வியாழன், 15 மார்ச், 2012

பரிகாரம்





ஜோதிட பலன் கேட்கவரும் அனைவரின் அடுத்த கேள்வி என்ன பரிகாரம் செய்தால் ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்கும் என்பாதாக இருக்கிறது இதை பற்றி ஒரு சிந்தனை :

பரிகாரம் என்றாலே மக்கள் அனைவருக்கும் ஜோதிடர்கள் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் கோவில் வழிபாடு, பூஜை முறைகள் , நவக்கிரக சாந்தி , இரத்தின ஆலோசனை , பெயர் மாற்றம் , என எண்ணில் அடங்காத பல பரிகாரங்களை, ஜோதிட  ஆலோசனை பெற வந்தவர்களிடம் சொல்கின்றனர் , இதை கேட்கும் மக்கள் அனைவரும், நிறைய பொருட் செலவு செய்தும் பலன் பெற முடியாமல் இருப்பவர்கள் அதிகம், இதற்க்கு காரணம் ஜோதிடர்கள் சொன்ன பாரிகாரங்கள் சரியா ? அல்லது அந்த பரிகாரங்கள் ஜாதகருக்கு பலன் தரவில்லையா? 

 என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்தவர்கள் 80  சதவிகிதம் பேரின் வாக்கு மூலம் என்னவென்றால் நான் இதற்க்கு முன் ஜோதிடர்கள் சொன்ன அனைத்து பரிகாரங்களையும் செய்துவிட்டேன் பலன் இல்லை என்பதாகவே இருக்கிறது .

உண்மைதான் என்ன ?

பரிகாரம் என்றாலே அது நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகர்தான் செய்ய வேண்டும் , அது எந்த பாவம் ஜாதகத்தில் கெட்டு விட்டது என்று, ஜோதிடனின் கணிதம் கொண்டு அறிந்து. 

எந்த ஒரு சிறந்த ஜோதிடனும் ஜாதகருக்கு பரிகாரம் பற்றி சொல்வாரோ தவிர அவரே பரிகாரம் செய்ய மாட்டார் .

 இதில் அடுத்த விஷயம் கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்தால் தோஷம் போய்விடும் என்று சொல்லுவது உண்மையில்லை , கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்தால்  ஜாதகத்தில் எந்தவீடு பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த வகையில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு ஜாதகரின் அறிவு  விழிப்புடன் செயல்பட்டு, அந்த பிரச்சனைகளுக்கு ஜாதகரே தீர்வு காணும் ஆற்றலை கோவில் வழிபாடு / பரிகாரம் ஜாதகருக்கு  கொடுத்து விடும் என்பதே உண்மை , அது எந்த வகை பரிகாரமானாலும் சரி .  

மேலும் கோவில் வழிபாடு / பரிகாரம் என்பது ஜாதகரின் சிந்தனை திறன், செயல் பாடு, அறிவில் விழிப்பு நிலை ஆகிய தன்மைகளை மேம்படுத்தும்  என்பது கண்கூடாக கண்ட உண்மை. மேலும் நன்மை தீமைகளை உள் உணர்வு மூலம் தெரிந்துகொண்டு வருமுன் காக்கும் தன்மையை அதிகரிக்கும். 


 
ஜாதகர் எவ்வித பரிகாரம் செய்யாமலே ஜாதகத்தில் பாதிப்புக்களை நிவர்த்தி நிச்சயம் செய்துகொள்ள முடியும் எப்படி எனில் ? 

சுய ஜாதகத்தில் இருந்து பாதிப்படைந்த வீடுகளை நன்றாக தெரிந்து கொண்டு அந்த வீடுகளுக்கு அதிபதியான கிரகத்தின் மீது தொடர்ந்து தவம் செய்து வருவாரே ஆயின் அந்த கிரகத்தில் இருந்து வரும் அலை கதிர்கள் நன்மையான  பலனையே வாரி வழங்கும் , இது ஓரிரு நாட்களில் நடக்க வாய்ப்பு இல்லை தொடர்ந்து மாதகணக்கில் செய்துவந்தால் நிச்சயம் நல்ல பலனை தரும் என்பதில் சந்தேகமே இல்லை .

  மேலும் சுய ஜாதகத்தில் இருந்து பாதிப்படைந்த வீடுகளை நன்றாக தெரிந்து கொண்டு அந்த வீடுகளுக்கு ஆதிபத்தியம் பெற்ற அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்களை மனபூர்வமாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஜாதகர் நன்மையே செய்வார் எனில், ஜாதகருக்கு மிகுந்த நன்மையே ஏற்ப்படும் .

எடுத்துகாட்டாக :

1  ம் ( இலக்கணம் ) வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் சுய ஒழுக்கம் , மன கட்டுப்பாடு , தன்னம்பிக்கை  , கெட்ட எண்ணங்களை தவிர்த்தல் , தனது உடல் நிலையில் அதிக அக்கறை , போன்றவற்றில் கவனம் செலுத்துவாறே ஆயின் பாதிப்படைந்த லக்கினம் வழு அடைந்து ஜாதகர் நன்மை பெறுவார் .

 4  ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது தாயாரிடம் அதிக அன்புடனும் , மரியாதையுடனும் நடந்து கொள்வது நலம் தரும் , மேலும் தாயாரின் ஆசைகளை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும், அவர்களிடம் காட்டும் அன்பு ஜாதகருக்கு நல்ல சொத்து சுக சேர்க்கையை பெற்று தரும் , தாயாரை அவரது இறுதி காலம் வரை நன்றாக பார்த்துக்கொள்வது ஜாதகருக்கு நல வாழ்வினை தரும் .

 7   ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது நண்பர்களுடன் நல்லுறவு அவர்களால் ஏற்ப்படும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளுதல் , மனைவி வழியில் இருந்து வரும் பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு அவருக்கு முழு அளவில் நன்மையே செய்தல் , மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுதல் ( மனைவி  கெடுதலே செய்தாலும் ) போன்ற தன்மையுடன் இருந்தால்  சிறிதுகாலம் ஜாதகர்  சிரமம் அடைந்தாலும் பிறகு அந்த பாவ வழியில் இருந்து 100  சதவிகித நன்மையே பெறுவார் .

 10  ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது தகப்பானரிடம் பற்றுடனும் பாசமுடனும் இருப்பது ஜாதகருக்கு 100  சதவிகித தொழில் வளர்ச்சியை பெற்று தரும் ,  மேலும் தகப்பானார் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகர் மனம் உவந்து ஏற்றுக்கொண்டு , அவரை நன்றாக பாதுகாக்க வேண்டும். மேலும் அவரது கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வது ஜாதகருக்கு அபரிவிதமான வளர்ச்சியை தரும் .

பரிகாரம் என்பது நாம் முன் ஜென்மங்களில் செய்த கர்ம வினை பதிவுகளை,  இந்த பிறப்பில் போக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பை இறைநிலை, நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்,

 இதை நன்றாக நாம் உணர்ந்து செயல் பாடுவோமே ஆனால், நமது சந்ததியினர் அனைத்து நலன்களையும் பெறுவார்கள் . இதை உணராமல் மேலும் இந்த கர்ம வினை பதிவினை அதிகரித்து கொள்ளுதல் நமக்கும் நல்லதல்ல , நமது சந்ததியினருக்கும் நல்லதல்ல,

பரிகாரம் நம்மை சுற்றியே உள்ளது அதை நாம் தெளிவாக தெரிந்து கொண்டு நடந்தோம்  என்றால் வாழ்க்கை மிகவும் சிறப்பாக வாழ முடியும் .

ஜோதிடன் வர்ஷன் 
 9842421435 
9443355696 
    

2 கருத்துகள்:

  1. பரிகாரம்

    //என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்தவர்கள் 80 சதவிகிதம் பேரின் வாக்கு மூலம் என்னவென்றால் நான் இதற்க்கு முன் ஜோதிடர்கள் சொன்ன அனைத்து பரிகாரங்களையும் செய்துவிட்டேன் பலன் இல்லை என்பதாகவே இருக்கிறது . //

    எனக்கும் அந்த அனுபவம் உண்டு .... ஜோதிடர் database உள்ளது. அனால் எனக்கு தீர்வு என்பது கிடைக்கவில்லை...முடிவில் வேறு எதாவது காரணம் சொல்வார்கள்...

    //மேலும் கோவில் வழிபாடு / பரிகாரம் என்பது ஜாதகரின் சிந்தனை திறன், செயல் பாடு, அறிவில் விழிப்பு நிலை ஆகிய தன்மைகளை மேம்படுத்தும் என்பது கண்கூடாக கண்ட உண்மை. மேலும் நன்மை தீமைகளை உள் உணர்வு மூலம் தெரிந்துகொண்டு வருமுன் காக்கும் தன்மையை அதிகரிக்கும் //
    முற்றிலும் உண்மை




    // 7 ம் வீடு பாதிப்படைந்தால் ஜாதகர் தனது நண்பர்களுடன் நல்லுறவு அவர்களால் ஏற்ப்படும் இன்னல்களை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளுதல் //

    தொடர்ந்து இன்னல் வந்தால் எப்படி நல்லுறவு கொள்ள முடியும் ????? விலகி செள்ளதனே தோன்றும்

    // மனைவி வழியில் இருந்து வரும் பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு அவருக்கு முழு அளவில் நன்மையே செய்தல் , மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுதல் ( மனைவி கெடுதலே செய்தாலும் ) போன்ற தன்மையுடன் இருந்தால் சிறிதுகாலம் ஜாதகர் சிரமம் அடைந்தாலும் பிறகு அந்த பாவ வழியில் இருந்து 100 சதவிகிதநன்மையே பெறுவார் . //

    சிறிதுகாலம் ஜாதகர் சிரமம் அடைந்தாலும் பிறகு பழக்கம் ஆகிவிடும். வேற வழி இல்ல

    பதிலளிநீக்கு
  2. எணது பெயர் ப்ரதீப்குமார் பிறந்த தேதி 24-09-1984 பலன் சொல்லவும் டைம் காலை 7.51 எணது வால்க்கை எப்படி இருக்கும்

    பதிலளிநீக்கு