செவ்வாய், 11 ஏப்ரல், 2017

சர்ப்ப தோஷம் ( ராகு கேது ) கூட்டு திசை ( ஏகதிசை நடப்பு ) திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ?


 திருமணம் பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தம், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சனி நின்ற பலன், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், ஏக திசை பொருத்தம், சனிசெவ்வாய் சேர்க்கை, குரு பலம், 10 பொருத்த நிர்ணயம் போன்றவை கடந்த தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும், தற்போழுது உள்ள தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு இது சிறிதும் பொருந்தாது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்வது நல்லது, ஏனெனில் கடந்த தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு பெரும்பாலும் 20 முதல் 30 சதவிகித அன்பர்களுக்கே சுய ஜாதகமும் , பிறந்த குறிப்பும் இருந்தது ( பிறந்த தேதி , நேரம் , இடம் ) கடந்த தலைமுறையில் ஜாதகம் இல்லாத அன்பர்களுக்கு அவர்களின் பெயரின் முதல் எழுத்தை அடிப்படையாக கொண்டு நாம நட்ஷத்திரம் மற்றும் ராசி அறியப்பட்டது , திருமண பொருத்தமும் நாம நட்ஷத்திரம் மற்றும் ராசியை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது, இது அவர்களது வாழ்க்கையில் சகல செல்வங்களையும் தந்ததா என்றால் கேள்விக்குறியே, ஒருவேளை  நாம நட்ஷத்திரம் மற்றும் ராசியை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட  திருமணம் வாழ்க்கை சிறப்பாக அமைந்து இருப்பின் " காகம் அமர பனம்பழம் விழுந்த கதை " சிறப்பாக அமையவில்லை எனில் விதி விட்ட வழி என கடந்த தலைமுறையை சார்ந்த ஆணும் பெண்ணும் சகிப்பு தன்மையுடன் இல்லற வாழ்க்கையை நடத்தினர், அதற்க்கு கூட்டு குடும்பமும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது.

ஆனால் தற்பொழுது உள்ள தலைமுறையினர் அப்படிப்பட்ட சகிப்பு தன்மையுடனானா வாழ்க்கையை வாழ தயாராக இல்லை என்பதை கடந்த 15  வருடங்களில் நீதிமன்றத்தில் குவிந்துகொண்டு இருக்கும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை வைத்து நாம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடியும், மேலும் விவாகரத்து கோரும் அன்பர்களின் ஜாதக பொறுத்த நிலையை பார்க்காமலா ? அவர்களின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து இருப்பார்கள் ? நிச்ச்யம் இல்லை, அப்படி இருக்க ஏன் இந்த பிரிவு நிலை ஏற்படுகிறது ? ஜோதிடம் தவறா ? ஜோதிடர்கள் கண்ட பொருத்தம் தவறா ? என்ற கேள்விகள் பல ஏற்படுவது இயற்க்கை, இதற்கான உண்மை காரணத்தை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

மாற்றம் ஒன்றே மாறாதது, அதற்க்கு ஆய கலைகள் 64 ம் பொருந்தும் , இதற்க்கு  ஜோதிட சாஸ்த்திரமும் விதிவிலக்கல்ல, கடந்த தலைமுறையினர் திருமண வாழ்க்கைக்கு பொருத்தம் கண்ட நாம நட்ச்சத்திர பொருத்தம், ராசி பொருத்தம்,ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சனி நின்ற பலன், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், ஏக திசை பொருத்தம், சனிசெவ்வாய் சேர்க்கை, குரு பலம்  ஆகியவற்றை தற்போழுது  மாற்றம் பெற்றுள்ள தற்கால தலைமுறையினரிடம் பரிசோதிப்பதே அடிப்படை காரணமாக அமைகிறது, மேலும் மேற்கண்ட விஷயங்களை தற்போழுது உள்ள தலைமுறையினரிடம் பொருத்திப்பார்ப்பது என்பது ? கண்ணை கட்டிக்கொண்டு தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுவதற்கு சமமானது, ஏனெனில் மாற்றங்கள் இன்றைய இளைய தலைமுறையினரை  வெகுவாக மாற்றிவிட்டது.

அப்படிப்பட்ட இளைய தலைமுறையினருக்கு, கடந்த தலைமுறையினர் பயன்படுத்திய திருமண பொருத்த நிர்ணயத்தை, தற்கால தலைமுறையினரிடம்  பயன்படுத்துவது முற்றிலும் பொருந்த்தாத விஷயம் என்பதை  அனைவரும் கருத்தில் கொள்வது நலம்தரும், இன்றைய தலைமுறையை சார்ந்த அன்பர்களுக்கு பெரும்பாலும் அனைவர்க்கும் சுய ஜாதகம் /உண்டு, பிறந்த குறிப்பு தெளிவாக வைத்து இருக்கின்றனர், மேலும்  நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்யும் ஜோதிட பிரம்மாக்களும் புவியில் உள்ளனர் ( இது எவ்வளவு மேசமான விளைவை தரும் என்பது எவருக்கும் புரிவதில்லை, இயற்கையாக குழந்தை பிறப்பை இறைஅருள் நிர்ணயம் செய்வதே சகல நன்மைகளையும் தரும் ) எனவே இன்றைய கால சூழ்நிலையில் இளைய தலைமுறையினருக்கு திருமண பொருத்தம் காணும் பொழுது அவர்களது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையை கருத்தில்கொண்டும்  ( பிறந்த தேதி, நேரம், இடம் ) வரன் வதுவுக்கு தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை கருத்தில்கொண்டும் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வதே, சம்பட்ட தம்பதியரின் வாழ்க்கையில் நன்மைகளையும் யோகங்களையும் தரும், இதற்க்கு மாறாக  இன்றைய தலைமுறைக்கு சற்றும் பொருந்தாத நட்ச்சத்திர பொருத்தம், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், சனி நின்ற பலன், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம், ஏக திசை பொருத்தம், சனிசெவ்வாய் சேர்க்கை, குரு பலம் என்பதை கூறி கற்பனையில் பொருத்தம் கண்டு, திருமண பொருத்தம் நிர்ணயம் செய்வது என்பது ஜோதிட சாஸ்திரம் தற்பொழுது பெற்றுள்ள புதிய மாற்றங்களை பற்றியும், புதிய பரிமாணங்கள் பற்றியும் அறியாமல் சொல்லும் கற்பனை என்பதை தவிர உண்மை இல்லை.

தற்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் அடிப்படையில் திருமண பொருத்தம் நிர்ணயம் செய்யும் பொழுது, அவர்களது வாழ்க்கை பதினாறு வகை செல்வங்களையும் பரிபூர்ணமாக பெற்று வாழையடி வாழையாக செழித்து வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, இதை ஓர் வரன் வது சுய ஜாதகத்தை உதாரணமாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : ஸ்வாதி 2ம் பாதம்



லக்கினம் : கன்னி
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்

பாவக வலிமை அடிப்படையிலான திருமண பொறுத்த நிர்ணயம் :


மேற்கண்ட வரன் வது ஜாதகத்தில் வதுவின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் உள்ளது, வரனின் ஜாதகம் சற்று வலிமை குறைவாக காணப்படுகிறது, பொருத்தம் சார்ந்த ஆலோசணை வேண்டியவர் வரன் என்பதால் அவர் வாழ்க்கை சிறப்பாக அமைய மேற்கண்ட வதுவை திருமணம் செய்துகொள்வதே ஜாதகருக்கு சிறப்பான இல்லற வாழ்க்கையை  வழங்கும்,

மேலும் தற்போழுது வரனுக்கு நடைபெறும் குரு திசை விரைய ஸ்தான பலனை நடத்துவதும், எதிர்வரும் சனி திசை பாதக ஸ்தான பலனை நடத்துவதும் ஜாதகருக்கு உகந்தது அல்ல, மேற்கண்ட வதுவுக்கு நடைபெறும் சனி திசை பாக்கிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கும், ஜாதகியை மணந்துகொள்ளும் வாழ்க்கை துணைக்கும் சிறப்பான நன்மைகளை தரும்.

குறிப்பு :

மேற்கண்ட முறையில் சுய ஜாதக பாவக வலிமைக்கும், நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் தரும் நன்மை தீமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வரன் மற்றும் வதுவுக்கு சுய ஜாதகத்தில் உள்ள வலிமை நிலையை உணரவைத்து திருமணம் நடத்திவைப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் சுபயோகங்களை நல்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக