வியாழன், 17 மார்ச், 2016

தொழில் ஸ்தான வலிமையையும், ஜாதகருக்கு பொருத்தமான தொழில் தேர்வும் !


சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, ஜாதகருக்கு கல்வி காலத்திற்கு பிறகு சரியான வயதில், ஜாதகருக்கு உகந்த பொருத்தமான தொழில் அமைந்துவிடும், மேலும் ஜாதகருக்கு நடைபெறும் திசா புத்திகள் சாதகமாக அமைந்தால் ஜாதகரின் ஜீவன மேன்மை என்பது எவ்வித குறையும் இன்றி சிறப்பாக அமையும், கௌரவம் குறையாமல் "உத்தியோகம் புருஷ லட்சணம்" எனும் முதுமொழிக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது உகந்த தொழிலோ நிச்சயம் அமைந்து விடும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்க படுவதும், நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகம் இன்றி இருப்பது, ஜீவன ரீதியான தேடுதல்களையும், தொழில் ரீதியான இன்னல்களையும் வாரி வழங்கி விடும், மேலும் ஜாதகரின் தொழில் மற்றும் வேலை சார்ந்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியை தழுவும், தமக்கு உகந்த தொழில் மற்றும் வேலையை எப்படி தேர்வு செய்வது என்பதை இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

கால புருஷ ராசி அமைப்பிற்கு 3 இயக்கங்கள் உண்டு, 

1) சர இயக்கம் ( மேஷம்,கடகம்,துலாம்,மகரம் ) 
2) ஸ்திர இயக்கம் ( ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், கும்பம் ) 
3) உபய இயக்கம் ( மிதுனம்,கன்னி,தனுசு,மீனம்)

இதில் சர இயக்கம் உற்பத்தி பணியையும் ,
ஸ்திர இயக்கம் விற்ப்பனை பணியையும்,
உபய இயக்கம் சேவை  பணியையும் குறிப்பதாக வைத்துகொள்வோம்,

கால புருஷ ராசி அமைப்பிற்கு 4 தத்துவங்கள் உண்டு,

1) நெருப்பு தத்துவம் ( மேஷம்,சிம்மம்,தனசு )
2) நில தத்துவம் ( ரிஷபம்,கன்னி,மகரம் )
3) காற்று தத்துவம் ( மிதுனம்,துலாம்,கும்பம் )
4) நீர் தத்துவம் ( கடகம்,விருச்சிகம்,மீனம் )

எந்த ஒரு ஜாதகருக்கும் மேற்கண்ட இயக்கம் மற்றும் தத்துவ  அமைப்பில்தான் நிச்சயம் ஜீவன ஸ்தானம் அமையும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மேற்கண்ட இயக்கம் மற்றும் தத்துவ அமைப்பில் இருந்து இயற்கையாகவே ஜீவன தொடர்புகளை ஏற்ப்படுத்தி ஜாதகருக்கு சிறந்த வேலையையோ, சிறந்த தொழில் வாய்ப்புகளையோ அமைத்து தந்துவிடும், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு சாதகமாக இருப்பின் தன்னிறைவான வசதி வாய்ப்புகளை வாரி வழங்கி விடும், நடைபெறும் திசா புத்திகள் சாதகமற்ற நிலையில் இருப்பின், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவில் இருக்காது, இருப்பினும் ஜாதகருக்கு நல்ல ஜீவனத்தை வழங்கி கொண்டு இருக்கும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சரியான தொழில் மற்றும் வேலையை வழங்கினால், நடைபெறும் திசாபுத்திகள் சிறப்பாக அமைவது ஜாதகருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் தன்னிறைவான முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் நெருப்பு தத்துவ ராசி ஜீவன ஸ்தானமாக அமைந்து வலிமை பெறுவது, ஜாதகரை தொழில் நுட்பம் சார்ந்த நிர்வாக துறைகளில் பிரகாசிக்க செய்யும், உதாரணம் : கணினி,தகவல் தொடர்பு

ஒருவரது சுய ஜாதகத்தில் நில தத்துவ ராசிகள் ஜீவன ஸ்தானமாக அமைந்து வலிமை பெறுவது மண் தத்துவ பொருட்கள் சார்ந்த நிர்வாக துறைகளில் பிரகாசிக்க செய்யும், உதாரணம் : கட்டுமானம், உலோக தாயரிப்பு 

ஒருவரது சுய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசிகள் ஜீவன ஸ்தானமாக அமைந்து வலிமை பெறுவது அறிவு திறன் சார்ந்த நிர்வாக துறைகளில் பிரகாசிக்க செய்யும், உதாரணம் : தரகு,யூகவணிகம்,ஆலோசனை

ஒருவரது சுய ஜாதகத்தில் நீர் தத்துவ ராசிகள் ஜீவன ஸ்தானமாக அமைந்து வலிமை பெறுவது மனம் சார்ந்த நிர்வாக துறைகளில் பிரகாசிக்க செய்யும், உதாரணம் : விவசாயம்,கல்வி,போதனை 

மேற்கண்ட விஷயங்களுடன் சர,ஸ்திர,உபய இயக்கங்களுடன் ஜீவன பாவகம் தொடர்பு பெரும் அமைப்பிற்கு உகந்தவாறு ஜாதகருக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பில் சரியான முன்னேற்றங்களையும், யோகங்களையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியமாகிறது, நடைபெறும் திசாபுத்திகள் யோக பலன்களை தருவது ஜாதகரின் தொழில் வெற்றியை நிர்ணயம் செய்கிறது.

தொழில் நிர்ணயம் :

ஒரு மகர இலக்கின அன்பருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவதாக இருப்பின், ஜாதகர் தனது அறிவு திறன் கொண்டு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் மிகப்பெரிய முன்னேற்றங்களை அடைவார், நடைபெறும் திசா புத்திகளும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பலனை தருமாயின், ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது மிக குறுகிய காலத்தில் அமையும்,  வியாபர விருத்தி பன்மடங்கு பெருகும், உலகம் முழுவதிலும் ஜாதகர் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமைக்கு ஏற்ப சரியான தொழில் செய்யும் பொழுது, நேர விரையம் குறைக்கப்பட்டு, செய்யும் தொழிலில் தன்னிறைவான முன்னேற்றமும், பொருளாதார வசதி வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி பெற இயலும், சுய ஜாதகத்திற்கு பெருத்தம் இல்லாத தொழில் செய்வது ஜாதகரின் முன்னேற்றத்தையும், நேரத்தையும் காவு வாங்கும் என்பது மட்டும் உண்மை, கிராமங்களில் நமது பெரியோர்கள் சொல்லும் " பாடும் பட்டாப்பல வீடும் கெட்டப்பல " என்ற முது மொழிக்கு உதாரணமான வாழ்க்கையை அமைத்து தந்துவிடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக