வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )


"ஜோதிடதீபம்" ஆருடம் கூறியபடியே சரியாக அமைந்த தீர்ப்பு ....

கடந்த 13ம் தேதி தமிழக மக்களின்  மனதில் முக்கியஸ்தர் ஒருவருக்கு வரும் தீர்ப்பு எப்படி இருக்கும்? என்று எழுந்த கேள்விகளுக்கு உண்டான பதிலாக குருவின் ஆசியுடன் ஒரு ஆருடத்தை " ஜோதிடதீபம்" பதிவு செய்து இருந்தது, அதற்க்கு அடுத்தநாளே ஆருடத்தை மெய்பிக்கும் தன்மையாகவும், அவரது எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் விதமாகவும், சம்பந்த பட்ட நபருக்கு தீர்ப்பு அமைந்து இருந்தது, ஆருடம் கேட்ட நேரமும் அதில் இருந்த சிறப்பு சாராம்சங்கள் பற்றியும், ஆருட லக்கினத்திற்கு அமைந்த பாவக தொடர்புகள் பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



ஆருட கேள்வி :

சம்பந்தப்பட்ட நபருக்கு வரும் தீர்ப்பு எப்படி அமையும்? அவரின் எதிர்காலம் என்னவாகும் ?

ஆருட பதில் :

ஆருட நேரத்தில் அமைந்த லக்கினம் : கடகம்
ஆருட நேரத்தில் அமைந்த ராசி : கன்னி
ஆருட நேரத்தில் அமைந்த நட்சத்திரம் : உதிரம் 2ம் பாதம்.
ஆருட நேரத்தில் அமைந்த பாவக தொடர்புகள்

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5,11 வீடுகள் 200 % விகித இன்னல்களை தரும் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

1,3,4,6,7,9,10,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது  லக்கின வழியில் கலையில் நாட்டம், தனிமை விரும்பி ( சேராமாரி ) முதலீட்டில் விருப்பம், அதிக தொல்லை, பொறாமை, மறைமுக எதிரி, தடங்கல், அடிக்கடி வைத்திய செலவு, சிறை செல்லுதல், ஏமாற்றம், கொள்ளை அடித்தல், இராஜ துரோகம், சதி செய்தல் என்றவகையில் பலனை தரும்,எனவே ஆருட லக்கினம் என்பதே கடுமையாக பாதிக்கப்படுகிறது ( ஆரூடத்தில் லக்கினம் மிக முக்கியமாக கருதப்படும் ) , மேலும் ஆருட லக்கினாதிபதியான செவ்வாய், லக்கினத்திற்கு 8ல் மறைவு அடிப்படையிலேயே லக்கினமும் பாதிக்கப்பட்டு, லக்கினாதிபதியும் பாதிக்கப்படுவது, அவர் அனுபவிக்கும் இன்னல்களுக்கு கட்டியம் கூறுகிறது, 3ம் பாவகம் பாதிக்கப்படுவது அவரது முயற்சியில் பெரும் தோல்வியையும், 4ம் பாவகம் பாதிக்கப்படுவது விபத்து, சொத்துக்களை இழத்தல், தடங்கல், வறுமை, துரதிர்ஷ்டம், மனக்குழப்பம், ஜெயில் வாழ்க்கை, அதிக வேலைப்பளு, விஷ பாதிப்பு என்ற வகையிலும், 6ம் பாவகம் பாதிக்கப்படுவது கடன் கொடுத்தவர்களால் தொல்லை, கடன் பெற்றவர்களால் இன்னல்கள், வேலையாட்கள் விசுவாசிகள் மூலம் அதிக தொல்லை, வேலை நிறுத்தம், தேவையற்ற செலவு, எதிர்பாராத மருத்துவ செலவு, 7ம் பாவகம் பாதிப்படுவது நோயுற்ற வாழ்க்கை துணை, அரசியல் சிக்கல்கள், கூலியாட்கள் மூலம் அதிக தொல்லை, அனைத்திலும் தோல்வி, அதிக இன்னல்கள் என்ற வகையிலும், 9ம் பாவகம் பாதிக்கப்படுவது பித்ருக்கள் ஆசி இன்மை, சரியான நேரத்தில் அனைவரும் காலைவாரிவிடும் சூழ்நிலை, முட்டாள் தனமான செய்கைகள் மூலம் தன்னை ஓர் அறிவிலி என்று நிரூபித்தால், மற்றவர்களை நம்பி சோரம் போகுதல், உடன்பிறப்பை விட்டு, பிறந்த ஊரை விட்டு பிரிதல் என்ற வகையில் இன்னல்களையும், 10ம் பாவகம் பாதிக்கப்படுவது வெளியூர், வெளிநாட்டில் ஜீவனம், அடிக்கடி ஜீவன மாற்றம், வரவைவிட செலவுகள் அதிகம், தவறான வழியில் பணம் ஈட்டுதல், கவுரவ குறைவான காரியங்களில் ஈடுபடுதல், என்றவகையில் இன்னல்களையும், 12ம் பாவகம் பாதிக்கப்படுவது, நிறைய வீண் செலவு, சூது மூலம் பேரிழப்பு, திருப்தி இல்லா வாழ்க்கை, அனைவராலும் தொல்லை, விபத்து  என்ற வகையில் கடுமையான இன்னல்களை தரும், 12ம் வீடு மிதுனத்தில் ஆரம்பித்தாலும் பெரும்பாலும்   கடக ராசியிலே வியாபித்து இருப்பது ஆருடத்தால் சம்பந்தப்பட்ட்டவர் அனுபவிக்கும் மன ரீதியான கடுமையான போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக மனபயம், மனப்போராட்டம், மனக்குழப்பம் ஆகியவற்றை தெளிவு படுத்துகிறது.

2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து இன்ஷுரன்ஸ் மூலம் லாபம், குடும்பத்தில் இன்னல்கள்,  வாக்கு தவறும் தன்மை, வருமான பாதிப்பு என்ற வாழ்க்கையிலும், 8ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆயுள், வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், விபத்து, வியாதி, திருப்தி அற்ற மன நிலை, அனைத்தையும் திடீரென இழக்கும் தன்மை எல்லாவகையிலும் இன்னல்களை தரும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்நதம் பெறுவது, (  எதிர்காலம் ஒன்று இல்லை என்பதை பாதக ஸ்தான தொடர்பு தெளிவுபடுத்துகிறது ) சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத தன்மை, வாய்ப்புகளை பயன்படுத்த தெரியாமல் வீணடிக்கும் தன்மை, தனது வாழ்க்கைக்கு தானே எதிர்ப்புகளை உருவாக்கி கொள்ளும் தன்மை, குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாததால் வரும் இன்னல்களுக்கு தீர்வு காண இயலாமல் சிரமப்படும் தன்மை, விதி தரும் இன்னல்களில் இருந்து விடுபட முடியாமல் இன்னலுறும் தன்மை, சுய அறிவு இன்றி  மற்றவர்கள் அறிவுரையை கேட்டு வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை என்ற வகையில் இன்னல்களை தரும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டம் இன்மை, துரதிர்ஷ்ட வாழ்க்கை, எதிர்காலம் சூன்யம் ஆகுதல், பிற்போக்கு தனமான செய்கைகள், தன்னம்பிக்கை இன்மை, அவநம்பிக்கையினால் எதிர்கால வாழ்க்கையினை எதிர்கொள்ள இயலாமல் வாழ்க்கையில் இன்னலுறும் தன்மை, அனைத்திலும் தோல்வி என்ற வகையில்  அவயோகத்தையும் வழங்கு, மேலும் பாதக ஸ்தானம் என்பதால் 200 சதவிகித இன்னல்களை தரும்,  ஆரூடத்தில் 1,5,9ம் பாவகங்கள் வலிமை அற்று  இருப்பது மிக மோசமான விளைவை தரும் அமைப்பாகும், இந்த நிலை 17/12/2020 வரை நீடிக்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக