பின்தொடர...

Friday, September 22, 2017

திருமண பொருத்தம் நிர்ணயம் : சுய ஜாதகத்தில் கிரகங்களின் அமர்வு முக்கியமா ? சுய ஜாதகத்தில் 12 பாவக வலிமை முக்கியமா ?


பொதுவாக திருமண பொருத்தம் காணும் பொழுது வரன் வது இருவரது சுய ஜாதகத்திலும் கிரகங்கள் அமர்ந்த நிலையை வைத்தும், நட்சத்திர பொருத்தங்களை வைத்தும், நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சுப கிரக திசாபுத்திகளா? என்பதை கருத்தில் கொண்டும், கிரக தோஷம், ராகுகேது தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் என வகைக்கு ஓர் தோஷங்களை சொல்லியும், ஏக திசை, திசா சந்திப்பு எனும் நடைமுறைக்கு சற்றும் ஒத்துவராத காரணங்களை சொல்லி, பொருத்தம் உள்ள ஜாதகங்களை பொருத்தமற்றது என்றும், பொருத்தம் அற்ற ஜாதகங்களை பொருத்தம் உள்ளது என்றும் பலரது இல்லற வாழ்க்கையை பாதிப்பிற்கு ஆளாக்கி, தனது வினைபதிவையும் அதிகரித்து கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு சில உண்மைகளை கூற " ஜோதிடதீபம் " கடமை பட்டுள்ளது, அதாவது சுய ஜாதக வலிமை என்பாது இரட்டை குழந்தையாக பிறந்த 30 வினாடிகள் வித்தியாசம் மட்டுமே கொண்டுள்ளவர்களுக்கும் பாவக வலிமையில் வெகு மாற்றங்களை தரும் எனும் பொழுது சுய ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையை கருத்தில் கொண்டு பலன் நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் சுய ஜாதக வலிமை நிலைக்கு புறம்பானது.

நட்ச்சத்திர பொருத்தம் :

திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதில் இதுவரை அனைவராலும் கடைபிடிக்கும் முறை இது, உண்மையில் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் மேற்கண்ட நட்ச்சத்திர பொருத்தம் என்பது 10க்கு 10 இருப்பினும் திருமண வாழ்க்கை சிறப்பிக்காது, குறிப்பாக ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமணம் செய்ய கூடாது என்று சொல்லும் வாதம் என்பது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை நிலையை பற்றி சிறிதும் அறிந்திராமல் சொல்லப்படும் ஓர் குருட்டு தனமான அணுகுமுறையே என்றால் அது மிகையில்லை, ரஜ்ஜு பொருத்தம் அற்று திருமணம் செய்ய அன்பர்கள் பல பேர் வாழ்க்கையில் தாம்பத்திய வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருப்பதை உதாரண ஜாதகம் கொண்டும் விளக்கம் தரமுடியும், மேலும் சுய தம்பதியர் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின் இந்த ரஜ்ஜு பொருத்தம் எந்த விதத்திலும் திருமண வாழ்க்கை நிச்சயம் பாதிக்காது, நட்ஷத்திர பொறுத்த நிர்ணயம் என்பது சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பின், நட்ச்சத்திர பொருத்தத்தை கருத்தில் கொள்ளாமல் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யலாம், மேலும் சுய ஜாதகம் இல்லாமல் வெறும் பெயரை மற்றும் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் நட்ஷத்திரம் கண்டு பொருத்தம் நிர்ணயம் செய்த தலைமுறைக்கு வேண்டுமானால் இது பொருந்தும், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகிவற்றை கையில் வைத்திற்குக்கும் அன்பர்களுக்கு நட்ச்சத்திர பொருத்தம் என்பது தேவையற்றது, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையும், நடைபெரும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை நிலையும் தெளிவாக தெரிந்தால் போதும்.

கிரகங்கள் அமர்வு நிலை :

கிரகங்கள் சுய ஜாதகத்தில் அமர்வதை வைத்து பொருத்தம் நிர்ணயம் செய்வது, அதாவது பெண்கள் ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்வது விதவை தோஷம் என்று சொல்வது கேலி கூத்து, பெண்களின் சுய ஜாதகத்தில் 8ம் பாவக வலிமை நிலையை சிறிதும் உணராமல் கூறப்படும் உளறல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை, பெண்களின் ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்ந்து இருந்தாலும், 8ம் பாவகம் சுய ஜாதக அமைப்பின்படி வலிமை பெற்று இருப்பின் விதவை தோஷத்தை ஏற்படுத்தாது, மாறாக தனது கணவன் வழியில் இருந்து ஜாதகி பெரும் பொருளாதார வசதி வாய்ப்பை குறிக்கும், சுக போகங்களை குறிக்கும், தம்பதியரின் உடல் ஆரோக்கியத்தை குறிக்கும், தாம்பத்திய வாழ்க்கையில் இணைவதன் மூலம் தம்பதியர் பெரும் அதிர்ஷ்டத்தை குறிக்கும், ஆக ஜாதகத்தில் 8ல் சனி, செவ்வாய், ராகு அமர்வது விதவை தோஷம் என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான கருத்து, அவர்களுக்கு சுய ஜாதக பாவக வலிமை பற்றிய தெளிவு சிறிதும் இல்லை என்பதே உண்மை நிலை, மேலும் பெண்கள் ஜாதகத்தில் 7ல் சூரியன் சனி இருப்பது தோஷம் என்பதும் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானங்களில் கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டும், லக்கினம் முதல் 12 பாவகங்களில் கிரகங்கள் அமர்வதை கருத்தில் கொண்டும் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறான அணுகு முறை, லக்கினம் முதல் 12 பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொள்வதே சாலச்சிறந்தது.

 அதை போன்றே ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையை கருத்தில் கொண்டு திருமணம் செய்வது என்பதும் தவறான அணுகுமுறை, ஆண் பெண் ஜாதகங்களின்  திருமண பொருத்தம் காணும் பொழுது கீழ்கண்ட பாவக வலிமைக்கும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வலிமைக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே சரியான அணுகுமுறை, வரன் வது ஜாதகத்தில் 1,2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பிக்கும், அதே போன்று நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது தாம்பத்திய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து தரும்.

ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், ரஜ்ஜு பொருத்தம், காலசர்ப்ப தோஷம், சனி தோஷம், ஏழரை சனி தோஷம், களத்திர தோஷம் என்ற மூட நம்பிக்கையில் கவனம் செலுத்தாமல், வரன் வது ஜாதகத்தில் பாவக வலிமைக்கும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகளுக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே சரியான அணுகு முறை அன்பர்களே ! சுய ஜாதக  வலிமையை பற்றியும், அதன் அடிப்படையில் பொருத்தம் நிர்ணயம் செய்வது பற்றியும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம்

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை அற்று இருப்பதும், 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் சுய ஜாதகத்தில் திருமண வாழ்க்கையில் தடை தாமதங்களையும், நல்ல இல்லற வாழ்க்கையை அமையாத நிலையையும் கட்டியம் கூறுகிறது, மேலும் நடைபெறும் குரு திசை 11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதக ஸ்தான பலாபலன்களை முழு வீச்சில் தந்து கொண்டு இருப்பது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிக்கொண்டு இருப்பது வருத்தத்திற்க்கு உரிய விஷயமாகும்.

 எனவே சுய  ஜாதகத்தில் ஜாதகிக்கு திருமண வாழ்க்கையை குறிக்கும் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை அற்று இருப்பதும், நடைபெறும் திசா புத்தி வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் திருமணம் சார்ந்த தடைகளையும் இன்னல்களையும் வழங்கிகொண்டு இருக்கின்றது,எனவே இந்த ஜாதகிக்கு சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர்  ஜாதகரை திருமணம் செய்து வைத்தால் மட்டுமே இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும், மாறாக இதை போன்றே வலிமை அற்ற ஜாதகரை நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் இதர பல தோஷ பொருத்தங்கள் உள்ளது என்று  இல்லற வாழ்க்கையில் இணைத்தால் சில மாதங்களிலேயே திருமண வாழ்க்கை கசந்து, வெகு விரைவில் பிரிவினையை தந்து விடும்.

குறிப்பு :

 திருமண பொருத்தம் காணும்பொழுது வரன் வது  ஜாதகத்தில் பாவக வலிமைக்கும் முக்கியத்துவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வதே தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகரமான முன்னேற்றங்களையும், சந்தோஷமான இல்லற வாழ்க்கையையும் தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது என்பதை பதிவு செய்ய "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment