பின்தொடர...

Saturday, January 20, 2018

குரு திசை இன்னல்களை தருவதேன்? எதிர்வரும் சனி திசை யோக பலனை தருமா ?


கேள்வி :
 
 தற்போழுது நடைபெறும் குரு திசை மிகுந்த சிரமத்தையே தந்துகொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சனி திசை நன்மையை தருமா ? சனி திசை எனது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லுமா ? எதிர்காலம் எப்படி அமையும்.

பதில் :

 குரு முழுமுதற் சுபகிரகம் என்பதால் தனது திசையில் சுபயோக பலன்களை வழங்கும் என்ற கருத்து பொதுவானதாக இருந்த போதிலும், சுய ஜாதகம் வலிமை இன்றி இருப்பின் மேற்கண்ட கருத்து சிறிதும் பொருந்தாது என்பதே உண்மை நிலை, தங்களது ஜாதகத்திற்கும் இது மிக பொருத்தமாக அமைந்துவிட்டதுதான் விதியின் விளையாட்டு என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை, நவகிரகங்களின் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஒருவருக்கு தனிப்பட்ட முறையிலான பலாபலன்களை வழங்கும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை, சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் தன்மையையே தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களின்  நவகிரகங்கள் நடைமுறைக்கு கொண்டுவரும், கோட்சார கிரகங்கள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு தரும் கோட்சார பலன்கள் பாவக பலன்களை விருத்தி செய்யும், இதுவே அடிப்படை, இதை தங்களது சுய ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பரே !


லக்கினம் : கன்னி 
ராசி : கும்பம் 
நட்ஷத்திரம் : அவிட்டம் 4ம் பாதம்

தற்போழுது நடைபெறும் குரு திசை தரும் பலன்கள் : ( 14/11/2003 முதல் 14/11/2019 வரை  )

தங்களது சுய ஜாதகத்தில் 5ல் நின்ற குரு பகவான் தனது திசையில் 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை தனது திசை முழுவதும் நடைமுறைப்படுத்துகிறது, குரு சுப கிரகம் என்ற போதிலும் தனது திசையில் கடுமையாக பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது தங்களது வாழ்க்கையில் 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள், வாக்கின் வழியில் வரும் சிரமம்ங்கள், வருமானம் விரையமாகுதல், பொருளாதர சிக்கல் என்ற வகையிலும், 4ம் பாவக வழியில் சுகபோகம் இன்மை, நல்ல வீடு அமையாத நிலை, வண்டி வாகன யோகம் இன்மை, குணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பு என்ற வகையில் சிரமங்களை தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல பாதிப்பு , கடன் தொந்தரவுகள், எதிரி தொல்லை, அனைவராலும் சிரமம், வீண் மருத்துவ செலவினங்கள்  என்ற வகையில் இன்னல்களை தரும், 10ம் பாவக வழியில் இருந்து நல்ல கவுரவமான தொழில் அமையாத நிலை, ஜீவன வழியிலான தொந்தரவுகள், நிலையான தொழில் வாய்ப்பு அமையாத நிலை, எதிர்பாராத தொழில் இழப்புகள் மற்றும் நஷ்டம், கவுரவ பாதிப்பு என்ற வகையில் சிரமங்களை தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைத்திலும் நஷ்டம், மன நிம்மதியின்மை, கடுமையான மனஅழுத்தம், போராட்டகாரமான வாழ்க்கை, வீண் விரையம், தெளிவில்லாத சிந்தனை, அனைவராலும் தொல்லை என்ற நிலையை தரும்.

 தங்களுக்கு குரு திசை நடைமுறையில் உள்ள போதிலும், குரு 2,4,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தருவது தங்களின் வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, குரு திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியும் தங்களுக்கு 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் விரைய ஸ்தான பலனை தனது புத்தியில் நடைமுறைக்கு கொண்டு வருவது தங்களின் வாழ்க்கையில் சற்று கடுமையான பாதிப்பை தரும் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.

எதிர்வரும் சனி திசை ( 14/11/2019 முதல் 14/11/2038 வரை ) தங்களுக்கு கடுமையான சோதனைகளை தரவே காத்துகொண்டு இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரியது, எனவே தாங்கள் சனி திசை,சனி புத்தி, சனி அந்தர காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது, ஏனெனில் தங்களுக்கு எதிர்வரும் சனி திசை 1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1,9ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் என்பது அவசியம் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும், ஒருவருக்கு பாதக ஸ்தான பலன்கள் நடைமுறைக்கு வரும் பொழுது ஜாதகர் மிகவும் கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது இல்லை எனில், முரண்பட்ட வாழ்க்கையில் சிக்குண்டு " பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் " நிலையை தந்துவிடும்.

குறிப்பு :

சனி திசை காலத்தில் தாங்கள், தங்களின்  உடல் நலம் மனநலம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை  கொள்வது நல்லது, பெரியோரின் ஆலோசணையின் பெயரில் செய்யும் காரியங்கள் யாவும் தங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் நல்கும், நல்ல ஆன்மீக பெரியோரின் ஆசீர்வாதமும், தீட்சையும் தங்களுக்கு சனி திசை தரும் இன்னல்களில் இருந்து காத்துஅருளும் என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறுங்கள், எதிர்காலம் நன்றாக அமைவது என்பது தங்களின் கைகளிலேயே உள்ளது " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment