வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சனிமஹா திசை சுபத்தை தருமா ? அசுபத்தை தருமா ? சுய ஜாதக வலிமை நிலை என்ன ?


கேள்வி :

எனக்கு சனிதிசை சுபத்தை தருமா? அசுபத்தை தருமா?  கிரக பரிவர்த்தனை யோகம் சிறப்பா? தெளிவுபடுத்துங்கள்.

பதில் :

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும், மேலும் நடைபெறும் திசை அல்லது எதிர்வரும் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், மேற்கண்ட ஜாதகரின் கேள்விகளுக்கான பதில்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்!


சுய ஜாதக வலிமை நிலை :

1,5,9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், மேலும் ஜாதகர் 1,5,9,11ம் பாவக  வழியில் இருந்து சிறப்பான யோக பலன்களை அனுபவிப்பர்.

2,6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,8ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும்.

4,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 4,10,12ம் பாவக வழியில் இருந்து ஸ்திரமான இன்னல்களை வாரி வழங்கும்.

3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு 3,7ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை பெரிய அளவில் தரும்.

சனி மஹாதிசை தரும் பலன்கள் : ( 14/01/2017 முதல் 14/01/2036 வரை )

தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை ஜாதகருக்கு 2,6,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக பலனை  ஏற்று நடத்துவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து வருமானம்,குடும்பம்,தனம் சார்ந்த இன்னல்களை தரும், மேலும் எதிர்பாராத செலவினங்கள், திடீர் விரையம் என ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், கடன் பெறுவது கொடுப்பது இன்னல்களை தரும், எதிரிகளால் அதிக தொந்தரவு, உடல் நல குறைவை ஏற்படுத்தும், வயிறு சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்கும், விபத்து, திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, இருப்பினும் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் உண்டு, அவசரப்பட்டு செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகருக்கு எதிர்பாராத இன்னலைகளை கடுமையாக தரும், என்பதால் சனிமகா திசை தங்களுக்கு அவயோகத்தையே தருகிறது.

கிரக பரிவர்த்தனை யோகம் :

பெரும்பாலும் கிரக பரிவர்த்தனை மிகுந்த நன்மைகளை தரும் என்பது பொது கருத்து, கிரகங்கள் பரிவர்த்தனை பெறுவது மட்டும் ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்கிவிட வாய்ப்பு இல்லை, சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையிழந்து காணப்பட்டால், எவ்வித பரிவர்த்தனை யோகமும் ஜாதகருக்கு சுபயோகங்களை வழங்குவதில்லை, உதாரணமா மேற்கண்ட ஜாதகருக்கு செவ்வாய் வீடான மேஷத்தில் சுக்கிரனும் ( மேஷத்தில் உள்ள 7ம் பாவகத்தில் சுக்கிரனும் ) சுக்கிரன் வீடான ரிஷபத்தில் செவ்வாயும் ( ரிஷபத்தில் உள்ள 8ம் பாவகத்தில் செவ்வாயும் ) அமர்ந்து இருப்பது யோக பலன்களை வழங்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து, இருப்பினும் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலத்தில் சுக்கிரன் செவ்வாய் இருவரும் லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு நன்மைகளை தரும், ஆனால் இதைமட்டும் கருத்தில் கொண்டு பரிவர்த்தனை யோகம் நன்மையை தரும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, பாதக ஸ்தானம் ஏறிய சுக்கிரன் ( களத்திர ஸ்தானம் ) ஜாதகருக்கு மேற்கண்ட பாதக ஸ்தான பலனையும் தரக்கூடும்.

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்பு இருந்த போதிலும், நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்றுநடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகளும் யோகங்களும் நடைமுறைக்கு வரும், மாறாக பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களே நடைமுறைக்கு வரும்.

எந்த ஒரு ஜாதகத்திலும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம்  பெற்ற பாவக வழியில் இருந்து மிகுந்த இன்னல்களையும் அவயோகங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு பாதக ஸ்தான தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது, ஜாதகரின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளையும், துன்பங்களையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை, திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகருக்கு பாதக ஸ்தானம் சார்ந்த இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது.

குறிப்பு :

ஜாதகருக்கு சனி திசை கடுமையான பாதிப்பை தரும் நிலையில் இருப்பதால், முறையான ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொண்டு நலம் பெறுக, மேலும் அன்னதானம் செய்வது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக