பின்தொடர...

Tuesday, February 21, 2017

செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ?


கேள்வி :

 8ல் செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ? கீழ்கண்ட செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகரை திருமணம் செய்துகொண்டால் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் ?

பதில் : 

ஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் யாதொரு தோஷத்தையும் தருவதாக கருதவில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தை இயங்குவதே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெரும் பொழுது ஜாதகர் யோக பலன்களையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை அற்று இருக்கும் பொழுது ஜாதகர் அவயோக பலாபலன்களையம்  அனுபவிக்கும் நிலையை தருகின்றன, இதுவே எதார்த்தமான உண்மை நிலை, இதில் செவ்வாய் தோஷம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகவே  " ஜோதிடதீபம் " கருதுகிறது, இதை பற்றி கிழ்கண்ட ஜாதகங்களை கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : தனுசு 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் உள்ளது போல் தேற்றம் இருந்தாலும், பாவக கணிதம் கொண்டு காணும் பொழுது உண்மையில் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலே அமர்ந்து இருக்கின்றார், எனவே அவர் 8ம் வீட்டில் உள்ளார் என்பதே தவறான கணிதமாகவும், 7ல் அமர்ந்த செவ்வாய் பகவானால் தங்களுக்கு இன்னல்கள் உண்டா என்பதை பார்க்கும் பொழுது, சுய ஜாதகத்தில் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, எனவே களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவது சிறப்பான யோக அமைப்பாகும், அங்கே அமரும் செவ்வாய் பகவானும் தங்களுக்கு யாதொரு தோஷத்தையும், வலிமை இழப்பையும் தரவில்லை என்பதே உண்மை நிலை.

செவ்வாய் தோஷம் என்பது அடிப்படை ஆதாரம் அற்ற ஓர் விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, செவ்வாய் தோஷம் என்று சொன்னதினால் நிறைய திருமணம் நின்று இருக்க கூடுமே அன்றி, செவ்வாய் 2,4,7,8,12ல் அமர்ந்து இருப்பதால் திருமணம் நின்று இருக்க வாய்ப்பு இல்லை, எனவே இனிவரும் காலங்களில் செவ்வாய் தோஷம் என்பதை கருத்தில் கொள்ளாமல், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சிறப்பான இல்லற வாழ்க்கையை நல்கும், மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தருவது சிறப்பான யோக வாழ்க்கையை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், அடுத்து வரும் குரு திசையும் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால், எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும்.

தங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும்  1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது யோகங்களையும்,  2,5,8,12ம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பது சற்று சிரமத்தை தரக்கூடும், எனவே தங்களது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பரது சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையாக இருப்பதை கருத்தில் கொண்டு, தங்களது இல்லற வாழ்க்கையை அமைத்து கொள்வது சிறப்பான யோக வாழ்க்கையை தரும், இதை கருத்தில் கொண்டு கீழ்கண்ட வரனின் ஜாதகத்தை ஆய்வு செய்து தெளிவு பெறுவோம்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம்.

 இந்த ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும்  1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், குறிப்பாக 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் அம்சமாகும், எனவே தாங்கள் தேர்வு செய்த ஜாதகம் தங்களின் ஜாதகத்தை விட மிகவும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும்.

தற்போழுது ஜாதகருக்கு நடக்கும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், அடுத்து வரும் சனி திசையும் 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்த இருப்பது சிறப்பான யோகத்தை தரும் அம்சமாகும், எனவே தங்களது தேர்வு மிசிறந்ததாக கருதுகிறோம், மேலும் இருவருக்கும் தற்போழுது, எதிர்வர இருக்கும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்துவது  இல்லற வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம்.

மேலும் தங்களின் ஜாதகப்படியும், தாங்கள் தேர்வு செய்த ஜாதகப்படியும் முறையான பிரீத்தி பரிகாரங்களை செய்து கொண்டடு, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும்  பெறலாம், வாழ்த்துகள்.

குறிப்பு :

 சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் போன்ற எந்த ஒரு தோஷமும் யாதொரு இன்னல்களையும் தாராது, சுய ஜாதக வலிமை இழக்கும் பொழுது, சுய ஜாதகத்தில் எவ்வித கிரக சேர்க்கை, கிரகயோகம், பரிவர்த்தனை யோகம் இருந்தாலும் யாதொரு பயனும் இருக்காது என்பதில் தெளிவு பெறுங்கள், தங்களது ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும், அதனால் எந்த ஒரு தோஷமும் தங்களுக்கு இல்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் இனிமையான, பொருத்தமான இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment