செவ்வாய், 22 மார்ச், 2016

கால சர்ப்ப யோகமா அல்லது கால சர்ப்ப தோஷமா? காலத்துக்கும் சர்ப்ப தோஷமா ?


நடிகர் திலகம் சிவாஜி நடித்த "கௌரவம்" திரைப்படத்தில், நகை சுவை மன்னர் நாகேஷுக்கு சிறந்த வசனம் ஒன்று வரும் அதாவது,

" ஒய் நீ 50 வயது வரைக்கும் தான் படாத பாடு படுவாய், 
ஜீவனத்துக்கே கஷ்ட படுவாய் "
"அதற்க்கு பிறகு "
அதுவே "பழகி விடும்" என்பார், 

இந்த நகை சுவைக்கு நிகராக இருக்கின்றது இந்த கால சர்ப்ப தோஷம் பற்றி அன்பர்கள் சொல்லும் கருத்துக்கள், குறிப்பாக ஒரு ஜாதகருக்கு (1,7) (2,8) (5,11) (6,12) ம் வீடுகளில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்து இருப்பின் ஜாதகருக்கு ராகுகேது தோஷ ஜாதகம் என்கின்றனர், மேலும் ராகு கேது கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அடைபடுவது சர்ப்ப தோஷம் என்கின்றனர், மேற்கண்ட கிரக நிலை அமைப்பை பெற்ற ஜாதகருக்கு நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும், சாய கிரகங்களான ராகுகேதுவே காரணம் என்று குற்றம் சாற்றுவது என்பது சகசமான நிலை என்றாகிவிட்டது.

மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, தொழில் விருத்தி இன்மை, பெயருக்கும் புகழுக்கும் வரும் களங்கம், விருப்ப திருமணம், விபத்து, திடீர் இழப்பு, தீயவர் சேர்க்கை, மனஅழுத்தம், தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகும் தன்மை என, வரும் இன்னல் அனைத்திற்கும் கால சர்ப்ப தோஷமும், ராகுகேது தோஷமும் காரணமாக அமைந்து விடுவதாக ஒரு சாரர் கருதுவது உண்டு, இது முற்றிலும் தவறான கருத்தாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

சுய ஜாதகத்தில் ராகுகேது தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வழங்கும் வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் சொல்லப்படும் கருத்தாகவே கருதுகிறது, ராகு கேது சுய ஜாதகத்தில் தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு வலிமையை தரும் அமைப்பில் இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து மிகுந்த நன்மைகளையும் யோகத்தையுமே செய்யும், ராகு கேது சுய ஜாதகத்தில் தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு வலிமை இல்லாத நிலையில் இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையும் அவயோகத்தையும் தரும், மேலும் சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது லக்கினத்தில் ( லக்கினத்தை மட்டும் கருத்தில் கொள்க ) அமர்ந்தால் நிச்சயம் இலக்கின பாவகத்திர்க்கு 100% விகித நன்மைகளையே செய்யும், இது மறுக்க  இயலாத உண்மை, இலக்கின வழியில் இருந்து ஜாதகர் 100 % விகித யோக பலன்களையே அனுபவிப்பர் இதில் எவ்வித சந்தேகமும், மாற்றமும் இல்லை.

ராகுகேது வலிமையை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு காண்போம்!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 1ம் பாதம் 

 ஜாதகருக்கு லக்கினத்தில் ராகு நீச்ச நிலையிலும், 7ம் பாவகத்தில் கேது உச்ச நிலையிலும் அமர்ந்துள்ளது, இந்த நீச்ச உச்ச நிலை என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு உண்டானது, சுய ஜாதகதிர்க்கும் நீச்ச உச்ச நிலைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை, மேலும் சுய ஜாதகத்திற்கு சாய கிரகங்களான ராகு கேது தரும் பலாபலன்கள் பற்றி ஆய்வு செய்வோம், லக்கினத்தில் அமரும் ராகுகேது ஜாதகருக்கு 100% விகத நன்மையை தரும் என்பதற்கு இணங்க ஜாதகர், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், சிறந்த மன நிலையுடன் திகழ்கிறார், ஜாதகருக்கு எவ்வித தீய பழக்க வழக்கங்களும் இல்லை, எதையும் பரந்த மன பக்குவத்துடன் அணுகும் மன வலிமை கொண்டவராகவும், நல்ல குணமும், நல்ல அறிவும் கொண்டவராக காணப்படுவதும், புலனுக்கு அப்பாற்பட்ட அறிவு திறனை பெற்று இருப்பதற்கும் ராகு பகவான் லக்கினத்திற்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகிறது.

மேலும் ஜோதிடம்,கணிதம்,கலைகள்,தான் எடுத்துக்கொண்ட துறையில் நல்ல புலமையை தருவதும் ராகு பகவானின் ஆசிர்வாதமே, ஜாதகரின் தன்னம்பிக்கை, உறுதியான நிலைப்பாடு, கம்பீரமான செயல்பாடுகள்,  தீர்கமான வாத திறமை அனைத்திற்கும் ராகு பகவான் லக்கினத்திற்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகிறது, ஜாதகருக்கு லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாக வருவதும், அதுவே ஜாதகருக்கு லக்கினமாக அமைவதும், ஜாதகருக்கு நல்ல பேச்சு திறனையும், தன்னிறைவான வருமான வாய்ப்புகளையும், நல்ல ஆரோக்கியமான உடல்  நிலையையும், நீண்ட ஆயுளையும் வாரி வழங்குவதற்கு ராகு பகவான் லக்கினத்திற்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகிறது, மேலும் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வருமானத்திற்கு குறைவில்லை என்ற நிலையை தருவதும் லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவானின் ஆசிவாதமே காரணமாக  அமைகிறது.

அடுத்து 7ல் அமர்ந்த கேது பகவான் ஜாதகருக்கு வெளிநாடுகளில் ஜீவனம் செய்யும் வாய்ப்பையும், நிரந்தமாக குடிஉரிமை பெரும் யோகத்தையும் தந்திருப்பது கவனிக்க தக்கது, ஜாதகரின் வாழ்க்கையில் புதையலுக்கு நிகரான வருமானங்களையும், எடுக்கும் காரியங்களில் சுலப வெற்றி வாய்ப்புகளையும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும் வெளிநாடுகளில் இருந்து பெறுவதை 7ல் அமர்ந்த கேது பகவான், களத்திர பாவகத்திர்க்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகிறது, ஜாதகரின் நண்பர்கள்  மற்றும் உறவினர்கள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெறுவதை உக்க படுத்துவது கேது பகவானே, மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜாதகரின் களத்திர பாவகம், ஆயுளை குறிக்கும் 8ம் ராசியாக வருவது, ஜாதகருக்கு  பூர்ண ஆயுளை வாரி வழங்குகிறது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நீடித்த திடீர் அதிர்ஷ்டங்களையும், எதிர்பாராத திடீர்  முன்னேற்றங்களையும் பெறுவதை கேது பகவானின் வலிமையே நிர்ணயம் செய்கின்றது, தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்தும், பொதுமக்கள் வழியில் இருந்தும் ஜாதகர் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவதற்கு முழு காரணமாக கேது பகவான் 7ம் பாவகத்திர்க்கு வழங்கும் வலிமையே காரணமாக அமைகின்றது.

 எனவே மேற்கண்ட ஜாதகருக்கு, லக்கினத்தில் அமர்ந்த ராகு லக்கினத்திற்கு 100% விகித யோக பலன்களையும், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவான் 7ம் பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களையும், வாரி வழங்குவது தெளிவாகிறது. ஆக சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு கேது வலிமை பெற்று அமர்ந்தால், சம்பந்த பட்ட ஜாதகருக்கு 100% விகித யோக பலன்களே நடைபெறும் என்பதே உண்மை, இந்த நிலைக்கே "காலசர்ப்ப யோகம்" என்று சொல்லாம், எனவே சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு எவ்வித பலன்களை வழங்குகின்றனர் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட ஜாதகத்தில் ராகுகேது லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்வதை "சர்ப்ப தோஷம்" என்று நிர்ணயம் செய்வது முற்றிலும் ஜோதிட கணித உண்மைக்கு புறம்பானதாகவே கருத வேண்டியுள்ளது.

குறிப்பு :

 ஒரு ஜாதகருக்கு (1,7) (2,8) (5,11) (6,12) ம் வீடுகளில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்து வலிமை பெற்று இருப்பின், சம்பந்த பட்ட ஜாதகருக்கு, தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களையே நடைமுறை படுத்தும், ஒரு ஜாதகருக்கு (1,7) (2,8) (5,11) (6,12) ம் வீடுகளில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்து வலிமை அற்று இருப்பின், சம்பந்த பட்ட ஜாதகருக்கு, தாம் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100% விகித அவயோக பலன்களையே நடைமுறை படுத்தும், என்னவே சுய ஜாதகத்தில் சாயகிரகங்களின் வலிமை உணர்ந்து பலன்கான முற்படுவதே, துல்லியமான பலாபலன்களை கூற இயலும் அன்பர்களே!

 (1,7) (2,8) (5,11) (6,12) ம் வீடுகளில் சாய கிரகங்களான ராகு கேது அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு 33 வயது திருமணம், தொழில், குடும்பம், வருமானம், ஆரோக்கியம் ஆகியவற்றில் இன்னல்களை தரும், அதற்க்கு காரணமாக ராகு கேது அமையும் என்பதெல்லாம் முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பான கற்பனையே.
  
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. நீங்கள் எடுத்துக்கொண்ட இந்த சாதகத்தில் கேது கொடி பிடித்து செல்ல வில்லையே. ஆதலால் இந்த சாதகத்தில் கால சர்ப்ப தோஷம் கிடையாது அல்லவா. தாங்கள் கேது கொடி பிடித்து செல்லும் ஒரு சாதகத்தை உதாரணமாக எடுத்து விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு