ஞாயிறு, 8 அக்டோபர், 2017

எல்லா நேரமும் நல்ல நேரமே ! லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்ற ஜாதகத்திற்க்கு !


கேள்வி  :

 சுப அசுபங்களை நீக்க வேண்டிய ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும். செவ்வாய், சனி, சூரியன் போன்ற ஹோரைகளும், சந்திராஷ்டமம், அஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, விரைய சனி, போன்றவைகளும், சனி, ராகு, செவ்வாய், சூரியன், கேது போன்ற இன்னல்களை தரும் என்று கருதப்படும் திசா புத்திகளும் யார் ஒருவருக்கு நன்மையை தரும் ? ஒரு வேலை மேற்கண்ட விஷயங்கள் யாவும் எவருக்கும் நன்மையை தாராத ? கெடு பலனை மட்டுமே தருமா ? உண்மை என்ன ?

பதில் :

 தாங்கள் வினவியிருக்கும் கேள்விக்கு விளக்கமான பதிலை இன்றைய பதிவில்  சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நேரம் எது என்பதனையும், கெட்ட நேரம் எது என்பதனையும் நிர்ணயம் செய்யும் முழு உரிமை அவரது சுய ஜாதகத்திற்க்கே உண்டு என்றால் அது மறுக்க இயலாத உண்மை கீழ்கண்ட ஜாதகருக்கு நல்ல நேரம் எது? என்பதனையும் கெட்ட நேரம் எது?  என்பதனையும் அவரது சுய ஜாதகம் எப்படி நிர்ணயம் செய்கிறது என்ற அழகினை இந்த பதிவில் ரசிப்போம்  வாருங்கள் அன்பர்களே !


லக்கினம் : கும்பம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 2ம் பாதம்

ஜாதகருக்கு  லக்கினம், ராசி இரண்டுமே கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம்  மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடான ஸ்திர காற்று ராசியான கும்பத்தில் அமைவது, அடிப்படையிலேயே ஜாதகர் பரிபூர்ண அதிர்ஷ்டத்தை பெரும் யோகம் பெற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, அடுத்து ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை நிலையை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,7ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,8,9,10,12 வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்  பெற்று இருப்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெற்று இருப்பதை உறுதி செய்கிறது, மேற்கண்ட ஜாதகருக்கு வாழ்க்கையில் எல்லா நேரமும் நல்ல நேரமே என்று தெளிவாக சொல்லிவிட முடியும் ஏனெனில் சுய ஜாதக வலிமையே ஒருவரின் வாழ்க்கையில் நல்ல நேரம் மற்றும் கெட்ட நேரத்தை நிர்ணயம் செய்கிறது, ஜாதகர் ஜெனன காலத்தில் ராகு திசை 12வருடம், 7மாதம், 27நாட்கள் இருப்புடன் தனது பூவுலக வாழ்க்கையை துவங்கி இருக்கிறார், ராகு தனது திசையில் 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை நடத்தியது ஜாதகருக்கு நல்ல உடல் ஆரோக்கியம், தெளிவான மனநிலையை வாரி வழங்கி இருக்கிறது இதன் காரணமாக ஜாதகரின் அடிப்படை கல்வி சிறப்பாக அமைந்திருக்கிறது, வளரும் சூழ்நிலையில்  நல்ல நன்மைகளையும் பொருளாதர சிறப்புகளையும் பெற்று வாழ்க்கையில் சுப யோகங்களை அனுபவித்திருக்கின்றார், அதன் பிறகு நடைபெற்ற குரு திசை ஜாதகருக்கு 3ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை நடத்தியது ஜாதகரின் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றியை தந்து இருக்கின்றது, ஜாதகரின் கல்வி முழுமை பெற்று இருக்கின்றது, சிறந்த மேல்நிலை பட்டபடிப்பையும், ஆராய்ச்சி கல்வியையும் யாரும் எதிர்பாரா வண்ணம் சிறப்பாக பெற்று இருப்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

ஜாதகரின் சிறந்த கல்வி தகுதி சிறப்பான சுய தொழில் வாய்ப்பையும் அதன் வழியிலான அபரிவிதமான முன்னேற்றங்களையும் வாரி வழங்கி இருப்பதற்கு, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையே அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றது, மேலும் சரியான வயதில் திருமண வாழ்க்கை அமைந்தது, உடனே நல்ல புத்திர பாக்கியம் பெற்றது, வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு மற்றும் அன்பு ஜாதகருக்கு பரிபூர்ணமாக கிடைத்தது என ஜாதகருக்கு தொடர்ந்து சுபயோக பலாபலன்கள் அனைத்தும் நடைபெற சுய ஜாதக வலிமையே உறுதுணையாக நின்று இருப்பது கண்கூடான உண்மை, மேலும் குரு திசை காலத்திலேயே ஜாதகர் மூன்று விதமான  தொழில் வழியில் இருந்து தன்னிறைவான வருமானங்களை எவ்வித தொய்வும் இன்றி பெற்றதற்க்கும் சுய ஜாதக வலிமையே காரணம் என்றால் அது மிகையில்லை அன்பர்களே !

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் சனி திசை 1,2ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 8,10 வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலாபலன்களை குடும்பம் மற்றும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து சிறப்பாக வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகர் மற்றும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனும், பாக்கியத்தின் வலிமையுமே என்றால் அது மிகையில்லை, அடுத்து  வரும் புதன் திசையும் ஜாதகருக்கு 6வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கை தன்னிறைவான சுபயோக வாழ்க்கை என்பதை கட்டியம் கூறுகிறது அன்பர்களே !

எனவே ஒருவரது சுய ஜாதகம் வலிமை பெற்று, நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் அனைத்தும் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் முழு அளவில் யோகம் பெற்றவர் ஆகிறார், இவருக்கு ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும் சுபயோகங்களையே வாரி வழங்கும், கெட்ட நேரம் என்ற ஓர்  விஷயம் ஜாதகரின் நிழலை கூட நெருங்காது, ஆனால் சுய ஜாதகம் வலிமை அற்று நடைபெரும் திசா புத்திகள் வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் உலகின் மிகசிறந்த சாஸ்த்திர வல்லுநர்களை கொண்டு நல்ல நேரம் கணித்து செயல்பட்டாலும் கூட, ஜாதகருக்கு அந்த நேரம் கெட்ட நேரமாகவே அமையும், நல்ல நேரமும் கெட்ட நேரமும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே அமைகிறது என்ற  உண்மையை அனைவரும் உணர்வது அவசியமாகிறது என்பதனை " ஜோதிடதீபம் " தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளது.

மேலும் சுப அசுபங்களை நீக்க வேண்டிய ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களும். செவ்வாய், சனி, சூரியன் போன்ற ஹோரைகளும், சந்திராஷ்டமம், அஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, விரைய சனி, போன்றவைகளும், சனி, ராகு, செவ்வாய், சூரியன், கேது போன்ற இன்னல்களை தரும் என்று கருதப்படும் திசா புத்திகளும் சுய ஜாதக வலிமையின் அடிப்படையிலேயே கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதனை அனைவரும் கடைபிடித்தால் எல்லா நேரமும் நமக்கு நல்ல சுபயோக நேரமே, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக