பின்தொடர...

Wednesday, April 19, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் விருச்சகம் !சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

விருச்சகம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எட்டாம் ராசியான விருச்சக  ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், விருச்சக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், மறைபொருள் உண்மைகளை உலகிற்க்கு ஒளிமறைவின்றி அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாரமால் விளக்கம் தரும் வல்லமை பெற்ற விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இதுவரை ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்து மனம் மற்றும் உடல் ரீதியாக கடுமையான இன்னல்களையும், திடீர் இழப்புகளையும் தந்துகொண்டு இருந்தார், குறிப்பாக மன ரீதியான கடுமையான இன்னல்களை விருச்சக இலக்கின அன்பர்கள் மிக பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, லக்கினத்தில் சனியின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த துன்பத்தை  தந்தது, ஆனால்  இனி வரும் காலங்களில் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு வருமான வாய்ப்புகளை பெரிய அளவில் தரக்கூடும், மேலும் வாக்கின் வழியில் நின்று தங்களது வெற்றிகரமான வாழ்க்கைக்கு  உறுதுணை புரிவார், இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம், ஆன்மீக வாழ்க்கையில் நல்ல வெற்றியும் ஆசிர்வாதமும் உண்டாகும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், இனிமையான வார்த்தைகளை கையாண்டு வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான நேரம் இது என்பதனை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், சனி பகவானின்  2 ம் பாவக சஞ்சார நிலை விருச்சக இலக்கின அன்பர்களுக்கு தனம் சார்ந்த முன்னேற்றங்களையும், வாக்கு சார்ந்த இன்னல்களையும் நல்கும்.

7ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இதுவரை இருந்த திருமண தடைகளை தகர்த்து விரைவாக திருமண வாழ்க்கையை அமைத்து தருவார், கூட்டு தொழில் செய்து வரும்  அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், தொழில் வழியிலான லாபங்களை வாரி வழங்குவார், எதிர்ப்புகள் அனைத்தும் களைந்து முன்னேற்றம் என்பது அபரிவிதமாக வந்து சேரும், தொழில் வழியிலான  வருமானம் என்பது நிரந்தரமாக அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதனால் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டு வாய்ப்புகளை பயன்படுத்திகொள்வது நல்லது, மேலும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள்  வழியிலான ஆதரவும், உதவிகளும் பெரிய அளவில் கிடைக்க பெறலாம், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடு வெளியூர் வழியில் இருந்து லாபம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள நபர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், கைநிறைவான வருமானம், பொருளாதார முன்னேற்றம், கேட்கும் இடங்களில் இருந்து வரும் கடன் உதவி என சனி பகவானின் 6ம் பார்வை, களத்திர ஸ்தானத்திற்கு முழு அளவில் நன்மைகளை வாரி வழங்கும், பிரபல்ய யோகம் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.

8ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் உடல் நலபாதிப்பில் உள்ள அன்பர்களுக்கு அதில் இருந்து விரைவான குணமும், சரியான மருத்துவ சிகிசிச்சையும், வீண் செலவுகளையும் வெகுவாக குறைக்கும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் சகல விஷயங்களில் இருந்தும் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், தனது வாழ்க்கை துணை வழியிலான பொருளாதர உதவிகள் தங்களுக்கு தேடிவரும், அவர்களின் உதவி தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும், சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும், தொலைதூர பயணங்கள் மூலம் லாபம் கிட்டும், திடீர் தனவரவுகள் தங்களின் வாழ்க்கையில் பலமாற்றங்களை தரும், எதிர்ப்பால் அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் மிகுந்த லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும், பொதுமக்களை ஆதாரமாக கொண்டு தொழில் புரியும் அன்பர்களுக்கு அபரிவிதமான லாபம் உண்டாகும், சனி பகவானின் 7ம் பார்வை ஆயுள் ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

11ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவார், சத்ரு வழியில் இருந்தும் லாபத்தை பெரும் யோகம் உண்டாகும், தெய்வீக அனுக்கிரகம் மூலம் பல வழியில் இருந்து தன லாபங்கள் வந்துசேரும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை உண்டாகும், தன்னம்பிக்கையும் முற்போக்கு சிந்தனையும் தங்களின் வாழ்க்கையில் பலமடங்கு முன்னேற்றங்களை வாரி வழங்கும், இதுவரை போராட்டத்தை சந்தித்து கொண்டிருந்தவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் தாக்கம் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனது உறவுகள் வழியிலான உதவிகளும் பொதுமக்கள் ஆதரவும் புதியநம்பிக்கையை தரும், இதனால் தங்களின் உழைப்பின் வேகம் அதிகரிக்கும் முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமாக அமையும், சனி பகவானின் 10ம் பார்வை லாப ஸ்தான வழியில் 100% விகித நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  2,7,8,11ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment