லக்கினம் எதுவென்றாலும் ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை மேன்மை பெற உறுதுணை புரியும் , மேலும் லக்கினம் என்பது ஜாதகரின் தனி தன்மை , குண இயல்பு , உடல் நிலை , மன நிலை , ஜாதகரின் செயல்பாடுகள் , ஜாதகர் செய்த வினை பதிவின் தன்மை , அனுபவிக்க வேண்டிய நன்மை தீமை , வளரும் சூழ்நிலை , ஜாதகரின் ஆயுள் பலம் , தனிப்பட்ட புத்திசாலிதனம், ஜாதகரின் செயல் திறனின் வேகம் , ஒரு விஷயத்தை கிரகித்துகொள்ளும் அறிவாற்றல் , தனது பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு , போன்ற அமைப்புகளை நிர்ணயம் செய்வது இந்த லக்கினமே , எனவே லக்கினம் வலிமை பெற்றால் என்ன பலன் , வலிமை இழந்தால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம் .
லக்கினம் வலிமை பெரும் அமைப்பு :
ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எனும் பாவகம் கீழ்கண்ட வீடுகளுடன் தொடர்பு பெற்றால் மிகுந்த நன்மையை தரும் , ஆனால் அந்த வீடு பாதக ஸ்தானமாக இருக்க கூடாது என்பது பொது விதி .
லக்கினம் முதல் வீடு எனும் இலக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் மிகுந்த யோகசாலி , அடிப்படையில் நல்ல வளரும் சூழ்நிலையை பெறுவார் , யாருடைய ஆதரவும் இன்றி சுயமாக வெற்றி பெரும் அமைப்பை பெறுவார் , தனித்து செயல் படும் தன்மையும், நல்ல உடல் ஆரோக்கியமும் , நல்ல மன நிலையம் , பூரண ஆயுளையும் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் , எவருக்கும் இன்னல்களை தர விரும்ப மாட்டார் தான் உண்டு தனது வேலை உண்டு என மிகவும் , பொறுப்பாக இருப்பார் , எவ்வித தீய பழக்க வழக்கமும் இன்றி நல்ல ஒழுக்கம் கொண்ட மனிதராக விளங்குவார் .
லக்கினம் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகரின் வாக்கு வன்மை சிறப்பாக இருக்கும் , வியாபாரம் , வணிகம் இரண்டும் ஜாதகருக்கு சிறப்பாக வரும் , இயற்கையிலேயே ஜாதகர் லாப நோக்கம் இன்றி எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார் , ஜாதகரின் வாழ்க்கையில் உடல் ரீதியாக சிறு சிறு தொந்தரவுகள் வந்து நீங்கும் , மன தைரியமும் , தன்னம்பிக்கையும் , மிகுந்து காணப்படும் , அடிப்படை கல்வி மிகவும் சிறப்பாக தேர்ச்சி பெரும் தன்மையை தரும் , நல்ல மன நிம்மதியான குடும்ப வாழ்க்கை சரியான வயதில் நிச்சயம் அமையும் , பெருந்தன்மையான குணம் ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து விடும் .
லக்கினம் சகோதர ஸ்தானம் எனும் மூன்றாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலையை பெறுவார் , சிறு வயது முதற்கொண்டே அதிர்ஷ்டம் நிறைந்தவராக காணப்படுவார் , எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும் , தன்னம்பிக்கை , பரிபூரண ஆயுள் சிறப்பாக அமைந்து விடும் , சகோதரர்கள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையை செய்வார்கள் , குறிப்பாக வேற்று இனத்தவர் மூலம் ஜாதகர் சிறப்பான முன்னேற்றம் பெறுவார் .
லக்கினம் சுக ஸ்தானம் எனும் நான்காம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் , சிறப்பான உடல் நிலையும் மன நிலையும் பெற்றிருப்பார் , தனது தாயின் கருணையினாலும் ஆசியினாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய சொத்து சுகங்களையும் , வண்டி வாகன யோகங்களையும் , மேல் நிலை கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையும் , ஜாதகருக்கு தேவையானவைகள் சிறுவயது முதற்கொண்டே தடையின்றி கிடைக்க பெறுவார் , நல்ல வசதி மிக்க வீடு , வண்டி வாகனம் , சொகுசு வாழ்க்கை , விவசாயம் செய்வதால் லாபம் , கால்நடைகள் பண்ணை தோழிகளால் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாழ்க்கை என ஜாதகர் சிறப்பான முன்னேற்றம் நிச்சயம் பெரும் யோகம் உண்டாகும் .
லக்கினம் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது 1000 ல் ஒரு ஜாதகத்தில் மட்டுமே இந்த அமைப்பு இருக்கும் , காரணம் ஜாதகரின் பெற்றோரும் , ஜாதகரும் செய்த புண்ணியத்தின் பலனாக இந்த அமைப்பு ஜாதகருக்கு இருக்கும் , மேலும் இறை அருளின் பரிபூரண நல்லாசிகள் ஜாதகரை எல்லா காலங்களிலும் நன்மையை வழங்கி கொண்டே இருக்கும், நல்ல உடல் ஆரோக்கியம் , சிறந்த அறிவாற்றல் , நேர்மையான குணம் , தன்னம்பிக்கை மற்றும் சுய கட்டுபாடு கொண்ட நல்ல மனிதராக ஜாதகர் இருப்பார் , மேலும் ஆன்மீக வாழ்க்கையில் ஜாதகர் சிறந்து விளங்கும் பெரும் பாக்கியம் கிடக்கும் .
லக்கினம் பகை ஸ்தானம் எனும் ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது , அடிப்படையில் இருந்தே ஜாதகருக்கு முன்னேற்ற தடையை ஏற்ப்படுத்தும் , உடல் ரீதியாக பல இன்னல்களை தந்து கொண்டே இருக்கும் , ஒருவேளை இந்த ஆறாம் வீடு கடகம்,விருச்சகம்,மீன ராசியாக அமைந்து லக்கினம் ஆறாம் வீட்டுடன் தொடர்பு பெற்றால் ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக ஆகி விடும் காரணம் இது நீர் ராசியாக இருப்பதால் , அதிக மன உளைச்சலை ஜாதகரே ஏற்ப்படுத்தி கொண்டு தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொள்வார் , இதானால் உடல் நிலையும் , மன நிலையும் கடுமையாக பாதிக்க படும் இந்த அமைப்பு மிகவும் சிரமத்தை தரும் , வளரும் சூழ்நிலையும் சரியாக அமையாது , ஜாதகரை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் , தனது வாழ்க்கை பாதிக்க ஜாதகரே காரணமாக அமைந்து விடுவார் .
லக்கினம் களத்திரம் எனும் ஏழாம் வீட்டுடன் தொடர்பு பெறுவது மிகவும் சிறப்பான பலனை தரும் , தனது சிறு வயது முதல் சிறப்பான வளரும் சூழ்நிலையை பெற்று இருப்பார் , அனைவரும் ஜாதகருடன் நட்பு பாராட்டுவார்கள் , ஜாதகரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம் , அதுமாதிரியான நல்ல நடத்தையும் சுய கட்டுப்பாடு ஒழுக்கமும் கொண்டு இருப்பார் , தனது நண்பர்கள் வழியிலும் , பொது மக்களின் ஆதரவிலும் வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை பெறுவார் , மிக பெரிய அரசியல் பதவிகளில் கொடி கட்டி பறக்கும் மா மனிதர்களின் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் சிறப்பாக இருக்கும் , அதிலும் ஏழாம் வீடு சர ராசியாக இருப்பது மிகப்பெரிய வெற்றிகளை பெற்று தரும் , ஆனால் உபய இலக்கின அமைப்பை சார்ந்தவருக்கு இது பொருந்தாது , காரணம் உபய லக்கினத்திற்கு பாதக ஸ்தானமே இந்த ஏழாம் வீடுதான் .
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
jothidadeepam @gmail .com
romba nalla paadam aiyya,romba thanks aiyya but 1st house relation between 4th,5th,6th,11th house so any changes jadhaka palan
பதிலளிநீக்கு