சுய தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யும் அன்பர்கள் சிலரது வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் இழப்புகளும், பெருத்த நஷ்டங்களும் நடைமுறைக்கு வருவதற்கு என்ன காரணம், இதை சுய ஜாதக ரீதியாக அறிந்துகொண்டு தவிர்க்க இயலாதா ? இதை போன்ற இழப்புகள் வருவதை நாம் வரும்முன்னரே அறிந்து சுதாரிப்புடன் செயல்பட இயலாதா ? தெளிவான விளக்கம் தர வேண்டுகிறோம்..
லக்கினம் : சிம்மம்
ராசி : கும்பம்
நட்ஷத்திரம் : சதயம் 3ம் பாதம்
மேற்கண்ட கேள்விகளுக்கு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம், ஒருவரது சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரம் வலிமை அற்று காணப்பட்டாலோ அல்லது லக்கினத்திற்க்கு ஜீவன ஸ்தானமாக அமையும் பாவகம் வலிமை இன்றி காணப்பட்டாலோ ஜாதகர் தாம் செய்யும் தொழில் வழியிலான திடீர் இழப்பு மற்றும் பெருத்த நஷ்டங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், அல்லது சுய ஜாதகத்தில் 6,8,12ம் வீடுகள் வலிமை அற்று காணப்பட்டால் ஜாதகர் தாம் செய்யும் தொழில் வழியில் இருந்து மீள முடியாத கடன், திடீர் இழப்பு, முதலீடுகளால் ஏற்படும் பெருத்த நஷ்டங்களை அனுபவிக்கும் நிலையை தரும், உதாரணமாக மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 6,12ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், இருப்பினும் ஜாதகர் கடந்த சில வருடங்களாக கடுமையான தொழில் வழியிலான பெரும் நஷ்டங்களை சந்தித்து, தொழில் முடக்கம் ஏற்பட்டதற்க்கு காரணம் என்ன ? என்பதனை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
ஜாதகருக்கு லக்கினம் முதல் பெரும்பாலான பாவகங்கள் வலிமையுடன் அமைந்தபோதிலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 1ம் வீடான மேஷ ராசி பாதக ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான பாதிப்பையும், 4ம் வீடான கடக ராசி, 10ம் வீடான மகர ராசிகள், ஜாதகரின் சிம்ம லக்கினத்திற்க்கு விரையம் மற்றும் சத்ரு ஸ்தானமாக அமைந்து கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் தாங்க இயலாத தொழில் பின்னடைவை தந்தது, இதன் காரணமாக ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடன் சுமை, தொழில் முடக்கம், எதிரிகள் தொந்தரவு, போட்டியாளர்கள் வழியில் இருந்து வரும் எதிர்ப்புகள் என ஏககாலத்தில் இன்னல்களை தந்து தொழில் முடக்கம் என்ற நிலைக்கு ஜாதகரை அழைத்து சென்றது, மேலும் 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்த அதீத முதலீடுகள் அனைத்தும் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது, எதிர்பாராத பேரிழப்பை ஜாதகர் அயன சயன ஸ்தான வழியில் இருந்து சந்திக்கும் நிலையை தந்தது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் கடகம் வலிமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது சிறிதும் சிந்திக்காமல் அழிவு நிலையில் உள்ள பொருட்களில் ஜாதகர் முதலீடு செய்தது, ஜாதகரின் தொழில் முடக்கத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்தது, சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவகம் சார்ந்த தொழில்களை ஜாதகர் மேற்கொள்வது என்பது " மண் குதிரையை " நம்பி ஆற்றில் இறங்குவதற்கு நிகரான இன்னல்களை வாரி வழங்கிவிடும், மேலும் மகரமும், கடகமும் சர இயக்கத்தில் நிற்பது ஜாதகருக்கு ஓர் இரவில் அனைத்தையும் இழந்து தவிக்கும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது.
மேற்கண்ட ஜாதகத்தில் 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்டாலும், 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திய ( சனி திசை ) கேது,சுக்கிரன் மற்றும் சந்திரன் புத்திகள் ( 28/03/2009 முதல் 17/01/2016 ) முழுவீச்சில் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையை ஜாதகர் எதிர்கொண்டார் என்பதே இதில் கவனிக்கத்தக்க விஷயமாகும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் நடைபெறும் திசை அல்லது புத்தி பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின், பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்கள் எதுவும் ஜாதகரை பாதிக்காது, நடைபெறும் திசா புத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை சந்திக்கவேண்டி வரும் என்பது கவனிக்கத்தக்க மிக முக்கியமான விஷயமாகும்.
ஜாதகருக்கு சனி திசை 3ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை வழங்கிக்கொண்டு இருக்கின்ற போதிலும், சனி திசையில் கேது,சுக்கிரன் மற்றும் சந்திரன் புத்திகள் 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை தந்தது ஜாதகரின் தொழில் வாழ்க்கைக்கே மூடுவிழா நடத்திவிட்டது, ஜாதகரின் திருப்தியற்ற மன நிலையும், தெளிவற்ற முடிவுகளும் 12ம் பாவாக வழியில் இருந்து நடைமுறைக்கு வந்ததே ஜாதகருக்கு மேற்கண்ட கடுமையான பாதிப்பை வழங்க அடிப்படை காரணமாக அமைந்தது, சனி திசையில் மேற்கண்ட புத்திகள் விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திய போதிலும், சனி திசை புதன் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு புள்ளையார் சுழி போட்டது என்பதை மறுப்பதற்கு வழியில்லை.
சுய ஜாதகம் எவ்வளவு வலிமையுடன் இருப்பினும் நடைபெறும் திசை, புத்தி ( நவகிரகங்களின் எந்த கிரகத்தின் திசை புத்தி என்றாலும் ) வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்களை அனுபவிக்க இயலும், மேற்கண்ட ஜாதகம் போல் வலிமை அற்ற பாவாக வழியிலான பலாபலன்களை ஏற்று நடத்தினால் ஜாதகரின் கதி அதோகதிதான் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே ஓவொருவரின் சுய ஜாதகத்திலும் நடைமுறையில் உள்ள திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவாக தொடர்பு நிலையை கருத்தில் கொண்டு வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.
குறிப்பு :
ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் ராகு புத்தி எதிர்வரும் குரு புத்திகள் முறையே வலிமை பெற்ற 1,3,5ம் பாவக பலனையும், 7,11ம் பாவக பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு பரிபூர்ண அதிர்ஷ்டத்தை தரும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சுபயோக வாழ்க்கையை சுவீகரிக்க " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக