புதன், 7 மார்ச், 2012

பாதக ஸ்தானம் பற்றிய ஒரு விளக்கம் !




 பாதக ஸ்தானம் :

ஒருவரது லக்கினம் சர ராசியில் அமர்ந்தால், அவருக்கு பாதக ஸ்தானமாக வருவது 11  ம் வீடு ஆகும்.

 ஒருவரது லக்கினம் ஸ்திர ராசியில் அமர்ந்தால், அவருக்கு பாதக ஸ்தானமாக வருவது ம் வீடு ஆகும்.

ஒருவரது லக்கினம் உபய ராசியில் அமர்ந்தால், அவருக்கு பாதக ஸ்தானமாக வருவது ம் வீடு ஆகும். 

ஒருவர் எந்த லக்கினம் ஆனாலும் , லக்கினம் பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு கொள்வது அவ்வளவு சிறப்பான பலனை தருவதில்லை, மேலும் ஜாதகனே தனது நல் வாழ்வினை, உடல் நிலையை  தானே சிதைத்து கொள்ளவார்.


 ( போதை பொருளுக்கு அடிமையாகுதல், தீமையான வழியினை வாழ்கையை அமைத்துகொல்லுதல் , சமூக வாழ்க்கைக்கு எதிர் பதமாக செயல்படுதல், முரண் பட்ட வாழ்க்கை , பெண்களின் சாகவாசத்தால் பொருள் இழப்பு, பெயர் கெடுதல், சிறை வாசம் , எதிரி பயம் , விபத்து போன்ற பாதிப்புக்களால், ஜாதகரை விதி வருத்தி எடுத்து விடும்.)

 இதற்காக ஜாதகர் பயப்பட தேவையில்லை, எங்களது வழிகாட்டுதல் உங்களுக்கு இதில் இருந்து மீட்டு நல வாழ்வினை வழங்கும்.

மேலும் பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் எந்த வீடுகளும் விருத்தி அடைவதில்லை, இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும்மெனில் ஜாதகத்தில் எந்த ஒரு வீடும் பாதக ஸ்தான உடன் தொடர்பு பெற கூடாது. தொடர்பு பெரும் எந்த ஒரு பாவமும் 200  சதவிகிதம் தீமையே செய்யும்.

   இதில் ஒரு விதி விளக்கு ஒன்று உண்டு அதாவது நடக்கும் திசை மற்றும் புத்திகளில், பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் வீடுகளின் பலன் நடக்கவில்லை என்றால் நிச்சயம் ஜாதகருக்கு மேற்ச்சொன்ன பலன்கள் நடக்க வாய்ப்பில்லை , ஒரு வேலை நடக்கும் திசை மற்றும் புத்திகளில், பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் வீடுகளின் பலன்  நடந்தால், ஜாதகர் கதி அதோ கதிதான்.

இந்த அமைப்பை பெற்ற ஜாதக அமைப்பை கொண்டவர்கள், எங்களை சந்தித்து சரியான வழிகாட்டுதல் பெற்று தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற்றம்  காணுங்கள்.

பிரச்சனை என்று ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று நிச்சயம் இருக்கும், லக்கினம் பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் கரு மையம் துய்மை பெரும் பொழுது, அவர்களது வாழ்க்கை நிச்சயம் பன்மடங்கு முன்னேற்றம் பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.

வாழ்க வளமுடன் 
 9842421435 
9443355696 
      


1 கருத்து:

  1. //பிரச்சனை என்று ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று நிச்சயம் இருக்கும்//

    முற்றிலும் உண்மை... அனால் நம் தேடுதல் என்பது இருந்தால் தீர்வு நிச்சயம் கிடைக்கும்


    // லக்கினம் பாதக ஸ்தான உடன் தொடர்பு பெரும் ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் கரு மையம் துய்மை பெரும் பொழுது,அவர்களது வாழ்க்கை நிச்சயம் பன்மடங்கு முன்னேற்றம் பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.//

    கரு மையம் துய்மை-ஆதார பூர்வமான உண்மை... நாம் சோதனை செய்துகூட பார்த்துக்கலாம் என்று முன்னரே சொல்லிஇருந்தீர்கள்....

    பதிலளிநீக்கு