பின்தொடர...

Thursday, April 27, 2017

சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மகரம் !சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை )  கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான்,  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!

தனுசு :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பத்தாம் ராசியான மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இனிவரும் இரண்டரை வருடம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்சார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், மகர லக்கின அன்பர்களுக்கு கோட்சார ரீதியாக வழங்கும் பலாபலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், தர்மம் ஒற்றை காலில் நின்று, கால்பங்கு பரிபாலனம் செய்யும் கலியுகத்தில், தான் மட்டும் முழு அளவிலான தர்மத்தை உறுதியுடன் போற்றி நடக்கும் மகர லக்கின அன்பர்களுக்கு, இதுவரை லாப ஸ்தானத்தில் நின்று சுபயோகங்களை வாரி வழங்கிய சனி பகவான், விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் காலம் சற்று  இன்னல்களை மகர லக்கின அன்பர்களுக்கு தர கூடும், குறிப்பாக மனநிம்மதி இழப்பு, குழப்பம், தெளிவற்ற சிந்தனை, கல்வியில் தடை, முதலீடுகளில் திடீர் இழப்பு, நல்ல உறக்கமின்மை, பெரியோர் ஆதரவு இன்மை, தெய்வீக அனுக்கிரகம் இன்மை, செய்யும் காரியங்களில் தடையை, அவசர கதியில் செய்யும் காரியங்கள் பெரும் தோல்வியையும், நஷ்டத்தையும் தர கூடும், இருப்பினும் தங்களின் நம்பிக்கையும், கடின உழைப்பும் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரும், முடிந்த அளவு தங்களின் குடும்பத்தில் உள்ள  பெரிய மனிதர்களின் ஆதரவை பெற்று அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுங்கள், வரும் எதிர்ப்புகள் யாவும் ஆதவனை கண்ட பனிபோல் விலகிவிடும், மேலும் எதிர்ப்பால் அமைப்பினரிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நலம் தரும், தங்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பார்கள், மேலும் தேவையற்ற அவப்பெயரை தங்களுக்கு ஏற்படுத்த கூடும் என்பதால் அதிக கவனம் தேவை, தொழில் ரீதியாக அதிக முதலீடுகளை  தவிர்ப்பது நலம் தரும் மேலும் முதலீடுகளை மிக சிறப்பாக கையாள வேண்டும் இல்லை எனில் மிகுந்த பேரிழப்பை தாங்கள் சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடும், மற்றவர் விஷயங்களில் தாங்கள் தலையீடு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், புலன் இன்பங்களில் நாட்டத்தை தவிர்த்து, சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நேரமிது, சனிபகவானின் விரைய ஸ்தான சஞ்சாரம் தங்களின் மன நிம்மதியை சற்று அசைத்து பார்க்கும்.

5ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு புத்திரர் சார்ந்த சில சிரமங்களை தரக்கூடும், தனது பூர்வீகத்தில் இருந்து வேறு இடம் பெயர்ந்து, ஜீவனம் செய்யும் சூழ்நிலையை தரும், குலதெய்வ ஆசியை பெற ஜாதகர் கடின முயற்சியை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை தரும், உதவி செய்ய யாரும் அற்ற  நிலையையும், தனியாக போராட வேண்டிய நிலையை தரக்கூடும், எதிர்ப்புகளை சமாளிக்க தாங்கள் சற்று கடுமையாக போராட வேண்டிவரும், சுபகாரிய செலவினங்கள் அதிகரிக்கும், அறிவு திறனும், செயல்படும் வேகமும் வெகுவாக குறையும், சட்ட சிக்கல்கள் மூலம் பணவிரயம், செய்யும் காரியங்களில் போராட்டம் என்ற நிலையில் இன்னல்களை தரக்கூடும், சுய சிந்தனை மற்றும் அறிவு திறன் சரியான நேரத்தில் தங்களுக்கு பலன் தாராது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு நலம் பெற வேண்டிய நேரமிது, சனியின் சத்ரு ஸ்தான பார்வை, தங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கடுமையாக பாதிக்கும், வருமானம் மற்றும் புத்திசாலித்தனம் மட்டுப்படும்.

6ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு குறுகியகால வெற்றிகளை தங்கு தடையினின்றி தருவார், கடன் பெறுவது கொடுப்பது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை நல்கும், எதிரிகள் தரும் இன்னல்கள் தங்களுக்கு சாதகமான வெற்றிகளை வாரி வழங்கும், பயணங்கள் மூலம் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வேலையாட்கள், தொழிலாளர்கள் மூலம் தங்களின் முன்னேற்றம் சிறப்பாக  அமையும், சுய தொழில் புரிவோருக்கு ஏற்றமிகு பொருளாதார வசதிவாய்ப்புகளை வாரி வழங்கும், உடல் நலம் மனநலம் சிறப்பாக அமையும், கூட்டு வியாபாரத்தில் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், எதிரிகள் தங்களின்  வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிவிடும் சூழ்நிலையை தரும், பொது வாழக்கையில் உள்ளோருக்கு மிக சிறப்பான நேரமிது, திடீர் மக்கள் செல்வாக்கு, அரசு பதவி, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள்  வந்து சேரும், எதிர்காலத்திற்கான பொருளாதார உதவிகள் தங்களை தேடி வரும், மற்றவர்கள் தனம் தங்களின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகளை வாரி வழங்கும், சனிபகவானின் 7ம் பார்வை தங்களுக்கு சத்ரு ஸ்தான  வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் தரும். 

9ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு சற்று சிரமங்களை அதிக அளவில் தரக்கூடும், குறிப்பாக மற்றவர்கள் விஷயங்களில் ஆர்வம் செலுத்தினால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், சந்தேகங்கள் மற்றும் நம்பிக்கை இன்மை தங்களின் வாழ்க்கையை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும், பெரியோர் வார்த்தைகளை மதிக்காமல் செய்யும் காரியங்கள் எதிர்பாராத சிரமங்களை தங்களுக்கு தரக்கூடும், நிலையான மனம், திட சிந்தனை தங்களுக்கு இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதை மாறிவிடும், எதிர்பாராத இன்னல்களை தாங்கள் பெரிய அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக தங்களின் பெயர் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வது  தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பிக்கும், வரும் இன்னல்களை கருத்தில் கொள்ளாமல், முழு வீச்சில் காரியமாற்றுவது தற்போதுள்ள சூழ்நிலையை மாற்றி தங்களின்  வாழ்க்கையில், சுபயோகங்களை நல்கும், எதிர்காலம் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை வாரி வழங்கும், சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால், அதிக கவனம் தேவை, சரியான திட்டமிடுதல்கள் தங்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக சுபயோகங்களை  வாரி வழங்கும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  12,5,6,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மகர லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :

( 26/01/2017 முதல் 21/06/2017 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும்.

( 21/06/2017 முதல் 26.10.2017 ) வரை
சனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.

( 26/10.2017 முதல் 24/01/2020 ) வரை
சனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment