பின்தொடர...

Sunday, January 1, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மிதுனம்!


சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

மிதுனம் லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாம் ராசியான மிதுன ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மிதுன லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், அறிவின் பிறப்பிடமாகவும், வீரத்தின் விளைநிலமாகவும் விளங்கும் மிதுன லக்கின அன்பர்களுக்கு, இதுவரை சத்ரு பாவகத்தில் சஞ்சாரம் செய்த சனி பகவான் தங்களுக்கு சிறப்பான நன்மைகளை கடந்த காலங்களில் வழங்கி இருக்க கூடும், குறிப்பாக எதிர்பாராத வரவு, எதிரிகளை வெல்லும் ஆற்றல், போட்டி பந்தயங்களில் தேர்ச்சி, அனைத்திலும் வெற்றி என்ற நிலையில் நன்மைகளை வழங்கியிருக்க கூடும், தற்போழுது களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு சஞ்சாரம் செய்யும் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தார கூடும், வாழ்க்கை துணை, நண்பர்கள், மற்றும் கூட்டாளிகள் மூலம் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், மற்றவர்களால் தங்களின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும், பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் சற்று எச்சரிக்கை உணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது சகல நலன்களையும் தரும், எதிர்ப்புகள் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், பொதுநலம் சார்ந்து செயல்படும் காரியங்கள் யாவும் தங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் என்பதால் தான் உண்டு தனது  வேலை  உண்டு என்று இருப்பது தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை தரும், பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர் வழியில் இருந்து ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புக்களை தாங்கள் ஏற்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது, பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வழிபடுவதும், அதன்வழியில் சனியின் சஞ்சார பலன்களை குறைத்துக்கொள்வதும் தங்களின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும்.

12ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (ரிஷபம் ராசி மற்றும் சுக்கிரன் ) ஒரே வர்க்கம் என்பதனால் மிதுன லக்கின அன்பர்களுக்கு, முதலீடுகளில் நல்ல லாபம் கிட்டும், புதிய முதலீடுகளை அதிக அளவில் செய்து வெற்றி காணலாம், இருப்பினும் தங்களுக்கு வரும் வருமானம் வீண் விரையம் ஆக அதிக வாய்ப்பு உண்டு, இதனால் மன நிம்மதி வெகுவாக பாதிக்கப்படும், வீண் மனபயமும், பொறுமை இன்மையும் தங்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும், மற்றவர்களை நம்பி செய்யும் எந்த  காரியமும் தங்களுக்கு பெரிய அளவிலான துன்பங்களை தரும், மருத்துவ செலவுகள், வண்டிவாகனம் மூலம் திடீர் செலவுகள், உடல்நலம் பாதிப்பின் மூலம் நிம்மதி குறைவு, குடும்பத்தில் மகிழ்ச்சி இன்மை, தெளிவற்ற சிந்தனை, அனைவராலும் தொல்லைகள் துன்பங்கள் என ஸ்திரமான இன்னல்களை எதிர்கொள்ளும் தன்மையை தரும், எந்த ஒரு காரியத்தை செய்வதென்றாலும் அதிக அக்கறையும், பெரியோர்களின் ஆலோசனை படியும் மேற்கொள்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையிற் சிறப்பிக்க செய்யும், நிதானம் தங்களின் வாழ்க்கையில் சனிபகவானின் திருஷ்ட்டி நிலையில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க  உதவும்.

1ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் (மிதுன ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் மிதுன லக்கின அன்பர்களுக்கு, கை நிறைவான வருமானங்களை வாரி வழங்குவர், லக்கின வழியில் இருந்து உடல் ஆரோக்கியம் மேம்படும், சிந்தனை ஆற்றலும், செயல்திறனும் அதிகரிக்கும், வியாபார விருத்தி தங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை வாரி வழங்கும், கமிஷன், தரகு, பங்கு வர்த்தக தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு இது மிகுந்த யோகங்களை தரும் காலமாகும், சகோதர வழி ஆதரவு அதிக அளவில் கிட்டும், புதிய தொழில் வாய்ப்புகள் தங்களை தேடிவரும், செல்வ சேர்க்கை, புகழ் மிக்க பொறுப்புகள் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை தரும், தெளிவான முடிவுகளால் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் நல்ல லாபம் உண்டாகும், பல வெளிநாடுகளுக்கு சென்றுவரும் யோகமும், அதன் வழியில் ஆதாயமும் தங்களுக்கு  அதிக அளவில் கிட்டும், உடல்,மனம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு பலவித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் வெற்றியை நோக்கி பயணிக்கும் சிறப்பு மிக்க வலிமையை இந்த சனிபகவானின் திருஷ்ட்டி நிலை தங்களின் லக்கினத்திற்கு வாரி வழங்கும்.

4ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் ( கன்னி ராசி மற்றும் புதன் )  ஒரே வர்க்கம் என்பதனால் மிதுன லக்கின அன்பர்களுக்கு, புதிய சொத்து சுக சேர்க்கையை தந்த போதிலும், மாத்ரு ஸ்தான வழியில் இருந்து தாயாருக்கு உடல்நல குறைவை தரக்கூடும், வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்க இயலாது, வண்டி வாகனம் மூலம் திடீர் இழப்பு மற்றும் செலவுகள் அதிகரிக்கும், தனது வசம் உள்ள சொத்துக்களை விற்று ரொக்கமாக பெரும் நிலையை தரும், அதன் மூலம் வரும் செல்வம் தங்களுக்கு விரயத்தை தரும், வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது தங்களுக்கு உகந்த நன்மைகளை தரும், தொழில் விருத்தி சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளும் முன் பலமுறை யோசனை செய்து செய்யப்படுவது நல்லது, வண்டிவாகன தொழில்களில் உள்ள அன்பர்கள் தங்களது வாகனங்களை பராமரிப்பதில் அதிககவனம் செலுத்துவது நல்லது, இல்லை எனில் வீண் விரையங்களையும், தொல்லைகளையும் தவிர்க்க இயலாது, தெளிவான முடிவுகளை மேற்கொள்ளவில்லை எனில் தங்களின் எதிர்கால வாழ்க்கை வெகுவாக பாதிக்கும், சனிபகவானின் திருஷ்ட்டி நிலை தங்களின் வாழ்க்கையில் சுகபோகங்களுக்கு தடைகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தும்.

குறிப்பு :

 மிதுன லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 7,12,1,4ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 7,12,1,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மிதுன லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment