சுய ஜாதகப்படி ஒருவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை மற்றும் வலிமை அற்ற நிலை, தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் மற்றும் எதிர்வரும் திசை தரும் பலாபலன்கள் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.
லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 3ம் பாதம்
ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :
1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம்.
2,4,8,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சிறந்த உடல்நலம், வருமுன் காக்கும் வல்லமை, வளரும் சூழ்நிலையில் யோக வாழ்க்கை, சிறந்த கல்வி, நல்ல தொழில் வாய்ப்பு, எடுக்கும் காரியங்களில் வெற்றி என்ற வகையில் சிறப்புகளை தரும் லக்கினம் கன்னி என்பதால் உபய மண் தத்துவ அமைப்பில் இருந்து ஜாதகி சிறப்புகளை வெகுவாக பெரும் யோகத்தை தரும், போதும் என்ற மனம், எதிர்ப்புகளை மிக எளிதாக கடந்து செல்லும் யோகம், வாழ்க்கையை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக வாழும் யோகத்தை தரும், இருப்பினும் தான் எடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்கும் தன்மையை தராமல் துணிந்து வெற்றிகாணும் யோகத்தை நல்கும்.
2,4,8,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்பாக கருதலாம், ஜாதகி 2ம் பாவக வழியில் இருந்து நல்ல இல்லற வாழ்க்கை, கைநிறைவான வருமான வாய்ப்புகள், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், இனிமையான பேச்சு திறன், தெய்வீக அனுபவம், தனது பேச்சில் புத்திசாலித்தனம் மிளிரும் யோகம், அதிர்ஷ்டம் மற்றும் நண்பர்கள் உதவி மூலம் வெற்றிகரமான யோக வாழ்க்கை, செல்வச்செழிப்பு மிக்க யோக வாழ்க்கையை தரும்.
4ம் பாவக வழியில் இருந்து சுகபோக யோக வாழ்க்கை, தனது தகப்பனாருக்கு யோகம் தரும் தன்மை, போதும் என்ற மனநிலை, நல்ல குணம், அனைவரையும் அனுசரித்து ஆளுமை செய்யும் யோகம், மண் மனை வண்டி வாகன யோகம், நிறைய சொத்துக்கள், அரசியலில் வெற்றி, வெளிநாடுகளில் ஜீவிக்கும் யோகம், பெரிய மனிதர்கள் ஆசீர்வாதம் மற்றும் ஆதரவு,வியாதியில் இருந்து விரைவில் குணமடையும் யோகம், சுலபத்தில் வெற்றி, சுகபோகங்களை, சொத்து ஆபரணம் மற்றும் சிறந்த வசிப்பிடம் ஆகியவைகளை பரிபூர்ணமாக தனது தகப்பனாரின் ஆசி மூலம் பெரும் யோகத்தை தரும்.
8ம் பாவக வழியில் இருந்து ஜாதகி தனது எண்ணம் மற்றும் லட்சியங்களில் வெற்றிகாணும் யோகத்தை தரும், நீண்ட ஆயுள், நீடித்த அதிர்ஷ்ட்த்தை பிறவியில் இருந்தே பெற்றிருக்கும் தன்மையை தரும், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பரிபூர்ண சுபயோகங்களை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றும் வாழ்க்கை துணையை ஜாதகி பெற்று வாழ்க்கையில் நலம் பெரும் தன்மையை 8ம் பாவக வலிமை உறுதி செய்கிறது, ஜாதகியின் நண்பர்கள் வழியில் இருந்தும் பொருளாதார நன்மைகளை பெறுவதற்கு வாய்ப்புகளை வழங்கும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை தரும்.
11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி மிகுந்த அதிர்ஷ்டசாலியாக திகழ்வார், அனைத்திலும் நல்ல லாபம், மெய்பொருள் காண்பது அறிவு என்ற குறளுக்கு இலக்கணமாக திகழ்வார், முற்போக்கு சிந்தனை, புதுமை விரும்பியாக இருப்பது ஜாதகியின் வாழ்க்கையை சுவாரஷ்யம் மிக்கதாக மாற்றும், ஜாதகியின் குணாதிசயம் அனைவராலும் போற்றுதலுக்கு உரியதாக இருக்கும், தெய்வீக அனுக்கிரகம் இயற்கையிலேயே அமைந்து இருப்பதால் வாழ்க்கை ஜாதகிக்கு முழு அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே காணப்படும், நல்ல மனமும், நல்ல எண்ணமும் ஜாதகியின் வாழ்க்கையை பிரகாசம் மிக்கதாக மாற்றும், சுய ஜாதகத்தில் கடகம் லாப ஸ்தானமாக அமைவது வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும்.
12ம் பாவக வழியில் இருந்து நிறைவான லாபங்கள், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம், நல்ல உறக்கம், ஆன்மீகத்தில் வெற்றி, முக்தி நிலை, தெய்வீக அனுக்கிரகம், நல்ல மன நிம்மதி, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, வாழ்க்கை துணையுடனான அன்னியோன்யம், தனது வழியில் இருந்து மற்றவர்களுக்கு தரும் உதவிகள் என ஜாதகி சிறப்பு மிக்க நல்வாழ்க்கையை வாழும் யோகத்தை தரும்.
9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் அறிவு திறன் வாழ்க்கையில் வரும் இன்னல்களை மிக சிறப்பாக எதிர்கொள்ளும் யோகம் உண்டாகும், தனது பித்ருக்கள் வழியிலான ஆசியின் மூலம் வாழ்நாளில் யாதொரு இன்னல்களையும் அனுபவிக்காமல் சுபயோகங்களையே தரும், தான் கற்ற கல்வி வழியிலான நன்மைகளையும் முன்னேற்றங்களையும் ஜாதகி தங்குதடையின்றி பெறுவார், இடம்மாற்றம் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பத்தை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகிக்கு எப்பொழுதும் அமைந்திருக்கும்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சிறந்த உத்தியோகம், வியாபாரம் மற்றும் தொழில் வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக வாரி வழங்கும், கம்பீரம் மிக்கவாழ்க்கை கவுரவம் குறையாத யோக வாழ்க்கை தரும், தீர்க்கமான வாதத்திறமையை தரும், ஜீவனத்திற்க்கு எந்த காலத்திலும் குறைவு இருக்காது, தனது தாய் வழியில் இருந்து ஜாதகி சுய கவுரவம், அந்தஸ்து, சுய மரியாதையுடன் வாழ்வதற்கான யோகத்தை நல்கும், உண்மை சத்தியம் ஆகியவற்றை மதித்து நடக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன் மற்றவர்களையும் பின்பற்ற செய்யும் மதிநுட்பத்தை தரும், ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீர்ய ஸ்தானமாக அமைவது ஜாதகி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் தன்மையையும், கணிதத்தில் நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் தன்மையை தரும்.
6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தேர்வில் வெற்றி, தேர்தலில் வெற்றி, வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மைகளையும், வயிறு சார்ந்த தொந்தரவுகளையும், கடன் சார்ந்த இன்னல்களையும் தரும், மற்றவர்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகளை அனுசரித்து செல்லும் தன்மையை வளர்த்துக்கொள்வதே நல்லது, யாரிடமும் பகைமை பாராட்டாமல் சுமுக போக்கை கடைபிடிப்பதே சால சிறந்தது, பிறர் வழியில் இருந்து வரும் இன்னல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவது ஜாதகிக்கு மிகுந்த சவால்களை தரும்.
3,5,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ( பாதக ஸ்தான தொடர்பு ) ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் சில முயற்சிகளை தடை செய்யும், சகோதர வழி ஆதரவை உதறித்தள்ளும் நிலையை தரும், 5ம் பாவக வழியில் இருந்து பூர்வீக ஜீவனத்தை தடை செய்யும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையுடனான சிறு சிறு கருத்து வேறுபாடுகளை தரும், வாழ்க்கை துணையுடனான புரிதல் குறையும்.
சனி திசை குரு புத்தி தரும் பலன்கள் : ( 26/08/2017 முதல் 08/03/2020 )
சனி திசை ஜாதகிக்கு 1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெற்றும், 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் சுபயோக பலன்களை வழங்கிக்கொண்டு இருப்பது சிறப்பான நன்மைகளை தரும், சனி திசையில் குரு புத்தி ஜாதகிக்கு 3,5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பாதக ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும், ஜீவன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையும் வாரி வழங்குகிறது.
அடுத்து வரும் புதன் திசை தரும் பலன்கள் ( 08/03/2020 முதல் 08/03/2037 வரை )
எதிர் வரும் புதன் திசை ஜாதகிக்கு 1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை வழங்குவது ஜாதகிக்கு சிறப்பான எதிர்கால வாழ்க்கையை தரும், லக்கின பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு நல்ல உடல் நலம், மனநலம், சுபயோகங்கள் நிறைந்த வாழ்க்கை என ஜாதகிக்கு பல சிறப்புகளை வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக