பின்தொடர...

Wednesday, August 2, 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( மேஷ லக்கினம் )


   சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

மேஷ லக்கினம் :

மேஷ லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் ராகு பகவானும், ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! பொதுவாக சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களுக்கு தனிப்பட்ட வலிமை உண்டு, அதாவது தான் நின்ற இடத்தின் பலனை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் வல்லமையும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையை தனது பலனாக ஏற்று நடத்தும் வல்லமையும்  பெற்ற கிரகங்கள் ராகு கேது என்றால் அது மிகையில்லை, அப்படிப்பட்ட ராகு கேது மேஷ லக்கின அன்பர்களுக்கு இரு கேந்திர பாவகமான 4,10ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் அமைப்பு வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாக கருதலாம், ராகுவின் 4ம் பாவக சஞ்சாரம் ஜாதகருக்கு தேய்பிறை காலங்களில் அபரிவிதமான யோக பலன்களை வாரி வழங்கும், புதிய வண்டி வாகன சேர்க்கை, சொத்து சுக சேர்க்கை, மண் மனை யோகம், புதிய பொருட்கள் வாங்கும் யோகம், சுப நிகழ்ச்சிகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி, எதிர்பாராத சொத்து மற்றும் ஆபரண சேர்க்கை, நல்ல குண நலத்துடன் அனைவரையும் மகிழ்விக்கும் யோகம், தாய் வழியிலான நன்மைகள் மற்றும் யோகங்கள் என்ற வகையில் சுபயோக பலன்களை வாரி வழங்கும், தங்களின் மனவலிமை அதிகரிக்கும், மனத்தெளிவு, சீரிய சிந்தனை, அனைத்தையும்  வெற்றிகொள்ளும் யோகம் என்ற வகையில் நன்மைகளை தரும், இருப்பினும் வளர்பிறை காலங்கள் தங்களுக்கு கடுமையான நெருக்கடிகளை  தரக்கூடும், காரிய தடை, முன்னேற்ற தடை, எதிர்ப்புகள், தனது குண நலன்களை தாமே கெடுத்துக்கொள்ளும் நிலை என சற்று இன்னல்களை தரக்கூடும் என்பதால் வளர்பிறை காலங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது சகல நலன்களையும் தரும்.

கேதுவின் 10ம் பாவக சஞ்சாரம் மேஷ லக்கின அன்பர்களுக்கு ஜீவன வழியில் இருந்து சகல யோகங்களையும் வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பதை மறுக்க இயலாது, தங்களின் தொழில் வளர்ச்சி என்பது இனி வரும் காலங்களில் மின்னல் வேகத்தில் வளர்ச்சி பாதையில் வெற்றிநடைபோடும், சுய கவுரவம் ஓங்கி நிற்கும், சமூக அந்தஸ்து அதிகாரிக்கு, அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், கேது மகர ராசியில் சஞ்சாரம் செய்யும் காலம்  முழுவது தங்களுக்கு அபரிவிதமான வளர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது, உதவி  செய்வோர் எண்ணிக்கையும், மக்கள் செல்வாக்கும் அதிகரிக்கும், இதுவரை இல்லாத தொழில் முன்னேற்றம் இனிவரும் காலங்களின் தங்களுக்கு தடையின்றி கிடைக்கும், தங்களின் திட்டமிடுதல்கள் அனைத்தும் தொடர்ந்து  வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டே இருக்கும், ஆத்ம பலம்  ஆன்மீக பலம் இரண்டும் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், புதிய தொழில் முயற்சிகள் நல்ல வெற்றிகளை  தரும், முன் பின் அறிமுகம் அற்ற நபர்கள் வேற்று மதத்தினர், வேற்று நாட்டினர் மூலம் அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தை  தடையின்றி கேதுவின் சஞ்சாரம் வாரி வழங்கும், மண் தத்துவம் ( சர ) சார்ந்த  தொழில்களில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஓர் அதிர்ஷ்டம் நிறைந்த  பூரண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை, தெய்வீக அனுக்கிரகமும், தொழில் மீது கொண்டுள்ள பக்தியும் தங்களுக்கு அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்க காத்துகொண்டு இருக்கின்றது என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு  நலம் பெறுங்கள் .

குறிப்பு :

மேஷ லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேஷ லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment