வியாழன், 11 ஜனவரி, 2018

சனி திசை தரும் பலாபலன்களும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பும் !


 எந்த ஒரு ஜாதகத்திலும் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறாமல் இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், ஒருவேளை பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருப்பின், நவகிரகங்களின் திசா புத்திகள் பாதக ஸ்தான தொடர்பு பெற்ற பாவக பலனை எடுத்து நடத்தாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் பாவகங்கள் தொடர்பும் பெற்று, நடைமுறையிலோ அல்லது எதிர்காலத்திலோ நவகிரகங்களின் திசா புத்திகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை நடைமுறைக்கு கொண்டுவருமாயின் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகும், ஜாதகரால் தாங்க இயலாத துன்பத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திப்பார்,  இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்.


லக்கினம் : கடகம் 
ராசி : மிதுனம் 
நட்ஷத்திரம் : திருவாதிரை 1ம் பாதம் 

 மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 1,3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், எனவே ஜாதகர் லக்கினம், சகோதரம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகும், லக்கின பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வளரும் சூழ்நிலையே சிறப்பாக அமையாது, ஒவ்வொரு விஷயத்தையும் ஜாதகர் போராடி பெறவேண்டிய கட்டாயம் ஏற்படும், ஏக்கமும் மன வருத்தமும் ஜாதகரின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்திருக்கும், தெளிவான சிந்தனையுடன் ஜாதகர் யாதொரு காரியங்களையும் ஆற்ற இயலாது, உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கப்படும், ஒருவித குழப்பம் மற்றும் சந்தேக எண்ணத்துடன் ஜாதகர் வாழ்க்கையை எதிர்கொள்வார், எதிர்ப்புகள் பல வழிகளில் இருந்து ஜாதகரை கடுமையாக தாக்கும், தனது பிறப்பின் சாராம்சம் என்னவென்பதை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக அமையும், முரண்பட்ட வாழ்க்கையை ஜாதகர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தன்மையை கொண்டிருப்பார், அதீத மூடநம்பிக்கைகளை கையாண்டு ஜாதகரின் வாழ்க்கைக்கு இன்னல்களை தானே வரவைத்துக்கொள்ளும் சூழலும் உருவாகலாம், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் அன்பர்கள் ஏதாவது தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானால் மீள்வதென்பது இயலாத காரியமாக மாறிவிடும் என்பதை மனதில் கொள்வது நலம் தரும்.

 சகோதர பாவக வழியில் இருந்து ஆதரவற்றவராக திகழ்வார், மனதைரியமும், போராட்ட குணமும் ஜாதகருக்கு மிகவும் குறைவாக அமையும், எதிர்த்து வெற்றிகொள்ளும் யோகம் என்பது ஜாதகருக்கு சிறிதும் அமையாது, ஒருவித கலக்கத்துடன் தனது வாழ்க்கையை வாழும் சூழ்நிலையி தரும், பயமும் இயலாமையும் ஜாதகரை வெகுவாக படுத்தி எடுக்கும், எண்ணத்தின் வலிமையையும் காரிய சித்தியும் ஜாதகருக்கு அமைவதென்பது  அரிதான ஒன்றாக இருக்கும், பயணங்கள் மூலம் இன்னல்களும், உடல் நலக்குறைவும் உண்டாகும், ஒவ்வாமை ஜாதகருக்கு அதிக அளவில் இருக்கும், ஜாதகரின் மனம் எதையும் ஏற்றுக்கொள்ள தயார் நிலையில் இருக்காது, தெய்வீக குணம் ஜாதகருக்கு எல்லைகட்டி நிற்கும், எதையும் தீவிரமாக செய்யும் வல்லமை அமையாது என்பதுடன் ஜாதகரின் அலட்சியம், மனபயம் இரண்டும் பல வெற்றி வாய்ப்புகளை தட்டி பறிக்கும், பொருளாதர தடைகள் ஜாதகருக்கு கடுமையாக வரும்.

 லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் பிற்போக்கு தனமான செய்கைகள் மூலம் இன்னல்களை அனுபவிக்கும் மனிதர் என்பது அனைவருக்கும் தெரியவரும், முரண்பட்ட விஷயங்களை செய்து அதன் வழியிலான இன்னல்களை சந்திக்க இயலாமல், மற்றவர்கள் மீது குற்றம் குறை காணும் நிலையை தரும், இவர்களை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பதுடன், நம்பியவரின் எதிர்காலமும் பறிபோகும் என்பது கவனிக்கத்தக்கது, எதிலும் அக்கறை இன்றி செயல்படுவார், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்து தானும் இன்னல்களை சந்தித்து, தன்னை சார்ந்தவர்களையும் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கும் தன்மையை பெற்றவர்கள், அதிர்ஷ்டம் சிறிதும் இருக்காது, அதிர்ஷ்டத்தை பெறுவதற்கான துணிவும் ஜாதகருக்கு சிறிதும் இருக்காது, தொடர் தோல்விகளையும், கடும் நெருக்கடிகளையும் சந்திக்கும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையாகாது, பழமைவாதம், நாகரிகம் அற்ற செயல்கள், பிற்போக்கு தனம் ஆகியவை ஜாதகரை கற்காலத்தை நோக்கி அழைத்து செல்லுமே தவிர, அனைவருடன் அனுசரித்து செல்லும் நல்ல குணம் ஜாதகருக்கு சிறிதும் அமையாது என்பது வருத்தத்திற்கு உரியது.

மேற்கண்டவாறு பாதக ஸ்தான பலனை ஜாதகர் சுய ஜாதக பலனை அனுபவித்த போதிலும், தற்போழுது வரை நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 2ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார் என்பது ஒரு விதத்தில் ஜாதகருக்கு நன்மையே எனலாம், ஆனால் எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு 1,3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  முழு வீச்சில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் என்பதை யாருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை, எதிர்வரும் சனி திசை இதுவரை குரு திசையில்  2ம்  பாவக வழியில் இருந்து களத்திர ஸ்தானம் தந்த சுபயோகங்களை தாராளமாக அனுபவித்து வந்த விஷயங்களுக்கு எல்லாம் ஓர் முற்றுப்புள்ளியை தந்து விடும், எதிர்பாராத சிரமங்களை ஜாதகர் சனிதிசை முழுவதும் சந்திக்கும் சூழ்நிலை தரும், ஜாதகரின் பாதக ஸ்தானம் என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ரிஷப ராசியில் அமைவது, குடும்பம் வருமானம், வாக்கு வழியில் இருந்து கடுமையான இன்னல்களை எதிர்கொள்வார் என்பதை தெளிவு படுத்துகிறது, ஜாதகர் மிகுந்த எச்சரிக்கையுடன் சனி திசையினை எதிர்கொள்ளவில்லை எனில் வாழ்க்கை நரகமாகிவிடும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக