பின்தொடர...

Monday, September 11, 2017

தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையும் !

 
ஒருவரின் வாழ்க்கை கௌரவ குறைவின்றி, சிறப்பாக இயங்க  அடிப்படையாக காரணமாக அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஜாதகருக்கு நல்ல ஜீவனத்தை வழங்குவதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமை முதன்மை வகிக்கிறது, மேலும் கேந்திர ஸ்தானம் எனும் 1,4,7,10ம் பாவகங்களும், கோண ஸ்தானம் எனும் 1,5,9ம் பாவகங்களும் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் துன்பம் இல்லா சுபயோக வாழ்க்கையினை பெறுவதற்கு தடை ஏதும்  இருக்காது, மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறை இல்லை என்றே சொல்லலாம், கீழ்க்கண்ட உதாரண ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை மற்றும் அதன் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மைகளை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 4ம் பாதம்

 ஜாதகர் தனுசு லக்கினம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியை ஜாதகர் லக்கினமாக பெற்று இருப்பது கவனிக்க தக்க விஷயமாகும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு தொடர்பு பெறுவது தனது  லக்கினத்திற்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் ( 9ம் பாவகம் ஜாதகருக்கு  கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியம் என்று அழைக்கப்படும் சிம்ம ராசியில் அமைவது கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சமாகும்  ) ஜாதகரின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கியமாகவும், லக்கினம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ  புண்ணியமாகவும் அமைவது ஜாதகரின் லக்கினம் பெரும் வலிமையை நமக்கு தெளிவு படுத்துகிறது, ஜாதகர் மிதம் மிஞ்சிய அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் நிரம்ப பெற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, அடிப்படையில் ஓர் ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது ஜாதகரின் உயிர், உடல் மற்றும் மனம் சார்ந்த வலிமையை உறுதிபடுத்தும், ஜாதகருக்கு லக்கினம் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளை தொடர்ந்து பெறுவார் என்பது வரவேற்க்கதக்க சிறப்பு அம்சமாகும், தொழில் துறையில் சிறந்து விளங்க முதலில் லக்கினம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வல்லமை பெற்றவர் என்பதும் சுய ஆளுமை மற்றும் நிர்வாக திறன் கொண்டவர் என்பதும் உறுதியாகும், தான் செய்யும் தொழில் வழியிலான நன்மைகளை ஜாதகரே பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும் உறுதி படுத்தும், லக்கினம் வலிமை பெற வில்லை எனில் ஜாதகரின் உழைப்பு தொழில் வல்லமை அனைத்தும் மற்றவர்களுக்கு பயன்படும் நிலையை தரும்,மேலும் தொழில் ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கும் வலிமை இன்றி சுய ஆளுமை திறன் இன்றி செய்தொழிலில் பெருத்த நஷ்டங்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது தொழில் மட்டுமல்ல அனைத்திற்கும் நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இறைஅருளின் பரிபூர்ண கருணையையும், வருமுன் உணரும் வல்லமையையும் பெற்றவர் என்பதனையும் தெளிவு படுத்துகிறது, இதனால் ஜாதகர் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பவர் என்பது உறுதியாகிறது.

சுய ஜாதகத்தில் 4ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான்  தொழில் ரீதியாகவும், வியாபார நோக்கத்திலும் சொத்து, பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களை முதலீடு செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் ரீதியான நடவடிக்கை மற்றும் திட்டமிடுதல்களை மிக சிறப்பாக செய்யும் செயல்படுத்தும் யோகம் பெற்றவர் என்பதனை உறுதிப்படுத்துகிறது, நல்ல குணமும் அனுசரித்தது செல்லும் மனமும் ஜாதகரை தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும், மேலும் ஜாதகர் தமது சுய உழைப்பின் மூலம் சொத்து வண்டி வாகனம் மற்றும் பொருள் வரவை தங்கு தடையின்றி பெரு[பெறுபவர் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெறுவது மக்கள் தொடர்பு மற்றும் வியாபர நுணுக்கம், வியாபாரத்தில் வெற்றி என்ற வகையில் சுபயோகங்களை  வாரி வழங்கும், பல வெளிநாடுகள் அல்லது வெளியூர் வழியிலான வியாபர விருத்தியை தரும், அந்நிய நபர்கள் அறிமுகம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள் அதிகரிக்கும், கூட்டு தொழில் அல்லது கூட்டாளிகள் மூலம் ஜாதகர் வாழ்க்கையில் நிகரில்லா வளர்ச்சியை பெறுபவர் என்பதனை மிக தெளிவாக உறுதிபடுத்துகிறது, மேலும் ஜாதகர் செய்யும் தொழில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றிகளை தரும் என்பதுடன், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொருளாதர தன்னிறைவை எதிர்பாரா வண்ணம் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

சுய ஜாதகத்தில் 10ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் சுய தொழில் செய்வதன் மூலம் அபரிவிதமான வெற்றிகளை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன் ஸ்திரமான தொழில் முன்னேற்றங்களை பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாக அமைவது ஜாதகர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலை தேர்வு செய்து வெற்றி காண்பார் என்பதுடன், ஜாதகரின் தொழில் எதிரிகள் மூலமே ஜாதகருக்கு தொழில் வெற்றிகள் தேடிவரும் என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து கை நிறைவான வருமான வாய்ப்பை பெறுபவர் என்பதுடன் பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து பெரும் அமைப்பை தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் தொடர்ந்து அதிர்ஷ்டம் மற்றும் தன வரவை தொடர்ந்து தரும், ஜாதகரின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மிகப்பெரிய லாபங்களை வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தொடர் அதிர்ஷ்டத்துடன் கூடிய மிகுந்த தன லாபத்தை பெரும் யோகத்தை தரும், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்கள் ஜாதகரின் வாழ்க்கையை மிகவும் யோகம் மிக்கதாக மாற்றும்.

1,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியிலான சுபயோக பலன்களையும், 3ம் பாவக வழியிலனா சகல சௌபாக்கியம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி என்ற நிலையை தரும், வியாபர விருத்தி என்பது ஜாதகருக்கு மிக அபரிவிதமாக அமையும், தோல்வி அற்ற நிலை என்பதுடன் மிகுந்த மன வலிமையை ஜாதகருக்கு வாரி வழங்கும், வீரியமிக்க செயல்திறன் மூலம் ஜாதகர் சகல நன்மைகளையும் பெறுவார், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அனுபவ அறிவு அதிக அளவில் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் இயற்கையாக அமைந்து இருக்கும், தனது வாழ்க்கையை மிகவும் பயனுள்ளதாக மாற்றத்தக்க வல்லமை பெற்றவர் என்பது சிறப்பு தகுதியாகும்.

சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 8,12 ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் தொழில் அதிபர் என்ற நிலைக்கு உயர்த்தும் வல்லமை பெற்றது என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

சுய ஜாதகத்தில் 10பாவகங்கள் வலிமை பெற்றதுடன் தற்போழுது  நடைபெறும்  சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுடன், எதிர்வரும் புதன் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் பாவகம் வலிமை பெறுவதுடன் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற லாபம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் வெற்றிகளை வாரி வழங்கும் என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள தொழில் சார்ந்த பாவக வலிமை நிலை, மேலும் ஜாதகர் தொழில் ரீதியாக மிக பெரிய வெற்றிகளை  பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment