பின்தொடர...

Sunday, February 12, 2017

திருமண பொருத்தம் : வாழ்க்கை துணையாக ( மனைவியாக ) இந்த ஜாதகியை தேர்வு செய்யலாமா ?

திருமண பொருத்தம் 


இல்லறவாழ்க்கை இனிதே அமைய ஒருவர் திருமணத்திற்கு முன்பே, தனது ஜாதக வலிமை நிலையை பற்றியும், தனக்கு வர இருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமை நிலையை பற்றியும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்த பிறகு திருமண வாழ்க்கையில் இணைவது, மணவாழ்க்கையில் வெற்றியையும், சிறப்பையும் தரும், குறிப்பாக தனது வாழ்க்கை துணையாக வரும் பெண்ணின் ஜாதகத்தை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஆணுக்கு சகல யோகங்களையும், தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷங்களையும் வாரி வழங்கும், பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் ஆண் பெண் இருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது, மேலும் சகல சௌபாக்கியங்களையும் பெரும் சுபயோக வாழ்க்கையை தம்பதியர் இருவரும் பெறமுடியும்.

தங்களின் கேள்விக்கு உண்டான பதில்களை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் !

வாழ்க்கை துணையாக வர இருக்கும் வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பதும், தற்போழுது நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதும் தாம்பத்திய வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தரும், தனது கணவருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை வாரி வழங்கும், கீழ்கண்ட ஜாதகிக்கு 2,5,7,8,12ம் பாவகங்களின் வலிமையை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் நன்மை தீமைகள் பற்றியும், தனது இல்லறவாழ்க்கையில் ஜாதகி பெரும் யோக அவயோகங்கள் பற்றியும் ஆய்வு செய்வோம் அன்பர்களே !


லக்கினம் : கும்பம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம் 

ஜாதகிக்கு 2,5,7,8ம் வீடுகள் லாபஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகி இனிமையான குடும்ப வாழ்க்கை , கை நிறைவான வருமான வாய்ப்பு, இனிமையான பேசிச்சு திறன், குடும்பத்தில் அனைவருடன் அனுசரித்து செல்லும் அமைப்பு, சிறப்பாக குடும்பத்தை நடத்திச்செல்லும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் நட்புகள் வழியில் யோகம் என்றவையில் சுபயோகங்களை தரும்.

5ம் பாவக வழியில் இருந்து அறிவு புத்திசாலித்தனத்தால் ஆதாயம், எப்பொழுதும் மனமகிழ்ச்சி, குல தெய்வ அனுக்கிரகம், குழந்தைகள் வழியில் யோகம், நல்ல குழந்தை பாக்கியம், அனைவரிடமும் பாசமாக நடந்துகொள்ளும் தன்மை, பெருந்தன்மையான குணம், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அதிபுத்திசாலித்தனம், கடவுள் அனுக்கிரகத்தை பரிபூர்ணமாக பெரும் யோகம் என்றவகையில் சுபயோகங்களை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து கணவருடன் இணக்கம், நல்ல நண்பர்கள் உதவி, தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு, மணவாழ்க்கையை சிறப்பிக்கும் யோகம், எந்த சூழ்நிலையிலும் கணவனை விட்டு பிரியாமல் வாழும் யோகம், வியாபர விருத்தி, கணவருடன் செய்யும் சுயதொழில் வளர்ச்சி, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தம்பதியர் பெரும் யோகம் என்றவகையில் சுபயோகங்களை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து பூர்ண சுமங்கலி, தன்கணவனுக்கு மிதம்மிஞ்சிய சொத்து சுக சேர்க்கையை நல்கும் யோகம் திடீர் அதிர்ஷ்டம்  மூலம் தம்பதியரின் வாழ்க்கை எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுதல், போதும் என்ற மனநிறைவு, திருப்தியான யோகம் வாழ்க்கை, நீண்ட ஆயுள், தம்பதியர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லும் தன்மை, வாழ்நாள் முழுவதும் கணவருக்கு சேவை செய்யும் யோகம் பெற்றவர்.

ஜாதகிக்கு 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் சற்று பாதிப்பு, தங்களின் ஜாதகத்தில் 12ம் பாவகம் மிகவும்  வலிமையுடன் இருப்பதால் யாதொரு இன்னல்களும் இல்லை, திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் வெற்றி உண்டாகும்.

நடைபெறும் குரு திசை 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று  ஸ்திரமான ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறப்பான யோகமே, மேலும் அடுத்து வரும் சனி திசை ஜாதகிக்கு 1,2,5,7,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்று முழுவீச்சில் லாபஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்கதக்க சிறப்புஅம்சம் ஆகும், மேலும் ஜாதகிக்கு 9 பது பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பதால் தங்களுக்கு யோக வாழ்க்கையையே தரும், குறிப்பாக 2,5,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது தாம்பத்திய வாழ்க்கையில் 100% விகித வெற்றியை  வாரி வழங்கும், இருவரது ஜாதகமும் 100% விகிதம் பொருந்துவதால் தங்கள் தேர்வு செய்த ஜாதகியையே திருமணம் செய்துகொள்வது  தங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment