பின்தொடர...

Thursday, November 23, 2017

சாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் தரும் பலாபலன்கள் ! ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் வழங்கும், கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஏற்று நடத்தும் பாவக வலிமை மற்றும் அது தரும் பலன்கள் என்ன ? என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகிக்கு தற்போழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது ராகு திசை ஜாதகிக்கு 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களையும், 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருப்பது  ஜாதகிக்கு 6ம் பாவக வழியில் இருந்து  நன்மைகளையும், 2,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் தரும் அமைப்பாகும், ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து தன ஆதாயத்தை வழங்கிய போதிலும், குடும்பம் சார்ந்த வழியில் இருந்து இன்னல்களை தரும், ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் அதிக சிக்கல்களை சிரமங்களை அதிகரிக்கும், குறிப்பாக  ஜாதகியின் வார்த்தைகள் இல்லற துணையின் பொறுமையை வெகுவாக சோதிக்கும், பொறுப்பற்ற செயல்பாடுகள் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை  அதிகரிக்கும் என்பதனால் ஜாதகி மிகவும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது, வாழ்க்கை துணையுடன் வரும் கருத்து வேறுபாடுகளை களைந்து இனிமையான இல்லற வாழ்க்கையை வாழ்வதற்கான நடவடிக்கைகளில் ஜாதகி இறங்குவது  மிகுந்த சிறப்புகளை தரும் ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகிக்கே 2ம் பாவகம் வலிமை அற்று காணப்படுகிறது, 

 மேலும் 8ம் பாவகம் வலிமை இழந்து இருப்பதும், 8ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாக அமைவதும், ஜாதகியின் மனநிம்மதியை வெகுவாக பாதிக்கும், இல்லற வாழ்க்கையில் அதிக அளவிலான மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை வழங்கும், மணவாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தம்பதியரின் இல்லற வாழ்க்கையில் சில சிரமங்களை தரக்கூடும், இவையெல்லாம் ஜாதகியின் சுய ஜாதகத்தில் உள்ள 2,8ம் பாவகங்களின் வலிமை அற்ற தன்மையாலே ஏற்படுகிறது என்பதை ஜாதகி  உணர்ந்து அதன் வழியில் கர்மவினை பதிவினை கழித்துக்கொள்வதே நல்லது, தனது வாழ்க்கை துணையுடனான இணக்கத்தை அதிகரித்துக்கொண்டு  இனிமையான இல்லற வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொள்வதே சரியான தீர்வாக அமையும்.

ராகு திசை ராகு புத்திவரை ஜாதகி 2,8ம் பாவக வழியிலான இன்னல்கள் நடைமுறையில் இருக்கும் என்பதால் அவசப்பட்டு ஜாதகி எடுக்கும் முடிவுகள் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கிவிடும் என்பதால், ஜாதகி பொறுமையை கையாண்டு இல்லற வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை  பெறுவதே புத்திசாலித்தனம்.

சுய ஜாதகத்தில் நமக்கு நடைபெறும் திசா புத்திகள் பாதிப்பான பாவக தொடர்பை பெற்ற வீடுகளின் பலனை தரும் பொழுது பொறுமையை கையாள்வதே சிறந்த நன்மைகளை தரும், தனக்குவரும் பெரிய சிக்கல்களில் இருந்து விடுபட நல்லநேரம் வரும் வரை பொறுமை காப்பதே சாலச்சிறந்தது, மேற்கண்ட ஜாதகிக்கு தற்போழுது  நடைபெறும் ராகு திசை ராகு புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்றுநடத்தது ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் பின்னடைவை தரும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு ராகு திசை நன்மையை தருவதால் , ஜாதகிக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சுப யோக பலன்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெறுவார் என்பதை ஜாதகியின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 1,5,7,11ம் வீடுகள் உறுதிப்படுத்துகிறது.

லக்கின பாவக வழியில் ஜாதகிக்கு உடல் நலம், மனவலிமையையும், 5ம்  பாவக வழியில் இருந்து சிறந்த இறை ஆசிர்வாதைத்தையும், சரியான முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமையையும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணையின் ஆதரவையும், அவருடனான தாம்பத்திய யோக வாழ்க்கையும், 11ம் பாவக வழியிலான நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நல்ல குணத்தையும் தருவது ஜாதகியின் ராகு திசையின் வழியில் வரும் இன்னல்களை ஜாதகி வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், சுய ஜாதகம் நல்ல வலிமையுடன் இருந்தாலும் 2ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகியின் வார்த்தைகள் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும் என்பதை கருத்தில் கொண்டு தனது இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்தி செல்வதே ஜாதகிக்கு முன் நிற்கும் சவால்கள் என்பதை கருத்தில் கொண்டு இனிமையான இல்லற வாழ்க்கை வாழ "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment