பின்தொடர...

Sunday, October 29, 2017

ஜாதக ஆலோசணை : அதிர்ஷ்டகரமான சுபயோகங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் திசா புத்திகள் !சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் என்பது பாவக வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஓர் ஜாதகர் சுபயோகங்களை அனுபவிப்பதற்க்கு நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் மூல காரணமாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்கள் அவயோகங்கள் என்ன என்பதனையும், அவை திசா  புத்திகளில் எப்படி நடைமுறைக்கு வருகின்றது என்பதனையும் ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : தனுசு 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : அஸ்தம் 3ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகர் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் தனுசு ராசியை லக்கினமாக பெற்று இருக்கின்றார், லக்கினம் என்பது ஜாதகருக்கு தனுசு ராசியில் (  254:33:18 ) பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் ( 284:38:46 ) பாகை வரை வியாபித்து நிற்கிறது, எனவே ஜாதகருக்கு லக்கினம் என்பது தனுசு என்ற போதிலும் மகர ராசியின் தன்மையும் ஜாதகருக்கு கலந்து நிற்கின்றது, ஜாதகர் உபய நெருப்பு தத்துவ அமைப்பிற்க்கான  குணாதிசயமும், சர மண் தத்துவத்திற்க்கு உண்டான குணாதிசயமும் பெற்று இருப்பார், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக தொடர்புகள் என்ன ? வலிமை பெற்ற பாவக தொடர்புகள் எவை ? வலிமை அற்ற  பாவக தொடர்புகள் எவை ? என்பதனை இனி காண்போம்.

வலிமை பெற்ற பாவக  தொடர்புகள் :

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  இருப்பது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகளாகும்.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்பு ஆகும்.

1,3,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து கல்வியில் தேர்ச்சி, மண் மணை வண்டி வாகன யோகம் உண்டாகும், தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், கலை துறையில் ஆர்வம், நுண்ணறிவுத்திறன், சுக போக வாழ்க்கை, சிறப்பான நல்ல குணம், தனது கற்பனை திறன் மூலம் பல சாதனைகளை செய்யும் வல்லமை, திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற அமைப்பில் நன்மைகளை தரும், 3ம் பாவக  வழியில் நிறைவான பொருளாதரா சேர்க்கை, சொகுசு வாகன யோகம், பின்யோக  ஜாதகம், சந்தோசம் மற்றும் மனநிறைவு பெண்கள் வழியில் ஆதரவு, போட்டி பந்தங்களில் எளிதில் வெற்றி பெரும் யோகம், போக்குவரத்துக்கு தொழில் செய்யும் யோகம், வீட்டு மிருகங்கள் மூலம் அதித லாபம், விவசாயத்தில் அதிர்ஷ்டம் மற்றும் லாபம், அரசியல் வெற்றி அரசியல்வாதிகள் மூலம் லாபம் என்றவகையில் சிறப்புகளை தரும், 4ம் பாவக வழியில் இருந்து நிறைவான சொத்து சுக சேர்க்கை சொந்த உழைப்பில் புதிய சொத்துகளை பெரும் யோகம், சுக போகங்களுக்கு குறைவில்லா வாழ்க்கை முறை, நல்ல குணாதிசயம், தெய்வீக நம்பிக்கை மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெரும் அமைப்பு, தனது தாய் வழியில் இருந்து வரும் சுபயோகங்கள், தீர்கமான முடிவுகள் மூலம் ஆதாயம் என்ற வகையில் நன்மைகளை தரும்.

 2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் அமைப்பே  ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகளாக கருதலாம், 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி, தனது பேச்சு திறன் மூலம் அதிர்ஷ்டங்களை தொடர்ந்து பெரும் யோகத்தை தரும், நண்பர்கள் வழியில் இருந்து சிறப்புகளை வாரி வழங்கும், தன ஆதாயம் பரிபூர்ணமாக ஜாதகருக்கு கிடைக்கும், இயக்க நிலையில் உள்ள மண் தத்துவம் சார்ந்த தொழில்கள் வழியில் இருந்து ஜாதகருக்கு அபரிவிதமான வருமான வாய்ப்புகள் உண்டாகும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கற்ற கல்வி வழியில் இருந்து முன்னேற்றங்கள் உண்டாகும், தனது புத்டிசாலிதனத்தல் யோக வாழ்க்கை உண்டாகும், எப்பொழுதும் மகிழ்சிகரமான யோக வாழ்க்கை உண்டு, குழந்தை மற்றும் குடும்பத்தாருடன் சந்தோசம் உண்டாகும், இறை அருளின் கருணை மூலம் ஜாதகரின் வெற்றிகரமான யோக வாழ்க்கை உறுதி செய்யப்படும். 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தின் தாக்கம் ஜாதகருக்கு சற்று அதிகமாகவே அமையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் அணுகும் வல்லமையை தரும், எதிர்ப்புகள் இருப்பின் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும், நம்பிக்கையுடன் ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவும் வெற்றி மேல் வெற்றி தரும், ஜாதகரின் எண்ணம் என்னவோ ? அதுவே ஜாதகரின் வாழ்க்கையாக மலரும்.

6,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து பயணம் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் லாபம் உண்டாகும், எதிரிகள் செய்யும் சூழ்சிகள் வழியில் இருந்து ஜாதகருக்கு நன்மை நடைபெறும், உடல் நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உயர்கல்வி பட்டய கல்வி அல்லது கௌரவ பட்டம் பெரும் யோகம் உண்டாகும், 9ம் பாவக வழியில் இருந்து அறிவார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம், பயணங்களில் விருப்பம், ஆராய்ச்சி மனப்பான்மை, தெய்வீக அனுகிரகம், செய்யும் செயல்களில் நல்ல முன்னேற்றம், தெளிவான சிந்தனை மூலம் வாழ்க்கையில் நன்மைகளை பெரும் அமைப்பு, பெரிய மனிதர்கள் ஆதரவு, சமூக அந்தஸ்து, ஆன்மீக வெற்றி என்ற வகையில் சிறப்புகளை தரும், 12ம் பாவக வழியில் இருந்து வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் செல்வ வளம், பயணம் மூலம் அதிக லாபம், உல்லாச வாழ்க்கை, தொழில் மற்றும் இருப்பிட மாற்றம் மூலம் சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் தன்மை, போதும் என்ற மனம், இறைஅருளின் கருணையை பரிபூர்ணமாக பெரும் அமைப்பு, தெய்வீக அனுபவம், நல்ல ஞானம் மற்றும் ஆன்மீக பெரியோரின் கருணையை பெரும் அமைப்பு என்ற வகையில் சிறப்புகளை தரும்.

7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து தாமத திருமணம் மூலம் யோக வாழ்க்கை, நல்ல அந்தஸ்து மற்றும் வசதி மிக்க வாழ்க்கை துணையை பெறுதல், வாழ்க்கை துணை வழியிலான முன்னேற்றம், திருமணத்திற்கு பிறகான அபரிதவித வளர்ச்சி, அரசியல் செல்வாக்கு, வியாபர விருத்தி, சமூக அந்தஸ்து மூலம் உயர் பதவிகள் என நன்மைகளை தரும், நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் என ஜாதகரை அபரிவிதமான வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும்.

10ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம் மற்றும் வியாபாரம் சார்ந்த வெற்றி வாய்ப்புகள் தேடிவரும், கௌரவம் குறையாத யோக வாழ்கையை தரும், செய்யும் தொழில் முழு வெற்றியை தரும், கம்பீர யோக வாழ்க்கை, தீர்க்கமான முடிவுகள் மூலம் அதிர்ஷ்டம் என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், தெய்வீக அனுபவம் மூலம் முன்னேற்றம் உண்டாகும், பல தொழில் செய்யும் யோகம் உண்டு, ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு எதிர்பாராத இழப்புகளை தரும், எதிர்பாலின சேர்க்கை மூலமா தொல்லைகள் அதிகரிக்கும், மனம் ஒருநிலை படுவது வெகு சிரமம், வாழ்க்கையில் ஏமாற்றம் மற்றும் மற்றவர்கள் மூலம் அதிக இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தரும், திருப்தி அற்ற வாழ்க்கையை தரும், இருப்பினும் நீண்ட ஆயுள் உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து சில நேரங்களில் பொருளாதார முடக்கங்கள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, விபத்து, துயரம், வியாதிகள் மூலம் இன்னல்களை தரும்.

மேற்கண்ட வகையில் ஜாதகருக்கு சுய ஜாதக பலாபலன்கள் சிறப்புகளை பொது பலனாக தருகின்ற போதிலும், ஜாதகருக்கு கடந்த ராகு திசை தந்த பலாபலன்கள் என்ன ? தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை தரும் பலாபலன்கள் என்ன ? எதிர்வரும் சனி திசை தரும் பலாபலன்கள் என்ன ? என்பதனை கண்டுணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படுவதே ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், ஓர் ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் ( சுபயோகங்கள் ) இருந்தாலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலன்களை ஏற்று நடத்தினால் மட்டுமே சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு நன்மைகளையும், யோகங்களையும் தரும் என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும்.

ஜாதகருக்கு கடந்த ராகு திசை தந்த பலாபலன்கள் ( 12/07/1992 முதல் 12/07/2010 வரை ) 

ராகு திசை ஜாதகருக்கு 18 வருட காலம் தனது திசையில் ஜாதகருக்கு 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கி இருக்கிறது, ராகு திசை ஜாதகருக்கு பால்ய பருவம் என்பதனால் ஜாதகரின் கல்வி பாதிப்பு, வளரும் சூழ்நிலை சரியில்லா நிலை, உடல் ஆரோக்கிய பாதிப்புகள், திடீர் மருத்துவ செலவு, விபத்து, பொருளாதார செலவினங்கள் என்ற வகையில் சிரமங்களை தந்து இருக்கின்றது, மேலும் ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக ( கடகம் ) அமைவது ஜாதகரின் மன நிலையை கடுமையாக பாதித்து செயல்முடக்கத்தை தந்து இருக்கின்றது, சர தத்துவ அமைப்பில் இருந்து தர வேண்டிய இன்னல்களை 100 % விகிதம் விரைவாக வாரி வழங்கி இருக்கின்றது, ஜாதகரின் மனதின் ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வீண் மன ஏக்கத்தை மட்டுமே அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றது, ஜாதகருக்கு அடிப்படையில் கிடைக்க வேண்டிய கல்வி,நல்ல தொழில் ,திருமண ஆகியவை கிடைக்கவில்லை, மேலும்  பொருளாதர முன்னேற்றமும் தடை பெற்றது, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகத்தை தவிர மற்ற பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சுப யோகங்கள் இருப்பினும் அதை ராகு திசையில் ஜாதகர் பெற இயலாத சூழ்நிலையை தந்து இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை தரும் பலாபலன்கள் ( 12/07/2010 முதல் 12/07/2026 வரை ) 

தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2,5,11ம் வீடுகள்  லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை வாரி வழங்கிக்கொண்டு  இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஏனெனில் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பு இதுவே ஆகும் எனவே ஜாதகர் குரு திசையில் சிறப்பு மிக்க சுபயோகங்களை 2ம் பாவக வழியில் இருந்து வருமானம், பேச்சு திறன், குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார தன்னிறைவு, நிறைவான வசதி வாய்ப்புகள் என ஜாதகரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், ஜாதகரின் 2ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது ஜாதகரின் வருமானத்தை ஜீவன வழியில் இருந்து தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் குல தெய்வ அனுக்கிரகம் மூலம் சகல சௌபாக்கியத்தையும் தரும், தனது அதிபுத்திசாலித்தனம் மூலம் அதிர்ஷ்டங்களை தங்கு தடையின்றி பெறுவார் நல்ல நண்பர்கள் சேர்க்கை உண்டாகும், கலைத்துறையில் பிரபல்யம் உண்டாகும், கலைகளில் தேர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு, திருமணம் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் நல்ல குழந்தை பேரு உண்டாகும். 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அதிர்ஷ்டம்  சகல நிலைகளில் இருந்து முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக  ஜாதகரின் லட்சியங்கள் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகளை களைந்து  வெற்றி நடை போடும் யோக காலமாக இதை கருதலாம், அதிர்ஷ்டத்தின் மூலம் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமையும், உடல் நலம் தேறும், மனதைரியம் அதிகரிக்கும், குரு திசை ஜாதகருக்கு சுய ஜாதகத்திலேயே மிகவும் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் எனலாம், ஜாதகருக்கு இது சுப யோகங்களை 11ம் பாவக வழியில் இருந்து தரும்.

அடுத்துவரும் சனி திசை தரும் பலாபலன்கள் ( 12/07/2026 முதல் 12/07/2045 வரை)

ஜாதகருக்கு எதிர்வரும் சனி திசை 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலனை தருவது சனி திசை முழுவதுமான ஜீவன முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும், ஜாதகரின் கவுரவம் அதிகரிக்கும், செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், ஜாதகருக்கு பல தொழில் செய்யும் யோகத்தை இது தருகிறது, கடின உழைப்பின் மூலம் ராஜயோக வாழ்க்கையை ஜாதகருக்கு சனி திசை 10ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், எனவே எதிர்வரும் சனி திசையும் ஜாதகருக்கு மிகவும் சாதகமான பலாபலன்களையே தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு பெரும்பாலான ( 11 பாவகங்கள் ) பாவகங்கள் வலிமையுடன் இருந்தாலும் கடந்த ராகு திசை ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதால் ஜாதகருக்கு கடந்த ராகு திசை இன்னல்களையும் சிரமங்களையும் வாரி வழங்கியது, ஆனால் தற்போழுது நடைபெறும் குரு திசையும் எதிர்வரும் சனி திசையும் வலிமை பெற்ற லாபம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை  ஏற்று நடத்துவதால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பான நன்மைகளை தர ஆரம்பித்து இருப்பது ஜாதகரின் சுபயோகங்கள் நடைமுறைக்கு வர இருப்பதை கட்டியம் கூறுகிறது என்பதை மறுக்க இயலாத உண்மையாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது  மட்டுமே ஜாதகருக்கு நன்மையை தாராது, சுபயோகங்கள் பெற்ற பாவக பலனை நடைமுறையில் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் மட்டுமே அதனால் வரும் சுபயோகங்களை ஜாதகர் சுவீகரிக்க இயலும் என்ற விஷயத்தை கருத்தில் கொள்வது நலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment