புதன், 15 பிப்ரவரி, 2017

சுய ஜாதகத்தை இயக்குவது நவகிரகங்களின் வலிமையா? லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையா?


கேள்வி :

சுய ஜாதகத்தை இயக்குவது நவகிரகங்களின் வலிமையா? லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையா?

பதில் :

 நவ கிரகங்கள் பூமியில் ஜீவித்து இருக்கும் அனைத்து ஜீவா ராசிகளுக்கும் சரிசாம விகிதத்தில், தனது ஜீவகாந்த அலைகளை வாரி வழங்கிகொண்டு இருக்கின்றது. புவியில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் அவர் செய்த புண்ணிய பதிவிற்கு ஏற்ற வகையில் சுய ஜாதக பாவக வலிமை அமைகிறது, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நவகிரகங்களின் ஜீவகாந்த அலையை பெற்று சம்பந்த பட்ட ஜாதகருக்கு, யோக பலன்களையோ அவயோக பலன்களையோ நடைமுறைக்கு கொண்டு வருக்கிறது, குறிப்பாக சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் நவகிரகங்களின் ஜீவகாந்த அலைகளை பெற்று சுபயோக பலன்களையும், வலிமை அற்ற பாவகங்கள் நவகிரகங்களின் ஜீவகாந்த அலையை பெற இயலாமல் அவயோக பலன்களையும் தருகின்றது, இதில் ஒரு சுவாரஷ்யம் என்னவென்றால், சுய ஜாதக பாவக வலிமையை நிர்ணயம் செய்வதும் ஜெனன காலத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு அமரும் நவகிரகங்களின் நிலையே! 

உதாரணமாக சொல்ல வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களையும் 12 பாத்திரங்களாக கற்பனை செய்து கொண்டால், அந்த பாத்திரங்களில் நிரப்பபடும் நீர்தான் நவகிரகங்களின் ஜீவா காந்த அலைகள், இதில் வலிமை பெற்ற பாவகம் என்பது நல்ல பாத்திரமாகவும், இதில் வலிமை அற்ற பாவகம் என்பது உடைந்த பாத்திரமாகவும் கற்பனை செய்து கொண்டால், வலிமை பெற்ற பாவகத்தில் நிரப்பபடும் ஜீவாகாந்த அலைகள் மூலம் ஜாதகர் யோக பலன்களையும், வலிமை அற்ற பாவகத்தில் நிரப்பபடும் ஜீவாகாந்த அலைகள் மூலம் ஜாதகர் அவயோக பலன்களையும், அனுபவிக்கு தன்மையை பெறுகிறார்.

அடுத்து நவகிரகங்கள் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பெரும், ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகியவை சுய ஜாதகத்திற்கு யாதொரு நன்மை தீமையும் தருவதில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் கிரகங்கள் ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகிய நிலைகளில் இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மை தீமைகளை தரும் என்று கருதுவதும், தவறான அணுகுமுறையே, ஏனெனில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நவகிரகங்கள் பெரும் வலிமையானது ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ஆகியவை ) சுப,அவ யோகங்களை நிர்ணயம் செய்வதில்லை, லக்கினத்திற்கு நவகிரகங்கள் பெரும் வலிமை நிலையம், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கு நவகிரகங்கள் பெரும் வலிமை நிலையுமே சுய ஜாதகத்திற்கு உண்டான நன்மை தீமை பலன்களையும், யோக அவயோக பலன்களையும் நிர்ணயம் செய்கிறது, இதன் அடிப்படையில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையையே, நவகிரகங்கள் தனது திசாபுத்திகளில் பலாபலன்களாக ஏற்று நடத்தும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பெரும் வலிமையே சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுபயோகங்களையும், நன்மையான பலன்களையும் வாரி வழங்கும் என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.

சுய ஜாதகத்தை இயக்குவதில் ஜெனன நேரத்தில் அமையும், சுய ஜாதக பாவக வலிமையே ( பாவக வலிமையை நிர்ணயம் செய்வது ஜெனன நேரத்தில் உள்ள கிரக நிலை என்பது கவனிக்க தக்கது ) என்றால் அது மிகையில்லை. மேலும் சுய ஜாதக பாவக வலிமை என்பது அவரவர் பதிவிற்கு ஏற்ற வகையில் அமையும் என்பதும், ஒருவருக்கு இருக்கும் ஜாதக பாவக வலிமை போல், மற்றொருவருக்கு இருக்காது என்பது  ( இரட்டை குழந்தை என்ற போதிலும் ) கூடுதல் விஷயம் ஆகும்.

சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நவ கிரகங்கள் பெரும் ( ஆட்சி,உச்சம்,நட்பு,சமம்,பகை,நீசம் ) வலிமையை கருத்தில் கொள்ளாமல், லக்கினத்திற்கும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களுக்கும் நவகிரகங்கள் தரும் வலிமையை கருத்தில் கொண்டும், பனிரெண்டு பாவகங்களின் வலிமை மற்றும் நவகிரகங்கள் தனது திசாபுத்திகளில் ஏற்று நடத்தும் பாவகங்கள் ஜாதகருக்கு தரும் நன்மை தீமை, யோக அவ யோகங்களை கருத்தில் கொண்டு சுய ஜாதக பலாபலன்கள் காண்பதே சரியான முறை, அதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துள்ளியாமான ஜாதக பலன்களை கூற உதவும், இத்துடன் நவகிரகங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன்களையும் கருத்தில் கொள்வது நலம் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: