வியாழன், 14 செப்டம்பர், 2017

கணவன் மனைவி பிரிவுக்கு காரணமாக அமையும் பாதக ஸ்தானம் !

 

ஒருவரது வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை தருவது, பாதக ஸ்தானம் தொடர்பும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளுமே என்றால் அது மிகையில், எந்த ஓர் ஜாதகருக்கும் லக்கினம் முதல் 12 பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது என்பது அவ்வளவு நல்லதல்ல, குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் நடைபெறும் சுப நிகழ்வுகள் அனைத்திற்கும் கடுமையான தடைகளையும் தாமதங்களும் வாரி வழங்கிவிடும், ஜாதகருக்கு தாங்க இயலாத துன்பங்களை 200% விகிதம் தந்துவிட வாய்ப்புள்ளது, குறிப்பாக நடைபெறும் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் பாதக ஸ்தான தொடர்பை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கதி அதோகதிதான், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

இல்லற வாழ்க்கையில் சந்தோஷத்தையும், மன மகிழ்வுடன் கூடிய யோக வாழ்க்கையை வாரி வழங்குவது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையும், நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக பலனுமே என்றால் அது மிகையில், கீழ்கண்ட ஜாதகருக்கு தனது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை பற்றி புரிதலும், தனக்கு தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் தரும் பலாபலன்கள் பற்றிய தெளிவு இல்லாமல், தனது வாழ்க்கைக்கு தானே இன்னல்களை ஏற்படுத்திக்கொண்டு இருப்பது கவலைதரும் விஷயமே, அடிப்படையில் தனது ஜாதகம் பாதிப்பை தருகிறதா? அல்லது தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் பாதிப்பை தருகிறதா? என்பதை உணராமல், தனது வாழ்க்கை துணையே நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் காரணம் என்று குற்றம் சுமத்தும் மனப்பான்மையுடன் தனது இனிமையான இல்லற வாழ்க்கையை தானே பாதிப்பிற்கு ஆளாக்கி கொள்ளும் நிலையை பார்க்கும் பொழுது ஒருவேளை "விதி" வலியதோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.

சுய புத்தியுடன் ஒருவர் செயல்பட சுய ஜாதகத்தில் 1,5ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, அல்லது பெரியவர்கள் சொல் புத்தியுடன் செயல்பட்டு வாழ்க்கையில் நலம் பெறுவதற்கு 1,9ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு தற்போழுது பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்துகொள்ள வேண்டிய நிலையை தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை வழங்குவதை ஜாதகர் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், ஏனெனில் தற்போழுது  நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு கடுமையான இன்னல்களை தரும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகரின் வீண் பிடிவாதமும், அனுசரித்து செல்லும் மனப்பக்குவம் இல்லாதது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை சூன்யம் என்ற நிலைக்கு எடுத்து சென்றுவிட வாய்ப்பு அதிகம் உள்ளது, நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு ஜாதகமான பலனை ஏற்று நடத்தவில்லை என்பதே உண்மை நிலை.


லக்கினம் : கும்பம் 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : கேட்டை 2ம் பாதம் 

ஜாதகருக்கு தற்போழுது சந்திரன் திசை நடைபெறுகிறது ( 17/03/2016 முதல் 17/03/2026 வரை ) நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் 6ம் பாவக  வழியில் இருந்து தனது உடல் நிலையை தானே கெடுத்துக்கொள்ளுதல், தனது உறவினர் அனைவரிடமும் பகைமை பாராட்டுதல் ( தனது வாழ்க்கை துணை மற்றும் தனது வாரிசுடனும் ) கடன் மற்றும் எதிர்ப்புகள் மூலம் தனது எதிர்காலத்தை சிதைத்துக்கொள்ளுதல், வயிறு சார்ந்த இன்னல்களை சந்தித்தால், தேவையற்ற விரைய செலவினங்கள், வீண் வம்பு வழக்கு, குணக்கேடான விஷயங்களில் இறங்கி தனது உடல் மனம் இரண்டையும் கெடுத்துக்கொள்ளுதல், அறிவுரை சொல்பவரையே எதிரியாக பார்க்கும் மனநிலை என்ற வகையில் இன்னல்களை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் பித்ரு சாபம், ஜாதகரை இயங்கவிடாமல்  செய்யும், இறையருளின் கருணையையும், பெரியோர் சொல்லும் மதிப்பு மிக்க வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளாமல், தனது செயல்பாடுகளே சரியானது என்ற எண்ணத்தில் முரண்பட்ட காரியங்களை செய்து இன்னலுறும் அமைப்பை தரும், பாக்கியத்தின் பலாபலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாமல், அதன்வழியிலான பாவ செயல்களை அதிகம் செய்து தனது வாழ்க்கையை மிகப்பெரிய பாதிப்புகளுக்கு ஆளாக்கும் தன்மையை ஜாதகர் பெறுவது வேதனைக்குரியது, குறிப்பாக ஜாதகருக்கு 2,5,7,8ம் பாவகங்கள் வலிமையுடன் அமைந்து நல்ல வாழ்க்கை துணை மற்றும் நல்ல வாரிசு அமைந்த போதிலும், ஜாதகர் அவர்கள் அனைவரையும் வெறுப்புடன் கையாண்டு பகைமையை வளர்த்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாக்குவது 6,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவதும், நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுமே அடிப்படை காரணமாக அமைகிறது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழி மற்றும் உறவுகள் வழியில் இருந்து வரும் யோக பலன்களை ஜாதகர் உதறித்தள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்குவதும் பாதக ஸ்தான பலன்கள் நடைமுறையில் உள்ளதே காரணமாக அமைகிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதே, தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை ஜாதகர் பயன்படுத்திக்கொண்டு நலம் பெற, அவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதே சாலச்சிறந்தது, ஆனால் அதை ஜாதகர் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறதா ? என்றால் சந்தேகம்தான், அடிப்படையில் நமது சுய ஜாதகம் வலிமை அற்று காணப்படும் பொழுதும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுதும் நாம் நம்மை சார்ந்தவர்களின் வலிமை பெற்ற ஜாதக யோக பலன்களை  சுவீகரித்து நலம் பெறுவதே நல்லது, மாறாக தனது நிலையை உணராமல், தனது செயல்பாடுகளில் அதீத நம்பிக்கை கொண்டு இறங்குவது படுகுழியில் தள்ளிவிடும், பெரும்பாலும் நிறைய அன்பர்கள் இந்த தவறை மிக தெளிவாக செய்கிறார்கள், மேற்கண்ட ஜாதகர் உற்பட, தனது சுய ஜாதக வலிமை நிலையை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம்.

மேற்கண்ட ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் சனி திசை ( 06/11/2014 முதல் 06/11/2033 வரை ) வலிமை பெற்ற 1,4,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும், ஜாதகரது சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை பெற்ற தொடர்பு அதற்க்கு காரணமாக அமைகிறது என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டால், ஜாதகரின் இல்லற வாழ்க்கை சுபத்துவம் பெரும், மாறாக தனது செயல்பாடுகளுக்கு நியாயம் கற்ப்பித்துக்கொண்டு, பிடிவாதத்துடன் செயல்பட்டால் ஜாதகரின் பாதக ஸ்தான தொடர்பும், பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையும், ஜாதகரின் வாழ்க்கையை நிச்சயம் அலங்கோலம் ஆக்கிவிடும் என்பதுமட்டும் உண்மை.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளில் எந்த ஓர் வீடும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது நல்லதல்ல, ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து வரும் 200% விகித இன்னல்களை ஜாதகர் அனுபவித்து கழித்துக்கொள்வதும், முறையான பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வதும் மிக மிக அவசியமாகிறது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால், தனது வாழ்க்கை துணையை வலிமை பெற்ற ஜாதகமாக தேர்வு செய்வது அவசியமாகிறது, மேலும் தன்னுடன் சேர்க்கை பெரும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் குணாதிசயம் அறிந்து பழகுவதும், நல்லோருடன் நட்பு வைத்துக்கொள்வது, சகல விதங்களில் இருந்தும் நன்மைகளை தரும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்தே ஒருவர் கடுமையான இன்னல்களை சந்திக்கவேண்டிவரும் என்ற விஷயத்தை உணர்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக