கேள்வி :
இதுவரை சரியான தொழில் அமையவில்லை, செய்யும் தொழில் வழியில் இருந்து யாதொரு முன்னேற்றமும் இல்லை, நான் சுயமாக சிறுதொழில் ஏதாவது செய்யலாமா? அல்லது ஓரிடத்தில் வேலைக்கு செல்வது நன்மையை தருமா ? இதுவரை மற்றவர்களிடம் அடிமை தொழில் ( வேலைக்கு ) மட்டுமே செய்து வருகிறேன், செய்யும் வேளையில் மனநிறைவு இல்லை, பொருளாதார முன்னேற்றமும் இல்லை, தயவு செய்து சரியான வழிக்காட்டுங்கள்.
பதில் :
ஜீவன ஸ்தான வலிமை என்பது ஒவ்வொரு ஆண் மகனின் ஜாதகத்திலும் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, இது ஜாதகனின் சுய கவுரவத்தை செய்யும் தொழில் வழியில் இருந்து வாரி வழங்கும், அல்லது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரம் மிகவும் வலிமையுடன் இருப்பது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 10ம் பாவகம் வலிமை அற்று காணப்பட்டாலும், ஜாதகருக்கு ஜீவன வழியில் மறைமுகமான நன்மைகளை வாரி வழங்கும், சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் வீடும், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு 10ம் வீடான மகரம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் தனிப்பட்ட தொழில் ரீதியான முயற்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியையே வழங்கும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது சுய ஜாதகத்தில் தொழில் அமைப்பிற்கான விஷயங்களை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளலாம் அன்பரே !
லக்கினம் : கும்பம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்
கேள்வி :
இதுவரை சரியான தொழில் அமையவில்லை, செய்யும் தொழில் வழியில் இருந்து யாதொரு முன்னேற்றமும் இல்லை ஏன் ?
பதில் :
தங்களின் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு 1 ) சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜீவன ஸ்தானமான 10ம் வீடு கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது தங்களுக்கு சரியான தொழில் அமையாத நிலைக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றது, மேலும் தங்களின் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் விரைய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியில் 10 பாகைகளும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமான கும்ப ராசியில் 23 பாகைகளையும் கொண்டுஇருப்பது தங்களின் தொழில் வழியிலான சிரமங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகின்றது, எனவே சுய ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்திற்கு 10ம் பாவகமும் பாதிக்கப்பட்டு, காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும் 40% விகிதம் பாதிக்கப்படுவது, தங்களுக்கு தொழில் ரீதியாக சுபயோக பலாபலன்களை வழங்க மறுக்கின்றது என்பதே உண்மை நிலை.
2) தங்களுக்கு ( 09/09/2002 ல் ) ஆரம்பித்த சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4,10ம் பாவக வழியில் இருந்து முழு வீச்சில் விரைய ஸ்தான பலனையே தனது திசைமுழுவதும் ஏற்று நடத்துவது தங்களின் தொழில், வேலை போன்றவற்றில் மிகுந்த பின்னடைவையும், திருப்தி அற்ற நிலையையும், நிரந்தரம் அற்ற தொழில் என்ற நிலையையும் தற்போழுது வரை தந்து கொண்டு இருக்கின்றது, இருப்பினும் தற்போழுது நடைபெறும் சனி புத்தி தங்களுக்கு லாப ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும்.
பொதுவாக சுய ஜாதகத்தில் மகரமும், பத்தாம் பாவகமும் வலிமை இழந்து காணப்பட்டால், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற மற்ற பாவகம் எவை? எவை ? என்பதை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வது ஜீவனத்திற்க்கான மாற்று வழியை நமக்கு தெளிவுபடுத்தும், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது தங்களது சுய ஜாதகத்தில் வீர்ய ஸ்தானம் மிக வலிமையுடன் காணப்படுகிறது, தங்களது வீரிய ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடான மேஷ ராசியில் 2 பாகையும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் 26 பாகைகளையும் கொண்டு இருப்பது ஜாதகத்தில் மிகவும் சிறப்பான விஷயமாகும், இந்த அமைப்பு தங்களுக்கு மக்கள் தொடர்பு வழியிலான சிறு வியாபாரம் மூலம் சகல சௌபாக்கியத்தை நல்கும் அமைப்பாகும், எனவே தாங்கள் சிறு வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல வளர்ச்சியை பெறலாம், மேலும் சிறு எஜென்ஜி, தரகு தொழில் வழியிலான நன்மைகள் பொருளாதார வளர்ச்சிகள் தங்களுக்கு எதிர்பாராத வண்ணம் வந்து சேரும் என்பதை கருத்தில் கொள்க, எனவே தாங்கள் வலிமை பெற்ற 3ம் பாவக வழியில் இருந்து ஜீவனத்தை தேடி நலம் பெறுவது தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான யோக பலன்களை வாரி வழங்கும்.
தங்களது ஜாதகத்தில் வலிமைபெற்ற பாவகம் என்ற நிலையில் 2ம் இடத்தில் இருப்பது லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் ஆகும், லாப ஸ்தானம் தங்களுக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் வீடான தனுசு ராசியில் 8பாகைகளையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடான மகர ராசியில் 20 பாகைகளையும் கொண்டிருப்பது சிறப்பான யோகத்தை தரும் அமைப்பாகும், இது தங்களுக்கு லாப ஸ்தான வழியில் இருந்து எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரும், குறிப்பாக சர மண் தத்துவ சார்ந்த பொருட்கள் வழியில் இருந்து நல்ல லாபத்தை தரும் என்பதை கருத்தில் கொண்டு அது சார்ந்த ஏஜென்ஜி எடுப்பது அல்லது சிறு வியாபாரம் செய்வது தங்களுக்கு மேலும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், இதனால் செய்யும் தொழில் வழியில் மனநிறைவும் பொருளாதார நன்மைகளும் தங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
குறிப்பு :
எதிர் வரும் புதன் கேது புத்திகள் தங்களுக்கு சிறப்பான வழியில் அதிர்ஷ்டங்களையும், சூரியன் திசை பாக்கிய ஸ்தான வழியில் இருந்து அதிர்ஷ்டங்களையும் தருவது, தாங்கள் புதிதாக ஆரம்பிக்கும் சிறு வியாபார வழியில் நற்ப்பெயருடன் கூடிய அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதுடன், பொருளாதர தன்னிறைவை தரும் என்பதை கருத்தில் கொண்டு, விழிப்புணர்வுடன் வாழ்க்கையில் வெற்றிபெறுங்கள்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக