திங்கள், 17 ஏப்ரல், 2017

ராகு பகவான் தனது திசையில் தரும் பலாபலனும், சுய ஜாதகத்தில் நின்ற இடத்திற்கு தரும் யோகமும் !



 சுய ஜாதகத்தில் ராசியில் வலிமை பெற்ற ஓர் கிரகம் ( ஆட்சி,உச்சம் அல்லது  சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு தான் நின்ற இடத்தில் வலிமை பெறுவது ) தனது திசையில் சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுபயோகங்களை தரும் என்று கருதுவதும், தான் நின்ற பாவக பலனையே தரும் என்று கருதுவதும் முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானது, இதை போன்றே சுய ஜாதகத்தில் ராசியில் வலிமை அற்ற ஓர் கிரகம் ( நீசம்,பகை அல்லது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு தான் நின்ற இடத்தில் வலிமை அற்று இருப்பது ) தனது திசையில் சம்பந்த பட்ட ஜாதகருக்கு அவயோகங்களை தரும் என்று கருதுவதும், தான் நின்ற பாவக பலனையே தரும் என்று கருதுவதும் முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானது, இதற்க்கு கீழ்கண்ட ஜாதகத்தை உதாரணமாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : விருச்சகம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து 5ம் பாவகத்தில் ( மீனத்தில் )  மிகவும் வலிமையுடன் அமர்ந்து இருக்கும் ராகு பகவான், தனது திசையில் ஜாதகருக்கு தந்த பலாபலன்கள் என்ன ? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! பொதுவாக சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் தான் அமர்ந்த பாவக பலனை தரும் என்ற கருத்து உள்ளது, இது சுய ஜாதகத்தில் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யும் விஷயமாகும், மேற்கண்ட ஜாதகருக்கு மீனத்தில் ( 5ல் ) அமர்ந்த ராகு பகவான் தனது திசையில் ( 12/03/1969 முதல் 13/03/1987 வரை ) தான் அமர்ந்த பாவக பலனை ஏற்று நடத்தவில்லை, அதற்க்கு மாறாக 2,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 8,12ம் பாவக தொடர்பு வழியிலான இன்னல்களை ஜாதகருக்கு வாரி வழங்கியுள்ளது.

ராகு திசை காலத்தில் ஜாதகருக்கு குழந்தை மற்றும்  இளமை பருவம் என்பதாலும், வளரும் சூழ்நிலையில் கடுமையான இன்னல்களையும், பெற்றோர் வழியிலான ஆதரவின்மையையும், சுகபோக வாழ்க்கையில் தடைகளையும், கல்வியில் கடுமையான நெருக்கடிகளையும், உடல் தொந்தரவுகள் மற்றும் மருத்துவ செலவினங்களையும் ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, குறிப்பாக பொருளாதார ரீதியான கடுமையான இன்னல்களை ஜாதகரும் ஜாதகரின் குடும்பமும் ஏக காலத்தில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தந்தது, ஜாதகருக்கு ராகு பகவான் வலிமை பெற்று 5ம் பாவகத்தில் அமர்ந்தாலும் தனது திசையில் வலிமை அற்ற பாவக  பலனை ஏற்று நடத்தியது ( 2,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 8,12ம் பாவக பலனை தனது திசை முழுவதும் தந்தது ) ஜாதகருக்கு 2,4,8,10,12ம் பாவக வழியிலான இன்னல்களை கடுமையாக தந்தது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

சுய ஜாதகத்தில் ஓர் கிரகம் தான் அமர்ந்த பாவகத்தின் பலனையே தரும் என்று கருதுவது சுய ஜாதக வலிமையை பற்றியும், நவகிரகங்கள் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு நிலையை பற்றி சிறிதும் அறியாமல் சொல்லும் விஷயம் என்பதை பதிவு செய்ய " ஜோதிடதீபம் " கடமைப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஜாதகருக்கு ராகு திசைக்கு அடுத்து வந்த குரு திசை ( குரு லக்கினத்திற்க்கு  10ல் நின்று இருக்கின்றார் ) ஜாதகருக்கு தான் அமர்ந்த ஜீவன ஸ்தான பலனை தரவில்லை ( சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ) அதற்க்கு மாறாக ஜாதகத்தில் வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை தனது திசை முழுவதும் ஏற்று நடத்தி ஜாதகருக்கு வெளிநாடு, வெளியூர், நண்பர்கள், வாழ்க்கை துணை, கூட்டு முயற்சி வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், மேலும் ஜாதகர் குரு திசை காலத்தில் அபரிவிதமான யோக பலனை களத்திர ஸ்தான வழியில் இருந்து  அனுபவித்தார் என்றால் அது மிகையில்லை.

குரு திசைக்கு அடுத்து தற்போழுது நடைபெறும் சனி திசையும் ஜாதகருக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வாழ்க்கையில் 7ம் பாவக வழியிலான சுபயோகங்களை தொடர்ந்து அனுபவிக்கும் நிலையை தந்து கொண்டு இருக்கிறது என்பது அவரது சுய ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும், ஆக ஜாதகர் தனது 19வது வயது முதல் தற்போழுது வரை முழு வீச்சில் களத்திர ஸ்தான பலனை அனுபவித்து கொண்டு இருப்பது, ஜாதகரின் வாழ்க்கையை சிறப்பு மிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது கண்கூடான உண்மை.

அடுத்து வரும் புதன் திசை, புதன் ஜீவன ஸ்தானத்தில் நின்றாலும் வலிமையற்ற பாதக ஸ்தான பலனையும் ( 6,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் ) வலிமை பெற்ற வீர்ய ஸ்தான பலனையும் ( 1,3ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் ) ஏக காலத்தில் பாதக ஸ்தான வழியில் இன்னல்களையும், வீரிய ஸ்தான வழியில் நன்மைகளையும் ஜாதகருக்கு தருவது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் ஓர் கிரகம்  தான் நின்ற பாவக பலனை தனது திசையில் தரும் என்ற கருத்து சுய ஜாதக ஆய்வுக்கு பிறகே முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும், சுய ஜாதகத்தில் நவ கிரகங்கள் எங்கு அமர்ந்து இருந்தாலும் சரி தனது திசையில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை தெரிந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்துக்கொள்ள இயலும், சரியான திட்டமிடுதல்கள் மூலம் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றங்களை பெற இயலும் என்பதால், சுய ஜாதக வலிமை உணர்வு ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியம் என்பது  "ஜோதிடதீபம்" கூறும் கருத்தாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக