செவ்வாய், 30 ஜனவரி, 2018

தொழில் ஸ்தான வலிமையின் அடிப்படையில் சரியான தொழில் தேர்வை செய்வது எப்படி ? சனி திசை தரும் பலன்கள் என்ன ?


 தொழில் ஒருவருக்கு இயற்கையாக அமைவதென்பது சுய ஜாதகத்தில் ஜீவன பாவக வலிமையின் அடிப்படையில் நிகழும் ஓர் விஷயமாகும், நடைபெறும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான தொடர்பை பெற்று பலாபலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு தொழில் ரீதியான தன்னிறைவான முன்னேற்றங்களை பரிபூர்ணமாக வாரி வழங்கும், நடைபெறும் திசை வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்துமாயின், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான நன்மைகள் பெரிய அளவில் நடைமுறைக்கு வாராது, கீழ்கண்ட ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : ரிஷபம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : பூரட்டாதி 2ம் பாதம்

ஜாதகருக்கு 2,6,9ம் வீடுகளை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகரின் சுய ஜாதக வலிமையை நமக்கு தெளிவு படுத்தும், குறிப்பாக 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாகும், எனவே ஜாதகர் தொழில் வழியில் இருந்து மிக அபரிவிதமான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவதை உறுதிப்படுத்துகிறது, ஜாதகரின் சுக ஸ்தானம் பெரும் பகுதி ஸ்திர நெருப்பு ராசியில் அமைவதும், ஜீவன ஸ்தானம் பெரும் பகுதி ஸ்திர காற்று ராசியில் அமைவதும் ஜாதகருக்கு கிடைத்த புதையல் யோகம் என்றால் அது மிகையில்லை, ஜாதகரின் ஜீவனம் மேற்கண்ட இரண்டு தத்துவங்களை சார்ந்து அமையும் பொழுது ஜாதகரின் தொழில் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக அமைந்துவிடும்.

ஜாதகரின் சுக ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடாகவும், ஸ்திர நெருப்பு ராசியான சிம்மராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகர் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் சிறப்பான வெற்றிகளை பெற உதவிபுரியும் ஜாதகர் கட்டிடக்கலை, வண்டிவாகன தொழில் நுட்பம், மின் சாதனம் தயாரிப்பு அல்லது பராமரிப்பு, நுண் கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் அபரிவிதமான வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தரும், மேலும் ஜாதகரின் ஜீவன ஸ்தானம் காலபுருஷ தத்துவ அமைப்பைப்பிற்கு 11ம் ராசியான கும்ப ராசியில் முழுவதும் வியாபித்து நிற்பது ஜாதகரின் அதிர்ஷ்டம் ஜாதகர் செய்யும்  தொழில் வழியில் இருந்து அபரிவித நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும், தெளிவான சிந்தனை, சிறந்த அறிவு திறன், முற்போக்கு சிந்தனையுடனான யோக வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், தொழில் நுட்ப அறிவு திறனை வியாபாரமாக்கும் யுக்தி என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

 ஜாதகருக்கு  சிம்மமும், கும்பமும் வலிமை பெற்று இருப்பது அறிவார்ந்த செயல்கள் மற்றும் சமயோசித புத்திசாலித்தனம் மூலம் வாழ்க்கையில் சகலவித அதிர்ஷ்டங்களையும் தான் செய்யும் ஜீவன வழியில் இருந்து ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை கொண்டவர் என்பதை மிக துல்லியமாக தெளிவுபடுத்துகிறது , நடைபெறும் சனி திசை ஜாதகருக்கு தரும் பலாபலன்களை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

சனி திசை தரும் பலன்கள் : ( 14/01/2001 முதல் 15/01/2020 வரை )

ஜாதகருக்கு தற்போழுது  நடைமுறையில் உள்ள சனி திசை 9ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 9ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும், 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5ம் பாவக வழியில் இருந்து அபரிவிதமான சுபயோகங்களையும் வழங்கி கொண்டு இருப்பது ஜாதகர் 5ம் பாவக வழியில் இருந்துமட்டும் சிறப்பான நன்மைகளை பெறுவார் என்பதை தெளிவு படுத்துகிறது, எனவே ஜாதகருக்கு சனி திசை நல்ல கல்வி அறிவை சிறப்பாக வாரி  வழங்கி இருக்கும், இதன் அடிப்படியிலான சமயோசித புத்திசாலித்தனம் ஜாதகருக்கு சிறப்பான வெற்றிகளை வழங்கி இருக்கும், ஜாதகர் மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்து அதன் வழியிலான துன்பங்களை வெகுவாக அனுபவித்திருக்கக்கூடும் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

இருப்பினும் தற்போழுது நடைமுறையில் உள்ள சனி திசை குரு புத்தி ( 03/07/2017 முதல் 15/01/2020 வரை ) ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோக பலாபலன்களை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது, ஜாதகருக்கு ஜீவன ரீதியாக  ஓர் சிறப்பான ஆரம்பத்தை வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஜாதகர் இதை உணர்ந்து செயல்படுவது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தனக்கு வரும் நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்று சிறப்பான முன்னேற்றங்களை காண்பது மிக மிக அவசியமாகிறது.

எதிர்வரும் புதன் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதால், தற்போழுது ஜாதகருக்கு வரும் நல்ல ஜீவன வாய்ப்புகளை ஏற்பதே நன்மையை தரும், குறிப்பாக ஜாதகருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் ஜீவன வாய்ப்புகளை தவறாமல் கைப்பற்றி, எதிர்வரும் புதன் திசை தரும் "களத்திர ஸ்தான" பலாபலனை பரிபூர்ணமாக அனுபவிப்பதே புத்திசாலித்தனம், வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

புதன், 24 ஜனவரி, 2018

ஜாதக பலாபலன் அறிய லக்கினத்திற்க்கு முக்கியத்துவம் தருவதேன் ?



 ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குவது சுய ஜாதகம், சுய ஜாதகத்தை இயக்குவது ஜென்ம லக்கினம் எனும் முதல் பாவகம் என்றால் அது மிகையில்லை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டே மற்ற பாவகங்களின் வலிமை அல்லது வலிமை அற்ற நிலை நிர்ணயம் செய்யப்படுகிறது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு லக்கினம் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை மிக எளிதாக பெறுவார், லக்கினம் பாதிக்கப்பட்டு இருப்பின் ஜாதகரின் வாழ்க்கை சற்று கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், லக்கினம் பாதிப்படைவது என்பது 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவதும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு லக்கினம் வலிமையற்ற தன்மையை பெறுவதற்கு காரணமாக அமையும்.

 ஜென்ம லக்கினம் ஒருவரின் ஜாதகத்தில் 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானதல்ல, ஏனெனில் ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை சுவீகரிப்பதென்பது இயலாத நிலையை தரும், ஜாதகருக்கு மற்ற பாவக வழியில் இருந்து வரும் சுபயோகங்களை உதறித்தள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், ஜாதகருக்கு லக்கினம் சத்ரு ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு உடல் நலக்குறை, நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, கடன், எதிரி தொந்தரவு, எதிர்மறை எண்ணங்கள் மூலம் வாழ்க்கையில் தோல்வி, தனது உடலையும் மனதையும் தானே பாதிப்பிற்க்கு ஆளாக்கி கொள்ளும் மனநிலை என்ற அமைப்பில் இன்னல்களை தரும், ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சில விஷயங்களில் திடீர் வெற்றிகளை தந்த போதிலும், விபத்து, திடீர் இழப்பு, எதிர்பாராத பொருளாதார சிக்கல் என்ற வகையில் இன்னல்களை தரும், மருத்துவ செலவினங்கள் தொடர் பொருளாதர சிக்கல்களை அதிகரிக்கும், விரைய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் மனம் சார்ந்த போராட்டங்களை அதிகரிக்கும், ஜாதகருக்கு வரும் பேரிழப்புகள் மீள இயலாத துன்பத்தை தரும், நம்பிக்கை இன்மையும், மனோதைரியமும் பெரிய பாதிப்பை தர கூடும், பொருளாதார சிக்கல்கள் பெரும் நெருக்கடிகளை தரும் எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் மேற்கண்ட 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு  பெறுவது என்பது ஜாதகரின் வாழ்க்கையை மிகுந்த சிரமங்களுக்கு ஆளாக்கும்.

 லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதுதென்பது, ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் கடுமையான இன்னல்களை தருவதுடன், பேரிழப்புகளையும், பெரும் நஷ்டங்களையும் தரும், குறிப்பாக ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் வெறும் கனவாகவே மாறிவிட வாய்ப்பு அதிகம் தெளிவற்ற சிந்தனைகள், வீண் கற்பனைகள், முரண்பட்ட வாழ்க்கை முறை, எதிர்ப்புகளை அதிக அளவில் சந்திக்கும் சூழ்நிலை, பொறுப்பற்ற அணுகுமுறை, உடல் மன வலிமையற்ற தன்மை, சுய நலம், பொறாமை, பிற்போக்கு தனமான சிந்தனை, குற்றம் குறை காணும் மனநிலை, சரியான கோணத்தில் புரிந்துகொள்ள இயலாத மனஇயல்பு, சமயோசித அறிவுத்திறன் இல்லாமை, போதை பொருட்கள், லாகிரி வஸ்துக்களுக்கு அடிமையாகும் தன்மை என ஜாதகரை மீள இயலாத துயரத்தில் ஆழ்த்தும் ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் மட்டுமல்ல லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பானததல்ல, எனவே சுய ஜாதகத்தில் வீடுகள் தாம் தொடர்பு பெரும் பாவக வழியிலான பலாபலன்களையே நடைமுறைக்கு கொண்டுவரும் என்பதால் சுய ஜாதகத்தில் லக்கினம் அதிமுக்கியத்துவம் பெறுகின்றது, இதற்க்கு நல்ல உதாரணமான 2 ஜாதகங்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் .

லக்கினம் வலிமை அற்ற ஜாதகம் :


லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 4ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது விபத்து, ஏமாற்றம், திடீர் இழப்பு, திடீர் உடல்நல பாதிப்பு, திடீர் பொருளாதார இழப்பு என்ற வகையில் இன்னல்களை தந்துகொண்டு இருப்பதுடன், ஜாதகரின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சமூக பாராட்டுதல்களை உரியதாக அமையாதது லக்கினம் வலிமையின்மையை தெளிவுபடுத்துகிறது, மேலும் ஜாதகரின் லக்கினம் தொடர்பு பெரும் ஆயுள் ஸ்தானம் என்பது ஜாதகருக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகரத்தில் 2 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் ராசியான கும்பத்தில் 28 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகரின்  அதிர்ஷ்டத்தை கேள்விக்குறியாக்குவதுடன், ஜாதகரின் அறிவார்ந்த செயல்பாடுகளில் தெளிவின்மையை உறுதி செய்கிறது, ஜாதகரின் அறிவு ஜாதகருக்கு பயன்படாமல் பிறர் ஒருவருக்கு பயன்தருவது ஜாதகரின் அதிர்ஷ்டமின்மையை மிக தெளிவாக காட்டுகிறது, மேலும் ஜாதகர் தனது உடல் நலம் மற்றும் மன நலம் இரண்டிலும் அக்கறை இன்றி இருப்பது லக்கினம் பாதிக்கப்படுவதின் தாக்கமே, இருப்பினும் ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசையும், எதிர்வரும் குரு திசையும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது பாதிக்கப்பட்ட லக்கினபாவகத்திற்க்கு சற்று ஆறுதலை தரும் என்பதை நினைத்து ஜாதக மகிழ்ச்சி அடையலாம் .

 லக்கினம் வலிமை பெற்ற ஜாதகம் :


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

 ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் லக்கினம் வலிமை பெற்று  இருப்பதை தெளிவுபடுத்துகிறது, மேலும் லாப ஸ்தானம் என்பது ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான கடக ராசியில் 26 பாகைகளையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடான சிம்மத்தில் 4 பாகைகளையும் கொண்டிருப்பது ஜாதகரின் நல்ல குணத்தையும், விசாலமான மனநிலையையும் கொண்டிருப்பவர் என்பதை தெளிவுபடுத்துகிறது, கிராமங்களில் ஓர் செலவேந்திரம் ஒன்று உண்டு அது " எண்ணம் போல் வாழ்க்கை " என்பதாகும், மனம் என்பது செம்மையானால் மந்திரம் செபிக்க தேவையில்லை, அதற்க்கு நல்ல உதாரணம் மேற்கண்ட ஜாதகர், தனது வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், இறை அருளின் மீதான  பற்றுதலும் ஜாதகருக்கு நல்லதோர் தொழில் வாய்ப்பையும், இனிமை நிறைந்த யோக வாழ்க்கையையும் வாரி வழங்கியதை, ஜாதகர் மிக எளிதாக சுவீகரிக்க லக்கினம் முழு வலிமையுடன் அமைந்ததே அடிப்படை காரணமாக அமைந்தது, ஜாதகரின் அறிவும் பரந்தமனபக்குவமும் ஜாதகருக்கு சுபயோக வாழ்க்கையை வழங்க தவறவில்லை.

சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது, வலிமை பெற்ற மற்ற பாவக வழியில் இருந்து சுபயோக பலன்களை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பது மேற்கண்ட ஜாதகரின் வாழ்க்கை வளர்ச்சியில் இருந்து நாம் தெளிவாக  புரிந்துகொள்ளலாம் என்பது மேற்கண்ட ஜாதகத்தின் தனி சிறப்பு அம்சமாகும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 20 ஜனவரி, 2018

குரு திசை இன்னல்களை தருவதேன்? எதிர்வரும் சனி திசை யோக பலனை தருமா ?


கேள்வி :
 
 தற்போழுது நடைபெறும் குரு திசை மிகுந்த சிரமத்தையே தந்துகொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சனி திசை நன்மையை தருமா ? சனி திசை எனது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லுமா ? எதிர்காலம் எப்படி அமையும்.

பதில் :

 குரு முழுமுதற் சுபகிரகம் என்பதால் தனது திசையில் சுபயோக பலன்களை வழங்கும் என்ற கருத்து பொதுவானதாக இருந்த போதிலும், சுய ஜாதகம் வலிமை இன்றி இருப்பின் மேற்கண்ட கருத்து சிறிதும் பொருந்தாது என்பதே உண்மை நிலை, தங்களது ஜாதகத்திற்கும் இது மிக பொருத்தமாக அமைந்துவிட்டதுதான் விதியின் விளையாட்டு என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை, நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஒருவருக்கு தனிப்பட்ட முறையிலான பலாபலன்களை வழங்கும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை, சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் தன்மையையே தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களின்  நவகிரகங்கள் நடைமுறைக்கு கொண்டுவரும், கோட்சார கிரகங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தரும் கோட்சார பலன்கள் பாவக பலன்களை விருத்தி செய்யும், இதுவே அடிப்படை, இதை தங்களது சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே !


லக்கினம் : கன்னி 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்

தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் : ( 14/11/2003 முதல் 14/11/2019 வரை  )

தங்களது சுய ஜாதகத்தில் 5ல் நின்ற குரு பகவான் தனது திசையில் 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை தனது திசை முழுவதும் நடைமுறைப்படுத்துகிறது, குரு சுப கிரகம் என்ற போதிலும் தனது திசையில் கடுமையாக பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது தங்களது வாழ்க்கையில் 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள், வாக்கின் வழியில் வரும் சிரமம்ங்கள், வருமானம் விரையமாகுதல், பொருளாதர சிக்கல் என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் சுகபோகம் இன்மை, நல்ல வீடு அமையாத நிலை, வண்டி வாகன யோகம் இன்மை, குணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பு என்ற வகையில் சிரமங்களை தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல பாதிப்பு , கடன் தொந்தரவுகள், எதிரி தொல்லை, அனைவராலும் சிரமம், வீண் மருத்துவ செலவினங்கள்  என்ற வகையில் இன்னல்களை தரும், 10ம் பாவக வழியில் இருந்து நல்ல கவுரவமான தொழில் அமையாத நிலை, ஜீவன வழியிலான தொந்தரவுகள், நிலையான தொழில் வாய்ப்பு அமையாத நிலை, எதிர்பாராத தொழில் இழப்புகள் மற்றும் நஷ்டம், கவுரவ பாதிப்பு என்ற வகையில் சிரமங்களை தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைத்திலும் நஷ்டம், மன நிம்மதியின்மை, கடுமையான மனஅழுத்தம், போராட்டகாரமான வாழ்க்கை, வீண் விரையம், தெளிவில்லாத சிந்தனை, அனைவராலும் தொல்லை என்ற நிலையை தரும்.

 தங்களுக்கு குரு திசை நடைமுறையில் உள்ள போதிலும், குரு 2,4,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தருவது தங்களின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, குரு திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியும் தங்களுக்கு 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை தனது புத்தியில் நடைமுறைக்கு கொண்டு வருவது தங்களின் வாழ்க்கையில் சற்று கடுமையான பாதிப்பை தரும் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.

எதிர்வரும் சனி திசை ( 14/11/2019 முதல் 14/11/2038 வரை ) தங்களுக்கு கடுமையான சோதனைகளை தரவே காத்துகொண்டு இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரியது, எனவே தாங்கள் சனி திசை,சனி புத்தி, சனி அந்தர காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது, ஏனெனில் தங்களுக்கு எதிர்வரும் சனி திசை 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் என்பது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும், ஒருவருக்கு பாதக ஸ்தான பலன்கள் நடைமுறைக்கு வரும் பொழுது ஜாதகர் மிகவும் கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது இல்லை எனில், முரண்பட்ட வாழ்க்கையில் சிக்குண்டு " பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் " நிலையை தந்துவிடும்.

குறிப்பு :

சனி திசை காலத்தில் தாங்கள், தங்களின்  உடல் நலம் மனநலம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை  கொள்வது நல்லது, பெரியோரின் ஆலோசணையின் பெயரில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் நல்கும், நல்ல ஆன்மீக பெரியோரின் ஆசீர்வாதமும், தீட்சையும் தங்களுக்கு சனி திசை தரும் இன்னல்களில் இருந்து காத்துஅருளும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள், எதிர்காலம் நன்றாக அமைவது என்பது தங்களின் கைகளிலேயே உள்ளது " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

புதன், 17 ஜனவரி, 2018

தொழில் நிரந்தரமாக அமையாதது ஏன் ? சுய தொழில் & அடிமை தொழில் எது சிறந்தது ?


கேள்வி :
இதுவரை சரியான தொழில் அமையவில்லை, செய்யும் தொழில் வழியில் இருந்து யாதொரு முன்னேற்றமும் இல்லை, நான் சுயமாக சிறுதொழில் ஏதாவது செய்யலாமா? அல்லது ஓரிடத்தில் வேலைக்கு செல்வது நன்மையை தருமா ? இதுவரை மற்றவர்களிடம் அடிமை தொழில் ( வேலைக்கு ) மட்டுமே செய்து வருகிறேன், செய்யும் வேளையில் மனநிறைவு இல்லை, பொருளாதார முன்னேற்றமும் இல்லை, தயவு செய்து சரியான வழிக்காட்டுங்கள்.

பதில் :

 ஜீவன ஸ்தான வலிமை என்பது ஒவ்வொரு ஆண் மகனின் ஜாதகத்திலும் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இது ஜாதகனின் சுய கவுரவத்தை செய்யும் தொழில் வழியில் இருந்து வாரி வழங்கும், அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரம் மிகவும் வலிமையுடன் இருப்பது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 10ம் பாவகம் வலிமை அற்று காணப்பட்டாலும், ஜாதகருக்கு ஜீவன வழியில் மறைமுகமான நன்மைகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் வீடும், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு 10ம் வீடான மகரம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் தனிப்பட்ட தொழில் ரீதியான முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியையே வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது சுய ஜாதகத்தில்  தொழில் அமைப்பிற்கான விஷயங்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளலாம்  அன்பரே !


லக்கினம் : கும்பம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

கேள்வி :

இதுவரை சரியான தொழில் அமையவில்லை, செய்யும் தொழில் வழியில் இருந்து யாதொரு முன்னேற்றமும் இல்லை ஏன் ?

பதில் :

 தங்களின் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு 1 ) சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானமான 10ம் வீடு கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது தங்களுக்கு சரியான தொழில் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றது, மேலும் தங்களின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் 10 பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமான கும்ப ராசியில் 23 பாகைகளையும் கொண்டுஇருப்பது தங்களின் தொழில் வழியிலான சிரமங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகின்றது, எனவே சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் பாவகமும் பாதிக்கப்பட்டு, காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும் 40% விகிதம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு தொழில் ரீதியாக சுபயோக பலாபலன்களை வழங்க மறுக்கின்றது என்பதே உண்மை நிலை.

2) தங்களுக்கு ( 09/09/2002 ல் ) ஆரம்பித்த சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,10ம் பாவக வழியில் இருந்து முழு வீச்சில் விரைய ஸ்தான பலனையே தனது திசைமுழுவதும் ஏற்று நடத்துவது தங்களின் தொழில், வேலை போன்றவற்றில் மிகுந்த பின்னடைவையும், திருப்தி அற்ற நிலையையும், நிரந்தரம் அற்ற தொழில் என்ற நிலையையும் தற்போழுது வரை தந்து கொண்டு இருக்கின்றது, இருப்பினும் தற்போழுது நடைபெறும் சனி புத்தி தங்களுக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.

பொதுவாக சுய ஜாதகத்தில் மகரமும், பத்தாம் பாவகமும் வலிமை இழந்து காணப்பட்டால், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற மற்ற பாவகம் எவை? எவை ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வது ஜீவனத்திற்க்கான மாற்று வழியை  நமக்கு தெளிவுபடுத்தும், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களது சுய ஜாதகத்தில் வீர்ய ஸ்தானம் மிக வலிமையுடன் காணப்படுகிறது, தங்களது வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ ராசியில் 2 பாகையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம்  வீடான ரிஷப ராசியில் 26 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகத்தில் மிகவும் சிறப்பான விஷயமாகும், இந்த அமைப்பு தங்களுக்கு மக்கள் தொடர்பு வழியிலான சிறு வியாபாரம் மூலம் சகல சௌபாக்கியத்தை  நல்கும் அமைப்பாகும், எனவே தாங்கள் சிறு வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சியை பெறலாம், மேலும் சிறு எஜென்ஜி, தரகு தொழில் வழியிலான  நன்மைகள் பொருளாதார வளர்ச்சிகள் தங்களுக்கு எதிர்பாராத வண்ணம் வந்து சேரும் என்பதை கருத்தில் கொள்க, எனவே தாங்கள் வலிமை பெற்ற 3ம் பாவக வழியில் இருந்து ஜீவனத்தை தேடி நலம் பெறுவது தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான யோக பலன்களை வாரி வழங்கும்.

 தங்களது ஜாதகத்தில் வலிமைபெற்ற பாவகம் என்ற நிலையில் 2ம் இடத்தில் இருப்பது லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் ஆகும், லாப ஸ்தானம் தங்களுக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் 8பாகைகளையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகர ராசியில் 20 பாகைகளையும் கொண்டிருப்பது சிறப்பான யோகத்தை தரும் அமைப்பாகும், இது தங்களுக்கு லாப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும், குறிப்பாக சர மண் தத்துவ சார்ந்த பொருட்கள் வழியில் இருந்து நல்ல லாபத்தை தரும் என்பதை கருத்தில் கொண்டு அது சார்ந்த ஏஜென்ஜி எடுப்பது அல்லது சிறு வியாபாரம் செய்வது தங்களுக்கு மேலும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், இதனால் செய்யும் தொழில் வழியில் மனநிறைவும் பொருளாதார நன்மைகளும் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

குறிப்பு :

  எதிர் வரும் புதன் கேது புத்திகள் தங்களுக்கு சிறப்பான வழியில் அதிர்ஷ்டங்களையும், சூரியன் திசை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டங்களையும் தருவது, தாங்கள் புதிதாக ஆரம்பிக்கும் சிறு வியாபார வழியில் நற்ப்பெயருடன் கூடிய அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதுடன், பொருளாதர தன்னிறைவை தரும் என்பதை கருத்தில் கொண்டு, விழிப்புணர்வுடன் வாழ்க்கையில் வெற்றிபெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன்
9443355696

திங்கள், 15 ஜனவரி, 2018

தொழில் வழியிலான பெரும் நஷ்டங்களும், திடீர் இழப்புகளும் ஏற்பட காரணமாக இருப்பது எது ?



சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் சிலரது வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் இழப்புகளும், பெருத்த நஷ்டங்களும் நடைமுறைக்கு வருவதற்கு என்ன காரணம், இதை சுய ஜாதக ரீதியாக அறிந்துகொண்டு தவிர்க்க இயலாதா ? இதை போன்ற இழப்புகள் வருவதை நாம் வரும்முன்னரே அறிந்து சுதாரிப்புடன் செயல்பட இயலாதா ? தெளிவான விளக்கம் தர வேண்டுகிறோம்..



லக்கினம் : சிம்மம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 3ம் பாதம்

மேற்கண்ட கேள்விகளுக்கு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம், ஒருவரது  சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரம் வலிமை அற்று காணப்பட்டாலோ அல்லது லக்கினத்திற்க்கு ஜீவன ஸ்தானமாக அமையும் பாவகம் வலிமை இன்றி காணப்பட்டாலோ ஜாதகர் தாம் செய்யும் தொழில் வழியிலான திடீர் இழப்பு மற்றும் பெருத்த நஷ்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அல்லது சுய ஜாதகத்தில் 6,8,12ம் வீடுகள் வலிமை அற்று காணப்பட்டால் ஜாதகர் தாம் செய்யும் தொழில் வழியில் இருந்து மீள முடியாத கடன், திடீர் இழப்பு, முதலீடுகளால் ஏற்படும் பெருத்த நஷ்டங்களை அனுபவிக்கும் நிலையை தரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 6,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இருப்பினும் ஜாதகர் கடந்த சில வருடங்களாக கடுமையான தொழில் வழியிலான பெரும் நஷ்டங்களை சந்தித்து, தொழில் முடக்கம் ஏற்பட்டதற்க்கு காரணம் என்ன ? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

  ஜாதகருக்கு லக்கினம் முதல் பெரும்பாலான பாவகங்கள் வலிமையுடன் அமைந்தபோதிலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் வீடான மேஷ ராசி பாதக ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான பாதிப்பையும், 4ம் வீடான கடக ராசி, 10ம் வீடான மகர ராசிகள்,  ஜாதகரின் சிம்ம லக்கினத்திற்க்கு விரையம்  மற்றும் சத்ரு ஸ்தானமாக அமைந்து கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் தாங்க இயலாத தொழில் பின்னடைவை தந்தது, இதன் காரணமாக ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து  கடன் சுமை, தொழில் முடக்கம், எதிரிகள் தொந்தரவு, போட்டியாளர்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகள் என ஏககாலத்தில் இன்னல்களை தந்து தொழில் முடக்கம் என்ற நிலைக்கு ஜாதகரை அழைத்து சென்றது, மேலும் 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்த அதீத முதலீடுகள் அனைத்தும் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது, எதிர்பாராத பேரிழப்பை ஜாதகர் அயன சயன ஸ்தான வழியில் இருந்து சந்திக்கும் நிலையை தந்தது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கடகம் வலிமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது சிறிதும் சிந்திக்காமல் அழிவு நிலையில் உள்ள பொருட்களில் ஜாதகர் முதலீடு செய்தது, ஜாதகரின் தொழில் முடக்கத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்தது, சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகம் சார்ந்த தொழில்களை ஜாதகர் மேற்கொள்வது என்பது " மண் குதிரையை " நம்பி ஆற்றில் இறங்குவதற்கு நிகரான இன்னல்களை வாரி  வழங்கிவிடும், மேலும் மகரமும், கடகமும் சர இயக்கத்தில் நிற்பது  ஜாதகருக்கு ஓர் இரவில் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது.

மேற்கண்ட ஜாதகத்தில் 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டாலும், 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை  ஏற்று நடத்திய ( சனி திசை ) கேது,சுக்கிரன் மற்றும் சந்திரன் புத்திகள் ( 28/03/2009 முதல் 17/01/2016 ) முழுவீச்சில் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையை ஜாதகர் எதிர்கொண்டார் என்பதே இதில் கவனிக்கத்தக்க விஷயமாகும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் நடைபெறும் திசை அல்லது புத்தி பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்கள் எதுவும் ஜாதகரை பாதிக்காது, நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை சந்திக்கவேண்டி வரும் என்பது கவனிக்கத்தக்க மிக முக்கியமான விஷயமாகும்.

ஜாதகருக்கு சனி திசை 3ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  சுபயோக பலாபலன்களை வழங்கிக்கொண்டு இருக்கின்ற போதிலும், சனி திசையில்  கேது,சுக்கிரன் மற்றும் சந்திரன் புத்திகள் 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை தந்தது ஜாதகரின் தொழில் வாழ்க்கைக்கே மூடுவிழா நடத்திவிட்டது, ஜாதகரின் திருப்தியற்ற மன நிலையும், தெளிவற்ற முடிவுகளும் 12ம் பாவாக வழியில் இருந்து நடைமுறைக்கு வந்ததே ஜாதகருக்கு மேற்கண்ட கடுமையான பாதிப்பை வழங்க அடிப்படை காரணமாக அமைந்தது, சனி திசையில் மேற்கண்ட புத்திகள் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திய போதிலும், சனி திசை புதன் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு புள்ளையார் சுழி போட்டது என்பதை மறுப்பதற்கு வழியில்லை.

சுய ஜாதகம் எவ்வளவு வலிமையுடன் இருப்பினும் நடைபெறும் திசை, புத்தி ( நவகிரகங்களின்  எந்த கிரகத்தின் திசை புத்தி என்றாலும் ) வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே  ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களை அனுபவிக்க இயலும், மேற்கண்ட ஜாதகம் போல் வலிமை அற்ற பாவாக வழியிலான பலாபலன்களை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோகதிதான்  என்பதில் சந்தேகம் இல்லை. எனவே ஓவொருவரின் சுய ஜாதகத்திலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவாக தொடர்பு நிலையை கருத்தில் கொண்டு வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.

குறிப்பு :

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு புத்தி எதிர்வரும் குரு புத்திகள் முறையே  வலிமை பெற்ற 1,3,5ம் பாவக பலனையும், 7,11ம் பாவக பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பரிபூர்ண அதிர்ஷ்டத்தை தரும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சுபயோக வாழ்க்கையை சுவீகரிக்க " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


ஞாயிறு, 14 ஜனவரி, 2018

சுய தொழில் செய்யலாமா ? எதிர்காலம் தொழில் ரீதியாக சுபயோகங்களை வழங்குமா ?



கேள்வி :

எனது ஜாதகம் சுய தொழில் செய்ய ஏற்ற ஜாதகமா ? கூட்டு தொழில் சிறப்பை தருமா ? எதிர்வரும் சூரியன் திசை மற்றும் சந்திரன் திசை எவ்வித பலாபலன்களை தரும் ?

பதில் :

 ஒருவரின் சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசி வலிமை பெற்று, 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெற்று இருப்பின் ஜாதகர் சுய தொழில் செய்ய அதீத வல்லமை உடையவர் என்பது தெளிவாகும், மேலும் லாப ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான நன்மைகளை பரிபூர்ணமாக பெறுவதற்கான வாய்ப்புகளை நல்கும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ரீதியான வெற்றிகளை சமயோசித அறிவாற்றலுடன் உறுதியாக பெறுவார் என்பதை தெளிவு படுத்தும், 6,8,12ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகர் தாம் செய்யும் தொழில் வழியிலான பொருளாதார முன்னேற்றங்களை அபரிவிதமாக பெறுவதை உறுதி செய்யும், 3,9ம் வீடுகள் வலிமை பெறுவது ஜாதகர் தாம் செய்யும் தொழிலில் எடுக்கும் உறுதி மிக்க செயல்களையும், முடிவு எடுக்கும் விஷயங்களில்  சிறப்பான செயல்திறனையும், அதீத லாபம் பெறுவதற்கான திட்டமிடுதல்களையும், தொழில் வழியிலான நற்ப்பெயர், நீடித்த தொழில் வாய்ப்புகள் தலைமுறை கடந்த தொழில் வெற்றிகளை உறுதி செய்யும், 2ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு வரும் வருமான வாய்ப்புகளையும், பொருளாதார ஸ்திர தன்மையையும் உறுதி படுத்தும், ஒருவர் தொழில் வழியிலான மிகப்பெரிய வெற்றிகளை பெற மேற்சொன்ன பாவாக வலிமைகளை கொண்டிருப்பது அவசியமாகிறது, ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமல்ல, எனவே சுய ஜாதகத்தில் கேந்திர கோணங்கள் வலிமை பெற்று இருப்பதுடன் நடைபெறும் திசா புத்தி எதிர்வரும் திசா புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் அன்பர்கள் சுய தொழில் செய்வதால் நிச்சயம் சிறப்பான வெற்றிகளை பெற இயலும்.


லக்கினம் : மிதுனம் 
ராசி : விருச்சிகம் 
நட்ஷத்திரம் : அனுஷம் 4ம் பாதம் 

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி 1,3,5,9,10,11ம் வீடுகள்  மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, 4ம் வீடு வலிமையுடனும், 2,6,7,12ம் வீடுகள் வலிமை அற்றும், 8ம் வீடு கடுமையான பாதிப்புடனும் இருப்பது தங்களின் சுய ஜாதக வலிமை நிலையாகும், தங்களின் முதல் கேள்விக்கான பதில் தாங்கள் நிச்சயம் சுய தொழில் செய்யலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகளில் 7ம் வீட்டை தவிர மற்ற வீடுகள் வலிமை பெற்ற பாவக தொடர்பை பெறுவது சிறப்பான ஜீவன யோகத்தை நல்கும் 7ம் வீடு பாதிப்பது தங்களுக்கு கூட்டு தொழில் சிறப்பாக அமையாது என்பதுடன் வியாபாரம் சார்ந்த தொழில்களும் சற்று சிரமத்தை தரக்கூடும் என்பதை தெளிவுபடுத்துகிறது.

சுய ஜாதகத்தில் நெருப்பு தத்துவ ராசியான மேஷமும், காற்று தத்துவ ராசியான துலாமும் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாங்கள் தொழில் நுட்பம் அல்லது அறிவார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வெற்றிகளை பெற இயலும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

கூட்டு தொழில் சிறப்பை தருமா ?

நிச்சயம் வாய்ப்பில்லை ஏனெனில் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு  7ம் ராசியான துலாம் வலிமை பெற்ற போதிலும் அது வாழ்க்கை துணை  வழியிலான நன்மைகளை மட்டுமே நடைமுறைக்கு கொண்டுவரும், கூட்டு தொழில் செய்வதற்கு உண்டான களத்திர ஸ்தான வலிமை என்பது தங்களுக்கு சிறிதும் இல்லை என்பதை கருத்தில் கொள்வது தங்களது தொழில்  மேன்மைக்கு சிறப்பான வெற்றிகளை தரும்.

 எதிர்வரும் சூரியன் திசை மற்றும் சந்திரன் திசை எவ்வித பலாபலன்களை தரும் ?

சூரியன் திசை தங்களுக்கு 5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் பூர்வபுண்ணிய ஸ்தான பலனை  ஏற்று நடத்திடுவது, தங்களின் அறிவார்ந்த முயற்சிகளுக்கு கிடைக்கும் மாபெரும்  வெற்றிகளை குறிக்கின்றது, தெய்வீக அனுக்கிரகத்தால் கலைகளில் தேர்ச்சி, புத்திசாலித்தனத்தால் ஆதாயம், பெற்ற குழந்தைகள் வழியிலான யோக வாழ்க்கை, விரைவான பொருளாதார முன்னேற்றம், சுய சிந்தனை மூலம் பூர்வீகத்தில் யோக வாழ்க்கையை பெரும் அமைப்பு என எதிர்பாராத பரிபூர்ண நன்மைகளை தர சூரியன் திசை தங்களுக்காக காத்துகொண்டு இருக்கின்றது, அதற்க்கு அடுத்து வரும் சந்திரன் திசை சுக ஸ்தான வழியில் இருந்து சுகபோக யோக வாழ்க்கையை தன்னிறைவாக வாரி வழங்க தயார் நிலையில் இருப்பது தங்களின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு கட்டியம் கூறுகிறது என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை, வாழ்த்துக்கள்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் நிதி நிலையை சிறப்பிக்கும் 2,6,7,8,12ம் வீடுகள் பாதிக்கப்படுவது தங்களின் நிதி மேலாண்மையை கடுமையாக பாதிக்கும், எனவே நிதி நிலை சார்ந்த மேலாண்மையை தெளிவாக கற்றுணர்ந்து சுய தொழில் செய்வதே சிறப்பான நன்மைகளை தரும் அதிர்ஷ்டம் உள்ளது என்ற போதிலும் நிதி மேலாண்மை இல்லை எனில் யாதொரு பலாபலனும் முழுமை பெறாது என்பதை கருத்தில் கொள்க, மேலும் 8ம் வீடு கடுமையாக பாதிக்கப்படுவது மற்றவர்களை நம்பி அதிக முதலீடுகளை செய்வது தங்களின்  தொழில் வாழ்க்கைக்கு தாங்களே மூடுவிழா நடத்துவதற்கு நிகரான பலாபலன்களை வழங்கிவிடும் என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

வியாழன், 11 ஜனவரி, 2018

சனி திசை தரும் பலாபலன்களும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பும் !


 எந்த ஒரு ஜாதகத்திலும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமல் இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருப்பின், நவகிரகங்களின் திசா புத்திகள் பாதக ஸ்தான தொடர்பு பெற்ற பாவக பலனை எடுத்து நடத்தாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் பாவகங்கள் தொடர்பும் பெற்று, நடைமுறையிலோ அல்லது எதிர்காலத்திலோ நவகிரகங்களின் திசா புத்திகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை நடைமுறைக்கு கொண்டுவருமாயின் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும், ஜாதகரால் தாங்க இயலாத துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திப்பார்,  இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : திருவாதிரை 1ம் பாதம் 

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், எனவே ஜாதகர் லக்கினம், சகோதரம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும், லக்கின பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையே சிறப்பாக அமையாது, ஒவ்வொரு விஷயத்தையும் ஜாதகர் போராடி பெறவேண்டிய கட்டாயம் ஏற்படும், ஏக்கமும் மன வருத்தமும் ஜாதகரின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்திருக்கும், தெளிவான சிந்தனையுடன் ஜாதகர் யாதொரு காரியங்களையும் ஆற்ற இயலாது, உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும், ஒருவித குழப்பம் மற்றும் சந்தேக எண்ணத்துடன் ஜாதகர் வாழ்க்கையை எதிர்கொள்வார், எதிர்ப்புகள் பல வழிகளில் இருந்து ஜாதகரை கடுமையாக தாக்கும், தனது பிறப்பின் சாராம்சம் என்னவென்பதை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக அமையும், முரண்பட்ட வாழ்க்கையை ஜாதகர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தன்மையை கொண்டிருப்பார், அதீத மூடநம்பிக்கைகளை கையாண்டு ஜாதகரின் வாழ்க்கைக்கு இன்னல்களை தானே வரவைத்துக்கொள்ளும் சூழலும் உருவாகலாம், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் அன்பர்கள் ஏதாவது தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானால் மீள்வதென்பது இயலாத காரியமாக மாறிவிடும் என்பதை மனதில் கொள்வது நலம் தரும்.

 சகோதர பாவக வழியில் இருந்து ஆதரவற்றவராக திகழ்வார், மனதைரியமும், போராட்ட குணமும் ஜாதகருக்கு மிகவும் குறைவாக அமையும், எதிர்த்து வெற்றிகொள்ளும் யோகம் என்பது ஜாதகருக்கு சிறிதும் அமையாது, ஒருவித கலக்கத்துடன் தனது வாழ்க்கையை வாழும் சூழ்நிலையி தரும், பயமும் இயலாமையும் ஜாதகரை வெகுவாக படுத்தி எடுக்கும், எண்ணத்தின் வலிமையையும் காரிய சித்தியும் ஜாதகருக்கு அமைவதென்பது  அரிதான ஒன்றாக இருக்கும், பயணங்கள் மூலம் இன்னல்களும், உடல் நலக்குறைவும் உண்டாகும், ஒவ்வாமை ஜாதகருக்கு அதிக அளவில் இருக்கும், ஜாதகரின் மனம் எதையும் ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இருக்காது, தெய்வீக குணம் ஜாதகருக்கு எல்லைகட்டி நிற்கும், எதையும் தீவிரமாக செய்யும் வல்லமை அமையாது என்பதுடன் ஜாதகரின் அலட்சியம், மனபயம் இரண்டும் பல வெற்றி வாய்ப்புகளை தட்டி பறிக்கும், பொருளாதர தடைகள் ஜாதகருக்கு கடுமையாக வரும்.

 லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பிற்போக்கு தனமான செய்கைகள் மூலம் இன்னல்களை அனுபவிக்கும் மனிதர் என்பது அனைவருக்கும் தெரியவரும், முரண்பட்ட விஷயங்களை செய்து அதன் வழியிலான இன்னல்களை சந்திக்க இயலாமல், மற்றவர்கள் மீது குற்றம் குறை காணும் நிலையை தரும், இவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பதுடன், நம்பியவரின் எதிர்காலமும் பறிபோகும் என்பது கவனிக்கத்தக்கது, எதிலும் அக்கறை இன்றி செயல்படுவார், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்து தானும் இன்னல்களை சந்தித்து, தன்னை சார்ந்தவர்களையும் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கும் தன்மையை பெற்றவர்கள், அதிர்ஷ்டம் சிறிதும் இருக்காது, அதிர்ஷ்டத்தை பெறுவதற்கான துணிவும் ஜாதகருக்கு சிறிதும் இருக்காது, தொடர் தோல்விகளையும், கடும் நெருக்கடிகளையும் சந்திக்கும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையாகாது, பழமைவாதம், நாகரிகம் அற்ற செயல்கள், பிற்போக்கு தனம் ஆகியவை ஜாதகரை கற்காலத்தை நோக்கி அழைத்து செல்லுமே தவிர, அனைவருடன் அனுசரித்து செல்லும் நல்ல குணம் ஜாதகருக்கு சிறிதும் அமையாது என்பது வருத்தத்திற்கு உரியது.

மேற்கண்டவாறு பாதக ஸ்தான பலனை ஜாதகர் சுய ஜாதக பலனை அனுபவித்த போதிலும், தற்போழுது வரை நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார் என்பது ஒரு விதத்தில் ஜாதகருக்கு நன்மையே எனலாம், ஆனால் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 1,3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் என்பதை யாருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை, எதிர்வரும் சனி திசை இதுவரை குரு திசையில்  2ம்  பாவக வழியில் இருந்து களத்திர ஸ்தானம் தந்த சுபயோகங்களை தாராளமாக அனுபவித்து வந்த விஷயங்களுக்கு எல்லாம் ஓர் முற்றுப்புள்ளியை தந்து விடும், எதிர்பாராத சிரமங்களை ஜாதகர் சனிதிசை முழுவதும் சந்திக்கும் சூழ்நிலை தரும், ஜாதகரின் பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷப ராசியில் அமைவது, குடும்பம் வருமானம், வாக்கு வழியில் இருந்து கடுமையான இன்னல்களை எதிர்கொள்வார் என்பதை தெளிவு படுத்துகிறது, ஜாதகர் மிகுந்த எச்சரிக்கையுடன் சனி திசையினை எதிர்கொள்ளவில்லை எனில் வாழ்க்கை நரகமாகிவிடும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

செவ்வாய், 9 ஜனவரி, 2018

ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கமும், கேள்விகளுக்கான பதில்களும் !



வணக்கம் அண்ணா 

நான் குமார் ,நானும் நண்பரும் இரு வாரங்களுக்கு முன் தங்களிடம் சோதிடம் காண தங்கள் இல்லத்திற்கு வந்திருந்தோம்.சோதிடத்தில் ஐயம் இருந்தால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள சொன்னீர்கள்.சில ஐயங்கள் உள்ளன அதற்கு விளக்கம் அளியுங்கள்.


லக்கினம் : மீனம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : ரோகிணி 3ம் பாதம்
 
கேள்வி :

1)2ம்,7ம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினீர்கள் மேலும் வைகாசிக்குள் திருமணம் அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறினீர்கள்.2ம்7ம் பாதிக்கப்படும் போது விரைவில் எவ்வாறு நடந்திடும்?

பதில் : 

ராகு திசையில் எதிர்வரும் சந்திரன் புத்தி தங்களுக்கு வலிமை பெற்ற 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் குலதெய்வ ஆசியினால் நல்லதோர் வாழ்க்கை துணை அமைய வாய்ப்பு உள்ளது, சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் சந்திரன் புத்தி தங்களுக்கு நல்ல திருமண வாய்ப்பை நல்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, தாங்கள் இதை உதாசீனப்படுத்தினால், தங்களுக்குத்தான் சிரமம் என்பதை கருத்தில் கொள்க.

கேள்வி :

2)மனைவியின் கல்வி நிலை மற்றும் குணங்கள்.

பதில் : 

களத்திர ஸ்தானமும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாமும் சற்று கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது, எனவே தங்களின் கல்வி தரத்திற்கு நிகரான பெண் அமைய வாய்ப்பில்லை, சற்று குறைவான கல்வி தகுதியுடன் இருக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் நல்ல குணமும், பெருந்தன்மையான நடவடிக்கையும் பெற்ற பெண்ணாக இருப்பார்.

கேள்வி :

3) பெண் எந்த வாசல் வீட்டில் இருப்பார் ?

பதில் :
வடக்கு வாசல் வாயிற்படி கொண்ட வீட்டில் இருப்பது தங்களுக்கு சிறப்பை தரும் வாழ்க்கை துணையாக அமையும்.

கேள்வி :

4) தற்சமயம் பணியமைவதற்கான  காலத்தை கூறிடுங்கள் ?

பதில் : 

ராகு திசை சூரியன் புத்தியில் அமையாது, சந்திரன் புத்தி மற்றும் அந்தரத்தில் தேடினால் நல்ல வேலைவாய்ப்பு அமையும்.

கேள்வி :

5)அடுத்து வரும் சந்திர புத்தி எந்த வீட்டின் பலனை நடத்திடும்

பதில் :

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 5ம் பாவக வழியில் இருந்து சுபயோகத்தை நல்குகிறது, மேலும் 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கடக ராசியில் வியாபித்து இருப்பது திடீர் அதிர்ஷ்டம் மூலம் சிறப்பான யோக பலனை தரும், இதில் தங்களின் சமயோசித அறிவுத்திறன் சிறப்பாக செயல்படும்.

கேள்வி :

6) 11ம் பாவம் நல்ல நிலை எனில் என்ன பயன் அதாவது 2,7மற்றும் 10 ம் பாவகம் பா தி க் கப் பட்டிருக்கும் போது 11 ஆல் என்ன பலன்

பதில் : 

ஒருவரது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமையுடன் இருக்க வேண்டிய பாவகம் லாபஸ்தானம் எனும் 11ம் பாவகம், அது தங்களுக்கு மிகவும் வலிமையுடன் இருக்கின்றது, மேலும் தங்களின் லாப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகரத்தில் அமைவது கெளரவம் மிக்க தொழில் வாய்ப்பின் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகத்தை தரும், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக செயல்படும், நடைபெறும், எதிர் வரும்  திசா புத்திகள் வலிமை பெற்ற 11ம் பாவக பலனை ஏற்று நடத்தினால், பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது.

கேள்வி :

7) அடுத்து வரும் குருவின் திசை எடுத்து நடத்தும் பாவகம் நன்றி.

பதில் :

4,9ம் வீடுகள் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குரு திசை  பலாபலன்களை தர ஆயத்தமாக உள்ளது, இதனால் தகப்பனார் வழி சொத்து கிடைக்கும், உயில் இஞ்சுரன்ஸ் மூலம் தனவரவு உண்டாகும், போனஸ் லாபம் உண்டு, இருப்பினும் வாகன பழுது விபத்து தவிர்க்க இயலாது, எதிர்பாலின வழியில் இருந்து இன்னல்கள் உண்டாகும். பெயருக்கு களங்கம் உண்டாகும், நம்பிக்கை குறையும், இவையாவும் குரு திசை, குரு புத்தி, குரு அந்தரத்தில் மட்டும் நடைமுறைக்கு வரும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளை பெற தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு சிறப்பான எதிர்காலத்தை பெறுங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

திருமண வாழ்க்கையில் சுபயோகங்களை நல்கும் 2,7ம் வீடுகளின் வலிமை !



 திருமண வாழ்க்கையில் பொருத்தமான கணவன் அமைவதும், மனைவி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்றால் அது மிகையில்லை, பொதுவாக இல்லற வாழ்க்கையில் இன்னல்களை சந்திக்கும் ஆணோ அல்லது பெண்ணோ தனது சுய ஜாதக வலிமை நிலையை பற்றியும், தனது வாழ்க்கை துணையின் சுய ஜாதக வலிமை நிலையை பற்றியும் தெளிவாக தெரிந்து இருப்பது இனிமையான இல்லற வாழ்க்கையை நடத்தி செல்ல உறுதுணை புரியும், தமது ஜாதக வலிமையை உணர்ந்து, தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவாக உணர்ந்து இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதில் கணவன் மனைவி இருவருக்கும் சமமான பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது, பெரும்பாலும் தமது சுய ஜாதக வலிமையை பற்றிய தெளிவு இல்லாமல் தனது வாழ்க்கை துணையுடன் மோதல் போக்கையும், எதிர்ப்பு மனநிலையையும் கொண்டு இருப்பது என்பது, தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பையும், திருப்தி இல்லாத இல்லற வாழ்க்கையையும் தந்துவிடும், உதாரணமாக கீழ்கண்ட தம்பதியரின் சுய ஜாதக நிலையை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

மனைவி ஜாதகம் :


லக்கினம் : துலாம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 1ம் பாதம்

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை கணவனுடன் இணைபிரியாமல் வாழ்வதே பெண்களுக்கு பாதுகாப்பானது, இதை ஆணாதிக்கம் என்று விமர்ச்சிக்கும் அன்பர்கள் ஜோதிடதீபத்தின் மீதி விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறது, ஏனெனில் இந்த கலியுகத்தில் குடும்பம் எனும் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தனியாக இயங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவர்களது இடத்தில் இருந்து உற்று நோக்கினால் நம் அனைவருக்கும் மிக தெளிவாக புரிய வரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதகிக்கு தனது நெருங்கிய உறவு வழியில் இருந்து நல்ல மனம் கொண்ட ஓர் அன்பர் தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார் ( இந்த பெண்ணின் சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக கூறியும் ) அவரின் பெருந்தன்மையை உணராத இந்த பெண் செய்யும் காரியங்கள் மிகவும் வருத்தத்திற்கு உரியது,  பெண்ணின் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக ஜாதகிக்கு நல்ல யோகம் மிக்க வாழ்க்கை துணை கிடைத்த போதிலும்,  தனது ஜாதக வலிமை பற்றிய விபரம் அறியாமல் தான் செய்யும் காரியங்கள் சரியென பிடிவாதம் செய்துகொண்டு இருக்கிறார்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

 2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்பத்தில் இன்னல்கள், இனிமையான பேச்சு திறன் இன்மை, வாக்குவாதம், தனது வாக்கின் வழியில் இருந்து அனைவரின் நிம்மதியையும் கெடுக்கும் தன்மை, வருமானம் இன்மை, அதீத விரைய செலவுகள், தேவையற்ற செலவினங்கள், பெரியவர்களை மதித்து நடக்காத தன்மை, உதாசீனப்படுத்தும் குணம், நிதி மேலாண்மை அற்ற தன்மை என கடும் சிக்கல்களை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக வருவது தனது கணவனுக்கு தேவையற்ற வீண் செலவினங்களை தரும் அமைப்பையும், அதிக மனஉளைச்சலையும் தரும்.

6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் தொந்தரவுகளை எதிர்கொள்ளும் நிலையை தரும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகி மனநிம்மதியை இழந்து போராட்ட வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையை தரும் , வயிறு சார்ந்த தொந்தரவுகள் ஜாதகிக்கு கடுமையான பாதிப்பை தரும், எதிர்வாதம்  செய்யும் குணம் ஜாதகியின் இல்லற வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், சத்ரு ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாக அமைவது தனது மனநிம்மதியை ஜாதகியே கெடுத்துக்கொண்டு இன்னலுறும் தன்மையை காட்டுகிறது, மேலும் ஜாதகியின் செயல்பாடுகள் அனைத்தும் முரண்பட்ட தன்மையுடன் காணப்படும் என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.

12ம் பாவக வழியில் இருந்து நல்ல அயன சயன யோகம் அற்றவர், தாம்பத்திய வாழ்க்கையில் மனஅழுத்தத்தை சந்திக்கும் நிலையை தரும், ஜாதகியின் மனம் ஓர் நிலையில் இல்லாமல் அலைபாயும் தன்மையுடன் காணப்படும், தெளிவில்லாத முடிவுகளால், ஜாதகியின் எதிர்காலத்தை ஜாதகியே பாதிப்பிற்கு ஆளாக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், கணவன் மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்துவார், பொறுமையை கையாளும் வல்லமை இராது, சுய அறிவும் ஜாதகிக்கு  பலன் தர வாய்ப்பில்லை, அனைவராலும் தொல்லை தொந்தரவு, உடல் நல பாதிப்பு, மருத்துவ சிகிச்சை என ஜாதகியின் வாழ்க்கையில் தாங்க இயலாத துன்பங்களை தரும், கணவன் மனைவி அன்னியோனிய  வாழ்க்கை வெகுவாக பாதிக்கும்.

9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது கல்வியில் தடை, மூர்க்கத்தனமான செயல்பாடுகள், பெரியோரை அவமதிக்கும் குணம், கீழ்த்தரமான செயல்பாடுகள், மனநிம்மதி இன்மை, வாழ்க்கை துணைக்கு கடுமையான இன்னல்களை தரும் தன்மை, விபத்துகளில் கடுமையான பாதிப்பு  என்ற வகையில் இன்னல்களை தரும், ஜாதகி நற்ப்பெயர் எடுப்பது வெகு சிரமம், சிறிதும் இறைஅருள் கிடைக்காது, பித்ரு சாபம் ஜாதகியின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.

4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் பெற்றோருக்கும் ஜாதகிக்கும் கடுமையான பாதிப்புகளை தரும், ஜாதகியின் குணம் மற்றவர்கள் போற்றும் வண்ணம் இருக்காது, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, புறம்பேசுதல் என ஜாதகியின் குணம் அடிப்படையிலே சிறப்பாக அமையாது, மேலும் ஜாதகியினால் தந்தைக்கும், தந்தையால் ஜாதகிக்கு துரதிர்ஷ்டங்கள் உண்டாகும், ஜாதகியின் சுகபோக வாழ்க்கைக்கு தடையாக அவரது  தந்தையே அமைவார், ஜாதகியினால் அவரது தந்தைக்கு கடும் பொருளாதார  நெருக்கடிகள் உண்டாகும், ஜாதகியினால் அவரது தந்தை பரதேஷ ஜீவனத்தை மேற்கொண்டு கவுரவம் இழப்பார், சுக ஸ்தானம் வலுவிழப்பது ஜாதகிக்கு அடிப்படை குணாதிசயமே சிறப்பாக அமையாது, அனைவருடன் எதிர்ப்பு மனநிலையையும், மோதல் போக்கையும் கடைபிடிக்கும் சூழ்நிலையை தரும்.

10ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு ஜீவனம் என்பதே சரியாக அமையாது என்பதுடன் மிக கடுமையான கவுரவ குறைவை தரும், ஸ்திரமான மனநிலை இல்லாத  காரணத்தால் மனநிம்மதி கெடும், தனது தாயார் வழியில் இருந்து யாதொரு சுப பலன்களையும் ஜாதகியால் அனுபவிக்க இயலாது, வீண் பகட்டும், வெட்டி கவ்ரவமும் ஜாதகிக்கு பெருத்த அவமானங்களை தரும், ஜாதகியின் இல்லற வாழ்க்கை பாதிப்பிற்கு ஜாதகியின் தாயாரே அடிப்படை காரணமாக இருப்பர் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை, தனது ஜாதகம் ஓர் வலிமையற்ற ஜாதகம் என்பதை புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் கூட ஜாதகிக்கு இருக்காது என்பது வேதனைக்குரியது.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் தொடர்புகள் எதுவெனில் 4,10ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதேயாகும், எனவே ஜாதகியின் வாழ்க்கையில் நடைபெறும் இன்னல்களுக்கு அடிப்படை காரணமாக அவர்களது பெற்றோரே இருப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், மேலும் ஜாதகியாலும் அவர்களது பெற்றோர்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.

தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு 9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது உகந்ததல்ல, மேலும் சுக்கிரன் திசையில் கேது புத்தியும் 2,6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்  9ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், எனவே ஜாதகி தனது சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை குறைவை கருத்தில் கொண்டு தனக்கு அமைந்த வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வதே சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்கு உகந்ததாக அமையும், மேலும் ஜாதகி தனது சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனது கணவர் வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகத்தைத்தரும், மேலும் தனது  கணவருடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை மிக சிறப்பாக நடத்தி செல்ல இயலும், 5ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது தனது குழந்தை வழியில் இருந்து கவுரவம் அந்தஸ்து, யோக வாழ்க்கை என சிறப்பான நன்மைகளை பெற முடியும், ஜாதகிக்கு சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் 5,7ம் பாவக ஆதிபத்தியம் பெற்ற தனது குழந்தை மற்றும் கணவன் வழியில் இருந்து மட்டுமே சுபயோக வாழ்க்கையை பெற இயலும் என்பதை  கருத்தில் கொள்வது நலம் தரும்.

மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், ஜாதகியின் கணவர் ஜாதகம் மிகவும் யோக நிலையில் இருப்பது ஜாதகியின் களத்திர ஸ்தான வலிமை வழங்கும் ஓர் நல்ல  வாய்ப்பு என்பதை உணர்வது அவசியமாகிறது, ஜாதகியின் கணவர் ஜாதக  வலிமையை இனி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

ஓர் வலிமை பெற்ற யோக ஜாதகம் எதுவென்றால் மேற்கண்ட ஜாதகத்தை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், ஏனெனில் சுய ஜாதகத்தில் 8ம் பாவகத்தை  தவிர ( இருப்பினும் பூரண ஆயுள் உண்டு ) மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, கலியுகத்தில் ஒருவர் யோக பலன்களை பரிபூர்ணமாக அனுபவிக்க வலிமை பெற வேண்டிய ராசி எதுவென்றால்  அது கடக ராசியென்று உறுதியாக சொல்லலாம் ( கடக ராசி ஜாதகருக்கு  எந்த பாவகமாக வேண்டுமானாலும் அமையலாம் ) மேற்கண்ட ஜாதகருக்கு கடகம் லாப ஸ்தானமாக அமைந்து 100% விகித வலிமையை பெறுவது ஜாதகரின் சுபயோக அமைப்பை மிக தெளிவாக கூறுகிறது, ஜாதகரின்  1,5,7,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து ராஜயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை, மேலும் 2,3,6,9,10,12ம் வீடுகள் அனைத்தும் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது இறையருளின் பரிபூர்ண கருணையை பெற்ற சிறந்த மனிதர் என்பதை தெளிவு படுத்துகிறது, 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் பெருந்தன்மையான குணத்தையும், ஒழுக்கம் நிறைந்த நன்னடத்தையும் பெற்றவர் என்பதையும் மிக தெளிவாக கூறுகிறது, எனவே இதை போன்ற ஓர் யோக ஜாதகம் அமைவதே அரிதிலும் அரிது, இதை உணராமல் ஜாதகி தனது செயலே சரியென்று வாதம் செய்தால் இழப்புகள் அனைத்தும் ஜாதகிக்கே என்பதை நினைவில் கொள்வது அவசியமாகிறது.

பெரும்பாலும் நிறைய தம்பதியர் மேற்கண்ட ஜாதகி போல் தவறான அணுகுமுறையை பின்பற்றி தனது இல்லற வாழ்க்கைக்கு தானே தீமையை தேடிக்கொண்டு  இன்னலுறுகின்றனர், நமது ஜாதகம் வலுவின்றி காணப்பட்டால் நம்மை சார்ந்தவர்களின் ஜாதகம் எது வலிமையுடன் உள்ளதோ அவர்களுடன் இணக்கமுடன் இருந்து நன்மைகளை பெறுவதே புத்திசாலித்தனம் ஆகும், குறிப்பாக கணவன் மனைவி உறவுகளில் உள்ளவர்கள், இதை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகிறது, வலிமை பெற்ற ஜாதகத்தை பெற்ற கணவனையோ, மனைவியையோ பெற்றவர்கள் அவர்களின்  அரவணைப்பில் யோக வாழ்க்கை சுவீகரிப்பதே சிறப்பான இல்லற வாழ்க்கையை தரும் என்பதை நினைவில் நிறுத்துவது அவசியமாகிறது .

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பே தனது சுய ஜாதக வலிமையை பற்றியும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை பற்றியும் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகே இல்லற வாழ்க்கையில் இணைவது சகல நலன்களையும் தரும், திருமணத்திற்கு பிறகு சரி செய்வது என்பது இயலாத காரியம் என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

சனி, 6 ஜனவரி, 2018

தொழில் வெற்றி, பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் சுய ஜாதக பாவக வலிமை !



சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து தரும் யோக அவயோகம், நன்மை மற்றும் தீமையை பற்றிய தெளிவும், விழிப்புணர்வும் நமக்கு கிடைத்துவிட்டால், நமது வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும் அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு தடையேதும் இருக்காது என்பது மறுக்க இயலாத உண்மை, மேற்கண்ட விஷயங்கள் பற்றிய தெளிவுஎதும் இல்லாமல் செய்யப்படும் காரியங்களில், நமது உழைப்பும் நேரமும் வீண் விரையம் ஆவதை தவிர்க்க இயலாது, குறிப்பாக சுய ஜாதகத்தில் நமக்கு உகந்த தொழில் வாய்ப்பினை அறிந்து அதன் வழியில் நமது உழைப்பை போடும்பொழுது, நமது வெற்றியை எவராலும் தடுக்க இயலாது, பெரும்பாலான அன்பர்களின் வாழ்க்கை தமக்கு உகந்த ஜீவனத்தை தேடாத ஒரே காரணத்தால், அவர்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வசதி வாய்ப்புகள் கேள்விக்குறியாகிவிட அதிக வாய்ப்புகள் உள்ளது, நமது வாழ்க்கையின் ரகசியங்களை துல்லியமாக அறிந்துகொள்ள நமக்கு இறைவன் கொடுத்த ஓர் அட்ஷய பாத்திரம் நமது சுய ஜாதகமே, இதை கருத்தில் கொண்டு செயல்படுவோர் வாழ்க்கையில் தன்னிறைவான முன்னேற்றத்திற்கும், அதிர்ஷ்டகரமான சுபயோகங்களுக்கும் தடையேதும் இருக்காது அன்பர்களே, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.

சுய ஜாதகத்தில் ஒருவருக்கு வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து இன்னல்களும் நடைமுறைக்கு வருவது இயற்க்கை, வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் யோக பலாபலன்களை சுவீகரிக்கவும், வலிமையற்ற பாவக வழியில் இருந்து  வரும் இன்னல்களை தவிர்க்கவும் நமக்கு சுய ஜாதகத்தின் அவசியம் மிகவும் தேவை படுகிறது, நவகிரகங்களின் திசா புத்திகள் நமக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது நமக்கு சுபயோக பலன்களும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது அவயோக பலன்களும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், இதை தெளிவாக நாம் உணர்ந்துகொள்ளும் பொழுது நமது வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பரிபூர்ணமாக வந்துசேரும் என்பதை மறுப்பதற்கில்லை, சுபயோக பலன்கள் நடைமுறைக்கு வரும் காலங்களின் நமது முயற்சிகளும், செயல்திறனும் அதிகரிப்பது நமக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகத்தால் நமது வாழ்க்கையில் சுபயோகங்கள் நடைமுறைக்கு வரும், கீழ்கண்ட ஜாதகருக்கு பாவக வலிமை வழங்கும் சுபயோக பலன்களை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : சிம்மம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

1,3,9,11ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.

2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.

5ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

6,8,12ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 இந்த சிம்மலக்கின ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி 1,2,3,4,5,9,10,11ம்  வீடுகள் வலிமை பெற்ற பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 1,2,3,4,5,9,10,11ம் பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும், 6,7,8,12ம் வீடுகள் வலிமை அற்ற பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் 6,7,8,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை தரும்.

நமக்கு தற்போழுது தெரியவேண்டிய விஷயம் ஜாதகருக்கு சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் சரியான தொழில் எது ? தவிர்க்க வேண்டிய தொழில் எது ? நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி தரும் பலாபலன்கள் என்ன ? என்பது மட்டுமே .

ஜாதகருக்கு உகந்த தொழில்  சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய ஜீவன ஸ்தான தொடர்பு மற்றும் அதன் வலிமையினை கருத்தில்கொள்வது  அவசியமாகிறது, 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமையை தெளிவுபடுத்துகிறது, ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் ஜாதகர் சுய தொழில் செய்ய அருகத்தையுடையவர் என்பது உறுதியாகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாகவும், ஸ்திர மண் தத்துவ ராசியான ரிஷபத்தில் 21 பாகையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 3ம் ராசியான மிதுனத்தில் 7 பாகைகளையும் கொண்டு இருப்பது  ஜாதகர் ஸ்திர தன்மையுடனான மண் தத்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்வதே ஜாதகருக்கு அபரிவிதமான தொழில் வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், உதாரணமாக மண்ணில் கிடைக்கும் உலோக பொருட்கள், கற்கள், மணல், கட்டிட உபகரண பொருட்கள், வண்டி வாகனம் போன்ற தொழில்கள்  ஜாதகருக்கு பரிபூர்ணமாக வெற்றி வாய்ப்புகளை தொழில் ரீதியாக வாரி வழங்கும், தனது பேச்சு திறனை கொண்டு முதலீடு ஏதும் செய்யாமல் செய்யும் தொழில்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு தொழில் அமையும், வட்டி தொழில் அல்லது ஆபரணங்களை அடகு பிடிக்கும் தொழில், வீட்டு உபகரண பொருட்கள், மின் உபகரண பொருட்கள் வழியில் இருந்தும் ஜாதகருக்கு முன்னேற்றம் உண்டாகும், சுய ஜாதகத்தில்  ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதால் ஜாதகர் தனக்கு உகந்த  தொழிலை தேர்வு செய்வதில் யாதொரு குழப்பமும் ஏற்படாது என்று தெளிவாக கூறமுடியும்.

ஜாதகர் தவிர்க்க வேண்டிய தொழில் என்பது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவக தொடர்பு வழியில் இருந்து உணர இயலும், மேற்கண்ட ஜாதகருக்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவக தொடர்பு என்பது 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது என்றால் அது மிகையில்லை, அடிப்படையிலேயே ஜாதகருக்கு கூட்டு தொழில் என்பது ஆகாத  அமைப்பு என்பதை தெளிவு படுத்த ஜோதிடதீபம் கடமைப்பட்டுள்ளது, குறிப்பாக ஜாதகர் கூட்டு முயற்சி செய்யும் தொழில்கள் அனைத்திலும் கடுமையான விரையங்களை சந்திக்கவேண்டிவரும், வெளிநாடுகள் மற்றும் வெளியூர் ஏற்றுமதி சார்ந்த தொழிலால்  ஜாதகர் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும் என்பதால் கூட்டு முயற்சியை தவிர்ப்பது நல்லது, விரையஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான  4ம் வீடாகவும், சர நீர் ராசியாகவும் அமைவதால் அழியும் பொருட்களை வைத்து தொழில் செய்வதும் கடும் நஷ்டத்தை தரும், குறிப்பாக பல் பொருட்கள், தானியம், காய்கறி, உணவு பொருட்கள் என அன்றுஅன்று அழியும்  நீர்த்துவம் சார்ந்த தொழில்களை தேர்வு செய்யாமல் இருப்பதே ஜாதகருக்கு சிறந்த எதிர்காலத்தை தரும்.

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு நல்ல கல்வி அறிவை மட்டும் சிறப்பாக வழங்கியிருக்கிறது, சுக்கிரன் திசையில் கேது புத்தி ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மண் தத்துவம் சார்ந்த புதிய தொழில்  வாய்ப்புகளை நல்கும், எதிர்வரும் சூரியன், திசை 2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை தனது பேச்சு திறன்  மூலம் வாரி வழங்கும்,  சந்திரன் திசை 2,6,8,12ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 7ம் பாவக பலனை ஏற்று நடத்துவது 2ம் பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை தந்த போதிலும் 6,8,12ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது  என்பது ஜாதகர் அவசியம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமாக உள்ளது, எதிர்வரும் சூரியன் திசையில் ஜாதகர் கூட்டு முயற்சியை தவிர்த்து சுய தொழில் செய்து நலம் பெறுவதே அவசியமாகிறது, குறிப்பாக ஜாதகர் அழிவு பொருட்களை அடிப்படையாக கொண்டு எந்த தொழிலும் செய்வது ஜாதகருக்கு உகந்தது அல்ல !


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696


திங்கள், 1 ஜனவரி, 2018

சுய ஜாதகத்தில் பாவக வலிமையின் முக்கியத்துவம் மற்றும் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் ராஜயோக பலாபலன்கள் !



 பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகிவற்றின் அடிப்படையில் கணிதம் செய்யப்படும் சுய ஜாதக வலிமை என்பது தனித்துவம் பெற்ற அமைப்பாகும், தனித்துவம் கொண்ட சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தனது வாழ்நாளில் யாதொரு இன்னல்களையும் சந்திக்காமல் மிகவும் சிறப்பான முன்னேற்றங்களை தன்னிறைவாக பெறுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் சம வீடுகள் எனப்படும் 1,3,11ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வளரும் சூழ்நிலை சிறப்பாக  அமையும், உடல் நலம் மனநலம் சிறந்து விளங்கும், பூர்ண ஆயுள் பலமும், புகழ் கீர்த்தி மற்றும் அதிகார யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகும்,  கோண வீடுகள் என்று அழைக்கப்படும் 5,9ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகரின் கல்வி அறிவு, செயல்திறன் மற்றும் ஜாதகரின் தனி திறமைகளை வெளிப்படுத்தும், கேந்திர வீடுகள் எனப்படும் 2,4,6,7,8,10,12ம் பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகருக்கு வருமானம் குடும்பம், சொத்து சுகம் வண்டி வாகனம், குறுகிய கால அதிர்ஷ்டம் மற்றும் உடல் நலம், வாழ்க்கை துணை, நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் கூட்டு முயற்சியில் வெற்றி, திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணை வழியிலான வருமான வாய்ப்பு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, கெளரவம் மிக்க தொழில், சரியான தொழில் தேர்வு, பொருளாதார வளர்ச்சி, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம், முதலீடுகளில் வரும் அதிக லாபம், மனநிறைவு, தாம்பத்திய இன்பம், அயன சயன சுகம் மற்றும் நல்ல உறக்கம் என்ற வகையில் சுபயோகங்களை நல்கும்.

ஜெனன நேரத்தில் அமையும் நமது சுய ஜாதகம் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, ஜெனன காலத்தில் அமையும் சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பின், நமது வாழ்க்கையில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து வரும் நன்மைகளை அனுபவிக்க தடையேதும் இருக்காது என்பது மறுக்க இயலாத உண்மையாகும், இதை கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : கன்னி
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஸ்வினி 4ம் பாதம்

 மேற்கண்ட கன்னி லக்கின ஜாதகருக்கு 1,2,3,4,5,6,7,9,10,11,12 ஆகிய 11வீடுகளும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், 8ம் வீடு மட்டும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம், ஜாதகரின் ஜெனன நேரம் மேற்கண்ட  வலிமை மிக்க யோக ஜாதகத்தை வழங்கியிருப்பது ஜாதகருக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்லலாம், சுய ஜாதகம் லக்கினம் முதல் பதினோரு பாவகங்கள்  வழியில் இருந்து யோக பலன்களை வழங்குவது என்பது ஜாதகருக்கு சிறப்பான யோக வாழ்க்கையை தங்குதடையின்றி வாரி வழங்கும், மேலும் ஜாதகரின் லாப ஸ்தானம் எனும் 11ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியாகவும், சுக ஸ்தானமாகவும் அமைவதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும் ( கலியில் கடகம் வலுத்தவன் சகல யோகங்களையும் பெறுவான் என்ற வாக்கிற்கு பொருத்தமான ஜாதகம் ) , ஜாதகர் நல்ல கல்வி அறிவை பெற்று  இருக்கின்றார், வளரும் சூழ்நிலையில் நல்ல யோக வாழ்க்கையுடன் கல்விக்காலம் நிறைவடைந்தவுடன், கடகம் குறிப்பிடும் வண்டி வாகன தொழில், விவசாயம் மற்றும் பால் பண்ணை தொழிலில் குறுகிய காலத்தில் அபரிவிதமான வளர்ச்சியை பெற்றிருப்பது ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் தன்மையை காட்டுகிறது.

மேற்கண்ட ஜாதகர் லக்கின வழியில் இருந்து நீண்ட ஆயுள், புகழ் , கீர்த்தி, சுய முன்னேற்றம், வளரும் சூழ்நிலையில் யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதார வசதிகள் என்றவகையிலும், 2ம் பாவக வழியில் அடிப்படைக்கல்வியில் வெற்றி, சிறந்த வாத திறமை, அருமையான குடும்ப வாழ்க்கை, கை நிறைவான வருமான வாய்ப்பு, தெய்வீக அனுகிரகம் சரளமான பணவசதி என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, சகல சௌபாக்கியம் வீரியமிக்க செயல்திறன், தைரியம் மற்றும் துணிச்சலான செயல்பாடுகள், பயமின்மையுடன் வெற்றிகொள்ளும் வாய்ப்பை நல்குகிறது, 4ம் பாவக வழியில் தாய் வழியிலான ஆதரவு சொத்து சுக  சேர்க்கை, வண்டி வாகன யோகம், 5ம் பாவக வழியில் சமயோசித அறிவுத்திறன், கற்ற கல்வி வழியிலான யோக வாழ்க்கை, நல்ல புத்திர பாக்கியம் பூர்வீக சொத்தில் ஜீவிக்கும் யோகம், 6ம் பாவக வழியில் குறுகிய கால  வெற்றி வாய்ப்புகள், எதிர்ப்புகள் தரும் நன்மைகள், எதிரியை வெல்லும் வல்லமை, நல்ல உடல் ஆரோக்கியம், விரைவாக குணம் பெரும் யோகம்  7ம் பாவக வழியில் சிறந்த வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள், கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், தன்னிறைவான பொருளாதார வசதி, வெளிநாடுகளில் யோகம், ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியில் வெற்றிகள் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் ஜாதகருக்கு வருமுன் உணர்ந்து செயல்படும் தன்மையை தரும், ஆன்மீக வெற்றி, கடவுள் அனுக்கிரகம் மற்றும் பெரிய மனிதர்கள் ஆதரவை தரும், 10ம் பாவக வழியில் சுய கவுரவம், தொழில் வெற்றி, வாத திறமை செய்யும் செயல்களில் பொறுப்புணர்வு, தொழில் வழியிலான அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், சிறந்த ஆளுமை திறன், மதிப்புக்கு உரிய செயல்கள், சிறந்த திட்டமிடுதல் என்ற வகையில் சுபயோகங்களை தரும், 11ம் பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி, மதிப்பு மிக்க செயல்பாடுகள், எதிர்பாராத அதிர்ஷ்டம், திட்டமிட்டு வெற்றியை  பெரும் யோகம், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வல்லமை, நல்ல குணம், உதவி செய்யும் மனப்பான்மையை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு திருப்திகரமான மனநிலை, போதும் என்ற மனம், நல்ல உறக்கம், அயன சயன சுகம், செய்த முதலீடுகள் வழியில் இருந்து வரும் மிதமிஞ்சிய லாபம், லட்சியங்கள் நிறைவேறும் தன்மை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புகளை தரும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர் 11 பாவக வழியில் இருந்து பரிபூர்ண லாபங்களை தன்னிறைவாக பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் தற்போழுது நடைபெறும் சூரியன் திசை 6ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது ஜாதகருக்கு குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சந்திரன் திசை ஜாதகருக்கு சாதகம் இன்றி இருப்பதால் சந்திரன் திசையில் மிகவும் கவனமாக செயல்படுவது அவசியமாகிறது, சுய ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் வாழ்க்கை முன்னேற்றங்கள் என்பது அபரிவிதமானதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

குறிப்பு :

 சுய ஜாதக வலிமை என்பது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து தன்னிறைவான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று, நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் பரிபூர்ண யோக பலன்களை தடையின்றி பெறுவார், மேற்கண்ட ஜாதகத்தில் அடுத்து வரும் சந்திரன் திசை வலிமை அற்ற பலனை ஏற்று நடத்துவது சுய ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை சற்று தடை செய்யும் என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696