புதன், 25 ஜனவரி, 2012

6 ம் வீடு, 8 ம் வீடு, 12 ம் வீடு என்றவுடன் ?

venkatesa gurukkalJan 25, 2012 03:31 AM
எனது கேள்விக்கு பதிலை பதிவாகவே இட்டமைக்கு நன்றி.


1.நான் இவரை கனக புஷ்பராகம்(நீச லக்னாதிபதிக்காக) போட சொன்னேன்.அது சரிதானே?

2.என் கணிப்பின் படி
6ம் அதிபதியான சுக்கிரனின் தசாபுக்திகள்,
8ம் அதிபதியான சந்திரனின் தசா புக்திகள்,
12ம் அதிபதியான செவ்வாயின் தசா புக்திகள் இவருக்கு நன்மை செய்யாது.இது சரியா?

3.என் கணிப்பின் படி 7ம் அதிபதியான நடப்பு புதன் தசையில் நடப்பு குரு புக்தியில் இவருக்கு திருமணம் நடக்கும்.அல்லது வரும் கேது தசையில் குரு(அ)புதன்,சுக்கிர புக்தியில் நடக்கலாம்.இது சரியா?

4.ஒன்பதிற்குறிய சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்றும்,11க்கு உரிய சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றும் ஜாதகர் நிலையில்லா வருவாயில் உள்ளார்.இதற்கு காரணம்
சூரியனோடு சேர்ந்த ராகு.
லாபஸ்தானத்தில் அமர்ந்த கேது
10ம் அதிபதி புதன் நீசம்.
இது சரியா?


ஐயா மேற்கண்ட கேள்விகள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.எனது ஜோதிட பயிற்சிக்கு இதையே உதாரண ஜாதகமாக எடுத்துள்ளேன்.எனவே ப்ரச்சனைகளை புரிந்து அதற்கான ரெமிடியை பரிந்துரைத்து அதை நேரிலேயே பரிசோதிக்கவிருப்பம்.
 பதில் 1 :
                  கனக புஷ்பராகம் அணிவது தீமையான பலனை தரும், லக்கினம் ஆறாம் வீட்டுடன் தொடர்பு , எனவே இவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் இவருக்கு எதிராக திரும்பும் .

 பதில் 2  :
                    முதலில் 6 ம் வீடு, 8 ம் வீடு, 12 ம் வீடு என்றவுடன் அது அதன் அதிபதி ஜாதகருக்கு கெடுதல் செய்யும் என்று கணிப்பது தவறு, சுய ஜாதகத்தில் இந்த வீடுகள் பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே, கெடுதல் செய்யும் அதன் திசை புத்திகளில், மாறாக அந்த வீடுகள் நல்ல நிலையில் இருந்தால், அந்த வீடுகளின் காரக முறைப்படி பல நன்மையான பலன்களையே வாரி வழங்கிவிடும் , 
உதாரனத்திற்க்கு :

8 ம் வீடு கெட்டால் திடீர் இழப்பு , நன்றாக இருந்தால் திடீர் வரவு 
 பொதுவாக அனைத்து வீடுகளும் நன்றாக இருந்தால் மட்டுமே அதன் திசை புத்திகளில் நன்மைதரும், கெட்டு விட்டால் எந்த வீடும் நன்மைதராது .

இந்த ஜோதிட கலையில் சிறந்து விளங்க , குருவின் வழிகாட்டுதல் ஜோதிடத்தில் நல்ல ஈடுபாடு , தேடுதல் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இறை நிலை சரியான வழிகாட்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.    

பதில் 3  :

 இவர் 23 வயதிலேயே காதல் வயப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது , திருமண தாமத்திற்கு ஜாதகரே காரணம் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவும் .
மேலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இனி வரும் காலங்கள் வழி வகுக்கும்.

பதில் 4 : 

ஜாதகரின் அமைப்பில் தொழில் ஸ்தானம் மட்டும் பாதிப்படைந்துள்ளது , லாப ஸ்தானம் நல்ல நிலையில் உள்ளது . கேது நன்மையை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார், ஜாதகரின் தகப்பனார் உடன் இருக்கும் பட்சத்தில் தொழில் அமைய வாய்ப்பில்லை , சூரியன் இருப்பது 4 ம் வீட்டில் , ராகு இருப்பது 5 ம் வீட்டில் எனவே இந்த இரு கிரகங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை தனது பாட்டனார்  தகப்பனார் வாழ்ந்த ஊரைவிட்டு 100 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தால் ஜாதகருக்கு ஜீவனம் நன்றாக அமையும் . 

குறிப்பு : alexandrite எனும் கல் மட்டும் ஜாதகருக்கு நன்மைதரும்.

1 கருத்து: