ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பாதக ஸ்தானம் !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " முற்றிலும் உண்மையே, பொதுவாக வாழ்க்கை துணையின் வழியில் இருந்து யோகங்களை பெறுபவர்களும் உண்டு, அவயோகங்களை பெறுபவர்களும் உண்டு, இவையெல்லாம் ஒவ்வொருவர் சுய ஜாதகபடியே நிகழ்ந்தாலும், தனக்கு அமைந்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்பம்,களத்திரம் அல்லது ஆயுள் பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும்பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் விதி விளையாட தொடங்கிவிட்டது என்று உறுதி செய்துகொள்ளலாம், மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் தற்பொழுது அல்லது எதிர்வரும் திசை புத்தி, பாதக ஸ்தானதத்தால் பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோ கதிதான், ஜாதகரை காப்பாற்ற எவராலும் இயலாது என்று முடிவு  செய்து கொள்ளலாம்.

 திருமண பொருத்தம் காணும் பொழுது அடிப்படையில் வது வரனின் ஜாதகத்தில் இந்த ஒரு விஷயத்தை ஜோதிடரால் குறிப்பிட்ட ஜாதகருக்கு தெளிவுற அறிவுறுத்த இயலவில்லை எனில் ஜாதகரின் வாழ்க்கையே படுகுழியில் தள்ளிய பெருமை சம்பந்தபட்ட ஜோதிடரையே சாரும் அன்பர்களே !

ஜோதிடர்கள் பலர் எவ்வளவு அறிவுறுத்தியும் ஜாதகர் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் தனது எண்ணம் போல் காதல் திருமணம் புரிந்து, இடியாப்ப சிக்கலில் மாட்டிகொண்டு இன்னலுறும் ஒரு அன்பரின் வாழ்க்கை துணையின் ஜாதகம் இது, திருமணதிற்கு பிறகு வாழ்க்கை துணை வழியில் இருந்து குறுகிய காலத்தில் அனுபவித்த இன்னல்களும், வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை நிலையையும் இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி1ம் பாதம் 

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,8ம் வீடுகள் உயிர் உடல் ஆனா லக்கினத்துடன் தொடர்பு.
2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு.

3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு.
6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு.

அடிப்படையில் ஜாதகிக்கு களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும், 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ( குடும்பம் ) ரிஷபத்தில் அமைவதும் ஜாதகிக்கு களத்திர பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை வாரி வழங்கும் அமைப்பாகும், ஜாதகியை திருமணம் செய்த முதல் மாதத்தில் இருந்தே ஜாதகர் வருமானம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை பெரிய அளவில் ஸ்திரமாக சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, குடும்பம் நடத்த ஜாதகர் பெரிய அளவில் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

 மேலும் 3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகி 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அற்ற நிலையையும், 5ம் பாவக வழியில் இருந்து திருமணம் நடந்து 3வருடங்களுக்கு மேல் ஆகியும் புத்திர பாக்கியத்தில் 
தடைகளையும், தெளிவான சிந்தனை மற்றும் புத்திசாலிதனத்தில் 
போதிய பக்குவம் இன்மையையும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லாமல் வீண் சந்தேகங்களையும்,
பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமல் கருத்து வேறுபாடுகளுடன் சச்சரவையும், 9ம் பாவக வழியில் இருந்து பெரியோருக்கு கட்டுப்படாமல் தனது எண்ணம்போல் செயலாற்றும் தன்மையையும், தனக்கே அனைத்து தெரியும் என்ற அகம்பாவத்தையும் தந்தது, 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இல்லாத வாழ்க்கையும், பிற்போக்கு தனமான மூட நம்பிக்கைகளில் பற்று கொண்டு தனது இல்லற வாழ்க்கையை தானே கெடுத்துகொள்ளும் நிலையை தந்தது.

 தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிர திசை 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பதம்பார்த்து கொண்டிருப்பதும், ஜாதகியின் கணவர் ரத்தகண்ணீர் வடிக்காத குறையாக போராடிகொண்டிருக்கும் சூழ்நிலையை தந்து இருப்பதும் கவனிக்கத்தக்கது.

நல்ல வேலை எதிர்வரும் சூரியன் திசையும், அடுத்து வரும் சந்திரன் திசையும் முறையே 8ம் வீடு லக்கினத்துடன் தொடர்பு பெற்று நன்மையையும், 2,4ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று நன்மையையும் செய்வது ஜாதகிக்கு நல்லது, மேற்கண்ட ஜாதகிக்கு கடந்த 20 வருடங்களாக சுக்கிர திசை நடைபெற்ற போதிலும், சுக்கிரன் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியதால் 3,9ம் பாவக வழியில் இருந்து பாதகமான பலன்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது, அதிக அளவில் இன்னல்களையே ஜாதகி சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, திருமணதிற்கு பிறகும் தனது கணவனுக்கு யோகம் அற்ற நிலையையே தருவது கவலைக்கு உரிய விஷயமே.

6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மன நிம்மதியில்லாத வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையில் அதிக மன போராட்டங்களையும், மன உளைச்சல்களையும் வாரி வழங்குவது கவனிக்க தக்கது, 6ம் பாவக வழியில் இருந்து வீண் மன கவலைகளை மனதில் கொண்டு தனது உடல் நிலையை பாதிக்கும் விதமான செய்கைகளை ஜாதகி முட்டாள் தனமாக செய்ய வைத்தது, இதனால் ஜாதகி வயிறு சார்ந்த அதிக தொந்தரவுகளையும், இன்னல்களையும் அனுபவிக்க நேர்ந்தது. 10ம் பாவக வழியில் இருந்து தொழில் மற்றும் வேலை இல்லா தன்மையையும், கௌரவ குறைவான செயல்களில் ஈடுபட்டு வீண் மனகவலைக்கு ஆளாகும் துர்பாக்கிய நிலையை ஜாதகியே ஏற்ப்படுத்திகொண்டார். 12ம் பாவக வழியில் ஜாதகி வீண் கற்பனைகளுக்கும், மனோரீதியான பிரச்சனைகளுக்கும் இடம்கொடுத்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் தவிக்கும் நிலைக்கு ஆளானார்.

சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெறுவது தனது கணவர் வழியில் இருந்து தேவையான அளவிற்கு பொருளாதார உதவிகளை பெறுவதற்கு உண்டான வாய்ப்பை மட்டும் ஜாதகிக்கு தங்கு தடையின்றி வழங்குவது வரவேற்க தக்கது என்றாலும், தனது கணவர் அதற்காக படும் சிரமங்களை ஜாதகி சிறிதும் சிந்தித்து பார்க்காமல் தனது மனம்போல் வீண் விரையம் செய்வது வருந்ததக்கது.

மேற்கண்ட ஜாதகியை திருமண செய்து கொண்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் 1,5,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றது, ஜாதகரே தனது இல்லற வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள காரணமாக அமைந்தது, 1ம் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர் தனது உடல் மற்றும் மனதை தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார், மேலும் 5ம் பாவகம் பாதிக்க பட்டதால் சுய சிந்தனையும் அற்று பெரியோர்களின் ஆலோசனையும் கேட்கவில்லை, 7ம் பாவகம் பாதிக்க பட்டதால் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது, பொருத்தம் இல்லாத பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தது, 9ம் பாவகம் பாதிக்க பட்டதால் பெரியோர் ஆதரவும், இறை அருளின் கருணையும் இன்றி இல்லற வாழ்க்கையில் தனித்து போராட வேண்டிய சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொண்டார், தம்பதியர் இருவருக்கும் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால், குடும்ப வாழ்க்கையில் பிரிவு இல்லாமல், இல்லற வாழ்க்கையை பல சிரமங்களுடன் நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுவிட்டது.

மேற்கண்ட இன்னல்களுக்கு சுய ஜாதக ரீதியான பாவக வலிமையை உணராமல், நட்சத்திர பொருத்தம் 10ற்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருமணம் செய்துகொண்டதும், நடைமுறையில் இருவருக்கும் நடைபெறும் திசை புத்திகள் எவ்வித பலனை தருகிறது என்பதை ஆய்வு செய்யாமலும் திருமணம் செய்தது காரணமாக அமைந்துவிட்டது, எனவே திருமணம் செய்யும் முன் இருவரது சுய ஜாதகங்களிலும் உள்ள பாவக நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை புத்தி, எதிர் வரும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவக பலனை கருத்தில் கொண்டும் திருமண பொருத்தம் காண்பதே சாலசிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக