திங்கள், 30 ஜனவரி, 2012

ரஜினி போன்றோர்களின் ஜாதகம் காலசர்ப்ப தோஷமே.அவர் சிறப்பாக இல்லையா?

venkatesa gurukkalJan 30, 2012 06:40 AM

கேள்வி 
வணக்கம்,

1.காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை அதே போல் தோஷம் உள்ளவர்களோடுதான் திருமணம் செய்விக்கவேண்டுமா?


2.அப்படித்தான் எனில் ரஜினி போன்றோர்களின் ஜாதகம் காலசர்ப்ப தோஷமே.அவர் சிறப்பாக இல்லையா?மேலும் அவர் அதே தோஷம் உள்ள மனைவியைத்தான் திருமணம் செய்தாரா?(கேள்வியை விளக்கவே அவர் பெயரை பயன்படுத்தினேன்) .

இதுபற்றிய ஒரு பதிவை வழங்கினால் ஜோதிட ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.நன்றி

பதில் : 


உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சு போயிடுவேன் போல இருக்குதே , அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே ?

சரி பரவாயில்ல சந்தேகத்தை தீர்ப்பதே எனது தலையாய கடமை, உங்களின் ஆர்வத்துக்கு எனது பாராட்டுக்கள், அன்பு நண்பரே நீங்கள்  சொல்லுவது போல், 
சில பத்திரிகைகளில் அல்லது நெட்டில் அவரது ஜாதகத்தை போட்டு இருப்பதை  பார்த்து நீங்கள் குழம்பி விடவேண்டாம், ஏனெனில் அவை அவரது உண்மையான ஜாதகங்கள் இல்லை.

மேலும் நெட்டில் பத்திரிகைகளில் உலாவரும் , முதல்வர் ஜெயலலிதா , முன்னால் முதல்வர் கருணாநீதி ,   நடிகர்கள் , நடிகைகள் , இசை அமைப்பாளர்கள் , ஆன்மிக வாதிகள் , அனைவரது ஜாதகங்களும் பொய்யானவை என்பது பலருக்கு தெரிவதில்லை , அவர்களது உண்மை ஜாதகங்கள் ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து கொள்ளுமாறு தயவுடன் தங்களை வேண்டுகிறேன்.

அவர்களது உண்மை ஜாதகங்களை ஆராய்ந்தவன் என்ற முறையில் எமது பணிவான வேண்டுகோள் இது .

உங்கள் முயற்ச்சி மற்றும் தேடுதல் அவர்களின் உண்மையான ஜாதகத்தை உங்களுக்கு நிச்சியம் தெரிவிக்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
  9443355696 
   

உங்களின் கேள்விக்கான பதில் :



1.காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை அதே போல் தோஷம் உள்ளவர்களோடுதான் திருமணம் செய்விக்க வேண்டும் என்பது முற்றிலும் தவறான கருத்து ஜோதிடர்கள் எதை வைத்து காலசர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் , ராகு கேது  தோஷம் என்று நிர்ணயம் செய்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை, இதற்க்கு நீங்களே ஒரு விளக்கம் தரவும் அல்லது காலசர்ப்ப தோஷம் உள்ள உதாரண ஜாதகம்  இரண்டினை எமக்கு அனுப்புங்கள். அதைப்பற்றி நாங்கள் விளக்கம் தருகிறோம் ,


2 . மேலும் பழைய பாடல்களை பாடி ஜோதிடம் சொல்லுவதை விட்டு ஜோதிட அறிவியலை அடுத்த கட்டத்துக்கு நாம் எடுத்து செல்வோம் , ஜோதிடத்தின் உண்மை நிலையை அனைவருக்கும் புரிய வைப்போம்.



3 . ஜோதிட சாஸ்திரம் மிகவும் புனிதமான கலை இக்கலையினை துணைகொண்டு,மூட நம்பிக்கைகளை களைந்து  நமது வாழ்வினை செம்மை படுத்தி  வளமான  வாழ்க்கையினை அனைவரும் பெறுவோம்.



5 கருத்துகள்:

  1. //அவர்களது உண்மை ஜாதகங்கள் ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து கொள்ளுமாறு தயவுடன் தங்களை வேண்டுகிறேன்.//

    அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ?(எதிரிகள் தொந்தரவு ஏற்படும் என்று பயமா ?)
    விளக்கவும்

    பதிலளிநீக்கு
  2. //2 . மேலும் பழைய பாடல்களை பாடி ஜோதிடம் சொல்லுவதை விட்டு ஜோதிட அறிவியலை அடுத்த கட்டத்துக்கு நாம் எடுத்து செல்வோம் , ஜோதிடத்தின் உண்மை நிலையை அனைவருக்கும் புரிய வைப்போம்.//
    அய்யா பழைய பாடல்களில் ஜோதிட குறிப்பு இல்லையா? பரிஹர்ரம் இல்லையா ?
    சித்தர்களின் பாடல்கள் மற்றும் புலிபானி அவர்களின் பாடல்கள் நிறைய ஜோதிட குறிப்புகள் கொடுத்துள்ளனர் ?? விளக்கவும்

    //ஜோதிட அறிவியலை அடுத்த கட்டத்துக்கு நாம் எடுத்து செல்வோம் ,//
    அடுத்த கட்டத்திற்கு செல்வது தவறில்லை ...வாழ்த்துக்கள் ... மேலும் ஜோதிட மென்பொருள் பயன்படுத்தும்போது பழைய ஜாதகத்தை விட துல்லியம் அதிகம் கிடைக்கும்.

    வேலு
    கோயம்புத்தூர்

    பதிலளிநீக்கு
  3. //ஜோதிட சாஸ்திரம் மிகவும் புனிதமான கலை இக்கலையினை துணைகொண்டு,மூட நம்பிக்கைகளை களைந்து நமது வாழ்வினை செம்மை படுத்தி வளமான வாழ்க்கையினை அனைவரும் பெறுவோம்.//

    முற்றிலும் உண்மை. என்னை பொறுத்தவரை
    1 வருடம் ஒரு முறை ஜாதகத்தை பார்த்து முறையாக பரிகாரம் செய்து கொள்வது
    2 வருடம் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்வது (முடிந்தால் மாதம் ஒருமுறை செல்வது )
    3 ராமேஸ்வரம் காசி காய செல்வது
    4 இஷ்ட தெய்வ வழிபாடு
    5 யோகா ஆசன முறை


    வேலு
    கோயம்புத்தூர்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்,
    அது புதுமையோ பழமையோ சரியான காரணத்துடன் கூறப்படும் விளக்கங்களை நான் ஏற்றுக்கொள்வேன்.
    ஜோதிடத்தில் பல முரண்பாடுகள் உள்ளதே.
    ஆரம்பமே பஞ்சாங்க முரண்பாடு.அடுத்து ஜாதக கணித முரண்பாடு.இதில் சரியான ஜாதகத்தை கணிப்பதே பெரும்ப்ரச்சனையாக உள்ளது.இதில் அதை வைத்து பலன் சொல்வது அதை விட கொடுமை.

    ஒரு குழந்தை பிறக்கும்போது எந்த கிரகம் எங்கே இருந்தது என்பதுதானே ஜாதகம்.இதை 100% துல்லியமாக கணிக்க (பஞ்சாங்க உதவி இன்றி) நாசா போன்ற அறிவியல் ஆய்வு மையங்களின் இணையதளம் மூலம் ஆன்லைனில் தெரிந்துகொள்ள முடியுமா?

    அதாவது

    துல்லியமான ஜாதகம் கணிக்க என்ன வழி?

    பதிலளிநீக்கு
  5. venkatesa gurukkalJan 31, 2012 01:38 AM
    //துல்லியமான ஜாதகம் கணிக்க என்ன வழி?//

    அய்யா துல்லியமாக ஜாதகம் கணிக்க நிறைய மென்பொருள் வந்துவிட்டன. முதலில் நாம் 365 நாள் மட்டும் வைத்து கனகிட்டோம் இப்போ 365 நாள் மற்றும் 6 நாட்கள் கொண்ட மென்பொருள் நிறைய பயன் பாட்டிற்கு வந்துவிட்டது..

    மேலும் ஒன்பது கிரக அமைப்பு தவிரே Uranus Neptune Pluto போன்ற கிரக அமைப்புடன் மென்பொருள் வந்துவிட்டது. அது எல்லாம் மிக துல்லியமாக கணக்கிடலாம் (நமது ஜோதிடதீபம் அவர்களிடம் அந்த மென்பொருள் தான் பயன் படுத்துகின்றனர்)i saw it in their blog. they using it for example of my doubts.

    மேலும் முன்காலத்தில் latitude and longitude (தீர்க்க ரேகை மற்றும் அட்சரேகை ) கிராமத்திற்கு சரியாக கணிக்க மாட்டார்கள். இப்போது அது சுலபம். துல்லியமாக கிடைகிறது..

    பதிலளிநீக்கு