சனி, 19 மார்ச், 2016

திருமண தடை மற்றும் தாமத திருமணம் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

 ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதை அந்த ஜாதகரின் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானமே நிர்ணயம் செய்கிறது, சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் என்று அழைக்கப்படும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7ம் வீடும் வலிமை பெறுவது எந்த ஒரு ஜாதகருக்கும் சரியான கால நேரத்தில், திருமண வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வைத்துவிடும், மாறாக 2,7ம் வீடுகள் பாதிக்க படும் பொழுது, ஜாதகரின் திருமண முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும், கால தாமத திருமணமும், திருமண தடைகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், 2,7ம் வீடுகள் பாதிப்பது திருமண வயதில் உள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் சிறப்பான வாழ்க்கையை அமைத்து தருவதில்லை, இவர்கள் எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்தும் மிகப்பெரிய தோல்விகளையே சந்திக்கிறது என்பது கண்கூடான உண்மை, திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஸ்வினி 2ம் பாதம் 

ஜாதகருக்கு வயது 40 மேல் ஆகிவிட்டது, பெண் பார்க்கும் படலத்தை தொடர்ந்து  செய்துகொண்டு உள்ளார், இருப்பினும் ஜாதகருக்கு உகந்த வாழ்க்கை துணை கிடைக்க வில்லை, மேலும் திருமனத்திர்க்காக ஜாதகர் எடுக்கும் ஒவ்வொரு முயர்ச்சியும் ஜாதகருக்கு தொடர்ந்து தோல்வி மேல் தோல்விகளையே வாரி வழங்கி கொண்டு இருப்பது ஜாதகருக்கும் ஜாதகரின் குடும்பத்தாருக்கும் பெரிய மன கலக்கத்தையும், வெளியில் சொல்ல இயலாத துன்பத்தையும் தந்து கொண்டு இருக்கிறது, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாதகர் பெண் தேடினாலும் இன்னும் கிடைத்தபாடில்லை, திருமண தாமதத்திற்கு ஜாதக ரீதியான காரணங்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே!

ஜாதகருக்கு மீன லக்கினம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம், பொதுவாக சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் வலிமை பெற்றால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான வயதில் நல்ல முறையில் திருமணம் நடைபெற்று விடும், இந்த ஜாதகருக்கு அடிப்படையிலேயே 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 7ம் வீடு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும், 2,7ம் வீடுகள்  கடுமையாக பாதிக்க பட்டு இருப்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, களத்திர ஸ்தானமாக அமைந்து ஆயுள் பாவகம் 100% விகிதம் பாதிக்க படுவது ஜாதகரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

சுய ஜாதகத்தில் லக்கினம் விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் யாவும், ஜாதகர் மூலமாகவே விரையம் ஆவதை உறுதிபடுத்துகிறது, ஜாதகரின் கற்பனையும் எண்ணத்தின் விளைவும் தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளையும் வீண் விரையம் செய்வதை தெளிவாக காட்டுகிறது, லக்கினம் விரைய ஸ்தானமான  12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு எதிலும் திருப்தி இல்லாத மன நிலையை காட்டுகிறது, தமக்கு வரும் வாழ்க்கை துணை பற்றி ஜாதகரே ஒரு கற்பனையில் நீந்திக்கொண்டு, தமக்கு வரும் நல்ல, நல்ல பெண் ஜாதகங்களை தவிர்த்தது, திருமணம் நடைபெறாமல் ஜாதகரை 40 வயதுக்கு மேல் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது, திருமண வாழ்க்கை என்பது சரியான வயதில் நடைபெற்றால் மட்டுமே இல்லறம் சிறக்கும் என்ற விஷயம் ஜாதகருக்கு இதுவரை புரியாதது, ஜாதகரின் இலக்கினம் பாதிக்கும் தன்மையில் இருந்து "ஜோதிடதீபம்" தெளிவாக உணர்ந்து கொண்டது.

ஜாதகருக்கு 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது ஒருபக்கம் இருப்பினும், 02/02/2006 முதல் 02/02/2016 வரை நடைபெற்ற சந்திரன் திசை 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, சந்திரன் திசை முழுவதும் 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியது, ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கை அமையாமலும், வருமான ரீதியான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததிர்க்கு ஒப்பான பலன்களை தந்தது, சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிப்பதே திருமண வாழ்க்கையில் தடைகளை தரும், நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் படும் அவஸ்தையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு எவ்வித பலன்களை வழங்குகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பர்களே! தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 8ம் பாவக பலனையே செவ்வாய் திசையும் ஏற்று நடத்துவது, ஜாதகருக்கு வந்த சோதனை காலம் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை, எனவே செவ்வாய் திசையில் செவ்வாய் புத்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது, ஆனால் செவ்வாய் திசையில், ராகு புத்தியும், குரு புத்தியும் சற்று நிறைவான நன்மையை செய்வதால் 30/06/2016க்கு மேல் தமக்கு வரும் வதுவின் ஜாதகத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் செய்துகொள்வது சால சிறந்தது, இல்லை எனில் ஜாதகரின் கதி அதோ கதிதான்.

திருமண தடையும், திருமணம் தாமதம் ஆக காரணம் சம்பந்த பட்ட ஜாதகரின் 2,7ம் வீடுகளின் வலிமையின் தன்மையே என்றால் அது மிகையில்லை, மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிக்க பட்டு இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவகத்தின் திசா அல்லது புத்திகள்  நடைபெறும் பொழுது திருமணத்திற்கு உண்டான முழு முயற்ச்சியில் இறங்கி நல்ல இல்லற வாழ்க்கையை தேடிகொள்வது 100% விகித நன்மைகளை  நிச்சயம் தரும், எனவே திருமணம் ஆகாமல் தாமதம், மற்றும் தடைகளை சந்தித்து வரும் அன்பர்கள், தமக்கு உகந்த நேரத்தை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் இணைத்துகொள்வது வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக