பின்தொடர...

Thursday, September 21, 2017

ராகு திசை தரும் பலனும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பும் ! ஒருவரின் வாழ்க்கையில் அதிக அளவிலான இன்னல்களையும் துன்பங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாரி வழங்கும் வல்லமை பாதக ஸ்தானத்திற்கு உண்டு, ஒருவரின் ஜாதகத்தில் நடைபெறும் திசை எந்த கிரகத்தின் திசை என்றாலும் சரி எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்த கூடாது, அப்படி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற முதுமொழிக்கு பொருத்தமான பலாபலன்களை தர ஆரம்பித்துவிடும், ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் பெரும் பின்னடைவையும், படுதோல்விகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் சுப யோகங்கள் இருப்பினும் அவையாவும் பாதக ஸ்தான பலன் நடைமுறையில் உள்ள பொழுது சுபயோக பலன்கள் அனைத்தையும் தடை செய்யும், வாழ்க்கையில் ஜாதகரின் ஆசை, கனவுகள் யாவும் கானல் நீராக போக அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் ஜாதகர் பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற போதிலும், குடத்தில் இட்ட விளக்கு போல், பிரகாசம் குறைந்து பலனேதும் அற்ற வாழ்க்கையை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிவரும், பாதக ஸ்தானம் தரும் பலாபலன்கள் பற்றி ஓர் சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மேஷம் 
ராசி : தனுசு 
நட்ஷத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

 நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் : ( 10/12/2003 முதல் 10/12/2021 வரை )

 ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை 2ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலாபலன்களை வழங்கி கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிப்பை வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷப ராசியில் பாதியும், மிதுன ராசியில் பாதியும் வியாபித்து நின்று பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கை சார்ந்த இன்னல்களையும், வருமானம் சார்ந்த இன்னல்களையும் கடுமையாக தருவதுடன், எடுக்கும் முயற்சிகள் யாவும் ஜாதகருக்கு பெரிய அளவிலான தொடர் தோல்விகளை வாரி வழங்கி கொண்டு இருப்பது, ஜாதகருக்கு மனம் உடல் சார்ந்த தொந்தரவுகளையும், மனசோர்வையும் தந்து கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் வருமானம் முழுவதும் மற்றவர்களுக்கே சென்றுகொண்டு இருக்கின்றது, ஜாதகரின் உழைப்பும், அறிவு திறனும் வீண் விரயமாகிறது, எந்த ஓர் விதத்திலும் ஜாதகர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க இயலாமல் தனது வாழ்க்கையை தானே போராட்ட நிலைக்கு ஆர்படுத்தி இருப்பது பாதக ஸ்தான வலிமையின் தாக்கத்தை காட்டுகிறது.

ஜாதகருக்கு கடந்த 15 வருடங்களாக ராகு திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது என்பது சொல்ல இயலாத துன்பங்களையும் துயரங்களையும், எதிர்பாராத நஷ்டங்களையும், திடீர் இழப்புகளையும், மருத்துவ செலவினங்களையும் பாரபட்சம் பார்க்காமல் வழங்கி கொண்டு இருக்கின்றது, ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் மிக பெரிய தோல்விகளையும், நஷ்டங்களையும் மட்டுமே இதுவரை வழங்கி உள்ளது, ஜாதகரின் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கும்பம் மற்றும் மீனா ராசியில் வியாபித்து நிற்பது ஜாதகரின் அதிர்ஷ்டமின்மையும், தன்னம்பிக்கை குலையும் விதமான நிகழ்வுகளையும் இதுவரை தந்துகொண்டு இருப்பது, ஜாதகரை  மனவிரக்கத்தியின் உச்சத்துக்கே அழைத்து சென்று கொண்டு இருக்கின்றது, ஒவ்வொரு நாளும் ஜாதகர், பொருளாதார நெருக்கடிகளை கடுமையாக அனுபவித்து கொண்டு இருப்பதும், வெளியில் சொல்ல இயலாத துன்பங்களை அனுபவித்து கொண்டு இருப்பதும் சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஏற்று நடத்தும் பாதக ஸ்தான பலாபலன்கள் என்றால் அது மிகையில்லை, எனவே ஒருவர் சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று  நடத்தினால் ஜாதகர் படும் பாடு சொல்ல இயலாத துன்பங்களை தரும் என்பதற்கு மேற்கண்ட  ஜாதகமே நல்ல உதாரணம்.

இருப்பினும் ராகு திசையில் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் புத்தி இரண்டும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை முறையே ஜீவனம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களுக்கு இடையே சிறிதளவு நன்மைகளை தரும், அதற்க்கு பிறகு வரும் சந்திரன் மற்றும் செவ்வாய் புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இல்லை என்பது மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும், ராகு திசைக்கு பிறகு வரும் குரு திசை ஜாதகருக்கு 3,8,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகருக்கு பாதக ஸ்தான இன்னல்களில் இருந்து விடுதலையை தரும்.

சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் வலிமை  பெற்று இருப்பது ஜாதகரின் சொந்த புத்தியை குறிக்கும் மேற்கண்ட ஜாதகருக்கு 5ம் வீடு விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகரின் சொந்த புத்தியில் செய்யும் காரியங்கள் யாவும் வீண் விரயத்தையும் பெரும் நஷ்டங்களையும் தரும், சுய ஜாதகத்தில் 9ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு பெரியோர் வழங்கும் சொல்புத்தியை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 9ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் பெரியோர், நல்ல நண்பர்கள் மாற்றும் ஆன்மீக குரு மார்கள் வழங்கும் அறிவுரையை ஏற்று நடந்து வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவிக்கலாம், எதிர்வரும் குரு திசையும் அதையே " கட்டியம் " கூறுகிறது என்பது ஜாதகருக்கு இறைஅருள் வழங்கும் நல்ல வாய்ப்பாகவும், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை அன்பர்களே !

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை  ஏற்று நடத்தும் பாவக பலன் என்ன? என்பதில் தெளிவு இல்லாத பொழுது, ஜாதகர் செய்யும் காரியங்கள் யாவும் கண்ணை கட்டிக்கொண்டு வழிதேடுவதற்கு இணையான பலாபலன்களை  வழங்கி விடும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது நலம் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment