செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

புத்திரபாக்கியமும் ( ஆண் வாரிசு ) சுய ஜாதகத்தில் 5ம் பாவக வலிமையையும்!


 தனது குலம் தழைக்கவும், சந்ததி விருத்திக்காகவும் திருமணம் ஆனா சில வருடங்களிலேயே ஒரு நல்ல ஆண் மகவை பெற்று தரும் பெண்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையையும், இந்த சமூகம் கொடுக்க தவறியது இல்லை எனலாம், பொதுவாக ஆண் வாரிசு அமைவது மருத்துவ ரீதியாக தம்பதியரில் ஆணுக்கே அதிக பங்கு உண்டு என்று சொன்னாலும், ஜாதக ரீதியாக தம்பதியர் இருவருக்கும் பங்கு உண்டு என்பதே உண்மை, சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்று வர்ணிக்கப்படும் 5ம் பாவகம் திருமணமான தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் வலிமை பெற்று இருப்பதே சிறந்த புத்திர ( ஆண் ) பாக்கியத்தை தரும், மேலும் பிறந்த குழந்தையின் வழியில் இருந்து யோக வாழ்க்கையை அனுபவிக்கவும் வழிவகுக்கும்.

தம்பதியரின் சுய ஜாதகங்களில் 5ம் பாவகம் ஒருவருக்கு நல்ல வலிமை பெற்று இருப்பதும், ஒருவருக்கு வலிமை அற்ற நிலையில் இருப்பதும் அல்லது இருவருக்கும் 5ம் பாவகம் வலிமை அற்று இருப்பதும் பெண்குழந்தை பிறப்பில் தடை எதையும் செய்வதில்லை, ஆனால் ஆண்வாரிசு அமைவதற்கு பல தடைகளை தருகிறது, சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் 4,6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவதும் அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும் புத்திரபாக்கியத்தில் குறையை தருகிறது, தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது புத்திர பாக்கியத்தை ( பெண் குழந்தைக்கு அமைவதற்கு கூட ) கேள்விக்குறியாக்கும், இந்த அமைப்பை பெற்ற தம்பதியர் 5ம் பாவக வழியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து புத்திர பாக்கியங்களை பெறுவதற்கு, சுய ஜாதகமும், இறை அருளும் வழிகாட்ட வேண்டும், இதற்க்கு எதிர்பதமாக அமையும் பொழுதே தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அற்ற நிலையை தருகிறது.

இதை ஓர் உதாரண ஜாதகங்களை கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !

தம்பதியருக்கு திருமணம் நடந்து 7 வருடங்கள் முடிந்து விட்டது, இதுவரை தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள், ஆண் வாரிசு இல்லை, இவர்களது சுய ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

ஆண் ஜாதகம் :


லக்கினம் : தனுசு 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 

பெண் ஜாதகம் :


லக்கினம் : மகரம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : உத்திராடம் 4ம் பாதம் 


தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! 

ஆணின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகம் சத்ரு ஸ்தானமான 6ம் வீட்டுடன் தொடர்பு, மேலும் தற்பொழுது  நடைபெறும் ராகு திசையும் ஜாதகருக்கு 7,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனைதருவது சிறப்பானது அல்ல, மேலும் 12ம் பாவகம் பாதிக்க பட்டு ஜாதகருக்கு தனுசு ராசியிலேயே அமைவதும், தனுசு ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும் ஜாதகரின் முன்னோர்கள் செய்த வினை பதிவை அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

பெண்ணின் ஜாதகத்தில்  குழந்தை பாக்கியத்தை குறிக்கும் 5ம் பாவகம் பாதக ஸ்தானமான 11ம் வீட்டுடன் தொடர்பு, எனவே ஜாதகிக்கு ஆண்வாரிசு இல்லை என்பதை தெள்ள தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது, ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை 3,9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது குழந்தை இல்லை என்ற குறையை ( பெண் குழந்தை ) போக்கியது, மேலும் ஜாதகியின் 11ம் பாவகமும் தனுசு ராசியில்  அமைவதும், தனுசு ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவதும் ஜாதகியும் தனது முன்னோர்கள் செய்த வினை பதிவை அனுபவிக்கும் தன்மையை தருகிறது.

தம்பதியர் இருவரது ஜாதகத்திலும் 5ம் பாவகங்கள் முறையே ரிஷபத்திலும், மிதுனத்திலும் அமைவது, ஜாதகருக்கு ஸ்திர மண் தத்துவ ( உடல் ) அமைப்பில் இருந்து பிரச்சனைகளையும், ஜாதகிக்கு உபய காற்று தத்துவ  ( மன ) அமைப்பில் இருந்து பிரச்சனைகளையும் தொடர்ந்து தருவது புத்திர பாக்கியத்தை கேள்விகுறி ஆக்கும் அமைப்பாக கருதலாம்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகமோ, அல்லது பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகமோ பாதிக்கபட்டு இருப்பின் ( பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்தாலும் சரி ) மிக எளிதாக நிவர்த்தியை பெற்று 5,9ம் பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை பெற இயலும் என்பது  கவனிக்கத்தது, சுய ஜாதக அமைப்பின்படி சரியான தீர்வுகளை தேடி நலம் பெருக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக