புதன், 16 மார்ச், 2016

பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்காத ?


 பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்காத ?

தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் பாதிக்க பட்டால், குழந்தை பாக்கியத்தில் தடை செய்யும், தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டால், தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது, பொதுவாக சுய ஜாதகத்தில் தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் மட்டுமே புத்திர பாக்கியத்தில் குறைகளை தரும், மாறாக ஒருவரது ஜாதகத்தில் புத்திர பாக்கியம் நல்ல நிலையில் வலிமை பெற்று இருந்து, ஒருவரது ஜாதகத்தில் பாதிக்க பட்டு இருப்பின் புத்திர பாக்கியம் அமையும், மேலும் சாய கிரகங்களான ராகுகேது  5ம் பாவகத்தில் அமர்வது புத்திர பாக்கியத்தை தாராது என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பானதே, 5ல் அமர்ந்த சாயா கிரகங்கள் ஜாதகருக்கு தொடர்ந்து ஆண் வாரிசாகவே வழங்குவதும் உண்டு, 5ல் அமர்ந்த சாய கிரகங்கள் 5ம் பாவகத்தை வலிமை பெற செய்யுமாயின், மேற்கண்ட பலன்கள் ஜாதகருக்கு நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும் நிலை :

சுய ஜாதகத்தில் 5ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது 200% விகித பாதிப்பை, புத்திர பாக்கிய அமைப்பில் இருந்து தரும், சர லக்கினத்திற்கு 11ம் பாவகத்துடனும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகத்துடனும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெரும் 5ம் வீடு ஜாதகருக்கு நிச்சயம் புத்திர பாக்கிய தடைகளை தரும், குழந்தையே அற்ற நிலை, கருசிதைவு, புத்திரசோகம், சிறப்பு குழந்தைகள் என ஜாதகருக்கு புத்திர பாவக வழியில் இருந்து  வெகுவான பாதிப்புகளை வழங்கும்.

5ம் பாவகம் பாதிக்க படும் நிலை :

ஜாதகருக்கு 5ம் வீடு 4,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு புத்திர பாக்கியத்தில் 60% விகத தடைகளை தரும், தாமத புத்திர பாக்கியம், பெண் குழந்தை மட்டும் வாரிசாக அமையும் தன்மை, மருத்துவ உதவியுடன்  செயற்கை முறையில் குழந்தை பாக்கியம் பெரும் தன்மை, தனது குழந்தைகள் வழியில் இருந்து மன கவலைகளையும், மன உளைச்சல்களையும் எதிர்கொள்ளும் தன்மை என ஜாதகருக்கு புத்திர பாக்கிய அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், 

மேற்கண்ட 5ம் பாவக பாதிப்புகள் தம்பதியர் இருவரின்  ஜாதகத்திலும் அமைந்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும், ஒருவருக்கு மட்டும் இருப்பின் மேற்கண்ட பாதிப்புகளில் 10% விகிதம் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

5ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்ட ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மேலும் அந்த ஜாதகர் 5ம் பாவக பாதிப்பில் இருந்து வெளிவரும் வழிமுறையையும் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்!


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சிகம் 
நட்சத்திரம் : கேட்டை 1ம் பாதம் 

ஜாதகருக்கு மிதுன லக்கினம், குழந்தை பாக்கியத்தை வழங்கும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகருக்கு இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை, ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு சில முறை கரு சிதைவும் ஏற்ப்பட்டுள்ளது, மேலும் ஜாதகரின் 5ம் வீடு தொடர்பு பெரும் பாதக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக வருவது, ஜாதகரின் முன்னோர்கள் செய்த வினை பதிவின் தாக்கத்தை காட்டுகிறது, மேலும் ஜாதகரின் 9ம் வீடும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, பித்ரு சாபத்தின் தன்மையை தெளிவாக்குகிறது, எனவே ஜாதகருக்கு குல தெய்வம் பிதுர்க்கள் ஆசியும் அற்று, சாபம் என்ற நிலையை அதிகரிக்கின்றது, எனவே ஜாதகருக்கு புத்திர பாக்கிய குறைகளையும், புத்திர சோகத்தையும் வாரி வழங்குகிறது.

ஜாதகரின் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 5ம் பாவகம் பாதிக்க படுவது, ஜாதகருக்கு நல்ல வாரிசு அமைவதை கேள்விகுரியாக்குகின்றது, ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்து இன்னல்கள் அனுபவிப்பதை தவிர்க்க  இயலவில்லை, தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோகங்களை தந்த போதிலும், நடைபெற்ற செவ்வாய் புத்தி 8ம் பாவக பலனை வழங்கி திடீர் இழப்புகளை வழங்கியது, தற்பொழுது நடைபெறும் ராகு புத்தி ஜாதகருக்கு 2ம் பாவக பலனை தருவது நன்மைகளை தரும் என்று ஜாதகர் மகிழ்ச்சி அடையலாம்.

ஜாதகர் உடனடியாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1) ஜாதகர் தான் குடியிருக்கும் பூர்வீக இடத்தை விட்டு வேறு இடத்தில் குடி பெயர்வது 5ம் பாவக இன்னல்களை தவிர்க்க வழிவகுக்கும், நல்ல புத்திர பாக்கியம் அமைய வாய்ப்பை அதிகரிக்கும், குறைவில்லா புத்திர பாக்கியத்தை வழங்கும்.

2) ஜாதகர் தனது குல தெய்வ வழிபாட்டினையும், பித்ரு வழிபாட்டினையும், எதிர் வரும் அமாவசை திதியில் அண்ணதானம் செய்து  வழிபடுவது சகல நலன்களையும் தரும்.

3) தமக்கு உகந்த திசை வாயிற்படி கொண்ட வீட்டில் குடியிருப்பது, புத்திர பாக்கியம், குடும்பம், ஜீவனம் என சகல அமைப்பில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு 5ம் பாவகம் கடுமையாக பாதிக்க படும்பொழுது, தனது பூர்வீகத்தில் இருந்து வெளியே சென்று ஜீவனம் மேற்கொள்வதே சால சிறந்தது, ஏனெனில் பூர்வீகத்தில் ஜாதகர் இருக்கும் வரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது, சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்பது கவனிக்க தக்க அமசமாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக