பின்தொடர...

Thursday, August 31, 2017

ராகு திசை தம்பதியருக்கு ( கணவன் மனைவிக்கு ) ஏக காலத்தில் நடைபெற்றால் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படுமா ?கேள்வி :

கணவன் மனைவிக்கு ஒரே நேரத்தில் ராகு திசை நடைமுறைக்கு வந்தால் தம்பதியரின் இல்லற வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், பிரிவு, துன்பம், உடல் நிலை பாதிப்பு மற்றும் தாங்க இயலாத கஷ்டங்களை தரும் என்று கூறுகின்றனர், எங்களது இருவரது சுய ஜாதகத்தையும் ஆய்வு செய்து இது உண்மையா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறோம், முறையான ஆலோசனை மற்றும் அதற்க்கான தீர்வை பெற விரும்புகிறோம், நன்றி.


பதில் :

 எந்த ஓர் அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் கூறப்படும் கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது தங்களின் வினாவில் உள்ள சாராம்சம், ஒருவரின் சுய ஜாதகப்படி நடைபெறும் திசா புத்திகள் தரும் பலாபலன்கள் என்பது சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமையை ஏற்று நடத்தும் என்ற ஓர் விஷயம் அறியாத நிலையில், மேற்கண்ட குழப்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, தங்களது இருவரது சுய ஜாதகத்திலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை தரும் பலாபலன்கள் என்ன ? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


மனைவி ஜாதகத்தில் நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள்  ( 13/05/2005 முதல் 13/05/2023  வரை ) :

ராகு பகவான் தனது திசையில் 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஆயுள் பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தருவது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை ஜீவன வழியில் இருந்து வழங்கும், குறிப்பாக ஜாதகி தனது வழக்கை துணை வழியில் இருந்து ஓர் நல்ல தொழில் வாய்ப்புகளையும், அவர் வழியிலான வருமானங்களையும் பொருளாதார சேர்க்கைகளையும் வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் ராகு களத்திர பாவகத்தில் ( பாவக நிலையில் ) வலிமை அற்று அமர்ந்து இருந்த போதிலும், தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை ஆயுள் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், தற்பொழுது நடைபெறும் ராகு திசை ஜாதகிக்கு தனது கணவன் வழியில் இருந்து சுப யோகங்களையும், தொழில் வாய்ப்புகளில் வெற்றிகளையும் வாரி வழங்கும், திடீர் முன்னேற்றங்களை ஜாதகி தொழில் வழியில் எதிர்பாராத நேரத்தில் பெறுவார், குறிப்பாக மருத்துவம் மற்றும் காப்பீடு துறை சார்ந்த தொழில் வழியில் இருந்து அபரிவிதமான நன்மைகளை தரும், ராகு திசை நடைபெற்ற போதிலும் ஜாதகிக்கு சுபயோக பலன்களே நடைமுறைக்கு வருவது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும், எனவே ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை சிறப்பான நன்மைகளை கணவன், தொழில் வழியில் இருந்து நன்மைகளை தருவது தெளிவாகிறது.


கணவன் ஜாதகத்தில் நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள்  ( 13/05/2005 முதல் 13/05/2023  வரை ) :

 ராகு பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 2,8ம் வீடுகள் ஆயுள்  ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2,8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு இன்னல்களை தரும், குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் வாக்குவாதம், வருமான பாதிப்பு, திடீர் செலவினங்கள், மருத்துவ செலவுகள், விபத்து தனம் சார்ந்த இழப்புகள் என்ற வகையில் இன்னல்களை தரும், 8ம் பாவக வழியில் இருந்து நீண்ட ஆயுள், உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், வாழ்க்கை துணை வழியிலான செலவினங்கள் என்ற வகையில் சிக்கல்களை தந்த போதிலும், தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி, அடுத்து வரும் செவ்வாய் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் ராகு திசையினால் ஏற்படும் இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது, சந்திரன் புத்தி வலிமை பெற்ற பாக்கிய ஸ்தான பலனையும், அடுத்து வரும் செவ்வாய் புத்தி வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான யோக பலனை வாரி வழங்கும், ஜாதகருக்கு ராகு திசை பாதிக்கப்பட்ட 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்திய போதிலும், தற்போழுது நடைமுறையில் உள்ள புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால்,  இல்லற வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் ஏற்பட்ட வாய்ப்பு இல்லை என்பதே உண்மை நிலை.

மேலும் ஜாதகருக்கு ஆயுள் பாவகம் நீர் தத்துவ ராசி என்பதனால் மனம் சார்ந்த அழுத்தம் மற்றும் போராட்டங்களை மட்டும் தரும் என்பதால், பெரிய பாதிப்புகள் ஏதும் ஜாதகருக்கு இருக்காது, குறிப்பாக தற்போழுது நடைபெறும் சந்திரன் புத்தி  இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தர சிறிதும் வாய்ப்பில்லை என்பதால் ராகு திசை பாதிப்பை பற்றி தம்பதியர் எந்த கவலையும் கொள்ள தேவையில்லை.

அடுத்து வரும் குரு திசை தம்பதியருக்கு  தரும் பலாபலன்கள்  :

எதிர்வரும் குரு திசை ஜாதகிக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக  பலனை ஏற்று நடத்துவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து கடுமையான நெருக்கடிகளை தரக்கூடும், ஜாதகருக்கு எதிர்வரும் குரு திசை 4,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், எனவே தம்பதியரின் வாழ்க்கையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருப்பினும், கடுமையான துன்பங்கள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை, தாம்பத்திய வாழ்க்கையில் பிரிவும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதனை தம்பதியர் இருவர் ஜாதகத்திலும் உள்ள களத்திர ஸ்தான வலிமை,  பூர்வ புண்ணியம் மற்றும் பாக்கிய ஸ்தான வலிமை தெளிவு படுத்துகிறது, எனவே தம்பதியர் இருவரும் வரும் பிரச்சனைகளுக்கு பெரியோர் வழங்கும்  தீர்வை நாடி நலம் பெறுக " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment