Wednesday, April 5, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் துலாம் !சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

துலாம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாம் ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், துலாம் லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், பொதுமக்கள் செல்வாக்கு, சுய அறிவு திறன் கொண்டு தனது வாழ்க்கையில் அறிய பல சாதனைகளை செய்யும் அன்பர்களான துலாம் லக்கின அன்பர்களுக்கு இதுவரை லக்கினத்திற்கு 2ல் நின்று கடும் பொருளாதார நெருக்கடிகளை தந்து கொண்டு இருந்த சனி பகவான், தற்போழுது வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்வது துலா லக்கின அன்பர்களுக்கு, முன்னெடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிமேல் வெற்றியை வாரி வழங்குவார், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்த்தில் உள்ள அன்பர்களின் ஆதரவும் உதவிகளும் தங்களை தேடிவரும், பொறுப்பு மிக்க பதவிகள் அரசு ஆதரவு, செல்வச்செழிப்பு, வசதி வாய்ப்புகள் என தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும் யோக நேரமாக இதை  கருதலாம், தங்களின் லட்சியங்கள் நிறைவேற சரியான சந்தர்ப்பங்களை இயற்க்கை தங்களுக்கு வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் யோகம் உண்டாகும், இதுவரை இல்லாத பொருளாதார முன்னேற்றம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பு அந்தஸ்த்தை வாரி வழங்கும், ஜாதகரின் திட்டமிடுதல்களும், செயல்திறனும் மற்றவர்களை  மிரள செய்யக்கூடும், அதிரடியான சில நடவடிக்கைகள் தங்களை சார்ந்தவர்களை சிறிது பாதித்த பொழுதும் நெடுநாள் நன்மைகளை எதிர்காலத்தில் வாரி வழங்கும், தன்னம்பிக்கையும், தைரியமும் தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுக்கு அழைத்து செல்லும், சுய தொழில் செய்வோர்க்கு பெரிய அளவிலான தொழில் விருத்தியும், பணியாற்றுவோருக்கு திடீர் உயர்பதவிகளும் தேடிவரும், சனிபகவானின் வீர்ய ஸ்தான  சஞ்சாரம்  வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும்.

   8ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலாம் லக்கின அன்பர்களுக்கு மிதமிஞ்சிய வருமான வாய்ப்புகளை வாரி வழங்குவார், கைநிறைவான வருமானம் தங்களுக்கு எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும், புதையலுக்கு நிகரான வருமான வாய்ப்பை பெறுவதற்கு தங்களுக்கு திடீர் சந்தர்ப்பங்கள் ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், செய்யும் தொழில் வழியிலான வருமானம் அதிகரிப்பது, புதிய தொழில் ஆரம்பம் அதன் வழியிலான வருமானம், இனிமையான பேச்சு திறமை , திருமண தடைகள் நீங்குதல், நல்ல வாழ்க்கை துணை அவர் வழியிலான ஆதரவு, செல்வசேர்க்கை, மறைமுக வருமானம், சிறந்த உடல்  ஆரோக்கியம் , இதுவரை உடல் நலபாதிப்பு இருப்பின் சரியான மருத்துவம் மூலம் குணம் பெறுதல், இன்சூரன்ஜ் பங்கு வர்த்தகத்தில் லாபம், பொறுமையுடன் அனைத்தையும் கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுதல், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை  பெரும் யோகம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் சொத்து சுக  சேர்க்கை மற்றும் திடீர் அதிர்ஷ்டம், என சனிபகவானின் 6ம் பார்வை துலா லக்கின  அன்பர்களுக்கு பொருளாதார முன்னேற்றங்களை தடையின்றி தரும், சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் துலா லக்கின அன்பர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.

9ம் பாவகத்தை தனது  7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின அன்பர்களுக்கு, எதிர்பாலின அன்பர்களால் சிறு சிறு அவப்பெயரை ஏற்படுத்த கூடும், மற்றவர்களுக்கு உதவ செல்வதுகூட தங்களுக்கு  பெரும் வினையாக மாறிவிடும், வீண் அவப்பெயர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும் என்பதால் அதிக கவனம் தேவை, தங்களது விஷயங்களில் யாரும் தலையீடு செய்வது  பெருவாரியான இன்னல்களை தரக்கூடும், தெய்வீக அனுக்கிரகம் கூட முறையான கோவில் வழிபாடுகளை மேற்கொள்வது  தங்களது இன்னல்களை வெகுவாக குறைக்கும், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வயதில் அதிகம் உள்ள அன்பர்களின் ஆலோசனை தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரிவழங்கும், கல்வியில் \நல்ல  முன்னேற்றம் உண்டாகும், மாணவ மாணவியருக்கு தேர்வில் வெற்றிகளை  வரி வழங்கும் , ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுவரும் அதிர்ஷ்டம் உண்டு என்பதால், வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி நலம் பெறுக, முறையான குலதெய்வ வழிபாடு மற்றும் அன்னதானம் தங்களின் வாழ்க்கையில் வரும் இன்னல்களை  வெகுவாக குறைக்கும்.

12ம் பாவகத்தை தனது  10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் துலா லக்கின  அன்பர்களுக்கு முதலீடுகள் வழியிலான லாபங்களை பன்மடங்கு அதிகரிக்கும் பங்கு வர்த்தக லாபங்கள் எதிர்பார்த்த வகையில் அமையும், நல்ல அயன சயன சுகத்தையும், வெளிநாடுகள் பயணத்தையும் அதன் வழியிலான முன்னேற்றங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் தங்களுக்கு வெகு சாதகமாக மாறும், மனநிம்மதி மற்றும்  திருப்திகரமான யோக வாழ்க்கையை தங்களுக்கு சனிபகவான் நிறைவாக வழங்குவார், இதுவரை  தடைபட்ட காரியங்கள் யாவும் நல்ல முறையில் நடைபெறு வெற்றிகளை தரும், தெய்வீக அனுபவம் மற்றும் ஆன்மீக தொடர்புகள் மூலம் சிறப்பான எதிர்காலம் அமையும், பெரும் முதலீடுகளை  செய்து தொழில் செய்யும் நல்லதொரு வாய்ப்புகள் தங்களுக்கு உண்டாகும், மனதில் அமைதியும்  சாந்தியும் கிட்டும், தெளிவான சிந்தனையும், நிம்மதியான வாழ்க்கையையும் சனிபகவான் தனது 10ம் பார்வையால் தங்களுக்கு இனிவரும் காலங்களில் வாரி வழங்குவர் .

குறிப்பு :

துலாம் லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 3,8,9,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  3,8,9,12  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் துலா லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment