சனி, 22 ஏப்ரல், 2017

அட்சய திரிதியை சிறப்பும், வாழ்க்கையில் பெரும் சுபயோகங்களும் !


அட்சய திரிதியை 

நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாகிய "இறை அருள் " மனித வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வழங்கும், சுபயோக நாள் மற்றும் நேரங்களில் " அட்சய திரிதியை " முதன்மை வகிக்கிறது என்றால் அது மிகையில்லை, "அட்சய திரிதியை" என்பது செல்வ வளம் தரும் நாளாக போற்றப்படுகிறது. இன்றைய தினம் நாம் செய்யும் நற்காரியங்கள் மேன் மேலும் வளரும் என்பது ஐதீகம். சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் அட்சய திரிதியை நாளாகும்.

எதிர்வரும் அட்சய திரிதியை நாள் ( 29/04/2017 )  மேலும் சில சிறப்புகளை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும், ஏனெனில் நட்ஷத்திரங்களில் முதன்மையானதும், சந்திரனால் மிகவும் விரும்பப்படுவதுமான " ரோஹிணி " நட்ஷத்திரம் அன்றைய நாளில் அமைகிறது, மேலும் விருத்தியை குறிக்கும் ( சனி பெருக்கம் ) சனிக்கிழமை நாளில் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வருவது சுபயோகங்களை தரும் தனி சிறப்பான " அட்சய திரிதியை " நாளாக அமைவது கவனிக்கத்தக்க விஷயமாகும். ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபத்தில் சந்திரன் உச்ச நிலையை பெறுவதுடன், ரோஹிணி நட்ஷத்திரத்தில் சஞ்சாரம் செய்வது நிலையான வருமான வாய்ப்பை நல்கும் அமைப்பாகும், மேலும் இந்தநாளில் அட்சய திரிதியை வருவது சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் )

சாதாரணமாக ரோகிணி நட்ஷத்திரத்துடன் கூடிய சனிக்கிழமை நாளில், அமிர்த யோகத்தில் தங்கம் வாங்குவது சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு, பெரியஅளவிலான " சொர்ண ஆகர்ஷ்ணத்தை " நல்கும், எதிர்வரும் அட்சய திருதியை நாளில் திரிதியை திதி, ரோஹிணி நட்ஷத்திரம், சனி கிழமை மற்றும் அமிர்த/சித்த யோகங்கள் அனைத்தும் ஒன்று கூடி வருவது, ஏழ்மை நிலையில் வாடிய குசேலனுக்கு பகவான் " ஸ்ரீ கிருஷ்ணன் " வாரி வழங்கிய பெரும் செல்வத்திற்க்கு நிகரான வாழ்க்கையை நமக்கும் வாரி வழங்கும், இந்த நாளில் தங்கம் வாங்குவது நமது வாழ்க்கையில் சகல வித சௌபாக்கியங்களையும் நிறைவாக தரும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக எதிர்வரும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நமது முன்னோர்களும், சாஸ்திர வல்லுனர்களும் ஏன் பரிந்துரை செய்தனர் என்றால் ? சுப யோகங்களுக்கு முழு முதற் சுப கிரகமாகவும், பொன்னவன் என்று சாஸ்திர வல்லுநர்களால் போற்றப்படுபவருமான " குரு பகவான் " பரிபூர்ணமாக நிறைந்து நிற்கும் உலோகம் "தங்கம்" அப்படி பட்ட தங்கத்தை நமது வீட்டிற்கு அட்சய திரிதியை நாளில் கொண்டுவரும் பொழுது இதுவரை இருந்த துன்பங்கள் யாவும் விலகி குருபகவானின் அருள் கருணையினால் தொடர்ந்து சுபயோகங்கள் மற்றும் அதிர்ஷ்டம் அனைவரது வாழ்க்கையிலும் நடைபெறும் என்ற விஷயத்தை அனுபவபூர்வமாக உணர்ந்த ஆன்மீக பெரியோர்களும், சாஸ்திர வல்லுனர்களும் " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் அனைவரும் பயனுற இந்த அட்சய திரிதியை   நாளை நமக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

எதிர்வரும் அட்சய திரிதியை ( 29/04/2017 ) நாளில், தாங்கள் ஓர் குண்டுமணி அளவு தங்கத்தை சுவீகாரம் செய்தாலும், அது தங்களது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும், நீடித்த அதிர்ஷ்டத்தையும்  வாரி வழங்கும், சுப யோக நிகழ்வுகள்  தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறும், குரு பகவானின் அருள் கருணை தங்களது வாழ்க்கையில் சகல விதங்களில்  இருந்தும் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

 மேலும் "அட்சய திரிதியை" உடன்  சனி கிழமையில் ரோகிணி நட்ஷத்திரமும் அமிர்த/சித்த யோகமும் கூடி வருவது அளவில்லா " சொர்ண ஆகர்ஷ்ணத்தை" வாரி வழங்கும் என்பது எதிர்வரும் அட்சய திரிதியை நாளுக்கான தனி சிறப்பு என்பதை கருத்தில் கொண்டு ஏழை எளியவரும் வாழ்க்கையில் நலம் பெற இந்த நல்ல நாளை பயன்படுத்தி நலம் பெறுங்கள், எதிர்வரும் அட்சய திரிதியை நாளில் புதிய தங்கம் வாங்குவதுடன் சுப காரியங்கள் மற்றும்  புதிய தொழில் துவக்கம், புதிய வண்டி வாகனம், புதிய சொத்து, புதிய வீடு, புதிய வஸ்திரம் என்ற விஷயங்களை வாங்கும் பொழுது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும், வசதி குறைவாக உள்ளோர் இந்த அட்சய திரிதியை யில் சிறிது தங்கம் வாங்கும் பொழுது,  அதனால் வரும் குரு பகவானின் கருணையினால் அடுத்த அட்சய திரிதியையில் மேற்கண்ட சுப யோகங்களை தங்கு தடையின்றி பெறுவார்கள் என்பது சாஸ்திர வல்லுநர்கள் மற்றும் முன்னோர்கள்  சத்திய வாக்கு.

அட்சய திரிதியை சிறப்பு :

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தான் இழந்த சங்க நிதி, பதும நிதிகளை பெற்றது அட்சய திரிதியை நாளில்தான். பாண்டவர்கள் வன வாசத்தின் போது சூரியனிடம் இருந்து அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் பெற்றது இந்த நாளில்தான். 

அதேபோல் மணிமேகலையும் இந்த நாளில்தான் அட்சய பாத்திரம் பெற்றுள்ளார். அனைத்து வளங்களையும் இழந்து பிச்சாடனரான சிவபெருமான் தன் கையில் இருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடம் இருந்து உணவு பெற்று பிரமகத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாள்தான். 

கனகதாரா ஸ்தோத்திரம் : 

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை பெண்ணுக்கு தங்க நெல்லிக்கனி மழை பெய்ய வைத்த நாளும் அட்சய திரிதியை நாள்தான். கிருஷ்ணா அவதாரத்தில் குசேலர் அளித்த அவலை சாப்பிட்டு அவரை செல்வத்திற்கு அதிபதியாக உயர்த்திய நாளும் இந்த நாள்தான். 

குபேரன் மகிமை :

 செல்வத்திற்கும் தன தான்யத்திற்கும் அதிபதியான குபேரரை வணங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. குபேர வழிபாட்டின் போது லட்சுமியையும் வணங்கவேண்டும். இதனால் வழிபாட்டின் முழு பலனும் கிடைக்கும். குபேரர் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாக திகழ்கிறார். இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய விளை பொருட்களை குபேரர் முன் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிப்படையும் என்பது நம்பிக்கை. அறுவடை காலங்களில் குபேரனுக்கு காணிக்கையாக விளை பொருட்களை படைக்கின்றனர்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக