Wednesday, August 26, 2015

தாமத திருமணம் அல்லது திருமண வாழ்க்கையில் தடை ஏன் ?


" இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே " என்ற பாடல்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது அன்பர்களே ! 

மேலும் தம்மிடம் உள்ளது முயலா? ஆமையா ? என்பதும் தெரியாமல் ஆமையை பிடித்துகொண்டு முயலை போல் ஓடவேண்டும் என்று கட்டளையிட்டால் எப்படி சாத்தியமாகும், பொதுவாக ஆணாக இருந்தால் திருமணம் செய்ய உகந்த வயது 25, அதுவே பெண்ணாக இருப்பின் திருமணம் செய்ய உகந்த வயது 21, இது இயற்கையாக உள்ள நடைமுறை, இதற்க்கு மாறாக திருமண வயதை தள்ளிபோடுவது என்பது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சரியான விஷயமாக படவில்லை, அது ஜோதிட ரீதியாக இருந்தாலும் சரி, மருத்துவ ரீதியாக இருந்தாலும் சரி.

 திருமணத்தை தள்ளிபோடுவதர்க்கு இன்றைய இளம் தலைமுறையினர் சொல்லும் காரணம் பொருளாதார தன்னிறைவு, பொருளாதார தன்னிறைவை அடைந்த பிறகே திருமணம் என்ற வாதம் இன்றைய இளம் தலைமுறையினரை, சரியான முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்லும் என்று நிச்சயம் சொல்ல இயலாது, காரணம் ஒவ்வொரு வயதுகளிலும் பொருளாதார தேவைகள்  நிச்சயம் இருந்துகொண்டே இருக்கும், இந்த பொருளாதார தேவைகளை முடிவுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று, அதுவும் திருமணம் ஆகாமல் தனியாளாக சமாளிப்பது என்பது நிச்சயம் இயலாது, காரணம் திருமணதிற்கு பிறகே ஒருவரின் சுய ஜாதகத்தில் களத்திர பாவக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது,.
 
அதன்பிறகே ஜாதகருக்கோ அல்லது ஜாதகிக்கோ சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும், சமூக அந்தஸ்தும் உண்டாகிறது, வெளிவட்டடார பழக்கவழக்கங்களும், 7ம் பாவக வழியில் இருந்து பெரிய மனிதர்களின் ஆதரவும் ஜாதகருக்கு முழு வீச்சில் செயல்பட துவங்குகிறது, ஜாதகர் ஒருவேளை களத்திர பாவக பலனை நடைமுறைக்கு கொண்டு வராமல் இருப்பின் 7ம் பாவக வழியில் இருந்து வரும் எவ்வித யோக பலனையும் அனுபவிக்க தகுதியற்றவராக மாறிவிடுகிறார், இதை கருத்தில் கொண்டே சரியான வயதில் திருமணத்தை நடத்தி வைத்து சம்பந்தபட்ட தம்பதியருக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும்  நமது பெரியோர்கள் கொடுத்தார்கள், இதன் அடிப்படையிலேயே தம்பதியரின் நல்வழ்க்கையும் சிறப்படைந்தது.

திருமணம் எனும் விஷயம் என்று பெரியவர்களின் கைகளை விட்டு, இளைய தலைமுறையினரின் கைகளுக்கு சென்றதோ, அன்றே நமது இளைய தலைமுறையினரின் வாழ்க்கை வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகியது எனலாம், கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம்  
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

ஜாதகிக்கு வயது 40, தனது 21 ஒரு வயதில் இருந்து ஜாதகிக்கு வரன் பார்க்கின்றனர், இன்னும் வரன் அமைந்தபாடில்லை, ஜாதகி ஓரளவு படித்தவர் மேலும் தனது வருமானத்தில் சுயமாக வாழும் தன்மையை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது, மேலும் ஜாதகிக்கு தனது மனதில் தனது கணவனை பற்றிய கற்பனையில் வரன் தேடியதால், தனது கற்பனைக்கு நிகரான ஒரு வாழ்க்கை துணையை ஜாதகி இதுவரை சந்திக்கவில்லை, மேலும் தனது பேச்சுக்கு குடும்பத்தில் யாரும் எதிர்த்து பேசாததால், ஜாதகியின் போக்கே திருமண தாமதத்திற்கு காரணமாக அமைந்தது, தனக்கு வரும் நல்ல வரன்களை கூட ஜாதகி தட்டி கழிப்பது  இன்னும் நடைமுறையில் உள்ளது , ஜாதகி செய்யாத பரிகாரங்கள் இல்லை எனலாம், இனி ஜாதகியின் சுய ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற அமைப்புகள் :

1ம் வீடு முதல் பாவகமான லக்கினத்துடன் தொடர்பு பெற்றதும்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும் மிகவும் வலிமையான அமைப்பு.

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் வலிமை அற்ற அமைப்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும்,
3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும்,
5,11ம் வீடுகள் சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதும், மிகவும் வலிமை அற்ற அமைப்பு.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் எனும் 2பாவகங்களும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் திருமண வாழ்க்கையை வெகுவாக பாதிப்பிற்கு ஆளாக்கியது, ஜாதகியின் 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைந்து தனது முன்னோர்கள் செய்த வினை பதிவின் தன்மையை ஜாதகி குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து அனுபவிக்கும் சூழ்நிலையை தந்தது, தந்துகொண்டு இருக்கிறது எனவே ஜாதகிக்கு வயது 40 ஆகியும் திருமணம் நடைபெறாமல் இன்னும் முதிர்கன்னியாகவே வாழும் சூழ்நிலையை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகியும் தனது ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை உணராமல், தனக்காக ஒரு ராஜகுமாரன் வருவான் என்ற கற்பனையில், கோட்டை கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறார், தனது பேச்சுக்கு எவரும் எதிர்த்து பேசாத சூழல் உள்ளதால் ( பெற்றோருக்கு வயதாகிவிட்டதால் ) தான் வைத்ததே சட்டம் என்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

சுய ஜாதகத்தில் 1,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகமும் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பது, ஜாதகியின் விதிபயனை சரியாக அனுபவித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்கிறது, லக்கினம் வலுபெருவது உடல் மற்றும் மன நலனில் நன்மையையும், ஜீவன ஸ்தானம் வலுபெருவது நல்ல வேலையும் அதன் வழியில் இருந்து வரும் வருமானத்தையும் உறுதி செய்கிறது.

2ம் பாவகம் பாதிப்பது 40 வருடங்கள் ஆகியும் குடும்ப வாழ்க்கை அமையாமல் சிரமத்தையும், வரும் வருமானம் அனைத்தையும் வீண் விரையத்தையும் தருகிறது, ஜாதகியின் பேச்சும் மற்றவர்கள் ரசிக்கும்படி இனிமையாக இல்லாதது கவனிக்கதக்கது, 4ம் பாவகம் பாதிப்பது சுக போக வாழ்க்கை இல்லாமல், தடுமாறும் சூழ்நிலையும், ஜாதகியின் பெயரில் எவ்வித சொத்து வண்டி வாகனம் இல்லாத நிலையை தருகிறது,7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் இல்லை, சரியான வாழ்க்கை துணை அமையவில்லை, 8ம் பாவக வழியில் இருந்து பூர்ண ஆயுள் உள்ள போதும், வீண் இழப்புகளை தவிர்க்க இயலவில்லை, வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் வருமான வாய்ப்பையும் தவிர்க்க வைக்கிறது.

3ம் பாவாகம் பாதிப்பது சகோதர ஆதரவு இல்லை, எடுக்கும் செயல்களிலும், முயற்ச்சிகளிலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் தன்மையை தருகிறது, 6ம் பாவகம் பாதிப்பது ஜாதகிக்கு நிறைய எதிர்ப்புகளும், எதிரிகளும் மிக அதிக அளவில் உள்ளது ஜாதகியின் திருமண வாழ்க்கையை தாமத படுத்த ஒரு காரணமாக அமைகிறது, 9ம் பாவகம் பாதிப்பது பெரியமனிதர்களின் உதவி இல்லாமல் அவர்களின் வெறுப்பிற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது, 12ம் பாவகம் பாதிப்பது ஜாதகியை வீண் கற்பனையில் கனவு கோட்டை கட்டி வாழும் சூழ்நிலையை தந்தது.

5ம் பாவகம் பாதிப்பது, சொல்புத்தியும் இல்லாமல் சுய அறிவும் இல்லாமல், தான்தோன்றி தனமாக நடக்கும் நிலையை தந்துகொண்டு இருக்கிறது, 11ம் பாவகம் பாதிப்பது ஜாதகிக்கு எவ்வித அதிர்ஷ்டமும் இல்லாமல், 400 வரன்கள் வந்த போதிலும் தனக்கு பொருத்தம் இல்லை என வரன்கள் அனைவரையும் தவிர்க்க வைத்து, சரியான வயதில் நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் நடைபெறாமல் துரதிர்ஷ்ட வாழ்க்கையும், மூட பழக்க வழக்கங்களில் திளைத்து தனது வாழ்க்கையை தானே பாழ்படுத்திகொள்ளும் சூழ்நிலையை தந்துள்ளது.

சுய ஜாதகத்தில் ஜாதகிக்கு 12 பாவகங்களில் 10 பாவகங்கள் வலிமை அற்று காணப்பட்டாலும், இதற்க்கு முன் நடந்த சந்திரன் திசை 24/08/2012 வரை நல்ல நல்ல வாய்ப்புகளையும், வரன்களையும் வழங்கிய போதும் ஜாதகியின் கற்ப்பனை ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதித்தது, குறிப்பாக திருமணம் எனும் ஒரு விஷயம் இதுவரையிலும் தடையாகவே அமைந்துவிட்டது, ஜாதகிக்கு பிறகு இரண்டு சகோதரிகள் உண்டு அவர்களுக்கும் திருமணம் இன்னும் நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்க ஒரு விஷயமாகவே படுகிறது, தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் கற்பனை வாழ்க்கைக்கு இன்னும் சற்று அதிகமாகவே தூபம் போடும் என்பது மட்டும் மறுக்க இயலாத உண்மை.

குறிப்பு :

ஜாதகி இனிவரும் காலங்களிலாவது, தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமையுள்ள சாதகமாக தேர்ந்தெடுத்து இல்லறவாழ்க்கையில் இணைய, இறையருள் கருணை செய்யட்டும் என ஜோதிடதீபம் வேண்டுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 comments:

 1. ஐயா,
  என் பெயர் ஜெயந்தி பிறந்த நாள் 11-6-1982, நேரம்: 3.45 AM, இடம் : சிவகங்கை. எனது திருமணம் 2009 இல் நடந்தது. எனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை. விவாகரத்து வழக்கு. என் ஜாதகத்தை பார்த்து என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஜெயந்தி அவர்களே ,உங்களுடைய ஜாதக்த்தில் ராசி கட்டத்தில் 8 ஆம் அத்பதி செவ்வாய் 6 இல் மறைகிறார்.அதுமட்டும் இல்லாமல் பாபி சனியுடன் சேர்ந்து இருக்கார் மேலும் திருமண்த்திற்கு காரகன் சுக்கிரன் எதிரி உச்சவீட்டில் (சூரியனுக்கு மேசம் உச்ச வீடு) மேலும் உங்கள் திருமணம் ராகு தசையில் கேது புத்தியில் நடந்தது போல் இருக்கு எனவே திருமண வாழ்க்கை சற்று கசப்பாக இருந்ததில் வ்யப்பு ஏதும் இல்லை!!!!

   Delete