ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்? புத்திர பாக்கியம் உண்டா ?

கேள்வி :

ஐயா நான் 27/7/84 இரவு 9.50க்கு ஆரணியில்  பிறந்தேன், பிறகு அங்கு இருந்து நான் 6ம் வகுப்பு படிக்கும் தருவாயில் அப்பாவுக்கு தொழில் நஷ்டம் ஏற்ப்பட திருவண்ணாமலைக்கு வந்தோம், 2009; 2011 நான் தொழில் தொடங்கினேன் இரண்டு வருடம் கடுமையான பொருள் சேதம் 10 லட்சம் நஷ்டம்,  அங்கு இருந்து சென்னை வந்தேன் ஆறு வருடம் வேலை பார்த்தேன், தற்பொழுது தொழில் தொடங்கினேன் man power contract இந்த தொழிலும் பண நஷ்டம் வருகின்றது,  இந்த தொழில் நடத்தலாமா?  இல்லை அடிமை தொழிலுக்கே போகலாமா? ஐயா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை, தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

பதில் :

 ஒருவரின் வாழ்க்கையில் கடந்த,நிகழும், எதிர்வரும் மூன்று காலங்களில் நடைபெறும் பலாபலன்கள் பற்றியும், தனது ஜாதகப்படி தனக்கு உள்ள பலம், பலமின்மை, தகுதி, தகுதியின்மை, யோகம் அவயோகம் பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில் மற்றும் விளக்கத்தை தருவதில் " ஜோதிட சாஸ்திரம் " பயன்படுகிறது என்றால் அது மிகையில்லை, தனது சுய ஜாதகத்தின் வலிமையை பற்றி சிறிதும் அறியாமலேயே, வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கும் அன்பர்களின் ஜாதகத்தில், 5,9ம் பாவக வலிமை இன்மை வெகுவாக தனது ஆளுமையை செலுத்தி கொண்டு இருக்கின்றது என்பதை தவிர வேறு எதுவும் இல்லை அன்பர்களே ! சரியான ஜோதிட பலன் அறிந்துகொள்வதர்க்கே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 5,9ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, மேற்கண்ட கேள்வியை வினவியிருக்கும் அன்பரின் ஜாதக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல், ஜாதகர் தனது வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களை தற்பொழுது வரை சந்தித்துக்கொண்டு இருக்கின்றார் என்பது அவரது சுய ஜாதகத்தில் சில பாவகங்களின் வலிமை இன்மையை தெளிவுபடுத்துகிறது எனும் பொழுது விதியின் வலிமையை நினைத்து வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

ஜாதகருக்கு கடந்த சனி திசை வழங்கிய பலன்களை மட்டும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! தற்பொழுது நடைபெறும் புதன் திசை, எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் பற்றி ஜாதகருக்கு பிராப்தம் இருப்பின் முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ள இறை அருள் கருணை புரியட்டும்.


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்சத்திரம் : புனர்பூசம் 4ம் பாதம்

ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை சம்பந்தப்பட்ட ஜாதகர் பெரும் யோகம் அவயோக நிலைகளை பற்றி தெளிவு படுத்தும், மேலும் நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நவகிரகங்களின் திசாபுத்திகள் தரும் நன்மை தீமையை பற்றி மிகத்துல்லியமாக காண வழிவகை செய்யும், மேற்கண்ட ஜாதகருக்கு கடந்த சனி  திசை ( 25/04/1988 முதல் 25/04/2007 வரை ) தனது திசையில் வழங்கிய பலன்களையும், ஜாதகர் அதனால் பெற்ற நன்மை தீமையை பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சனி திசை ஜாதகருக்கு பால்ய வயதில் வந்துள்ளது, மேலும் சனி திசை 12ம் வீடு திடீர் இழப்பை தரும் 8ம் பாவகமான ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது, நடைபெற்ற சனி திசை காலங்களில் ஜாதகர் நல்ல வளரும் சூழ்நிலை அற்ற தன்மை, உடல் நல பாதிப்பு, கல்வியில் தடை, கற்ற கல்வி வழியிலான பலன்களை அனுபவிக்கும் தன்மை இல்லாதது, எந்த ஒரு விஷயத்தையும் போரடி பெறவேண்டிய கட்டாயம், என சனி திசை மிகுந்த இன்னல்களையே வாரி வழங்கி இருக்கின்றது.

மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாகவும், சர காற்று தத்துவ ராசியிலும் அமைகிறது, 12ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாகவும், ஸ்திர காற்று தத்துவ ராசியிலும் அமைவது, ஜாதகர் பொதுமக்கள், வியாபாரம், கூட்டு முயற்சி, சுய தொழில் ( அறிவு சார்ந்த ), ஆகியவற்றை அடிப்படையாக செய்வதற்கு உகந்தவர் அல்ல என்பது தெளிவு படுத்துகிறது, சுய ஜாதகத்தில் காற்று தத்துவ ராசி பாதிக்கபடுவது, ஜாதகரின் அறிவு சார்ந்த முயற்சிகளில் இன்னல்களையும், துன்பத்தையும் தரும் என்பது கவனிக்கதக்கது, இது ஜாதகர் தொழில் துவங்கிய காலங்களில் நடைமுறைக்கு வந்து எதிர்பாராத இழப்புகளையும், நஷ்டங்களையும் வழங்கி இருக்கின்றது.

சுய தொழில் துவங்குவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமை கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஒன்று, மேலும் ஜாதகர் வேலைக்கு செல்வது சிறப்பனதா ? என்பதை சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் முடிவு செய்வது சரியான தீர்வை தரும், புத்திர பாக்கியம் சார்ந்த கேள்விகளுக்கு தம்பதியர் இருவரின் சுய ஜாதகத்தில் உள்ள 5ம் பாவக வலிமையின் அடிப்படையில் முடிவு  செய்ய வேண்டும் என்பதால் ஜாதகர் முறையான ஜாதக ஆலோசனை கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக