பின்தொடர...

Monday, November 20, 2017

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு சுபயோக பலன்களை தர மறுப்பதேன் ? ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் ஓர் ஜாதகருக்கு யோக பலன்களை நடைமுறையில் எடுத்து நடத்ததிற்கு மூன்று காரணங்கள் உண்டு 1) ஜாதகருக்கு சரியான நேரத்தில் நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலன்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தாமல் போனால் ஜாதகர் சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்து அதனால் ஒரு பயனும் ஏற்படாது, 2) தனது ஜாதகத்திற்கு சற்றும் பொருந்தாத அல்லது நேரெதிரான அவயோகங்களை பெற்றுள்ள எதிர்பாலின அமைப்பினரிடம் சேர்க்கை பெறுவதினால், சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பங்கம் பெற்று சுபயோக பலாபலன்களை நடைமுறைக்கு வாராது. 3) ஓர் ஜாதகத்தில் சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருவது ஜாதகரின் சுய அறிவு நிலை மற்றும் சமயோசித புத்திசாலித்தனத்தை அடிப்படையாக கொண்டே அமையும் என்பதால், ஜாதகர் எந்த ஓர் சூழ்நிலையிலும் தனது சுய அறிவு மற்றும் புத்திசாலித்தனம் மழுங்கும் விஷயங்களில் ஈடுபட கூடாது, குறிப்பாக ஜாதகரின் அறிவை மழுங்கடிக்கும் போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர் என்றால் சுய ஜாதகத்தில் யோக பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகருக்கு இறை அருள் கொடுத்துள்ள சுய ஜாதக வலிமை என்பது மிகவும் அரிதானது, அபரிவிதமான செல்வாக்கினை வாரி வழங்கும் தன்மையை பெற்றது, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் ஒன்றை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் மிகவும் வலிமையுடன் இருப்பதை வைத்தே இதை உறுதிசெய்யலாம், மேலும் ஜாதகருக்கு நடைபெறும் குரு திசை தரும் பலாபலன்கள் என்பது அதிர்ஷ்டத்தின் தன்மையை பரிபூர்ணமாக உணரவைக்கும் அமைப்பாகும், நடைபெறும் குரு திசையை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் லாப ஸ்தான பலனை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் சுபயோக பலன்களில் உச்ச நிலையாகும்.

சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், இது ஜாதகரை எந்த சூழிநிலையிலும் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கான  நல்ல வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுத்தந்துகொண்டே இருக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு அத்துணை சிறப்புகள் இருந்து யாதொரு நன்மையையும் அனுபவிக்க இயலாமல், இன்னல்களை இந்நாள்வரையிலும் அனுபவித்துக்கொண்டு இருப்பதற்கு அதிமுக்கிய காரணம், ஜாதகரின் சகவாச தோஷம் என்றால் அது மிகையாகாது, ஜாதகருக்கு பணியிடத்தில் ஏற்பட்ட தவறான எதிர்பாலின சேர்க்கை ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை கபளீகரம் செய்துகொண்டு இருப்பது, ஜாதகரின் பேச்சின் வழியிலும், அந்த எதிர்பாலின சேர்க்கையாளரின் எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தின் வழியிலும் மிக தெளிவாக நாம் உணர முடிந்தது, ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் அனைத்தும் பங்கம் பெற்று நிற்பதற்கு அடிப்படை காரணமே அந்த எதிர்பாலின சேர்க்கைதான் என்பதை ஜாதகர் உணராமல் பிதற்றி கொண்டு இருப்பது, ஜாதகரின் ஆயுள் பாவகம் தரும் பலாபலன்களின் திருவிளையாடல் என்பதை  எப்படி? ஜாதகருக்கு புரியவைப்பது.

சம்பத்தப்பட்ட எதிர்பாலின சேர்க்கையாளரின் சுய ஜாதகத்தில் கிட்டத்தட்ட லக்கினம் முதல் மிக முக்கியமான 8 பாவகங்கள் பாதக ஸ்தான தொடர்பை பெற்றிருப்பதை ஜாதகர் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை  என்பதை அவரின் வார்த்தைகளில் இருந்து மிக தெளிவாக நாம் உணர்ந்துகொள்ள முடிந்தது, குறிப்பாக எதிர்பாலின சேர்க்கையாளரின் சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையை சூன்ய நிலைக்கு ஆற்படுத்திக்கொண்டிருப்பதை, ஜாதகர் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் சிறிதும் இல்லை என்பதை வெகு நேர ஆலோசணைக்கு பிறகு நாம் தெளிவாக உணர்ந்துகொண்டோம்.

மேலும் இந்த எதிர்பாலின சேர்க்கையாளரின் தொடர்புக்கு பிறகு ஜாதகர் தேவையற்ற தீய பழக்க வழக்கங்களில் சிக்குண்டு சீரழிந்துகொண்டிருப்பது தெளிவாக நமக்கு தெரிந்தும், ஜாதகரின் சுய ஜாதக வலிமையை பற்றி சிறிதும் புரியவைக்க முடியவில்லை, எல்லாம் ஜாதகரின் இறைநம்பிக்கை அற்ற தன்மைக்கு பரிசாக கிடைத்ததாக நமக்கு தோன்றுகிறது, ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கான இறுதி வாய்ப்பையும் ஜாதகர் இழந்ததாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, ஜாதகருக்கு குரு திசையில் எதிர்வரும் சுக்கிரன் புத்தி நல்லதோர் ஆன்மீக குருவின் தொடர்பை பெற்று சுய ஜாதகத்தில் உள்ள யோக பலாபலன்களை முழுவதும் சுவீகரிக்க ஓர் நல்ல வாய்ப்பை இறையருள் வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறோம்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்கள் பெரும்பாலும் முறையற்ற எதிர்பாலின சேர்க்கை, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்படும் தன்மை, தனது  சுய ஜாதக வலிமை பற்றிய தெளிவின்மை போன்ற காரணங்களாலேயே, யோகபங்க நிலையை பெறுகின்றது என்பதால், சுய ஜாதக வலிமை பற்றிய விழிப்புணர்வு மிக மிக அவசியமாகிறது, என்பதை  " ஜோதிடதீபம் " இந்தநேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment