புதன், 7 மார்ச், 2012

அரசியலும் 6ம் வீடும்




ஒருவர் அரசியலில் துறையில் வெற்றி பெற்றாவராக ஆக  வேண்டும் எனில் அவரது சுய ஜாதக அமைப்பில் 6  ம் வீடு சர ராசியாக அமைந்து 100  சதவிகிதம் நன்றாக இருக்க வேண்டும் .

 இந்த அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நிச்சயம் அரசியல் ரீதியான பதவிகள் தானே தேடிவரும் வாய்ப்பு அதிகம் பெறுவார்கள். இந்த ஆறாம் வீடு நல்ல நிலையில் இருந்து, நடக்கும் திசை ஆறாம் வீட்டின் பலனை நடத்துமாயின் நிச்சயம் அரசியலில் நல்ல முன்னேற்றம் , பதவி அமையும் என்பது நிச்சயம் .

அதே சமயம் நல்ல அரசியல் வாதியாக செயல் படும் தன்மை எந்த ஜாதகருக்கு அமையும் எனில் கிழ்க்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகராக இருக்க வேண்டும் 

1 )  லக்கினம் , இரண்டாம் வீடு , ஆறாம் வீடு , ஏழாம் வீடு, பதினொன்றாம் வீடு வீடுகள் முறையே 100  சதவிகிதம் நன்றாக இருக்க வேண்டும் .

2 )  லக்கினம்   100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே பதவியை முழுமையாக நன்மையான விசயங்களுக்கு பயன்படுத்த முடியும் , மேலும் ஜாதகர் நேர்மையான குணம் கொண்டவராக இருப்பார் , பெதுநல வாழ்க்கையில், ஆர்வம் மற்றும் கடமை உணர்ச்சி அதிகம் உள்ளவராக காணப்படுவார் .

3 )   இரண்டாம் வீடு 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே பேச்சு திறன் , வாக்கு வன்மை அதிகம் உண்டு , மேலும் அரசியல் வாதிகளுக்கே உரித்தான மக்களை கவரும் விதத்தில் பேசும் ஆற்றல் அதிகம் ஏற்ப்படும். ஒரு வாக்குறுதியை கொடுப்பாரே ஆயின் அதை தனது உயிரை கொடுத்தாவது நிறைவேற்றும் குணம் கொண்டவராக காணப்படுவார். மற்றவரை ஏமாற்றும் குணம் சிறிதேனும் இருக்க வாய்ப்பில்லை .

4 )   ஆறாம் வீடு 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே, மக்களின் ஓட்டு ஜாதகருக்கு 100  சதவிகிதம் கிடைக்கும். மேலும் மக்களின் மனதில் நீங்காத இடம் ஜாதகருக்கு கிடைக்கும் , தனது எதிரியை வீழ்த்தும் வல்லமை ஜாதகருக்கு 100  சதவிகிதம் செயல் படும். ஒரு பதவியில் இருந்து நல்ல ஆட்சி இந்த அமைப்பை பெற்றவரால் மட்டுமே தர  முடியும் .

5 )  ஏழாம் வீடு 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே, ஜாதகருக்கு தொலை  நோக்கு பார்வை , மற்றவரை அனுசரித்து நடந்துகொள்ளும் பக்குவம், மக்களிடம் நன்மதிப்பை பெரும் தன்மை, கூட்டணியில் உள்ளவர்களின் ஆதரவு நிலையாக கிடைக்கும் வாய்ப்பு , தர்ம சிந்தனை , அனுபவம் பெற்றவர்களை மதித்து  ஆலோசனையை கேட்கும் தன்மை, போன்ற குணங்கள்  மேலோங்கி நிற்கும் .

6 )   பதினொன்றாம் வீடு 100  சதவிகிதம் நன்றாக இருந்தால் மட்டுமே, அரசியலில் நீடித்து நிற்கும் தன்மை ஏற்ப்படும் , மேலும் அதிர்ஷ்டமும் ஜாதகருக்கு கை கொடுக்கும் , தன்னம்பிக்கை அதிகம் கொண்டுள்ள மனிதராக ஜாதகரை காண முடியும், மேலும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக மக்களை சந்திக்கும் குணமும், மக்களுக்காக மற்றும் இந்த சமுதாய முன்னேற்றத்திற்காக அயராது பாடு படும் குணம் மேலோங்கி நிற்கும் .

இந்த அமைப்பில் இருக்கும் ஜாதகம் நிச்சயம் சிறந்த அரசியல் வாதியாக இருப்பார் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை.

இந்த ஜோதிட கணிதம் கொண்டுதான் பல மன்னாதி மன்னர்களை அந்த காலத்தில் சித்தர்களும் முனிவர்களும், இறையருளின் துணையுடன், நாட்டு நலனுக்காகவும் சமுதாய நல்வழியில் முன்னேற்றம் பெறவும், உருவாக்கினார்கள் .( குறிப்பிட்ட நேரத்தில் கருவுறும் குழந்தை மேற்கண்ட அமைப்பை பெரும் என்று கணிதம் செய்து தந்தனர் )  
ஆனால் இன்றைய நிலை ?

இந்த இடத்தில் நான் ஒன்று  முக்கியமாக  சொல்ல கடமை பட்டுள்ளேன் .
 அது : 

ஆறாம் வீடும், லக்கினமும் வழுத்து நிற்கும் பொழுது, ஒரு திருட்டு நடந்து விட்டால் கண்டிப்பாக அதை பற்றிய ஒரு சிறு துப்பு கூட கிடைக்காது, களவு போன பொருள் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது, 

அது போல் இப்பொழுது உள்ள 70 சதவிகித அரசியல் வாதிகளுக்கு இந்த இலக்கணமும் ஆறாம் வீடு மட்டும் வழுத்து நிற்ப்பதால், இவர்கள் அடிக்கும் கொள்ளையை, ஒரு பைசாவை கூட யாராலும் கண்டு பிடிக்க முடிவதில்லை, மேலும் இவர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல், ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் .

மக்களும் கழுதை கெட்டால் குட்டிசுவரு? என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர், இதில் இந்த அரசியல் வாதிகளின் பதில், குற்றத்தை சட்டப்படி சந்திப்போம் என்று மக்கள் காதில் பூ மாலையே மாட்டி விடுகின்றனர், மக்களும் இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்ட பரவாயில்லை, ரெம்ப நல்லவேண்டா ? என்று மறுபடியும் தனது வாக்கு சக்தியை உணராமல் அவர்களையே  தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்து விடுகின்றனர் . 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

1 கருத்து:

  1. அருமையான பதிவு. சற்று வித்தியாசமாகவும் உள்ளது..

    //ஆறாம் வீடும், லக்கினமும் வழுத்து நிற்கும் பொழுது, ஒரு திருட்டு நடந்து விட்டால் கண்டிப்பாக அதை பற்றிய ஒரு சிறு துப்பு கூட கிடைக்காது, களவு போன பொருள் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது, //

    ரகசியத்தை சொல்லிவிட்டேர்களே......

    இது போல் மேலும் வித்தியாசமான பதிவுகள் எதிர்பார்கின்றோம்

    பதிலளிநீக்கு