செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சுய ஜாதகம் என்றால் என்ன ? சுய ஜாதகத்தால் நமக்கு என்ன பயன் ? ( பாவக வலிமை )


 சுய ஜாதகம் என்பது அவரவர் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, துல்லியமாக கணிதம் செய்யப்படுவதாகும், இந்த குறிப்புகள் ஓர் ஜாதகரின் லக்கினம், ராசி, நட்ஷத்திரம் மற்றும் ஜாதகரின் ஜெனன கால திசா புத்திகள் பற்றிய விபரங்களை நாம் துல்லியமாக தெரிந்துகொள்ள உதவும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை ஓர் ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமை மற்றும் யோக அவயோக நிகழ்வுகளை நிர்ணயம் செய்கிறது என்றால் அது மிகையில்லை, ஒரு ஜாதகரை பற்றிய முழு விபரம் அறிய அவரது சுய ஜாதகத்தில் உள்ள பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை கருத்தில் கொண்டும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் மிக எளிதாக நிர்ணயம் செய்து விடலாம், அவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெற இருக்கின்ற பலாபலன்களை மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நாம் உணர்ந்து தெளிவாக அவர்களுக்கு கூறிவிட முடியும்.

சுய ஜாதகத்தில் 1,3,11ம் வீடுகள் ஜாதகரின் ஆரயோக்கியம், மனநிலை, புகழ், கீர்த்தி, செயல்பாடுகள், தன்னம்பிக்கை, இயக்க நிலை என்ற வகையிலும், சுய முயற்சி, வீரியம், வேகம், செயல் திறன், வெற்றி, பொறுப்பு, முன்னேற்றம், சுய சிந்தனை திறன், ஜாதகரின் தைரியம், விளையாட்டில் ஆர்வம், வீரம் மிக்க கலைகளில் தேர்ச்சி, சாகச விரும்பி, அறிய சாதனைகளை படைக்கும் வல்லமை, எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் யோகம்  என்ற வகையிலும், லாபம் அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, நேர்மை எண்ணங்கள், கருத்து ஒற்றுமை, யோகங்களை பரிபூர்ணமாக பெரும் அமைப்பு, மிதம்மிஞ்சிய நம்பிக்கை, உறுதி மிக்க செயல் பாடுகள், நீடித்த அதிர்ஷ்டம், சிறப்பு மிக்க குணாதிசயம், எதிர்ப்புகளை வெல்லும் வல்லமை என்ற வாகையிலும் சிறப்பு பலன்களை  தரும், சுய ஜாதகத்தில் 1,3,11ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் சுய முன்னேற்றத்தை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 5,9ம் வீடுகள் ஜாதகரின் பாரம்பரியம் சார்ந்த அறிவு திறன், சமயோசித புத்திசாலித்தனம், நுண்ணறிவு, அதிபுத்திசாலித்தனம், தனது பாரம்பரியம் சார்ந்து ஜாதகர் அனுபவிக்கும் யோகம், கலைகளில் தேர்ச்சி மற்றும் ஆர்வம், கல்வியில் தேர்ச்சி மற்றும் முதன்மை நிலையை பெறுதல், ஜாதகருக்கு வரும் இன்னல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் குலதெய்வ ஆசி, அறிவு சார்ந்த வழியிலான உழைப்பு திறன், தெய்வீக அனுக்கிரகம், உதவிகள் தேடிவரும் வாய்ப்பு, சூழ்நிலையை மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை என்ற வகையிலும், அறிவார்ந்த பெரியோர்களின் ஆசி, பித்ருக்கள் ஆசி, தெய்வீக அனுக்கிரகம், நல்ல கல்வி, கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, ஆய்வு சார்ந்த வெற்றிகள், மற்றவர்கள் வாழ்க்கையில் சுப மாற்றங்களை தரும் அமைப்பு, தனது பாரம்பரிய ஜீவனத்தை காக்கும் வல்லமை, பழமையை மறவாத குணம், நல்ல குரு, நல்ல ஆசான் அமையும் யோகம், சூழ்நிலை மாறினாலும் தன்னிலை மாறாமல் திகழும் வல்லமை, சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, தெய்வீக அனுக்கிரகத்தால் தானும் பலன் பெற்று மற்றவருக்கும் பலன்பெறுமாறு வாழும் யோக வாழ்க்கை என்ற வகையில் சிறப்பு பலன்களை தரும், சுய ஜாதகத்தில் 5,9ம் வீடுகள் வலிமை பெறுவது  ஜாதகரின் அறிவார்ந்த செயல்களை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 2,4,7,10ம் வீடுகள் ஜாதகரின் வருமானம், குடும்ப வாழ்க்கை, வாக்கு வன்மை, பேச்சு திறன், சம்பாதிக்கும் ஆற்றல், நிதி நிலை, தன்னுடைய வருமானத்தை சேமிக்கும் வல்லமை, சரியான திட்டமிடுதல், மக்களை தன்வசப்படுத்தல், அனைத்திலும் லாபம் பார்க்கும் வல்லமை, குடும்ப வாழ்க்கையை திறம்பட நடத்தும் யோகம், திறமையான வாதம், அதன் வழியில் பெரும் வருமானம் என்றவகையிலும், சொத்து சுகம், வண்டி வாகனம், நிலம் இடம் வீடு சார்ந்த சேர்க்கைகள், ஜாதகரின் குணம், ஜாதகரின் பொருளாதார நிலவரம், கையிருப்பு, நகை, ஆபரணம், அணியும் ஆடைகள் தரம், தோற்ற பொலிவு, எண்ணத்தின் வலிமை, சுக போகங்களை சுவீகரிக்கும் வல்லமை, தேடும் பொருள் சேரும் யோகம் என்ற வகையிலும், திருமணம்,  திருமணத்தால் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, வாழ்க்கை துணையின் ஆதரவு, நண்பர்கள் ஆதரவு, கூட்டாளிகளின் ஆதரவு, சக்தி மிக்க கூட்டாளி, மேற்கொண்டவர்கள் வழியிலான உதவிகள் மற்றும் முன்னேற்றம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் வசீகரம், அவர்கள் வழியிலான முன்னேற்றம் மற்றும் பதவி யோகம், வெளிநாடுகள் மற்றும் வெளியூர் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பணவரவு, சிறந்த வியாபார யோகம் என்ற வகையிலும், சிறப்பு மிக்க ஜீவன முன்னேற்றம், நிர்வாக திறன், பதவி யோகம், செய்யும் தொழிலை விரும்பி செய்யும் அமைப்பு, அதன் வழியிலான முன்னேற்றம், பதவி உயர்வு, சிறந்த ஜீவன வாழ்க்கை முறை, கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கை, தனது ஜீவன வழியிலான நிரந்தர முன்னேற்றம், அரசு பதவி, அரசு உதவி, தனிப்பட்ட வியாபர திறமைகள், ஜீவன வழியிலான முன்னேற்றங்கள் என்ற  வகையில் யோகங்களை தரும், சுய ஜாதகத்தில் 2,4,7,10 ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் பொருளாதர முன்னேற்றத்தை நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் 6,8,12ம் வீடுகள் ஜாதகரின் உடல் ஆரோக்கியம், குறுகிய கால தனவரவு, கடன் அதனால் பெரும் வருமானம், எதிரிகள் வழியிலான நன்மைகள், எதிர்ப்பவர் வழியிலான நன்மைகள், கடன் பெறுவது, கொடுப்பது மூலம் ஜாதகர் பெரும் யோக வாழ்க்கை, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, போட்டி பந்தயங்களில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, நீதியை பெரும் யோகம், சிறு சிறு ஆதாயங்களை அடிக்கடி பெரும் யோகம், விரைவாக குணம் பெரும் அமைப்பு, நோய் எதிர்ப்பு திறன், சத்ரு வழியிலான பெரும் முன்னேற்றம் என்ற வகையிலும், திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மாற்றும் பொதுமக்கள் வழியிலான தன சேர்க்கை, புதைபொருள் பொருள் யோகம் மண்ணிற்கு அடியில் உள்ள பொருட்கள் வழியிலான திடீர் தன சேர்க்கை, மனதிற்கும் அறிவுக்கும்  எட்டாத விஷயங்கள் வழியிலான தனசேர்க்கை மற்றவர்கள் செல்வத்தை ஆளுமை செய்யும் யோகம், நீண்ட ஆயுள், திடீர் என செல்வந்தன் ஆகும் யோகம்,  மருத்துவம் மற்றும் மருத்துவ துறை  சார்ந்த யோக வாழ்க்கை, ஆயுள் காப்பீடு மூலம் அதிர்ஷ்ட யோகம் என்ற வகையிலும், முதலீடுகள் அல்லது மூதாதையர் சொத்துக்கள் மூலம் பெரும் செல்வசேர்க்கையை அடையும் யோகம், மனநிம்மதியான வாழ்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் ஆதாயம், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி, சுக போக வாழ்க்கையினை ராசிக்கும் யோகம், நல்ல உறக்கம், மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் வல்லமை, கனவுகள் வழியிலான லாபங்கள், பெரிய சொத்துக்களை ஆளுமை செய்யும் யோகம், திடீரென வரும் பெரும் செல்வம் என்ற வகையில் நன்மைகளை தரும், 6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகரின் அபரிவிதமான திடீர் செல்வசேர்க்கையை  நிலை நிறுத்தும்.

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெறுவதால் ஜாதகர் பெரும் யோகங்களை பற்றி இன்றைய சிந்தனைக்கு " ஜோதிடதீபம் " பதிவு செய்திருக்கிறது .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக