Thursday, October 25, 2012

பாவகம் தரும் தீய பலன்களில் இருந்து ஜாதகர் எப்படி நன்மையை பெறுவது ?

ஐயா வணக்கம்,

ஒரு பாவகம் பலமுல்லதா இல்லையா என்பதற்கு பல ஜோதிடர்கள் பல
கருத்துவேறுபாடுகளை கொண்டுள்ளனர்.அதிலும் பாவாதிபதி பலமில்லாமல்
இருந்தால் காரக கிரகம் பலமாக இருந்தாலும் சரி என்கிறார்கள்.மேலும் ஒரு
பாவத்தில் அமர்ந்த கிரகத்தை வைத்தே பலனை சொல்லிவிடுகிறார்கள்.உதாரணமாக
5ல் பாவி இருந்தாலே புத்திர தோஷம், 7ல் பாவி இருந்தாலே களத்திர
தோஷம்...இப்படியாக.

பாவக அதிபதியை பற்றிய கவலை நமக்கு தேவை இல்லை ஏனெனில் அவர் எங்கு அமர்ந்தாலும் அந்த பாவகத்திர்க்கு நன்மையை செய்தால் மட்டுமே போதும் , அவர் ஆட்சி பெற்றால் என்ன ? உச்சம் பெற்றால் என்ன ? பகை பெற்றால் என்ன , நீச்சம் பெற்றால் என்ன லக்கினத்திற்கு நல்லது செய்தால் போதும் , எடுத்து காட்டாக சிம்மலக்கினத்திர்க்கு மேஷத்தில் உச்சம் பெற்று மேஷத்தில் அமர்ந்தால் ஜாதகர் இலக்கின அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை அனுபவிப்பார் , எனவே லக்கினம் முதற்கொண்டு ௧௨ பாவகமும் வலிமை பெறுவதே அவசியம் , காரக அதிபதிகளை பற்றி நாம் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை அது பொது பலனுடன் சேர்ந்தது காரகர்கள் சுய ஜாதகத்தை கட்டுபடுத்தும் தகுதி அற்றவர்கள் , எனவே பாவகம் வலிமை பெறுவதே முக்கியம் , அதுவே ஜாதகருக்கு நன்மைகளை வாரி வழங்கும் . மேலும் பாவி, சுபர் , தோஷம் என்பதெல்லாம் ஜோதிடத்தை பற்றிய தெளிவு இல்லாமல் குத்து மதிப்பாக பலன் சொல்லும் ஜோதிடர்கள் சொல்லும் வாய் ஜாலம் அன்பரே !  

ஆனால் கிருஷ்ணமூர்த்தி பத்ததி,பாஸ்கரா பத்ததி போன்றவை இதை அபத்தம் என்கின்றன.
எனில் பண்டைய நூல்களில் கூறப்பட்டது தவறா?அல்லது இன்றைய நிலமைக்கு ஒவ்வாததா?

பண்டைய நூல்கள் ஜோதிடத்தை மறைமுகமாக வைத்திருக்கும் சில விஷயங்களை நம்மவர்கள் தவறாக பொருள் கொண்டு பார்ப்பதாலேயே இந்த நிலை ஏற்ப்படுகிறது , அந்த நூல்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒன்பது அர்த்தங்கள் இருக்கின்றன , அவற்றை வாங்கி படிப்பதால் தெளிவு கிடைக்காது , நல்ல குரு முகமாக ஜோதிடத்தை கற்று அதன் மூலம் ஜோதிட கலையை  வளர்ப்பதே சால சிறந்தது , கிருஷ்ணமூர்த்தி பத்ததி,பாஸ்கர பத்ததி போன்ற ஜோதிட முறைகள் சொல்வது 100 க்கு 100 உண்மையே ! மேலும் லக்கினத்திற்கு பலன் காணுவது போல் ஒவ்வொரு பாவக்த்திர்க்கும் பலன் காணுவது சரியான ஜோதிட பலனை சொல்ல உதவி புரியும் .

மேலும் ராகு,கேது எங்கே இருந்தாலும் தோஷம் என்றும் சனி யை கொடிய
பாவியாகவும் சித்தரிக்கின்றனர்.இது சரியா?


இது முற்றிலும் தவறான அணுகு முறை , ராகு கேது மற்றும் சனியை பற்றிய போதிய ஜோதிட அறிவு அற்ற ஜோதிடர்களே இவ்வாறு சொல்ல வாய்ப்பு உண்டு , மேலும் ராகு கேது பற்றிய விளக்கங்கள் நமது ஜோதிடதீபத்தில், தெளிவாக எழுதியிருக்கிறோம் படித்து தெளிவு பெறுங்கள் . மேலும் ராகு கேது , சனி  ஆகிய கிரகங்களும் மற்ற கிரகங்கள் போலவே வினை பதிவிற்கு ஏற்றவாறு நன்மை தீமை பலனையே தரும் இவைகளுக்கு வேறு எந்த சிறப்பு தகுதியும் இல்லை , மேலும் இவை தீமையான பலனை மட்டும்தான் செய்யும் என்பது ஜோதிடத்தை பற்றிய அடிப்படை அறிவு அற்றவர்கள் சொல்லும் ஒரு வாய் ஜாலமே ! இதில் சிறிதும் உண்மை இல்லை, ஆனால்  ராகு கேது கிரகங்கள் மட்டும் தான் அமர்ந்த இடத்தின் பலனை முழுவதும் உரிமை எடுத்துகொண்டு நன்மை தீமை பலனை வினை பதிவிற்கு ஏற்றார் போல் செய்யும் என்பதே உண்மை . இதில் மாற்ற கிரகங்கள் எதுவும் தலையீடு செய்ய இயலாது ஏன் ?  அந்த பாவக அதிபதி கூட எதுவும் செய்ய இயலாது .

ஒரு பாவம் பலம் இழந்துள்ளது என்பதற்கும் ஒரு பாவம் பலன்தர இயலாமல் உள்ளது
(அதாவது பாதகஸ்தான தொடர்பு போன்றவற்றால்)
என்பதை எப்படி நிர்ணயிக்கமுடியும்?ஜோதிட கணிதம் கொண்டு ஒரு பாவகம் எப்படி இருக்கிறது என்று , தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் இதற்க்கு தாங்கள் அடிப்படையில் இருந்து ஜோதிடத்தை நல்ல குரு மூலம் கற்றுகொள்வது நல்லது .

ஒரு பாவம் பலம் இழந்திருந்தால் அவன் கடைதேர அதாவது அந்த பாவக பலன்
கிடைக்க என்ன வழி?ஒரு ஜாதகத்தில் ஒரு பாவகம் பாதிக்க பட்டு இருந்தாலும் சரி பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தாலும் சரி நடப்பு திசை மற்றும் புத்தியில் அந்த வீடுகளின் பலன்கள் நடை பெற்றால் மட்டுமே தீமையான பலனை தரும் , நடப்பு திசை மற்றும் புத்தியில் அந்த வீடுகளின் பலன்கள் நடை பெறாமல் இருந்தால் பாதிக்கபட்ட வீடுகளின் பலனகளை பற்றி நாம் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை அன்பரே ! ஒருவேளை அந்த பாவக பலன் நடை பெற்றால் ஜாதக அந்த பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்ருகொள்வதும் , விழிப்புணர்வுடன் இருந்து தீய செயல்களில் ஈடுபடாமல் இருப்பது மட்டுமே ஜாதகரை காப்பாற்றும் , உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 12 வீடு 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நடப்பு திசை 12 ம் பாவக பலனை செய்யுமானால் ஜாதகர் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகாமல் இருப்பது அதிக நன்மையை தரும் .

ஒரு பாவகம் அவனுக்கு எதிராக இருந்தால் அதாவது அவனுக்கு தீங்கு செய்யும்
நிலையில் இருந்தால்,அந்த பாவகத்தின் நல்ல பலனை ஜாதகர் பெற என்ன வழி?
அன்புடன்,
ஜோதிட பித்தன்

சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து வரும் தீய பலன்களை ஏற்று கொண்டு கர்ம வினை பதிவினை தீர்த்து கொள்ளவேண்டும் , உதாரணமாக களத்திர ஸ்தானம் பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்ருகொள்வதும் அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்துவருவதும் ஜாதகரை தீய பலன்களில் இருந்து விரைவில் மீட்டு எடுக்கும் , மேற்கண்ட களத்திர ஸ்தானம் பாதிக்க படும் பொழுது நண்பர்கள் , பொதுமக்கள் வழியில் இருந்தும் தீமையான பலன்கள் நடை பெரும் இருப்பினும் , அதை ஏற்றுக்கொண்டு , அவர்களுக்கு நன்மை செய்வதே சிறந்தது .


அதாவது மேற்கண்ட படத்தில் இருப்பது போல் தம்மை  நாடி  வரும் அதிக விஷம் கொண்ட தீமையை செய்யும்  நாக சர்பத்திர்க்கும் சிவா பெருமான் அன்புடன் , அருள் தருவது போல் , சுய ஜாதகத்தில் தீமையான பலன்கள் நடை பெரும் பொழுது, ஜாதகர் யாரிடமும் கோபம் கொள்ளாமல் அன்பை மட்டுமே செலுத்தி அவர்களுக்கு நன்மை மட்டுமே செய்யும் பொழுது , தீமைகள் களைந்து நன்மைகள் நடைபெறும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com  


No comments:

Post a Comment