பின்தொடர...

Sunday, October 22, 2017

ராகு திசை தரும் பலன்களும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் லக்கினமும் !

 

 சுய ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்புகளை தரும் விஷயம் அல்ல, உடல் உயிராகிய லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகரின் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற லக்கினத்தின் பலனை நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான், கீழ்கண்ட ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு தற்போழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது, நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு தரும் பலாபலன்கள் என்ன ? என்பதனை பற்றியும் தெளிவு பெறுவோம்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் பாவகமும், ஸ்திர நீர் ராசியான விருச்சிகத்தை லக்கினமாக பெற்ற மேற்கண்ட ஜாதகருக்கு பாதக ஸ்தானம் என்பது 9ம் வீடு ஆகும், 9ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியில் அமைவது கவனிக்கத்தக்கது, ஜாதகருக்கு லக்கினம் மற்றும் 9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது எனவே ஜாதகருக்கு அடிப்படையே கடுமையான பாதிப்பை பெறுகின்றது, ஜாதகருக்கு வளரும் சூழ்நிலை சிறப்பில்லை , உடல் நலம் மற்றும்  மன நலம் சார்ந்த இன்னல்களை கடுமையாக அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார், தனது பெற்றோரின் அரவணைப்பில் வளர இயலாமல் தனது தாயின் பெற்றோரின் ஆதரவில் ஜீவிக்கும் தன்மையை சிறு வயதுமுதலே தந்து  இருக்கின்றது, ஜெனன காலம் முதல் நான்கு வயது வரை நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்கிய போதிலும், அடுத்து நடைபெற்ற செவ்வாய் திசை விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்தி ஜாதகருக்கும் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் கடுமையான இன்னல்களை தந்து மீள இயலாத சிரமங்களை உருவாக்கியது, ஜாதகரின் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் வீடாக அமைவது ஜாதகருக்கு மற்றவர்கள் வழியில் இருந்து கடுமையான இன்னல்களையே தொடர்ந்து தந்து கொண்டு இருப்பது விதியின் விளையாட்டு என்பதை தவிர வேறு என்ன சொல்வது.

தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 24/10/2010 முதல் 24/10/2028 வரை ) ஜாதகருக்கு 4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் விறைய ஸ்தான பலனை தருவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தந்து கொண்டு இருக்கின்றது, குறிப்பாக 4,10ம் பாவக வழியில் இருந்து பெற்றோர் ஆதரவு இன்மையையும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் சார்ந்த தொந்தரவுகளையும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மற்றும் அதிக மன உளைச்சல், மன போராட்டம், மன நலம் சார்ந்த பாதிப்பு மற்றும்  திடீர் இழப்புகள் என இந்த சிறு வயதிலேயே கடுமையான நெருக்கடிகளை ஜாதகர் சந்தித்துக்கொண்டு இருக்கின்றார், இதனால் வரும் இன்னல்களை  எதிர்கொள்ள ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினமும் வலிமை பெறவில்லை, பாக்கியமும் கைகொடுக்கவில்லை 4,6,10,12ம் வீடுகள் வழியில் விரைய ஸ்தான பலனை ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பது சுய ஜாதக வலிமை இன்மையை தெளிவுபடுத்துகிறது .
ஜாதகத்தில் சில பாவகங்கள் வலிமையுடன் இருந்த போதிலும் அதனால் வரும் யோக பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க யாதொரு முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை, ஏனெனில் அடுத்து வரும் குரு மகா திசையும் ஜாதகருக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்துவதால், ஜாதகரின் வாழ்க்கை மிக பெரிய சவால்களை எதிர்கொள்ளும் தன்மையில் இருப்பதை கட்டியம் கூறுகிறது, குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம் பாதிக்கப்படுவது ஜாதகரின் செயல்பாடுகள் மற்றும் செயல்திறனை கடுமையாக பாதிக்கும், தனக்கு வரும் இன்னல்களை எப்படி எதிர்கொள்வது என்ற ஓர் விஷயத்தை அறிந்துகொள்வே ஜாதகர் கடும் பிராயத்தனம் செய்யவேண்டி வரும், அறிவார்ந்த செயல்பாடுகள் முடங்குவதாலும், இறையருளின் கருணை ஜாதகருக்கு தக்க சமயத்தில் பலன்தாராமல் தடைகளை தருவதாலும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது குதிரை கொம்பாகவே இருக்கின்றது.

மேற்கண்ட ஜாதகருக்கு உள்ள ஒரே வாய்ப்பு ஜாதகருக்கு அமையவிருக்கும் வாழ்க்கை துணை, அதை சரியாக தேர்வு செய்துவிட்டால் ஜாதகரின் இன்னல்களுக்கு நல்லொதொரு தீர்வுகளை தர ஆரம்பித்து விடும், மாறாக தனது விருப்பம் போல் அவயோக ஜாதகத்தை ஜாதகர் தேர்வு செய்வாராயின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இல்லை என்ற நிலையை தரும், சுய ஜாதகத்தில் 2,5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாதது, சுய ஜாதகத்தில் யோகம் இருந்தும் பலன் அற்ற நிலையை தரும், ஜாதகருக்கு இறை நிலையும் குல தேவதையின் ஆசியும் நன்மைகளை வாரி  வழங்கட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment