ஜாதகியின் தாம்பத்திய வாழ்க்கையில் நிகழும் சிறுசிறு குறைபாடுகளை தெளிவு படுத்துகிறது, எனவே 12ம் வீடு உபய ராசி என்பதனால் இதனால் யாதொரு பாதிப்பு வாராது என்பதை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையில் இணைக்கலாம், மேலும் வரனின் சுய ஜாதகத்தில் 12ம் வீடு வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கை சார்ந்த இன்னல்களை களைந்து, ஒற்றுமை நிறைந்த தாம்பத்திய வாழ்க்கையும், மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்க்கையையும் வழங்கும் என்பதினால், இவர்களை இல்லறவாழ்க்கையில் 100% விகிதம் இணைக்கலாம்.

மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசை, எதிர்வரும் சந்திரன் திசை மிகவும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால், திருமண வாழ்க்கை  மற்றும் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்பது கவனிக்கத்தக்க  அம்சமாகும்.

குறிப்பு :

மன இயல்புகளை மட்டும் வெளிப்படுத்தும் நட்சத்திர பொருத்தம், தாம்பத்திய வாழ்க்கையின் வெற்றியை  நிர்ணயம் செய்யாது. லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, தம்பதியரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் நல்கும், எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்சத்திர பொருத்தம் எனும் தசவித பொருத்தங்கள் 5 % விகித சம்பந்தத்தையும், சுய ஜாதக பாவக ( வலிமை ) பொருத்தங்கள் 100% விகித சம்பந்தத்தையும் தரும் என்பதால், சுய ஜாதக வலிமை அடிப்படையில் திருமண பொருத்தம் காண்பதே தாம்பத்திய வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.
   
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 comments:

  1. How much u charge for one individual jathagam?9524056765 parthibandg@gmail.com

    ReplyDelete
  2. How much u charge for one individual jathagam?9524056765 parthibandg@gmail.com

    ReplyDelete