பின்தொடர...

Tuesday, October 17, 2017

சுய ஜாதக வலிமை நிலையும், ஜாதகரின் மனபயமும் !

 
 
 "ஜோதிடம்" என்பது நமது வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், விழிப்புணர்வுடன் கூடிய தெளிந்த நல்லறிவையும் தரவேண்டும், மாறாக மூடநம்பிக்கைகளையும், நம்பிக்கையை குலைக்கும் விதமான பயமுறுத்தல்களையும் கொண்டதாக இருக்க கூடாது, பொதுவாக ஓர் ஜாதகர் சமுதாயத்தில் சுய வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றங்களை பெற்று சுபயோக வாழ்க்கையை பெறுவதற்கு மூன்று அன்பர்களின் வழிகாட்டுதல்கள் மிக முக்கியமாக தேவை, அந்த மூன்று நபர்களின்  சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்குமாயின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோக வாழ்க்கையினை பெறுவதற்கு தடையேதும் இருக்காது, முதலில் நல்ல மருத்துவர் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் உடல் நிலையில் சிறப்பான ஆரோக்கியத்தை தரும், நல்ல வழக்கறிஞர் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கை பாதையினை அமைத்து தரும், நல்ல ஜோதிடரின் ஆலோசனையை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றங்களையும், சுபயோகங்களையும் வாரி வழங்கும்.

 ஒரு ஜாதகத்தில் இல்லாத விஷயத்தை நவகிரகங்கள் தருவதாக மிகைபடுத்தி கூறுவது உண்மைக்கு புறம்பானது, பொதுவாக சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரை மிக சிறப்பாக செயல்பட வைக்கும், மேலும் பூரண ஆயுளை தரும், தான் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகரை ஏதாவது ஓர் வழியில் ஜீவிக்க வைக்கும், இதை போன்றே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் தான் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகரை தனது வலிமைக்கு ஏற்றார் போல் இயக்கும், கிழ்கண்ட ஜாதகரின் கேள்விக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமைக்கு உற்பட்ட உண்மையான பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஜாதகர் இதற்க்கு முன் ஜாதக ஆலோசனை பெற்ற இடத்தில் கூறப்பட்ட கருத்துக்களை முதலில் பார்ப்போம்.


( 1. ஜாதகருக்கு . .கேது கொடி பிடிக்க **கால ஸர்ப்ப தோஷம் ** இது கடைசி வரை தொடர்வது .!! ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

கால சர்ப்ப தோஷத்திற்கு இலக்கணம் ராகுகேது க்குள் அணைத்தது கிரகங்களும் அடக்கம் பெறுவது, மேற்கண்ட ஜாதகத்தில் ராகு 260:43:58 பாகையில் அமர்ந்திருக்கிறது, அதற்க்கு முன் சந்திரன் 251:56:46 பாக்கையிலும், செவ்வாய் 257:15:38 பாக்கையிலும் அமர்ந்து இருக்கின்றனர் எனவே கால சர்ப்ப தோஷம் என்பது இல்லை என்பதால் ராகு கேது கொடி பிடித்தால் நமக்கு என்ன?  குத்தூசி பிடித்தால் நமக்கு என்ன ? மேலும் இதற்கும் சுய ஜாதக வலிமைக்கும் சம்பந்தம் இல்லை.

( 2.லக்கினாதிபதி புதன் நீசமாகி தன வீட்டை பார்க்கிறான் ..அதனால் ஓரளவு உயிர் வாழ்வு .10% )

ஜோதிடதீபத்தின் கருத்து :

லக்கினாதிபதி நீசம் பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கான நிலை இதை சுய ஜாதகத்துடன் தொடர்பு படுத்துவது அபத்தமான செயல், மேலும் சுய ஜாதகத்தில் ஜாதகரின் லக்கின அதிபதி குரு பகவான் ஆவர் இதை நன்கு ஜோதிட கணிதம் அறிந்தவர்கள் மிக எளிதாக தெரிந்துகொள்ள இயலும். லக்கினம் எனும் முதல் வீடு ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் லக்கினம் 100% விகிதம் வலிமை பெறுவதை கட்டியம் கூறுகிறது, எனவே ஜாதகர் பூர்ண ஆயுளுடன் ஜீவித்து நிற்பார் என்பதை தெளிவு படுத்துகிறது.

( 3. கல்வி 5ம் வீட்டில் குரு [நீசமானாலும் ஒரு 40 சதவீதம் வேலை செய்வார் குரு மட்டும் ]இருப்பதால் கொஞ்சம் நுண்ணறிவுடன் செயல்பட்டு பூர்வ புண்ணியமும் சேர்ந்து தகவல் தொழில் நுட்பம் பயின்றார் .... வெளி நாட்டில் வேலை .உபய ராசி என்பதால் ...அம்சத்தில் 10 ல் ராஹு வெளி நாடு கடத்தியது ..!! ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஜாதகரின் லக்கினம் மற்றும் 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதாலும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் வியாபித்து நிற்பது, ஜாதகருக்கு சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றத்தை தனது சுய அறிவு மற்றும் புத்திசாலித்தனம் கொண்டு வாழ்க்கையில் பெற வேண்டிய சுபயோகங்களை பரிபூர்ணமாக பெறு வைக்கிறது, என்பதே உண்மை நிலை. 5ம் வீடு சர ராசி என்பதனால் அயல் தேசம் சென்று ஜீவனம் செய்யும் யோகத்தை தருகிறது.

( 4.. கர்மகாரகனான சனி தனது 10 ம் பார்வையாக தன வீடு கும்பத்தை பார்ப்பது .அது லக்கினத்திற்கு 6ம் வீடு ருணம் .???அது ஒரு கஷ்டம் ...)

ஜோதிடதீபத்தின் கருத்து :

சனி பகவான் தனது வர்க்க கிரகமான சுக்கிரனின் வீட்டில் ( ரிஷபத்தில் ) அமர்ந்து தனது வீட்டை தானே பார்ப்பது ( கேந்திர பலம் பெற்று ) மேலும் வலு சேர்க்கும் அமைப்பாகும், மேலும் 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு வரும் உடல் நிலை பாதிப்புகளை ஜாதகரின் குலதெய்வ ஆசியின் மூலம் தனது சமயோசித புத்திசாலித்தனம் கொண்டு வெற்றிகாண்பார், சனி பார்வையினால் யாதொரு கஷ்டமும் ஜாதகருக்கு இல்லை, இதை சொன்னவருக்கு வேண்டுமாயின் ஏதாவது ஓர் கஷ்டம் சனியின் மூலம் வரலாம்.

( 5.. 6ம் வீட்டில் சூரியன் தலை பாகத்திற்கு அதிபதி ஆதாலால் ***மூளையில் கட்டி** ஏற்பட்டு ஜாதகர் **.மூளை புற்று ** நோயால் அவதி படுகிறார்...கீமோ தெரபி தொடர்ர்ந்தால்???? ..மொத்த உடலும் ஊனம் ஏற்பாடும் .மருத்துவ நிபுணர்கள் கருத்து படுத்தய படுக்கை ..)

ஜோதிடதீபத்தின் கருத்து :

சத்ரு ஸ்தானத்தில் நிற்கும் சூரியன் ஜாதகருக்கு ஸ்திர காற்று தத்துவ ராசி மூலம் நிறைவான அறிவு மற்றும் தன்னம்பிக்கையை வழங்கி தனது வாழ்க்கையில் எதிர்த்து போராடி வெற்றி பெரும் தன்மையை தருகின்றார், ஜாதகருக்கு வரும் நோய், எதிர்ப்பு, கடன் போன்ற இன்னல்களில் இருந்து மீட்டு எடுக்கும் வல்லமையை தருகின்றார், எனவே ஜாதகரின் நம்பிக்கை மற்றும் முயற்சி வீண் போக வாய்ப்பில்லை, 6ல் சூரியன் மருத்துவ சிகிச்சையின் மூலம் விரைவாக குணம் பெறுதலை குறிக்கும்.

( 6.,அஷ்ட வர்க்க பரல் ..ஜாதகருக்கு 8 மிடம் 16//28 பரல்களே .இது மிக குறைவானது  ஆயுள் ..???? ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

இயற்கை நியதிகளை நிர்ணயம் செய்ய இறை நிலையால் மட்டுமே முடியும் எனும் பொழுது, ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்ய மருத்துவராலும் முடியாது, ஜோதிடராலும் முடியாது, மேலும் பரல்கள் ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்கின்றது என்பது கேலிக்கூத்து.


( 7.,உபய ராசி உபய லக்கினம் ஆதலால் வெளி நாட்டில் வேலை ...)

ஜோதிடதீபத்தின் கருத்து :

உபய ராசி உபய லக்கினத்தில் உள்ளார்கள் அனைவரும் இனி வெளிநாடு ஜீவனத்தை தேடுவதே உகந்தது, உள்நாட்டில் வேலையில்லை, சுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 1,5ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது சிறப்பான தகுதி மற்றும் திறமைகளை வழங்கியிருக்கிறது, ஜாதகரின்  சுய உழைப்பின் மூலம் வெளிநாட்டில் பணியாற்றும் யோகத்தை பெற்று இருக்கின்றார்.

( 8..திருமணம் நடந்தது கொஞ்சம் உறவு பெண் மிக அருமையான பெண்மணி ..1 ஆண் 1 பெண் குழைந்தை ...குழைந்தைகளுக்கு தந்தையின் நிலைமை தெரியும் குறுகிய ஆயுள் என!! )

ஜோதிடதீபத்தின் கருத்து :

சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு நல்ல புத்திர பாக்கியத்தை தந்து இருக்கின்றது, மேலும் வாழ்க்கையில் அவர்கள் வழியிலான சுபயோகங்களை பெறுவதற்கு வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருக்கின்றது.


( 9.,...8 மிடத்திற்கு 12 மிடமான மீனம் .அதிபதி குரு 5ம் வீட்டில் நீசமாகி போனான் உத்தேசமாக அடுத்துவரக்கூடிய ராஹு திசையின் குரு புக்தி இவருக்கு கடுமையான கண்டம் ..!!!!! தனுசு ராசிக்கு 12ல்விருச்சிகத்தில் குரு வரும்நேரம் கண்டம் 2018..ஜூலை .)

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஜாதகருக்கு ராகு திசை மற்றும் குரு புத்தி ஏற்று நடத்தும் பாவக பலன் பற்றி ஏதும் அறியாத நிலையில் கூறப்படும் கருத்து இது என்றே சொல்ல தோன்றுகிறது, ஜாதகருக்கு கடந்த செவ்வாய் திசை 2,4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான மன பயத்தையும் இழப்புகளையும் வாரி வழங்கி இருக்கின்றது, ஆனால் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், உடல் மனம் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட சரியான மருத்துவரை காணும் யோகத்தை தரும், மன பயம் நீங்கும், ராகு திசையில் எதிர் வரும் குரு புத்தியும் 6ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலன்களை தருவது ஜாதகரின் வாழ்க்கையில் ஓர் நம்பிக்கையை பெற்று தரும், வீண் மரண பயத்தை போக்கி தனது உடல் நலத்தை தானே தேற்றும் தன்மையை தரும், ராகு தசை குரு புத்தி ஜாதகருக்கு மரணத்தை தாராது என்பதே உண்மை நிலை.

( .10.,ஏழரை சனி ஜென்ம ராசிக்கு வருவது ஒரு பாதிப்பு ..கர்மகாரகனான இவரின் 3ம் பார்வை 6 மிடத்தை பார்ப்பது கண்டத்தை ஏற்படுத்தும் )

 ஜோதிடதீபத்தின் கருத்து :

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஏழரை சனியை வைத்துக்கொண்டு ஜோதிடர்கள் காலத்தை ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை, தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்தும் பாவக தொடர்பு, அந்த பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை வலிமை இன்மை ஆகிவை கொண்டு சுய ஜாதக பலாபலன்கள் காண இயலாத பொழுது, ஏழரை சனி, அஷ்டம சனி, கால சர்ப்ப தோஷம் என பல காரணங்களை சொல்லி தானும் குழம்பி ஜோதிடம் பார்க்க வந்தவரையும் குழப்பி வினைப்பதிவின் தாக்கத்தை அதிகரித்துக்கொண்டே செல்வது ஜோதிடர்களின் விதியை வெகுவாக பாதிக்கும் என்பது மட்டும் சத்தியம்.

( 11.,அம்சத்தை கவனிக்கும் போது சற்று பரவாயில்லை என தோன்றும் லக்கினாதிபதி சனி தன வீட்டை பார்ப்பது .. . .)

ஜோதிடதீபத்தின் கருத்து :

பாவக தொடர்புகளிலேயே அனைத்தையும் அறிந்துகொள்ளும் பொழுது,  அம்ச நிலையை பற்றி சிந்திப்பது வீண் வேலை.

( 12., அஷ்ட வர்க பரல் லக்கினம் [1] 27.,33.,33.,36.,28.,28.,24.,**16.**27.,26.,32.,27..!!!!!...8மிடத்தில் பரல் 16 ஆயுள் குறைவு .25 வரை பரல்கள் சரி பரவாயில்லை என கொள்ளலாம் ..அதற்கும் கீழ் என் வரும்போது அந்த வீடு பாதிப்பு ..!!!.)

ஜோதிடதீபத்தின் கருத்து :

அஷ்டவர்க்க பரல்கள் கொண்டு எந்தவித பலாபலன்களை ஜோதிடரால் நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை.

( 13.,சுய வர்க்கபரலும் லக்கினம் .4.,5.,4.,5.,5.,5.,4.,4.,..ஆக இதில் சராசரியா 4 பரல்கள் சுயவர்கத்தில்4 பரல் இருந்தாலே போதும் என கொள்ளலாம் . )

ஜோதிடதீபத்தின் கருத்து :

அஷ்டவர்க்க பரல்கள் கொண்டு எந்தவித பலாபலன்களை ஜோதிடரால் நிர்ணயம் செய்ய இயலாது என்பதே உண்மை.

( 14..,ஜாதகர் வெளி நாட்டில் இருப்பதா..???உள்நாட்டில் வந்துஉறவுகளுடன் இருப்பதா ???.மில்லியன் டாலர் கேள்வி.???? )

ஜோதிடதீபத்தின் கருத்து :

சுய ஜாதகத்தில் பாவக வலிமை நிலை தெரியவில்லை எனில் உடனே மில்லியன் டாலர் கேள்வி என்பதா ? என்ன கொடுமை இது ? ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் வீடு மிகவும் வலிமை பெற்று இருக்கின்றது, எனவே சந்தேகம் இன்றி தெளிவாக சொல்லலாம் ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவித்து இருப்பதே சகல நலன்களையும் வாரி வழங்கும், குலதெய்வ ஆசியுடன் குழந்தைகளின் பாசத்துடன் பூர்வீக ஜீவனமே ஜாதகருக்கு உகந்தது.

( 15..,எனது யோசனை இந்திய வந்து உறவுகளுடன் இருப்பது ..!!!)

ஜோதிடதீபத்தின் கருத்து :

யோசனை தேவையில்லை சுய ஜாதகம் சொல்வது என்ன என்பதே முக்கியம்.

( 16.,ஜோதிட ஜாம்பவான்கள் என்ன சொல்கிறீர்கள் .

எதிர்கால பலன் என்றில்லை ..???இது வித்தியாசமான ஜாதகம் என்பதால் பதிந்துள்ளேன். 
இதே போல் ஒரு எனக்கு நெருங்கிய உறவினர். மூளை டூமர் ஆபரேஷன் செய்தார். ஆனால் 6 மாதம் டூமர் மீண்டும் வளர்ச்சி ..தற்போது ஜாதகர் இல்லை ..!!!.. ) 

ஜோதிடதீபத்தின் கருத்து :

ஒரு ஜாதகத்தை போல் மற்றோரு ஜாதகம் இருக்காது என்ற அடிப்படை விஷயம் எப்பொழுது புரிய வருகிறதோ அப்பொழுதுதான் சுய ஜாதக பலாபலன்கள் பற்றிய தெளிவு கிடைக்கும். மேலும் எந்த ஒரு ஜோதிட ஜாம்பவான்களாலும் ஒருவரின் ஆயுளை நிர்ணயம் செய்ய இயலாது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை வலிமை பெற்ற பலாபலன்களை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை தரும் என்பதால் வீண் பயமின்றி எதிர்காலத்தை ஜாதகர் எதிர்கொள்வதே சால சிறந்தது.


குறிப்பு :

 கிராமங்களில் ஓர் செலவேந்திரம் ஒன்று உண்டு அதாவது " அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " என்று அதை போன்று உள்ளது மேற்கண்ட ஜாதகரின் நிலை, ஜாதகர் எம்மிடம் ஆலோசனை பெற வந்தது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அப்பொழுதே ஜாதகர் தனக்கு மருத்துவர்கள் 6 மாதம் தான் கெடு வைத்திருக்கின்றனர் என்றார், இப்பொழுது இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும், ஜாதகர் மின் அஞ்சல் மூலம் ஆலோசனை பெறுகிறார் எனும் பொழுது, ஜாதகரின் உயிருக்கும் உடலுக்கும் பாதிப்பு இல்லை, ஜாதகரின் மனம் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது இதற்க்கு அவரது சுய ஜாதகத்தில் 2,3,4,7,8,10,11,12ம் வீடுகள் அனைத்தும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதே காரணமாக அமைகிறது, சுய ஜாதகத்தில் 12ம் வீடு மனம் சார்ந்த கற்பனைகளை அதிகரிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 2,3,4,7,8,10,11,12ம் பாவக வழியில் இருந்து வரும் மிதம் மிஞ்சிய கற்பனைகள் ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதித்து கொண்டு இருக்கின்றது, கடந்த செவ்வாய் திசையில் ஜாதகர் 2,4,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை முழு வீச்சில் நடத்தியது பெரிய அளவிலான மன பயத்தை ஏற்படுத்தி தனக்கு வந்த உடல் தொந்தரவு தீர்க்க இயலாத பிரச்சனை என்று ஜாதகரையே மிக ஆழமாக ஆள் மனதில் நம்ப வைத்தது, இதன் தாக்கத்தையே ஜாதகர் தற்போழுது ராகு திசையிலும் அனுபவித்து கொண்டு இருக்கின்றார், ராகு திசை வலிமை பெற்ற பாவக பலனை தருவதால், ஜாதகர் இந்த வீண் மனபயத்தில் இருந்து விரைந்து மீட்டு எடுக்கும், தனது பூர்வீகத்தில் ஜீவிக்கும் பொழுது வாழ்க்கையில் சிறப்பு மிக்க யோகங்கள் நடைமுறைக்கு வரும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment