பின்தொடர...

Saturday, February 4, 2017

நல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்? சந்திரன் திசை எப்படி இருக்கும்?


 கேள்வி :
இதுவரை எனக்கு நல்ல வேலை அமையவில்லை, அரசு பணியாளர் தேர்வுகள் நிறைய எழுதிவிட்டேன் ஒரு வாய்ப்பும் கிட்டவில்லை, இதனால் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு அரசு துறையில் பணி அமையுமா? திருமணம் எப்பொழுது அமையும்? எதிர்காலம் நன்றாக இருக்குமா?

பதில் :

 ஒருவரது வாழ்க்கையை சிறப்பாக நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் கோணங்கள் என்று அழைக்கப்படும் 1,5,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின், குணம், அறிவு, கல்வி, உதவி, சமூக அந்தஸ்து, உடல் வலிமை, மன வலிமை, தீர்க்கமான முடிவு, சரியான விஷயத்தை தேர்வு செய்து வெற்றி பெறுதல் என்ற வகையிலும், கேந்திரம் என்று அழைக்கப்படும் 2,4,6,7,8,10,12ம் வீடுகள் வலிமை பெறுவது, வருமானம், தானம்,குடும்பம், சொத்து சுகம், வண்டி வாகனம், எதிரிகளை வெல்லுதல், அனைத்திலும் தேர்ச்சி, களத்திர யோகம், கூட்டு முயற்சி, நபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு, திடீர் அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், சுய கவுரவம், அந்தஸ்த்து, ஜீவன முன்னேற்றம், மன நிம்மதி, நல்ல உறக்கம், திடீர் எனவரும் மிக பெரிய சொத்துக்கள், திருப்திகரமான யோக வாழ்க்கை என்ற வகையிலும், சம பாவகங்களான 3,11ம் வீடுகள் வலிமை பெறுவது, ஜாதகரின் வெற்றி, சொல்வாக்கு, லட்சியம் வெற்றி பெறுதல், நினைத்ததை சாதிக்கும் வல்லமை, செல்வ செழிப்பு , மற்றும் திடீர் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, அதிர்ஷ்டத்தின் பரிபூர்ணத்துவம் முழுவதையும் ஜாதகர் அனுபவிக்கும் வல்லமை, வாழ்க்கையில் ஜாதகர் பெரும் நன்மை மற்றும் சுப யோகங்கள் என்ற வகையில் சிறப்புகளை தரும், எனவே ஒருவரது சுய ஜாதகத்தில் பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக, அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வருகின்றது என்பதால் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன் காண்பதே சிறப்பான எதிர்காலத்தை அமைத்து  தரும்.


லக்கினம் : விருச்சிகம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம்

நல்ல வேலை எப்பொழுது அமையும் ?

எதிர்வரும் செவ்வாய் திசையில் அமைய வாய்ப்பு உள்ளது ஏனெனில் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதால், திடீரென நல்ல வேலை அமையும், ஆனால் அது அரசு பணியாக இருக்க வாய்ப்பு இல்லை, வண்டி வாகனம்  அல்லது இன்சூரன்ஸ் துறையில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது, அதுவரை தங்களுக்கு உண்டான ஒரு சிறு வேலை வாய்ப்பை தேடிக்கொள்வது நல்லது.

திருமணம் எப்பொழுது அமையும் ?

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் முறையே ஆயுள் பாவகம் மற்றும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, மிக மிக தாமதமான திருமண வாழ்க்கையை தரும், குறிப்பாக சந்திரன் திசையில் நடைபெற சிறிதும் வாய்ப்பு இல்லை, சந்திரன் திசையில் திருமணத்திற்க்காக எடுக்கும் முயற்சிகள் பெரும் பின்னடைவை தரும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நலம் தரும், மேலும் காதல் வயப்படுவது தங்களை, மரணத்தின் விளிம்பிர்க்கே அழைத்து செல்லும், திருமணத்திற்கும் தங்களுக்கு செவ்வாய் திசை செவ்வாய் புத்தியே உகந்ததாக அமையும்.

நடைபெறும் சந்திரன் திசை எப்படி இருக்கும் ?

தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை ( 05/12/2011 முதல் 05/12/2021 வரை ) தங்களுக்கு 7ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்க விஷயமாகும், இதனால் தங்களின் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் இன அமைப்பினரால் கடுமையான நெருக்கடிகளை சந்திப்பீர்கள், தேவையற்ற அவ பெயரால் மன நிம்மதி கடுமையாக பாதிக்கப்படும், தங்களது மனவலிமைக்கு  பலவிதமான சவால்களை வாரி வழங்கும் திசையாக சந்திரன்  அமைவது வருந்தத்தக்க விஷயமே, எனவே சந்திரன் திசை முழுவதும் தங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமுடன் எடுத்து வைப்பது அவசியமாகிறது, குறிப்பாக, சந்திரன் திசை தங்களுக்கு மிகுந்த இன்னல்களையும், துன்பங்களையும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்கும், இதில் இருந்து விடுபட முறையான பிரீத்தி பரிகாரங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது, இதனால் சந்திரன் திசையில் இருந்து வரும் இன்னல்கள் தங்களுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.

எதிர்காலம் நன்றாக இருக்குமா?

சந்திரன் திசை முழுவதும் பாதக ஸ்தான பலன்களே நடைமுறைக்கு வருவதால் தங்களுக்கு யாதொரு நன்மையையும் நடைபெற வாய்ப்பு இல்லை, ஆனால் எதிர்வரும் செவ்வாய் திசை தங்களுக்கு 4,8ம் வீடுகள் வலிமை  பெற்று ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவது செவ்வாய் திசை முழுவதும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு :

ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சம்பந்தப்பட்ட ஜாதகர் 200% விகித இன்னலைகளை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் குறிப்பாக, நடைமுறையில் உள்ள திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்தி பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோகதிதான், ஏனெனில் பாதக ஸ்தானம் தரும் பாதிப்பில் இருந்து வரும் இன்னல்களை ஜாதகரால் எதிர்கொள்ளவே இயலாது.

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது லக்கின வழியில் இருந்து உடல்நலம், மனநலம் மற்றும் வளரும் சூழ்நிலையில் இருந்து வரும் இன்னல்களை அதிக அளவில் தரும், 3ம் பாவக வழியில் இருந்து முயற்சிகளில் தோல்வி, முயற்சி இன்மை, வீரியமிக்க செயல்திறன் இன்றி அதிக அளவிலான கவன குறைவு, சரியான தொடர்புகள் இன்றி வாழ்க்கையில் அனைவராலும் இன்னல்களை சந்தித்தால், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளி இல்லாமல் தவறான பாதையில் பயணிக்கும் நிலை, எதிர்ப்பால் அமைப்பினரால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை, கூட்டு முயற்சி தோல்வி, தாமத திருமணம் மூலம் இன்னல்கள், 9ம் பாவக வழியில் இருந்து பித்ருக்கள் ஆசியின்மை, யாருடைய உதவியையும் பெற இயலாமல் இன்னலுறும் தன்மை, காரியங்களில் தடை, ஜீவன முன்னேற்றம் இன்மை, அதிக அளவிலான எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, திருப்தி அற்ற வாழ்க்கை என்ற வகையில் கடுமையான இன்னல்களை பாதக ஸ்தான வழியில் இருந்து வழங்கும், மேலும் தற்போழுது நடைபெறும் சந்திரன் திசை பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களையும், அவயோகங்களையும் தரும் என்பதால் ஜாதகர் தகுந்த பீரிதி பரிகாரங்களை மேற்கொள்வது நன்மையை தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment