" அவனின்றி ஓர் அணுவும் அசையாது, அனைத்து இயக்கங்களுக்கும் காரணம் இறைவன் ” என்பதற்க்கு இணங்க சுய ஜாதகத்தில் " லக்கினம் " எனும் முதல் பாவகம் ஓர் ஜாதகரை இயக்குவதில் முன்னுரிமை பெறுகிறது, லக்கினம் என்பது அவரவர் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய காரணிகளால் நிர்ணயம் செய்படுகிறது, லக்கினத்தில் அடிப்படையாக கொண்டு 12பாவகங்களின் வலிமை நிலையும் சுய ஜாதகத்தில் நிர்ணயிக்கபடுகிறது என்றால் அது மிகையில்லை அன்பர்களே ! இதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகம் நான்காவது கேந்திரமாகவும், ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை பற்றியும் தெளிவுபடுத்துகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெற்று கேந்திரம் மற்றும் கோண பாவகங்களுடன் தொடர்பு பெற்றோ, வீரியம் மற்றும் லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகரின் ஜீவன வாழ்க்கை என்பது அபரிவிதமான முன்னேற்றங்களுடன், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெற்று இந்த புவியில் சுயமரியாதை,கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தனது வாழ்நாளில் சுவீகாரம் செய்யும் வல்லமை பெற்றவர் என்பது உறுதியாகும்.
மாறாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10 வீடு, மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெற்றோ, தனது லக்கினத்திற்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், ஜாதகருக்கு தனது ஜீவனத்தை கௌரவமாக நடத்த வாய்ப்பு இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கும், ஜீவன ரீதியாக ஜாதகர் வெறும் திட்டமிடுதல்களை மட்டுமே செய்ய இயலும் நடைமுறைக்கு கொண்டுவருவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், குறிப்பாக ஜாதகரின் 10ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கும், மேலும் கௌரவ குறைவான வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகர் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து எடுக்கும் முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்விகளை வாரி வழங்கும், ஜாதகரின் நம்பிக்கையும், செயல்திறனும் முற்றிலும் பாதிக்கப்பட்டு, போராட்டம் ஒன்றே வாழ்க்கையாக மாறிவிட வாய்ப்பு உண்டு, ஜாதகரின் அறிவுரையை ஏற்கும் அனைவரும் வெற்றிமேல் வெற்றி பெறுவார், ஆனால் ஜாதகருக்கோ தோல்வி ஒன்றே பரிசாக கிடைக்கும், இதை தவிர்க்க ஜாதகர் தனது சுய ஜாதகத்தில் உள்ள மற்ற பாவகங்களின் வலிமை பயன்படுத்தி நலம்பெறலாம், இதற்க்கு தனது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை பற்றி தெளிவு பெற்று இருப்பதும், நடைபெறும் திசா புத்திகள் மற்றும் எதிவரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை பற்றி தெளிவு பெற்று இருப்பதும் அவசியமாகிறது.
சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று நடைமுறையில் உள்ள திசா புத்தியும், எதிர்வரும் திசாபுத்தியும் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் ஜீவன வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், செய்யும் தொழில் மற்றும் பணியில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்றும் ஜீவன ரீதியாக யோக வாழ்க்கையை பெறுவார் என்பது உறுதி, கிழ்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன பாவக வலிமை, கூட்டு தொழில் யோகம் மற்றும் தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள், எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றிய விரிவான விளக்கத்தை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : துலாம்
ராசி : கும்பம்
நட்சத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்
ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் வீடுகள், தொடர்பு படுத்தும் பாவகம் பற்றி பார்ப்போம் அன்பர்களே 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் மிகுந்த வலிமையுடன் இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு சுக ஸ்தானம் எனும் 4ம் வீடாக அமைவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், இதானால் ஜாதகரின் ஜீவன வலிமை மேலும் மெருகேறி அதி அற்ப்புதமான ஜீவன முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஜாதகருக்கு 4,8,9,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மாத்ரு ஸ்தான வழியில் இருந்து நல்ல சுக போகங்களை தான் செய்யும் தொழில் வழியில் இருந்து ஜாதகர் பெறுவார், மண் மனை, வண்டி வாகனம் சார்ந்த தொழில்களில் கொடிகட்டி பறக்கும் யோகத்தை தரும், தனது தாயார் வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கையையும், நிதி உதவிகளையும் பெரும் யோகம் பெற்றவர், போக்குவரத்து தொழில் வண்டிவாகனம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியை தரும், சரக்கு உந்து, போருந்து, சொகுசு வாகனங்கள் மூலம் வாழ்க்கையில் ஜாதகருக்கு நல்ல வருமானமும், முன்னேற்றமும் உண்டாகும்.
ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு மருத்துவ துறை, அல்லது மருந்து பொருட்கள், ஆயுள் காப்பீடு, இன்சூரன்சு, மருத்துவ உபகரணம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருளாதார உதவிகள் ஜாதகரை மதிப்பு மிக்க தொழில் அதிபர் என்ற நிலைக்கு குறுகியகாலத்தில் உயர்த்தும், தனது திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது ஜாதகரே நினைத்து பார்க்காத வண்ணம் அமையும் என்பது சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை, மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணை வழியிலான தன சேர்க்கையையும் எதிர்பாராத நேரங்களில், திடீர் அதிர்ஷ்டமாக வாரி வழங்கும், தனம் சார்ந்த தொழில்களில் குறிப்பாக நிதி நிறுவனம், வட்டி தொழில், வாக்கு வன்மையின் மூலம் பெரும் வாருமானம் என ஜாதகரின் ஜீவன வாழ்க்கைக்கு மேலும் மேலும் மெருகேற்றும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அமசமாகும்.
பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், குறிப்பாக ஜாதகர் பேராசிரியர், கல்வி துறை சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வருமான வாய்ப்புகளை தரும், கல்வி கூடங்கள் நடத்துவது, கல்வி பணி சார்ந்த தொழில்களில் ஈடுபடுவது மூலம் அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது மூலம் மிகப்பெரிய வெற்றிகளை பெறலாம், அல்லது தனது முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரிய தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்புகளை பெறலாம், அறிவு சார்ந்த தொழில்கள், ஆன்மீக தொழில் போன்றவற்றில் சிறப்புகளை தரும்
ஜீவன ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான பலாபலன்களை முழு அளவில் பெறுவதற்கு தகுதி உள்ளவர் என்பது உறுதியாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தான அதிபதி புதன் என்பதால் ( உயர் கணித ஜோதிட விதிபடி ) ஜாதகரின் மன ஆற்றலும் அறிவு திறனும் ஒருங்கே இணைந்து செயல்படும், இதனால் ஜாதகரின் மனதில் எண்ணிய காரியங்கள் மற்றும் தொழில் முன்னேற்றங்களை வெற்றிகரமாக தனது அறிவு திறன் கொண்டு தொடர்ந்து பெற்ற வண்ணமே இருப்பார் என்பது மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும், ஜாதகரின் தொழில் வன்மையும், தெளிவான திட்டமிடுதல்களும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளையும், கை நிறைவான வருமானங்களையும் வாரி வழங்கிய வண்ணமே இருக்கும், ஜாதகர் கை தேர்ந்த வியாபாரியாகவும், திறமை மிக்க தொழில் அதிபராகவும் பரிணமிக்க சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தான வலிமை நூறு சதவிகிதம் உதவி புரியும், ஜீவன ஸ்தானம் சர ராசியில் வலிமை பெற்று இருப்பது குறுகியகாலத்தில் "கோடிஸ்வர " யோகத்தை நல்கும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சர நீர் தத்துவ ராசியில் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் செய் தொழிலில் தன்னிறைவான முன்னேற்றங்களை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன், அழிவு நிலை பொருட்களான உணவு பொருட்கள், தானியம், எண்ணை பொருட்கள், துணி மற்றும் நீர் தத்துவம் சார்ந்த தொழில்களில் அபரிவிதமான வளர்ச்சியை பெறுபவர் என்பதை உறுதி செய்கிறது.
மேற்கண்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமையுடன் இருப்பதும், ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் சுப யோகங்களை தடையின்றி பெறுவார் என்பதும் தெளிவாகிறது, அடுத்து தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு தரும் பலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம், குரு திசை ஜாதகருக்கு 7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் 200% விகித இன்னல்களை நடத்தி கொண்டு இருப்பது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், அதனால் உண்டாகும் யோக வாழ்க்கை பெற இயலாத சூழ்நிலையை உருவாக்கும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றநிலையை தருவது வருத்தத்திற்கு உரிய ஒன்றாக் கருத வேண்டியுள்ளது, அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு 9ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது தொழில் ரீதியான யோக பலன்களை அனுபவிக்கும் யோக அமைப்பை தரும், குரு திசை ஜாதகருக்கு சிறப்பை தரவில்லை என்பதே உண்மை நிலை, நடப்பது குரு திசை தானே, நன்மையை செய்யும் என்று கருதி ஜாதகர் செயல்பட்டால், அனைத்தையும் பாதக ஸ்தான வழியில் இழந்து இன்னலுற நேரும் என்பதை கருத்தில் கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், ஏனெனில் நடைபெறும் குரு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கின்றது.
ஜாதகர் கூட்டு தொழில் செய்யலாமா ?
சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்திலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு ஆகும், இது ஜாதகரின் வாழ்க்கையில் 7,11ம் பாவக வழியில் இருந்து அளவில்லா இன்னல்களை தரும், குறிப்பாக கூட்டாளி, நண்பர்கள், வெளிவட்டாரம் சார்ந்த விஷயங்களில் இருந்து ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் செய்ய சுய ஜாதகத்தில் 7ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு துலாம் வலிமை பெற்று இருப்பதும் அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது கூட்டு தொழில் மூலம் மிகப்பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் ஏற்ப்படுத்தும், எதிர்பால் இன சேர்க்கை மூலம் ஜாதகர் தனது ஜீவன முன்னேற்றத்திற்கு தானே தடைகளை ஏற்ப்படுத்திகொண்டு இன்னளுருவார் என்பது உறுதியாக தெரிவதால், தயவு செய்து கூட்டு தொழில் செய்வதை தவிர்ப்பதே சால சிறந்தது, பொருளாதர கஷ்டத்தில் இருந்து ஜாதகர் தப்பிக்க இயலும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் 7ம் வீடு வலிமை அற்று இருப்பது ( பாதக ஸ்தான தொடர்பு ) ஜாதகர் கூட்டு தொழில் செய்ய அருகதை அற்றவர் என்பதை உறுதிபடுத்துகிறது, மேலும் நடைபெறும் குரு திசை சாதகம் இன்றி இருப்பது ஜாதகர் ஏதாவது ஓர் பணியில் ஈடுபடுவதே நன்மைகளை தரும், எதிர்வரும் சனி திசையில் சுய தொழில் சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு நலம் பெறலாம், "வாழ்த்துகள் "
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக